முதல் முதலாக உலகில் உள்ள இசை ரசிகர்கள், முருக பக்தர்கள் காப்புரிமையின்றிப் பயன்படுத்த வேண்டும் என்ற ஒரே நோக்கில் ஒரு பாடல் உருவாகி உள்ளது. அதுதான் ‘முருகர் யுகம் பிறந்தாச்சி ‘ பக்திப் பாடல். இந்தப் பாடலை புண்ணியம் பவுண்டேஷன் தயாரித்துள்ளது. புகழ்பெற்ற இசை நிறுவனமான திவோ மியூசிக் (divo Music) நிறுவனம் வெளியிடுகிறது. இந்தப் பாடலை பிரபல தயாரிப்பாளரும் விநியோகஸ்தரும் நடிகருமான ஜெயம் எஸ்.கே. கோபி உருவாக்கியுள்ளார்.இவர் அரசியலிலிருந்து விலகி ஆன்மீகத்திற்குள் நுழைந்து முழுக்க முருக பக்தராக மாறி ‘முருகனருட்செல்வர்’ என்ற சிறப்புடன் பக்தி மார்க்கத்தில் செயல்பட்டு வருகிறார்.கடந்த இரண்டு ஆண்டுகளாக ஒரு முருக பக்தராக ,முருகன் சார்ந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தார். இப்போது உலகம் முழுதும் உள்ள முருக பக்தர்களுக்காக தனது ஆராய்ச்சியின் விளைவாக மலர்ந்த அந்த முருகர் ஆராய்ச்சிப் பாடலை உருவாக்கி உள்ளார். அந்தப்…
Read MoreCategory: சினிமா செய்திகள்
முதல் முறையாக .. சின்னத்திரையில் உங்களோடு பேசப்போகிறேன்..
நம்மிடம் இருக்கும் நல்ல விசயங்கள் பற்றி.. நாம் விவாதிக்கும் முக்கிய தலைப்புகளில், குழப்பங்களில் இருப்பவர்களுக்கு இது தீர்வு.. தீர்வோடு இருப்பவர்களுக்கு இது தெளிவு.. அடுத்த கட்ட பயணம்.. நான் சரி எனில் நீ தவறா… இல்லை.. இரண்டுபேருமே சரியா அதுவும் இல்லை…. பேசாமலே இருந்தா அதுவே மக்களுக்கு புரிஞ்சுடும்னு நினைக்கிறது சரியா.. இல்லை நான் மக்களுக்கு புரிய வைக்க முயற்சிப்பேன்னு அட்வைஸ் வரைக்கும் போறது தவறா?.. எல்லா விவாதங்களுக்கும் இரண்டு பக்கம் இருக்கு.. இல்லை பல பக்கங்கள் இருக்கு.. ஆம் இது உங்களுக்கான மேடை.. உங்களின் பார்வையை பேசுங்கள்.. உங்களுக்கான தெளிவை எடுத்துச்செல்லுங்கள்.. நான் கூப்பிடுவது மக்களை.. அவர்களோடு பேச.. அவர்களை பேச வைக்க.. வாங்க பேசலாம்..
Read More”இளைஞர்களுக்கு முதல்வர் விஜய் மிகப்பெரிய உத்வேகம்”- நடிகை சுமித்ரா தேவி!
தனது பள்ளி காலத்திலேயே நடிப்பின்மீது ஆர்வம் கொண்டர் சுமித்ரா. தீவிரம், கண்ணியம் மற்றும் உணர்வுப்பூர்வமான கண்ணகி கதாபாத்திரம் ஏற்று பள்ளி மேடையில் நடித்தது, அவரது நடிப்புப் பயணத்திற்கு ஆரம்பப் புள்ளியாக அமைந்தது. குரோம்பேட்டையில் உள்ள வைஷ்ணவ் கல்லூரியில் விஷுவல் கம்யூனிகேஷன் படித்துள்ள சுமித்ரா பரதநாட்டியத்தில் தேர்ந்தவர். இந்த நடனப் பயிற்சி, முகபாவனைகள் மற்றும் உடல் மொழி ஆகியவை அவருக்கு இயல்பான ஆளுமையையும் பாராட்டுகளையும் பெற்று தந்தது. ’மொத ராத்திரி’ திரைப்படத்தில் கீர்த்தி என்ற கதாபாத்திரத்திற்கு தேவையான வசீகரம் மற்றும் அமைதியை தனது நடிப்பில் கொண்டு வந்துள்ளார் சுமித்ரா, நடிகைகள் நந்திதா தாஸ் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் போலவே சுமித்ராவின் மாநிற அழகும் தனித்திறமையும் திரையில் அவருக்கு கூடுதல் வசீகரத்தை கொடுத்துள்ளது. அதிகப்படியான அலங்காரம் தேவையில்லாமலேயே பார்வையாளர்களைக் கவரக்கூடிய மண் சார்ந்த தோற்றம் அவரிடம் உள்ளது. அதேபோல, சுமித்ராவின்…
Read Moreசென்சார் அதிகாரிகளிடம் பாராட்டு பெற்ற தி டார்க் ஹெவன் திரைப்படம் செப்டம்பர் 18 இல் வெளியாகிறது!
