கடந்த ஜூலை மாதம் ரொமான்டிக் காமெடி படமாக வெளியான ‘பன் பட்டர் ஜாம்’ படம் ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றது. இந்தநிலையில் இன்று தெலுங்கில் அந்தப்படம் மொழி மாற்றம் செய்யப்பட்டு வெளியாகிறது.. பிக்பாஸ் புகழ் ராஜூ ஜெயமோகன் கதாநாயகனாக நடித்திருந்த இந்த படத்தை இயக்குநர் ராகவ் மிர்தாத் இயக்கியிருந்தார். ரெய்ன் ஆப் ஆரோஸ் (Rain of Arrows) நிறுவனம் சார்பாக இந்த படத்தை சுரேஷ் சுப்பிரமணியன் தயாரித்திருந்தார். இவர் ஏற்கனவே ஜெய் நடித்த ‘எண்ணித் துணிக’ என்கிற படத்தை தயாரித்தவர். திருச்சியில் பிறந்து தற்போது லாஸ் ஏஞ்சல்ஸில் வசித்து வரும் சுரேஷ் சுப்பிரமணியன் ஹாலிவுட் பட தயாரிப்பு நிறுவனம் ஒன்றைத் துவங்கி அங்கேயும் படங்களை தயாரித்து வருகிறார். ‘பன் பட்டர் ஜாம்’ படத்தை தொடர்ந்து அடுத்தடுத்து தான் தயாரிக்க இருக்கும் படங்கள் குறித்த தகவல்களை செய்தியாளர்களிடம் பகிர்ந்து…
Read MoreCategory: சினிமா செய்திகள்
நடிகர் அசோக் செல்வன் மற்றும் மிர்னா நடிப்பில் எல்லைகளுக்கு அப்பாற்பட்ட காதல் கவிதையாக உருவாகிறது ’18 மைல்ஸ்’!
பதினெட்டு மைல்களுக்கு அப்பாலும் வானம் ஒரே மாதிரியாக இருக்கலாம். ஆனால், வாழ்க்கை வெவ்வேறானது. முடிவில்லாத கடல், அமைதி, தொலைவு, சொல்லப்படாத காதல் எனப் பல விஷயங்கள் இதில் இருக்கிறது. இவற்றை எல்லாம் பேசும் கடலோர காதல் கதை ’18 மைல்ஸ்’ என்கிறது குழு. சதீஷ் செல்வகுமார் இயக்கத்தில் நடிகர்கள் அசோக் செல்வன் மற்றும் மிர்னா நடிப்பில் உருவான இந்த உணர்வு உங்கள் மனங்களை ஊடுருவி ஆன்மாவைத் தொடும். சித்து குமார் இசையமைப்பில், விக்னேஷ் ராமகிருஷ்ணா பாடல்கள் எழுதியுள்ளார். கே எழில் அரசுவின் ஒளிப்பதிவில் ஒவ்வொரு காட்சியும் கவிதையாக விரியும். நாஷின் படத்தொகுப்பும் எம். தேவேந்திரனின் கலை வடிவமைப்பும் நம் உணர்வுகளை தாலாட்டும். இவற்றை எல்லாம் தாண்டி நடிகர்கள் அசோக் செல்வன் மற்றும் மிர்னாவுக்கு இடையிலான காதல் காலம் தாண்டியது. அவர்களின் பார்வையும் மெளனமும் கவிதையாக பார்க்கலாம். இசையின்…
Read MoreJSK சதீஷ்குமார் தயாரிப்பில் உருவாகும் “குற்றம் கடிதல் 2” படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு நிறைவு;
