உண்ணாவிரதம் இருக்கும் சசிகாந்த் செந்தில் எம்.பி’க்கு, மகாத்மா காந்தி மக்கள் கட்சி தலைவரும், நடிகருமான தக்‌ஷன் விஜய் ஆதரவு!

தமிழ்நாட்டுக்கான கல்வி நிதியை விடுவிக்காத ஒன்றிய அரசை எதிர்த்து 3வது நாளாக தொடர் உண்ணாவிரதம் போராட்டத்தில் இருக்கும் திருவள்ளூர் தொகுதி காங்கிரஸ் எம்.பி. சசிகாந்த் செந்தில் அவர்களுக்கு எனது ஆதரவை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் உயர் ரத்த அழுத்தம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவர் சிகிச்சை எடுத்து வருவதால், விரைவில் நலம் பெறவும் வேண்டுகிறேன்! இப்படிக்கு, நடிகர் தக்‌ஷன் விஜய், மகாத்மா காந்தி மக்கள் கட்சி தலைவர்.

Read More

‘போலீஸ் போலீஸ்’ வெப்தொடர் வரும் செப்டம்பர் 19 அன்று ஜியோஹாட்ஸ்டாரில் ஸ்ட்ரீம் ஆகும் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு

 ஹாட்ஸ்டார் ஸ்பெஷல் சீரிஸாக உருவாகி இருக்கும் ‘போலீஸ் போலீஸ்’ வெப்தொடர் வரும் செப்டம்பர் 19 அன்று ஜியோஹாட்ஸ்டாரில் ஸ்ட்ரீம் ஆகும் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. ரசிகர்கள் மத்தியில் நன்கு வரவேற்பு பெற்ற இதன் முதல் புரோமோவில் மிர்ச்சி செந்தில் (ராஜா) மற்றும் ஜெயசீலன் தங்கவேல் (முரளி) இருவரும் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள் என்பது இடம் பெற்றிருந்தது. தற்போது வெளியாகி இருக்கும் புதிய புரோமோவில் ஷபானா ஷாஜகான் நேர்மையான வழக்கறிஞர் லலிதாம்பிகா கதாபாத்திரத்தில் அறிமுகமாகிறார். கலகலப்பான இந்த புரோமோவில் லலிதாம்பிகா முரளியை திருடன் என நினைத்து விடுகிறார். முரளி பணி செய்யும் காவல் நிலையத்திற்கே அவரை அழைத்து செல்கிறார் லலிதாம்பிகா. அவர் வருத்தப்பட வேண்டும் என்பதற்கே போலியான காயத்தை தனக்கு உருவாக்கி லலிதாவை டீஸ் செய்கிறார் முரளி. இவரோடு செந்திலும் சேர்ந்து கொள்ள இந்தத் தொடர் ஆக்‌ஷன்,…

Read More

டாக்டர் பிரசித்தா NR மற்றும் திரு. பாலாஜி திருமணம்

சென்னை, ஆகஸ்ட் 29, 2025: ‘முதல் மரியாதை’ புகழ் நடிகர் தீபன் (எ) ராமச்சந்திரன் அவர்களின் மகளும், மறைந்த டாக்டர் எம்.ஜி. ராமச்சந்திரன் மற்றும் திருமதி ஜானகி எம்.ஜி.ஆர். அவர்களின் பேத்தியுமான டாக்டர் பிரசித்தா NR அவர்களின் திருமணம், இன்று காலை சென்னை வடபழனியில் உள்ள கிரீன் பார்க் ஹோட்டலில், பாரம்பரிய முறையில் கோலாகலமாக நடைபெற்றது. கல்வி மற்றும் விளையாட்டு ஆகிய இரண்டிலும் சிறந்து விளங்கும் டாக்டர் பிரசித்தா, சென்னை சர்ச் பார்க் பள்ளியில் தனது பள்ளிப்படிப்பை முடித்தார். அங்கு அவர் 2014–2015-ஆம் ஆண்டில் ‘சிறந்த மாணவி’ விருதைப் பெற்றார். ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் இதே கௌரவம் டாக்டர் ஜெ. ஜெயலலிதா அவர்களுக்கு வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவின் பால்டிமோர் நகரில் உள்ள மேரிலாந்து பல்கலைக்கழகத்தில் மருத்துவப் படிப்பை முடித்த அவர், தற்போது டெக்சாஸில் முதுகலை மருத்துவக்…

Read More

ரசிகை ராஜேஸ்வரியின் கனவை நனவாக்கிய மெகா ஸ்டார் சிரஞ்சீவி !!