முழு நீள சஸ்பென்ஸ் க்ரைம் ஹாரர் த்ரில்லராக உருவாகி இருக்கும் திரைப்படம் ‘தி டார்க் ஹெவன்’.தணிக்கைக்குச் சென்ற இத்திரைப்படத்தைப் பார்த்த தணிக்கை குழுவினர் ஒரு க்ரைம் த்ரில்லர் படத்தில் ஒரு வெட்டுக்குக் கூட வாய்ப்பு இல்லாமல் அழகாக நேர்த்தியாக எடுக்கப்பட்டுள்ளது என்று பாராட்டி இருக்கிறார்கள்.இதனையே இந்தப் படத்திற்கான ஒரு தரச் சான்றிதழாகக் கருதி மகிழ்ந்து கொண்டிருக்கிறது படக்குழு. இப்படத்தை பாலாஜி இயக்கி உள்ளார். இவர் ஏற்கெனவே ‘D3’ என்ற படத்தை இயக்கியவர்.அந்தப் படமும் பட உருவாக்கத்தின் நேர்த்திக்காகப் பேசப்பட்டது. அவர் இரண்டாவதாக இயக்கியிருக்கும் இந்த ‘தி டார்க் ஹெவன்’ படத்தில் பிக்பாஸ் புகழ் நட்சத்திரங்கள் சித்து, தர்ஷிகா , ரித்விகா ஆகியோருடன் , வேல ராமமூர்த்தி, நிழல்கள் ரவி, ஜெயக்குமார், அருள் டி சங்கர், சத்தியா, சாப்ளின் பாலு, கோபால் மற்றும் பலர் நடித்துள்ளனர். ஒளிப்பதிவு: மணிகண்டன்…
Read Moreசோனி பிக்சர்ஸ் என்டர்டெயின்மென்ட் இந்தியா வழங்குகிறது – இன்சிடியஸ்: அவுட் ஆஃப் த ஃபர்தர்
திரைக்கு முந்தைய அறிமுகம் லீ வானல் மற்றும் ஜேம்ஸ் வான் ஆகியோரால் உருவாக்கப்பட்ட இந்த புகழ்பெற்ற திகில் திரைப்பட வரிசை, இன்சிடியஸ் (2010) படத்துடன் தொடங்கி, இன்சிடியஸ்: சாப்டர் 2 (2013), இன்சிடியஸ்: சாப்டர் 3 (2015) என தொடர்ந்து, பின்னர் இன்சிடியஸ்: த லாஸ்ட் கீ (2018) மற்றும் இன்சிடியஸ்: த ரெட் டோர் (2023) ஆகிய இரண்டு தொடர் படங்களுடன் தொடர்ந்தது. இன்சிடியஸ்: அவுட் ஆஃப் த ஃபர்தர் இந்த வரிசையின் 6வது பாகமாகும், மேலும் இது 2023 படத்தின் நேரடி தொடர்ச்சியாகும். கதைச் சுருக்கம் ‘த ஃபர்தர்’ எனும் ஆவி உலகிற்குள் பயணித்து, தொலைந்து போன ஆன்மாக்களை மீட்டு, அவற்றுடன் தொடர்பு கொண்டு இந்த உலகிற்கு திரும்பக் கொண்டு வரும் ஆற்றலைப் பெறும் ஒரு இளம் பெண்ணைச் சுற்றியே கதை அமைந்துள்ளது! தன்…
Read Moreஇன்சிடியஸ் – அவுட் ஆஃப் தி ஃபர்தர் விமர்சனம்
இன்சிடியஸ் தொடர் பட வரிசையில் வந்திருக்கும் ஆறாவது படமாகும். ஆனால், ஒரு தனிப்படமாகவும் இதைப் பாவிக்கலாம். முந்தைய படங்களைப் பார்த்தே இருக்கவேண்டிய அவசியமில்லை. ஃபர்தர் என்பது இறந்தவர்கள் வசிக்கும் இடமாகும். ஃபர்தருக்கும் பூமிக்கும் பயணிக்கக்கூடிய சக்தியைப் பெற்றவராக கெம்மா இருக்கிறார். அவரால் ஃபர்தரில் இருந்து ஒரு பொருளைப் பூமிக்கும், பூமியில் இருந்து ஒரு பொருளை ஃபர்தருக்கும் கொண்டு செல்ல முடியும். இதை அறிந்து கொள்ளும் ஃபர்தரில் வாழும் சைரஸ் எனும் கொடும் ஆத்மா, கெம்மாவின் உதவியோடு தன் பின்தொடர்பாளர்களுடன் பூமிக்கு நிரந்திரமாக வர நினைக்கிறது. அதனால் சைரஸ், கெம்மாவை ஆட்கொள்கிறது. எப்படி அதிலிருந்து கெம்மாவும், அவரது மகள் மாயாவும் தப்பிக்கின்றனர் என்பதுதான் படத்தின் கதை. துர்கனவுகளால் பாதிக்கப்படும் கெம்மாவிற்கு உதவியாக எலைஸ் எனும் பாத்திரத்தில் லின் ஷயே நடித்துள்ளார். “இதைத்தான் நான் செய்கிறேன்” என ஃபர்தரில் இருந்து…