தமிழ் திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய JSK சதீஷ்குமார் தயாரிப்பில் உருவாகும் “குற்றம் கடிதல் 2” படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு, திட்டமிட்டிருந்த நாட்களை விட மூன்று நாட்கள் முன்பாகவே, கோடைக்கானலில் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. இயக்குநர் எஸ்.கே.ஜீவா கூறியதாவது, “கோடைக்கானலில் ஏற்பட்ட சவாலான காலநிலையையும் மீறி, திட்டத்திற்கு முன்னதாகவே முதல் கட்ட படப்பிடிப்பை நிறைவு செய்துள்ளோம். இது எங்கள் குழுவின் ஒருங்கிணைந்த உழைப்பாலும், தயாரிப்பு அணியின் தளராத ஒத்துழைப்பாலும் சாத்தியமாகியது. தயாரிப்பாளரும், கதாநாயகனுமான JSK சதீஷ்குமார் அவர்கள் மிகுந்த அர்ப்பணிப்புடன் நடித்திருந்தார், ஒரு காட்சியில் எந்தவித உதவியுமின்றி இயல்பாகக் கண்ணீர் விட்டபோது, அங்கே இருந்த முழுக் குழுவினரிடமிருந்தும் கைத்தட்டல்களைப் பெற்றார். இப்படியான தருணங்களே, திரைப்படக் கலையை உயர்த்தும் உண்மையான சான்றுகள். நடிகர், நடிகைகள் அனைவரின் பாராட்டத்தக்க நடிப்பிற்கும் நான் நன்றியுடன் இருக்கிறேன். அடுத்த கட்ட படப்பிடிப்புகளில் மேலும்…
Read Moreநடிகர் ‘பருத்திவீரன்’ சரவணன் கட்டியுள்ள விநாயகர் கோயில் !
ஒரு காலத்தில் கதாநாயகனாக அறிமுகமாகி சில படங்களில் நடித்தவர் சரவணன். மறுபிரவேச வாய்ப்பாக அமைந்த ‘பருத்திவீரன்’ படத்திற்குப் பிறகு அந்தப் பாத்திரத்தின் வெற்றியால் பெயரே ‘பருத்திவீரன்’ சரவணன் என்றானது. அதன் பிறகு ஏராளமான படங்களில் நடித்தார்; நடித்தும் வருகிறார். எதிர்மறை மற்றும் குணச்சித்திரப் பாத்திரங்களில் நடித்து வரும் அவர், தனக்கென ஒரு பாதை அமைத்துக் கொண்டு பயணித்து வருகிறார். அண்மையில் வெளியான ‘சட்டமும் நீதியும்’ இணையத் தொடர் சரவணன் வாழ்க்கையில் அமைந்த ஒரு மைல் கல் எனலாம். அந்த அளவுக்குத் தனது பண்பட்ட நடிப்பை அதில் வெளிப்படுத்தி இருந்தார். நடிகர் சரவணன் ஒரு விநாயகர் கோவிலை சேலம் மாவட்டத்தில் ஓமலூர் வட்டம், வட்டக்காடு என்கிற ஊரில் கட்டி இருக்கிறார் . தனது தோட்டத்தில் எழுந்து அருள்பாலிக்கும் விநாயகராக அதை வணங்கி வந்தவர், தற்போது அதற்காக ஓர் ஆலயம்…
Read Moreபிரதீப் ரங்கநாதன் – விக்னேஷ் சிவன் கூட்டணியில் LIK ( ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ ) திரைப்படம் அக்டோபர் 17 தீபாவளிக் கொண்டாட்டமாக, உலகம் முழுவதும் வெளியாகிறது!!
தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான பிரதீப் ரங்கநாதன் கதையின் நாயகனாக நடிக்க, முன்னணி இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கியிருக்கும் LIK ( ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ ) திரைப்படம் 2025 வருட தீபாவளிக் கொண்டாட்டமாக வரும் அக்டோபர் 17 ஆம் தேதி ரசிகர்களை மகிழ்விக்க திரைக்கு வருகிறது. பிரபல இயக்குநரான விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகியுள்ள LIK ( ‘ லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’) திரைப்படத்தில் பிரதீப் ரங்கநாதன், கிருத்தி ஷெட்டி , எஸ். ஜே. சூர்யா, யோகி பாபு, கௌரி கிஷன், ஷா ரா ஆகியோர் முதன்மையான வேடங்களில் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் செந்தமிழன் சீமான் சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார். ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு Rock Star அனிருத் இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை பிரதீப் ஈ. ராகவ் மேற்கொள்ள கலை இயக்கம் மற்றும்…
Read More‘மெகா ஸ்டார்’ சிரஞ்சீவி நடிக்கும் ‘விஸ்வம்பரா’ படத்தின் கிளிம்ப்ஸ் வெளியீடு
‘மெகா ஸ்டார்’ சிரஞ்சீவி – வசிஷ்டா (Vassishta) – எம். எம். கீரவாணி (MM Keeravani)- யுவி கிரியேசன்ஸ் (UV Creations) – கூட்டணியில் உருவாகும் ‘விஸ்வம்பரா ‘ படத்தின் மெகா பிளாஸ்ட் கிளிம்ப்ஸ் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த கிளிம்ப்ஸ் ரசிகர்களுக்கு புதிய சினிமாடிக் காவியத்திற்கான அனுபவத்தை வழங்குகிறது. ‘மெகா ஸ்டார்’ சிரஞ்சீவி நாளை தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இந்நிலையில் அவர் நடிக்கும் ‘விஸ்வம்பரா ‘ படத்தின் தயாரிப்பாளர்கள்- ரசிகர்களுக்கு ஒரு சிறப்பான ஆச்சரியத்தை அளித்துள்ளனர். இது மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கற்பனை கலந்த சமூக காட்சியின் ஒரு அற்புதமான விஷுவலாகும். இயக்குநர் வசிஷ்டா (Vassishta) இயக்கத்தில் உருவாகும் இந்த திரைப்படத்தை யுவி கிரியேசன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் விக்ரம், வம்சி – பிரமோத் ( Pramod ) ஆகியோர் பிரம்மாண்டமான முறையில் தயாரித்திருக்கிறார்கள். இந்த கிளிம்ப்ஸ் குறிப்பிடத்தக்க…
Read Moreமன்சூர் அலிகானின் ‘அகம் பிரம்மாஸ்மி’ ஆல்பம் அதிரடியாக வெளியானது!
மன்சூர் அலிகானின் ‘அகம் பிரம்மாஸ்மி’ ஆல்பம் அதிரடியாக வெளியானது! மன்சூர் அலிகான் எழுதி, இசையமைத்து, அவர் மகள் தில்ரூபா அலிகான் பாடிய ‘அகம் பிரம்மாஸ்மி’ ஆல்பம் இன்று வெளியானது! பாடல் வரிகளில் மிகுந்த அரசியல் வீரியம் உள்ளதால், பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தனது சொந்த ஆடியோ நிறுவனத்தில் பாடலை இன்று வெளியிட்டு, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் நடிகர் மன்சூர் அலிகான்! https://youtu.be/LOw-apXmXnk காற்றிசை கலகக்காரன் Tip Top தமிழா மன்சூர் அலிகானின் அகம் பிரம்மாஸ்மி! Ruby Audio Tip ToP Tamizha https://youtu.be/HmeyOBdeaPU பாடல் லிங் 👆🏻
Read More“மதர்” தமிழகமெங்கும் செப்டம்பர் மாதம் திரையரங்குகளில் வெளியாகிறது !!
RESAR Enterprises வழங்கும் தயாரிப்பாளர் ரேஷ்மா தயாரிப்பில், சரீஷ் இயக்கி, நாயகனாக நடிக்க, தம்பி ராமையா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் திரைப்படம் “மதர்”. இப்படத்தின் அனைத்து பணிகளும் முடிந்த நிலையில், வரும் செப்டம்பர் மாதம் உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. இன்றைய நவீன காலகட்டத்தில் கணவன் மனைவி உறவு சிக்கலனாதாக மாறியுள்ளது.ஒரு சிறு சந்தேகம் ஒரு நல்ல உறவையும் கெடுத்துவிடும். நவீன கால தம்பதிகளின் உறவுச்சிக்கலை மையப்படுத்தி, ஒரு அழகான கமர்ஷியல் படமாக இப்படம் உருவாகியுள்ளது. எழுத்தாளர் ரூபன் கதை வசனம் எழுதியுள்ளார். பிரபல இயக்குநர் வின்செண்ட் செல்வா, இப்படத்தின் திரைக்கதை எழுதியிருப்பதுடன் தயாரிப்பு மேற்பார்வை பணிகளையும் செய்துள்ளார். குடும்பத்தோடு அனைத்து தரப்பினரும் ரசிக்கும் வகையில், ஒரு அழகான கமர்ஷியல் படமாக, இப்படத்தை இயக்கியிருப்பதுடன் நாயகனாகவும் நடித்துள்ளார் சரீஷ். மேலும் அடுத்தடுத்து மேலும் பல சிறப்பான…
Read Moreஅசோக் செல்வன், நிமிஷா சஜயன் நடிக்கும் புதிய படம் பூஜையுடன் படப்பிடிப்பு துவங்கியது !!