பிரபலங்களுக்கும், ரசிகர்களுக்கும் இடையேயான தொடர்புகள் பல நேரங்களில் தாற்காலிகமாகவே இருக்கும் இந்த உலகத்தில், மெகாஸ்டார் சிரஞ்சீவி மீண்டும் ஒருமுறை ஏன் கோடிக்கணக்கான மக்களின் இதயத்தில் தனிச் சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கிறார் என்பதை தனது கருணை மற்றும் அன்பால் நிரூபித்துள்ளார். சமீபத்தில், ஆந்திரப்பிரதேசம், ஆடோனி என்ற ஊரைச் சேர்ந்த அவரின் தீவிர ரசிகை ராஜேஸ்வரிக்காக சிரஞ்சீவி செய்த இதயப்பூர்வமான செயல், பலரையும் உருகச் செய்துள்ளது. தனது வாழ்நாள் கனவான சிரஞ்சீவியைச் சந்திக்க வேண்டும் என்ற ஒரே எண்ணத்துடன், ராஜேஸ்வரி சைக்கிளில் ஏறி தொலைதூரப் பயணம் செய்து ஹைதராபாத்தை அடைந்தார். அத்தனை கஷ்டங்களையும், உடல் சோர்வையும் பொருட்படுத்தாமல் தனது அன்பும், உறுதியும் அவரை அந்தப் பயணத்தில் முன்னோக்கி நகர்த்தியது. இந்த செய்தி சிரஞ்சீவியின் காதுகளில் விழுந்தபோது, அவர் அதனை சாதாரணமாக எடுத்துக்கொள்ளவில்லை, முழுமனதுடன் தன் ரசிகையின் அன்பை ஆரத்தழுவி ஏற்றுக்கொண்டார். சிரஞ்சீவி…

Read More

பிரம்மாண்டத்தின் உச்சம், தேஜா சஜ்ஜாவின் “மிராய்” பட டிரெய்லர் வெளியானது !

ஹனுமேன் படம் போன்ற மாபெரும் வெற்றியை தொடர்ந்து பெறும் அதிர்ஷ்டம் எல்லா நடிகர்களுக்கும் கிடைப்பதில்லை. ஆனால் “புதிய தலைமுறை சூப்பர் ஹீரோ” தேஜா சஜ்ஜா, விதியை வென்றவர் போலத் தெரிகிறார். ஹனுமேன் மூலம் ரசிகர்களை கவர்ந்த பிறகு, அவர் மீண்டும் “மிராய்” எனும் விறுவிறுப்பான பிரம்மாண்ட காவியத்துடன் திரையில் ஆதிக்கம் செலுத்தத் தயாராக இருக்கிறார். ஒளிப்பதிவாளராகப் புகழ்பெற்று, இப்போது இயக்குநராகியிருக்கும் கார்த்திக் கட்டமனேனி, மென்மை, மாயஜாலம் மற்றும் அதிரடி நிரம்பிய ஒரு உலகத்தை உருவாக்கியுள்ளார். பீப்பிள் மீடியா பேக்டரியின் டி.ஜி. விஸ்வ பிரசாத் மற்றும் கீர்த்தி பிரசாத் ஆகியோர் இந்த பெரும் கனவு திரைப்படத்தை, திரையில் உயிர்பித்துள்ளனர். படத்தின் ஃபர்ஸ்ட் கிளிம்ப்ஸே ரசிகர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. நாயகனின் வலிமையை மட்டுமல்ல, அவன் எதிர்நின்று போராட வேண்டிய ஆற்றல்மிக்க வில்லனையும் அறிமுகப்படுத்தியது. முன்னதாக வெளியான “வைப்”…

Read More

சென்னையில் நடைபெறும் RUC ஸ்போர்ட்ஸ் ஃபிலிம் ஃபெஸ்டிவல், ரைஸ் அப் சாம்பியன்ஷிப் அறக்கட்டளையை அறிமுகப்படுத்துகிறது!

