‘புதிய கீதை’, ‘கோடம்பாக்கம்’, ‘ராமன் தேடிய சீதை’ மற்றும் ‘என் ஆளோட செருப்ப காணோம்’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் கே. பி. ஜெகன் உண்மை சம்பவத்தை தழுவி எழுதி இயக்கும் ‘ரோஜா மல்லி கனகாம்பரம்’ எனும் திரைப்படத்தில் அவர் கதையின் நாயகனாக நடிக்கிறார். இவருடன் விஜய் வர்மா, சங்கீதா கல்யாண், பிச்சைக்காரன் மூர்த்தி, தியா, ரஞ்சித் வேலாயுதன், வெற்றிவேல் ராஜா, திண்டுக்கல் அலெக்ஸ், உறியடி ஷங்கர் மற்றும் பலரும் நடிக்கிறார்கள். தேசிய விருது பெற்ற எம் எஸ் பாஸ்கர் முக்கியமான பாத்திரத்தில் தோன்றியிருக்கிறார். இப்படத்தை பற்றி இயக்குனர் கே பி ஜெகன் கூறியதாவது : ரோஜா மல்லி கனகாம்பரம் படத்தில் மூன்று கதைகள் ஓர் நேர்கோட்டில் பயணிப்பது தான் திரைக்கதையின் சுவாரஸ்யம். ஒவ்வொரு கதை களத்திற்கும், ஒரு பாடல் என்ற விதத்தில் மூன்று பாடல்களும், மூன்று…
Read MoreCategory: சினிமா செய்திகள்
கும்கி 2 படத்தின் முதல் சிங்கிள் “பொத்தி “பொத்தி உன்ன வச்சு” பாடல் வெளியானது !!
டாக்டர் ஜெயந்திலால் காடா (பென் ஸ்டுடியோஸ்) வழங்கும், இயக்குநர் பிரபு சாலமனின் – கும்கி 2 படத்தின் முதல் சிங்கிள் பொத்தி பொத்தி உன்ன வச்சு பாடல் வெளியீடு. டாக்டர் ஜெயந்திலால் காடா (பென் ஸ்டுடியோஸ்) வழங்க, தவல் காடா தயாரிப்பில், இயக்குநர் பிரபு சாலமன் இயக்கத்தில், பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் “கும்கி 2” படத்திலிருந்து, “பொத்தி பொத்தி உன்ன வச்சு” எனும் முதல் சிங்கிள் பாடல் அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது. இயக்குநர் பிரபு சாலமன் இயக்கத்தில், பிளாக்பஸ்டர் வெற்றி பெற்ற படம் “கும்கி”. 13 வருடங்களைக் கடந்தும், இன்றும் ரசிகர்களால் கொண்டாடப்படும் அப்படத்தின் மையத்தை வைத்து, இயக்குநர் பிரபு சாலமன் மீண்டும் கும்கி 2 படத்தை உருவாக்கி வருகிறார். ஒரு இளைஞன் மற்றும் ஓர் அற்புதமான யானை இடையேயான தூய்மையான, நிபந்தனையற்ற நட்பைப் பற்றியும், அன்பை பற்றியும்…
Read Moreஅனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்த “45 தி மூவி” — “ஆஃப்ரோ தபாங்” (Afro Tapang) பாடல்
“45 தி மூவி” — கருநாட சக்கரவர்த்தி டாக்டர் சிவராஜ்குமார், ரியல் ஸ்டார் உபேந்திரா, மற்றும் இராஜ் பி ஷெட்டி நடிப்பில், அர்ஜுன் ஜன்யா இயக்கத்தில் உருவாகி வரும் பிரம்மாண்டமான திரைப்படம். சுரஜ் புரொடக்ஷன்ஸ் பேனரில் திருமதி உமா ரமேஷ் ரெட்டி மற்றும் எம். ரமேஷ் ரெட்டி ஆகியோர் தயாரித்துள்ள இந்த படம், அதன் போஸ்டர்கள் மற்றும் க்ளிம்ப்ஸ்கள் வெளியாகியதிலிருந்து ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில், படக்குழு வெளியிட்ட தனித்துவமான, அதிரடி நடனப்பாடல் “ஆஃப்ரோ தபாங்” (Afro Tapang) ரசிகர்களிடையே இன்னும் அதிக உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. பாடல் ஒரு காடு சூழலில்தான் தொடங்குகிறது — இதில் ராஜ் பி ஷெட்டி மீது நாய்கள் தாக்குதல் நடத்துகின்றன, அவர் ஒரு பள்ளத்தில் விழுகிறார். பின்னர் சில ஆப்பிரிக்க பழங்குடி சிறார்கள் அவருக்கு உதவுகிறார்கள்; அவருடைய உடையை மாற்றி…
Read Moreஅர்ஜூன் அசோகன் – ரோஷன் மாத்யூ நடித்த “சத்தா பச்சா: த ரிங் ஆஃப் ரௌடீஸ்” தமிழ் டீசர் வெளியானது
“கடவுளின் தேசமான கேரளாவில் இருந்து வந்த நடிகர்கள், காலம் காலமாக தமிழ் திரை ரசிகர்களின் இதயத்தையும், அவர்களின் சினிமா ருசியையும் வென்றுள்ளனர். மொழி மற்றும் பிராந்திய எல்லைகளை தாண்டி, “தமிழ்நாட்டின் சொந்த மகன்” என்ற அன்பு பெயரைப் பெற்ற நடிகர்கள் வரிசையில், அர்ஜூன் அசோகன் இப்போது இணைகிறார். *ரோமாஞ்சம்* மற்றும் *தளவரா* போன்று சிறப்பாக பாராட்டப்பட்ட திரைப்படங்களில் அவர் காட்டிய நடிப்பு, ஏற்கனவே தமிழ் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. தற்போது அவர் தனது நேரடி தமிழ் அறிமுகத்தை ப்ரோ கோட் (Bro Code) மூலம் செய்ய தயாராகி வருகிறார். இந்த நிலையில், அவரது அடுத்த முயற்சி “சத்தா பச்சா” படத்தின் டீசர் வெளியீடு ரசிகர்கள் மற்றும் சினிமா பிரியர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. குறுகிய நேரத்திலேயே, அந்த டீசர் ரசிகர்களின் முழு கவனத்தையும் ஈர்த்துள்ளது. இயல்பான…
Read MoreVerus Productions வழங்கும் கெளதம் ராம் கார்த்திக் நடிப்பில் “ROOT” – படப்பிடிப்பு நிறைவு!