Read MoreWhere Love Meets Chaos – ஆகஸ்ட் 28 முதல் Sony LIV-ல் வெளியாகிறது ‘அன்பே டயானா’.
காதல்,சிரிப்பு, குழப்பம் என இருவேறு உலகங்களை ஒன்றிணைத்த ஒரு அழகான கதை தற்போது உங்கள் இல்லங்களை தேடி வருகின்றது. காதல், குடும்பம் மற்றும் கலாச்சார வேறுபாடுகளை புதுமையான கோணத்தில் கொண்டு வந்து ரசிகர்களின் வரவேற்பைப் பெற்ற அன்பே டயானா, ஆகஸ்ட் 28, 2026 முதல் Sony LIV-ல் பிரத்யேகமாக டிஜிட்டல் பிரீமியராக வெளியாகிறது. கலகலப்பான, சுத்தமான, குடும்பத்துடன் ரசிக்கக்கூடிய feel-good ரொமாண்டிக் காமெடியாக இப்படம் பாராட்டுகளை பெற்றது. இதில் காதல், நகைச்சுவை மற்றும் உணர்வுகளை அழகாகக் கலந்து ஒரு அழகான அனுபவத்தை தருகின்றது. சென்னையின் பரபரப்பான பெரம்பூர் பின்னணியில் உருவாகியுள்ள அன்பே டயானா, பழமைவாத குடும்பத்தைச் சேர்ந்த ஒரு இளைஞனின் வாழ்க்கையில் சுதந்திரமான சிந்தனையுடன் வாழும் ஆங்கிலோ-இந்திய பெண் ஒருவர் நுழையும் போது ஏற்படும் எதிர்பாராத மாற்றங்களைச் சொல்கிறது இந்த படம். மாறுபட்ட இரு உலகங்கள் ஒன்றிணையும்போது,…
Read Moreபிரைம் வீடியோவில் உலகளவில் ஆங்கிலம் அல்லாத இணைய தொடர்களில் இரண்டாம் இடத்தை பிடித்த வதந்தி சீசன் 2: தி மிஸ்ட்ரி ஆஃப் மணி- Vadhandhi; The Mystery of Mani
மதுரையிலிருந்து சர்வதேச அரங்கத்திற்கு…! ‘வதந்தி: தி மிஸ்ட்ரி ஆஃப் மணி’ இணைய தொடர், ப்ரைம் வீடியோவில் உலகளவில் ஆங்கிலம் அல்லாத இணையத்தொடர்களில் இரண்டாம் இடத்தை பிடித்து சாதனை படைத்திருக்கிறது ஆகஸ்ட் 7ஆம் தேதியன்று உலகளவில் வெளியாகி, இரண்டு வாரத்திற்குள் தமிழில் வெளியான அசல் சஸ்பென்ஸ் திரில்லர் இணைய தொடரான ‘வதந்தி : தி மிஸ்டரி ஆஃப் மணி’- ப்ரைம் வீடியோவில் ஆங்கிலம் அல்லாத இணைய தொடர்களில் உலகளவில் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது. அத்துடன் ஸ்கிரிப்டட் ( Scripted) வகை படைப்புகளில் உலகளவில் முதலிடத்தை பிடித்துள்ளது. இந்தத் தொடரின் சாராம்சத்தை தக்க வைத்துக்கொண்டு, முற்றிலும் புதிய மர்மம் – நடிகர்கள்- மதுரை பின்னணியுடன் தொடங்கிய இந்த இணைய தொடரின் இரண்டாவது பாகம்.. இத்தகைய சிறப்பான வெற்றியை பதிவு செய்துள்ளது. தமிழ் மொழியில் வெளியாகி தெலுங்கு, இந்தி மொழிகளில் மொழிமாற்றம்…
Read Moreநடிகர் கவுண்டமணிதான் இன்ஸ்பிரேஷன்”…நடிகர் அப்துல் லீ!