விளையாட்டு மற்றும் சினிமாவின் தனித்துவ கொண்டாட்டமான RUC ஸ்போர்ட்ஸ் ஃபிலிம் ஃபெஸ்டிவல் செப்டெம்பர் 3 மற்றும் 4 அன்று சென்னை, தி.நகரில் உள்ள AGS சினிமாஸில் அறிமுகமாகிறது. காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை ஆங்கிலம், இந்தி மற்றும் தமிழ் மொழிகளில் பிளாக்பஸ்டர் மற்றும் விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட படங்களை இரண்டு நாட்களுக்கு பெரிய திரையில் பார்த்து கொண்டாடலாம். காலத்தால் அழியாத கிளாசிக் படைப்புகள் முதல் சமீபத்திய வெற்றிகள் வரை ரசிகர்களுக்கு மறக்க முடியாத திரையனுபவத்தை கொடுக்க இருக்கிறது. விளையாட்டு நமக்கு எப்படி ஊக்கமளிக்கிறது, உந்துதல் கொடுக்கிறது மற்றும் மைதானத்திற்கும் அப்பாற்பட்டு நம் வாழ்வில் எப்படி முக்கியமான அங்கம் வகிக்கிறது ஆகியவற்றை ஒவ்வொரு திரையிடலும் நமக்கு உணர்த்தும். விளையாட்டு வீரர்கள், ரசிகர்கள், திரைப்படத்துறையினர் என அனைவரும் ஒரே இடத்தில் கூடி விளையாட்டின்…

Read More

‘குற்றம் புதிது’ படம் மூலம் ரசிகர்களின் மனம் கவர வருகிறார் நடிகர் தருண் விஜய்!

ஸ்டைல், அர்ப்பணிப்பு மற்றும் திறமையுள்ளவர்களை தமிழ் சினிமா எப்போதும் வரவேற்கும்! அந்த வகையில், நாளை வெளியாக இருக்கும் ‘குற்றம் புதிது’ படம் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமாக இருக்கிறார் நடிகர் தருண் விஜய். லெஜெண்ட் நடிகர்கள் புரூஸ் லீ, ஜாக்கி சான் மற்றும் டோனி ஜா போன்ற முகத்தோற்றம் தருண் விஜய்க்கு இருப்பதாக படத்தின் முதல் பார்வை போஸ்டரை ரசிகர்கள் கொண்டாடினர். SRM கல்லூரி மாணவர்கள் மத்தியில் தருண் புகழ்பெற்றவராக இருப்பதால் நாளை (ஆகஸ்ட் 29, 2025) வெளியாக இருக்கும் அவரின் ‘குற்றம் புதிது’ பட போஸ்டரை மாணவர்கள் ஷேர் செய்து வருகின்றனர். திருவள்ளூரில் உள்ள குழந்தைகள் நல மருத்துவரின் மகனான தருண் விஜய் சென்னை போன்ற இந்த பெரும் நகரத்தில் மற்றவர்களைப் போலவே சாதாரண மேன்ஷனில் தங்கி தனது கனவை நிறைவேற்றியுள்ளார். ‘குற்றம் புதிது’…

Read More

”’அந்த ஏழு நாட்கள்’ படத்தின் கதைக்கு தலைப்பை தேர்ந்தெடுத்ததே பாக்யராஜ் சார்தான்!”

இயக்குநர் சுந்தர் இயக்கத்தில் விஞ்ஞானத்தை மையமாகக் கொண்ட காதல் திரைப்படமாக உருவாகியிருக்கிறது ‘அந்த ஏழு நாட்கள்’ திரைப்படம். இந்த படத்தில் ஒரு அசம்பாவிதத்தைத் தவிர்க்கும் கதாநாயகனாக நடித்துள்ள வினித் என்கிற அஜித்தேஜ் ஒரு வானியற்பியல் மாணவராகவும், நாயகி ஸ்ரீஸ்வேதா வழக்கறிஞராகவும் நடித்துள்ளனர். பெஸ்ட்காஸ்ட் ஸ்டுடியோஸ் தயாரிப்பு நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் முரளி கபீர்தாஸ் இந்தத் திரைப்படத்தை தயாரித்துள்ளார். வெறும் பொழுதுபோக்கிற்காக மட்டுமல்லாமல் தனித்துவமான தரமான கதைகள் மூலம் பார்வையாளர்களுக்கு நல்ல சினிமா அனுபவத்தை வழங்குவதையும் தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், எழுத்தாளர்கள் என புது திறமையானவர்களுக்கு வாய்ப்பு கொடுப்பதை நோக்கமாகவும் கொண்டிருக்கிறார் தயாரிப்பாளர் முரளி கபீர்தாஸ். படம் குறித்து தயாரிப்பாளர் முரளி கபீர்தாஸ் பகிர்ந்து கொண்டதாவது, “நான் படம் தயாரிக்க வேண்டும் என முடிவு செய்தபோது ரசிகர்கள் இதற்கு முன்பு பார்த்திராத நல்ல கதைகள் மற்றும் நல்ல சினிமா அனுபவத்தை…