Verus Productions தயாரிப்பில், கெளதம் ராம் கார்த்திக் நடித்துவரும் “ROOT – Running Out of Time” திரைப்படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் 30, அதிகாரப்பூர்வமாக நிறைவடைந்தது. Sci-Fi க்ரைம் த்ரில்லரான இப்படம், சிறந்த தயாரிப்பு நிர்வாகத்தால், திரைத்துறை மற்றும் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. “ROOT – Running Out of Time” படத்தை சூரியபிரதாப் S எழுதி இயக்கியுள்ளார். இதன் மூலம் பாலிவுட் நடிகர் அபர்ஷக்தி குரானா தமிழ் திரையுலகில் அறிமுகமாகிறார். படத்தில் பாவ்யா த்ரிகா நாயகியாக நடித்துள்ளார். மேலும், Y.Gee. மகேந்திரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பாவ்னி ரெட்டி, லிங்கா, RJ ஆனந்தி உள்ளிட்ட பலரும் முக்கிய வேடங்களில் இணைந்துள்ளனர். உணர்ச்சிமிகுந்த கதாபாத்திரங்களோடு, அறிவியலையும் மனித உணர்வுகளையும் இணைக்கும் தனித்துவமான கருத்தை மையமாகக் கொண்டு இப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் பல…
Read Moreசெகோன் இந்திய விமானப்படை மராத்தான் 2025 இன் தொடக்க விழாவில் ‘ஆபரேஷன் சஃபேத் சாகர்’ டீசரை நெட்ஃபிலிக்ஸ் வெளியிட்டது!
இந்திய விமானப்படையின் துணிச்சலையும் பாரம்பரியத்தையும் கௌரவிக்கும் வகையில், கார்கில் போரின் போது நடத்தப்பட்ட உலகின் மிக உயரமான விமான நடவடிக்கையின் (Air operation) கதையைச் சொல்கிறது நெட்ஃபிலிக்ஸின் இந்தத் தொடர். புது தில்லி, நவம்பர் 2, 2025: கார்கில் போரில் இந்திய விமானப்படையின் முக்கிய பங்கை எடுத்து சொல்லும் வகையில் நெட்ஃபிலிக்ஸில் வரவிருக்கும் தொடரான ’ஆபரேஷன் சஃபேத் சாகர்’ இருக்கிறது. புது தில்லியில் முதன்முதலில் நடைபெற்ற செகோன் இந்திய விமானப்படை மராத்தான் 2025 (SIM-25) இல் வெளியிட்டபோது இந்தியாவின் உற்சாகம் உச்சத்தை எட்டியது. அபிஜீத் சிங் பர்மர் மற்றும் குஷால் ஸ்ரீவஸ்தவா ஆகியோரால் உருவாக்கப்பட்டு ஓனி சென் இயக்கியுள்ள இந்தத் தொடரில் சித்தார்த், ஜிம்மி ஷெர்கில், அபய் வர்மா, மிஹிர் அஹுஜா, தாருக் ரெய்னா மற்றும் அர்னவ் பாசின் உள்ளிட்ட பலர் பணியாற்றியுள்ளனர். புது தில்லி ஜவஹர்லால்…
Read Moreதிருமணத்திற்கு நூறு சவரன் நகைகளை அளிப்பதாகவும் வாக்குறுதி அளித்த மன்சூர் அலிகான்!