அறிமுக இயக்குநர் மணிகண்டன் ஆனந்தன் இயக்கும் இந்த புதிய படத்தின் படப்பிடிப்பு, படக்குழுவினருடன், திரைபிரபலங்கள் நடிகர் சசிக்குமார், இயக்குநர் இரா சரவணன் ஆகியோர் கலந்துகொள்ள, மிகச் சிறப்பான முறையில் பூஜையுடன், இன்று துவக்கப்பட்டது. தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைக்களங்களில், தொடர்ந்து பிளாக்பஸ்டர் படங்களை வழங்கி வருகிறது மில்லியன் டாலர் ஸ்டூடியோஸ் (Million Dollar Studios) . குட் நைட், லவ்வர் மற்றும் இந்த வருடத்தின் பிளாக்பஸ்டர் வெற்றிப்படமான டுரிஸ்ட் ஃபேமிலி படத்தின் ஹாட்ரிக் வெற்றியைத் தொடர்ந்து, மில்லியன் டாலர் ஸ்டூடியோஸ் ( Million Dollar Studios ) நிறுவனத்தின் 6 வது படைப்பாக இப்படம் உருவாகிறது. தமிழ் திரையுலகில் பல வெற்றிப்படங்களைத் தந்து, முன்னணியில் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாக விளங்கும் வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் ( VELS Film International ) நிறுவனம் தற்போது பிரம்மாண்ட பொருட்செலவில்…
Read Moreஎம்புரான் L2, துடரும் படங்களுக்காக கேரள அரசு மாநில விருது வென்றார் ஸ்டண்ட் சில்வா
தமிழ் திரையுலகின் முன்னணி ஸ்டண்ட் இயக்குநர் சில்வா. ஸ்டண்ட் சில்வா என அறியப்படும் இவர் தமிழ் மட்டுமின்றி தென்னிந்திய திரையுலகில் இதுவரை 100-க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு ஸ்டண்ட் இயக்குநராக பணியாற்றி இருக்கிறார். சண்டை காட்சிகளில் தனக்கென ஒரு பாணியை பின்பற்றி வரும் ஸ்டண்ட் சில்வா வித்தியாசம் கலந்த விறுவிறுப்பான ஆக்ஷன் காட்சிகளை படமாக்குவதில் கைத்தேர்ந்தவர். ஸ்டண்ட் மட்டுமின்றி திரையுலகின் பல பரிவுகளில் தன்னை ஆர்வமுடன் ஈடுபடுத்தி வருகிறார் ஸ்டண்ட் சில்வா. அதன்படி திரைக்கு பிந்தைய பணிகள் தவிர்த்து, பல்வேறு திரைப்படங்களில் முக்கிய வேடங்களில் நடித்து, ரசிகர்களை கவர்ந்துள்ளார். முன்னணி இயக்குநர்கள், திரையுலகின் உச்ச நடிகர்கள் என ஸ்டண்ட் இயக்கத்திலும், வில்லன் கதாபாத்திரத்தில் நடிப்பதிலும் உச்சம் தொட்டவர் ஸ்டண்ட் சில்வா. இவரது தலைசிறந்த பணிகளை பாராட்டி பல்வேறு திரைப்படங்களுக்காக இவர் பலமுறை SIIMA விருது, எடிசன் விருது மற்றும்…
Read More