Read More

தமிழ் சினிமாவின் வெளிநாட்டு முன்னணி சக்தி மணமுடித்தார்: அகிம்சா என்டர்டெயின்மென்ட் நிறுவனர் வித்துர்ஸ், லிஷாவுடன் திருமணம்

சென்னை, — தமிழ் திரைப்படங்களை உலகளவில் பரப்பியதில் முக்கிய பங்கு வகிக்கும் அகிம்சா என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் நிறுவனர் வித்துர்ஸ், தனது நீண்டகால துணைவி லிஷாவுடன் திருமணம் செய்து கொண்டார். சென்னையில் நடைபெற்ற இந்த பிரமாண்டமான திருமண வரவேற்பு விழா, தமிழ் சினிமாவின் முன்னணி பிரபலங்களை ஒன்றிணைத்த ஒரு பிரமுகமான நிகழ்வாக அமைந்தது. நடிகர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், இசைக்கலைஞர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்ட இந்த விழா, மறக்க முடியாத ஒரு தருணமாக இருந்தது. வித்துர்ஸ் மற்றும் அவரது நிறுவனம் அகிம்சா என்டர்டெயின்மென்ட், கடந்த சில ஆண்டுகளில் தமிழ் திரைப்படங்களை இங்கிலாந்து, ஐரோப்பா, வட அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு வெளிநாட்டு சந்தைகளுக்கு வெற்றிகரமாக கொண்டு சென்றுள்ளது. புதிய முயற்சிகள், தரமான விநியோகம், புதுமுக இயக்குநர்களுக்கு ஆதரவு ஆகியவற்றின் மூலம், நிறுவனம் உலகளாவிய தமிழ் சினிமா வட்டாரத்தில் நம்பிக்கையான பெயராக…

Read More

96 ஜோடி ஆதித்யா பாஸ்கர், கௌரி கிஷன் மீண்டும் இணையும் படம்

Origin Studios சார்பில் கண்ணதாசன் புதிய படம் ஒன்றை தயாரிக்கிறார் இப்படத்துக்கு இன்னும் பெயரிடப்படவில்லை. Production NO 1 என தற்காலிகமாக பெயர் சூட்டப்பட்டுள்ளது. ராஜ்குமார் ரங்கசாமி இப்படத்தை இயக்குகிறார். எல்.ராமச்சந்திரன் ஒளிப்பதிவு செய்கிறார். ஜோன்ஸ் ரூபர்ட் இசை அமைக்கிறார். இவர் பொறியாளன், சட்டம் என் கையில் படத்திற்கு இசையமைத்தவர். குட் நைட், லவ்வர் , டூரிஸ்ட் ஃபேமிலி, போன்ற படங்களுக்கு எடிட்டிங் செய்த பரத் இப்படத்துக்கு எடிட்டிங் செய்கிறார். படம் பற்றி இயக்குனர் ராஜ்குமார் ரங்கசாமி கூறியதாவது: இந்த உலகில் காதலும் அன்பும் அதன் இயல்பு தன்மையை மாற்றாமல் இருப்பதை நாம் ஒப்புக் கொள்ளும் அதே வேளையில் அவற்றின் வடிவம் காலத்திற்கு ஏற்ப மாறிக்கொண்டே இருப்பதை நாம் மறுக்க இயலாது. 90s கிட்ஸ், 2K கிட்ஸ் .. வரிசையில் இன்றைய இளைஞர்களை ஜெனரேஷன் ஆல்ஃபா என்று…

Read More