நடிகர் மன்சூர் அலிகான் இன்று கண்ணகி நகர் சென்று, கார்த்திகாவை நேரில் சந்தித்து பாராட்டு தெரிவித்து ஒரு லட்ச ரூபாயை நன்கொடையாக கொடுத்து, வாழ்த்தினார்! ஒலிம்பிக்கில் தங்கம் வென்றால், கார்த்திகாவின் திருமணத்திற்கு நூறு சவரன் நகைகளை வழங்குவதாக கார்த்திகா மற்றும் அவருடைய குடும்பத்தினரிடம் மன்சூர் அலிகான் வாக்களித்தார்.
Read More‘டூரிஸ்ட் ஃபேமிலி’ பட இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் திருமணம் !!
‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படம் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்த இளம் இயக்குநர் அபிஷன் ஜீவிந்த், அவரது காதலி அகிலாவை கரம்பிடித்துள்ளார். இவர்கள் இருவரது திருமணம், இன்று அக்டோபர் 31 ஆம் தேதி, இருவரது பெற்றோர்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் புடைசூழ, ஹனு ரெட்டி, போயஸ் கார்டன், சென்னையில் கோலகலமாக நடைபெற்றது. முன்னதாக நேற்று க்ரீன் பார்க் ஸ்டார் ஹோட்டலில், நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சியில், நடிகர்கள் சசிகுமார், சிவகார்த்திகேயன், எம் எஸ் பாஸ்கர் , ரமேஷ் திலக், நடிகைகள் சிம்ரன்,அனஸ்வரா விஜயன், தயாரிப்பாளர்கள் 2D Entertainment ராஜசேகர் கற்பூர சுந்தரபாண்டியன், சௌந்தர்யா ரஜினிகாந்த், மகேஷ் ராஜ் பசிலியான், அருண் விஷ்வா, ஷினீஷ், இயக்குநர்கள் ‘பூ’ சசி, ரஞ்சித் ஜெயக்கொடி, சண்முகப்பிரியன் (லவ் மேரேஜ்), பிரபு ராம் வியாஸ் (லவ்வர்) , மதன் (அபிஷன் ஜீவிந்த் நாயகனாக நடிக்கும்…
Read Moreகடந்த பல ஆண்டுகளாக மக்கள் அளித்த அன்பும் அங்கீகாரமும், எனக்கு பெரும் உற்சாகத்தையும் ஊக்கத்தையும் வழங்கியதோடு, இந்த அழகான திரைப்பட உலகின் ஒரு பகுதியாகவும் மாற்றியுள்ளது.
இப்போது அந்த பயணத்தை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்லும் நோக்கில், எனது திரைப்பட தயாரிப்பு நிறுவனமான “AARAV STUDIOS”-இன் துவக்கத்தை பணிவுடன் அறிவிப்பதில் பெருமை கொள்கிறேன். AARAV STUDIOS என்பது கதை சொல்லும் கலையின்மீது உள்ள தீவிரமான ஆர்வத்திலிருந்தும், ஆழமான அன்பிலிருந்தும் உருவானது. விஷுவல் மற்றும் கிரியேட்டிவ் உலகில், இதுவரை சொல்லப்படாத இயல்பான கதைகளை உருவாக்கும் நோக்குடன், இந்த நிறுவனம் உருவாகியுள்ளது. கடவுளின் அருளும், திரைப்பட ரசிகர்களின் அன்பும் துணையாக, இதயங்களைத் தொடும் சிறந்த படங்களை தொடர்ந்து உருவாக்கும் நம்பிக்கையுடன், நன்றியுடன், எங்களின் இந்த சினிமா பயணத்தை பெருமையுடன் தொடங்குகிறோம். அன்பும் நன்றியுமுடன், ஆரவ் Aarav
Read MoreBR Talkies Corporation மற்றும் நடிகர் சுரேஷ் ரவி இணையும் இரண்டாவது திரைப்டத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்தது !!!
BR Talkies Corporation சார்பில் பாஸ்கரன் B, ராஜபாண்டியன் P, டேங்கி தயாரிப்பில், தயாரிப்பில், இயக்குநர் K பாலையா இயக்கத்தில், நடிகர்கள் சுரேஷ் ரவி, யோகிபாபு இணைந்து நடிக்க, கிராமத்து பின்னணியில், கலக்கலான ஃபேமிலி எண்டர்டெயினராரக உருவாகி வரும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்தது. முன்னதாக BR Talkies Corporation தயாரிப்பில், மிக அழுத்தமான படைப்பாக “காவல்துறை உங்கள் நண்பன்” திரைப்படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், இரண்டாவது தயாரிப்பாக, இந்த புதிய படத்தை அனைத்து அம்சங்களுடன், நகைச்சுவை நிறைந்த, முழுமையான ஃபேமிலி எண்டர்டெயினராக உருவாக்கி வருகிறது. இன்றைய நகர வாழ்க்கை, கிராமத்து வாழ்வியல் இரண்டையும் படம்பிடித்துக் காட்டும் வகையில், சமூக அக்கறை கருத்தோடு, கிராமத்து பின்னணியில், கலக்கலான காமெடி டிராமாவாக இப்படத்தினை இயக்குநர் K பாலையா எழுதி இயக்குகிறார். இப்படத்தில் சுரேஷ் ரவி,…
Read More