‘மொத ராத்திரி’ திரைப்படத்தில் கண்ணன் என்ற கதாபாத்திரத்தில் கலக்கியவர் நடிகர் அப்துல் லீ. இரண்டு பழம்பெரும் ஆளுமைகளான ஸ்டான் லீ மற்றும் ஸ்பைக் லீ ஆகியோரின் பெயர்களால் ஈர்க்கப்பட்டு, தனது பெயரில் ‘லீ’ என்பதை இணைத்துக் கொண்டார். யூடியூப் ஸ்கெட்ச் வீடியோக்கள் மூலம் நடிப்புத் துறையில் தனது பயணத்தைத் தொடங்கியவர் அப்துல் லீ. இங்கு தனது காமெடி டைமிங் மற்றும் நடிப்புத் திறமையை வெளிப்படுத்தும் வாய்ப்பைப் பெற்றார். திரைத்துறையில் பழம்பெரும் நகைச்சுவை நடிகர்களான கவுண்டமணி மற்றும் பாலையா ஆகியோரை தனது இன்ஸ்பிரேஷன் என்கிறார் அப்துல் லீ. நகைச்சுவை கதாபாத்திரங்களுக்குள்ளேயே எதிர்மறையான சாயல்களையும் சிறப்பாக வெளிப்படுத்தி, அதே நேரத்தில் ரசிகர்களை சிரிக்க வைத்த அவர்களின் திறமையை மிகவும் ரசிப்பதாகக் கூறுகிறார். வேலம்மாள் பள்ளியின் முன்னாள் மாணவரான அப்துல் லீ, பி.இ. பட்டம் பெற்றவர். இதுவரை சுமார் 35க்கும் மேற்பட்ட…
Read Moreதென்னிந்தியத் திரையுலகின் மிகச் சிறந்த ஆளுமைகளில் ஒருவராக விளங்கிய நடிகை செளகார் ஜானகி தனது 94 ஆவது வயதில் இன்று காலமானார்!
இந்தியத் திரையுலகின் காலத்தால் அழிக்க முடியாத மகத்தான அத்தியாயம் இன்று முடிவுக்கு வந்தது! ஒரு நடிகை என்பதைக் கடந்து, கண்ணியம், அறிவுத்திறன் மற்றும் ஆழமான உணர்வுகளை வெளிப்படுத்திய மாபெரும் கலைஞராக பல தலைமுறை ரசிகர்களுக்கும் நடிகை செளகார் ஜானகி திகழ்ந்தார். அவர் ஏற்று நடித்த ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் உயிர் கொடுத்தார். திரையுலகின் ஆரம்ப காலங்களில் கதாநாயகியாகத் தொடங்கி, பின்னர் தனது முதிர்ச்சியான நடிப்பால் மறக்க முடியாத குணச்சித்திரக் கதாபாத்திரங்களை ஏற்று, உண்மையான கலைத்திறன் என்பது வயது, தோற்றம் அல்லது எந்தவொரு வரையறைக்கும் உட்பட்டது அல்ல என்பதை சௌகார் ஜானகி நிரூபித்தார். அவரது குரல், முகபாவனைகள் மற்றும் திரை ஆளுமை ஆகியவை ஒரு காட்சியையே தன்வசப்படுத்தும் அளவுக்கு வலிமையானவை. தென்னிந்தியத் திரையுலகின் அடித்தளத்தை உருவாக்கிய தலைமுறையைச் சேர்ந்த கலைஞர்களில் ஒருவர் அவர். தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாள…
Read More
