GM Morgan Films நிறுவனம் தயாரிப்பில், இயக்குநர் R. ராகவ் மிர்தாத் இயக்கத்தில் உருவாகி வரும் வித்தியாசமான சர்ரியலிஸ்ட் ஃபேண்டஸி திரைப்படம் “ட்ரோன்ஸ்”. இப்படத்தின் மூன்று ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் தற்போது வெளியாகி, ரசிகர்கள் மற்றும் திரையுலக வட்டாரங்களில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றன. வித்தியாசமான கற்பனை உலகம், ஹாரர் மற்றும் ஃபேண்டஸி அம்சங்கள் கலந்த கதைக்களம் ஆகியவை “ட்ரோன்ஸ்” படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளன. கனவுகளில் மட்டுமே நிகழக்கூடிய விசித்திரமான சம்பவங்கள் நிஜ உலகில் நடந்தால் எப்படி இருக்கும் என்ற சுவாரஸ்யமான கேள்வியை மையமாகக் கொண்டு இப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. ஒரு மேட் சயின்டிஸ்ட், டிடெக்டிவ், ஏஞ்சல், சூனியக்காரி மற்றும் பல புதிரான சம்பவங்கள் நிறைந்த கற்பனை உலகில் பயணிக்கும் வகையில், தமிழ் சினிமாவில் அரிதாக முயற்சிக்கப்படும் சர்ரியலிஸ்ட் ஃபேண்டஸி பாணியில் இப்படம் உருவாகியுள்ளது. தற்போது…
Read MoreCategory: சினிமா செய்திகள்
ஒரு புதிய துணிச்சலான Zee 5-ஐ அறிமுகப்படுத்துகிறது: இந்தியாவின் ஸ்ட்ரீமிங் அனுபவத்தை மறுவரையறை செய்கிறது
ஸ்மார்ட்டான உள்ளடக்கத் தேடலுடன், மேலும் வளமான பொழுதுபோக்கு அனுபவத்தை வழங்கும் வகையில், Zee 5 தனது மறுவடிவமைக்கப்பட்ட தயாரிப்பு அனுபவம், பிரீமியம் ஆங்கில உள்ளடக்கத் தொகுப்பு மற்றும் புதுப்பிக்கப்பட்ட AvoD சேவையான – Free 5-ஐ அறிமுகப்படுத்துகிறது தேசியம், செப்டம்பர் 9, 2026: பார்வையாளர்கள் முன்பைவிட அதிகமான பொழுதுபோக்கு உள்ளடக்கங்களை அணுகும் நிலையில், அவர்கள் பொழுதுபோக்கைத் தேடும் மற்றும் அனுபவிக்கும் விதத்தை Zee 5 மறுவரையறை செய்கிறது. விரிவுபடுத்தப்பட்ட உள்ளடக்கத் தொகுப்பை அடிப்படையாகக் கொண்டு, மொபைல் மற்றும் Connected TV தளங்களில், ஸ்மார்ட்டான தனிப்பயனாக்கம், AI அடிப்படையிலான உள்ளடக்கத் தேடல், மேம்பட்ட காட்சி வழிசெலுத்தல் மற்றும் தடையற்ற பல்திரை அனுபவம் ஆகியவற்றால் இயக்கப்படும் மிக முக்கியமான மாற்றங்களில் ஒன்றை Zee 5 தற்போது அறிமுகப்படுத்துகிறது. பார்வையாளர்களின் பார்வை பழக்கத்தை மையமாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள புதிய Zee 5,…
Read Moreநாசமாக்கப்படும் காமராஜர் நினைவு இல்லம். ‘காமராஜ்’ திரைப்பட இயக்குநர் A.J.பாலகிருஷ்ணன் வேதனை. முதலமைச்சர் தலையிடக் கோரிக்கை.
1997 ஆம் ஆண்டு, 29 ஆண்டுகளுக்கு முன்பு பெருந்தலைவர் காமராஜரின் உதவியாளர் திரு.வைரவன், தி.நகர் காமராஜர் நினைவு இல்லத்துக்கு என்னை அழைத்துச் சென்றார். செம்மண் தரை வளாகம், எளிமையை பறைசாற்றும் கதவுகள், ஜன்னல்கள், அவர் வாசிப்பதற்கு ஒளி தந்த மின் விளக்குகள், புண்ணியம் செய்த காற்றாடிகள், பழங்கால, அவர் கைபட்ட மின் ஸ்விட்சுகள். அவர் ஏதோ ஓர் அறையில் இருப்பாரோ என்று மனம் ஏங்கும்… இன்று இந்த எதுவும் அங்கு இல்லை. இன்று அவர் வீட்டுக்குள் நுழையும் மாணவர்கள் இது ஒரு ஆடம்பர ஜமீன்தார் வீடு என்றுதான் நினைப்பார்கள். புதுப்பிக்கிறோம் என்ற பெயரில் அனைத்து அடையாளங்களும் சிதைக்கப்பட்டு, ரேசன் அரிசி உண்ட ஒரு முதல்வரின் வீடு வெள்ளை மாளிகை போல் காட்சி தருகிறது. அமெரிக்க அதிபர் கென்னடியைக் கொன்ற கொலைகாரன் உபயோகித்த ஆறாவது மாடி அறையைக் கூட,…
Read More‘சேயோன்’ திரைப்படத்தில் இணைகிறார் சீமான்!
இயக்குநர், நடிகர் மற்றும் அரசியல் இயக்கத்தின் தலைவர் என பன்முகம் கொண்ட ஆளுமை செந்தமிழன் திரு. சீமான் அவர்கள் ‘சேயோன்’ திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். தற்போது மதுரையில் நடைபெற்று வரும் ‘சேயோன்’ படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்து வருகிறார். செந்தமிழன் சீமான் அவர்கள் சேயோனில் இணைந்ததால், இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடிக்கிறார். சிவகுமார் முருகேசன் இயக்குகிறார். சந்தோஷ் நாராயணன் இசை அமைக்கிறார். அன்பரிவ் சண்டைப் பயிற்சி அளிக்கின்றனர். இந்தப் படத்தை ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் டர்மெரிக் மீடியா இணைந்து உருவாக்கி வருகிறது. திரு. கமல்ஹாசன் மற்றும் ஆர். மகேந்திரன் ஆகிய இருவரும் படத்தைத் தயாரிக்கிறார்கள். அடுத்தடுத்து வரும் புதிய புதிய அறிவிப்புகளால் ‘சேயோன்’ படம் மக்களிடையே பெரும் ஆர்வத்தையும், எதிர்பார்ப்பையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
Read More33 ஆண்டுகளுக்கும் மேலான கல்விப் பணிக்கு அங்கீகாரம் – பாடகர் அறிவுவின் தாயார் திருமதி பெ.தேன்மொழிக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருது.
இராணிப்பேட்டை மாவட்டம், கடம்பநல்லூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் இடைநிலை ஆசிரியராக 33 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வரும் திருமதி பெ. தேன்மொழி அவர்களுக்கு, கல்வித் துறையில் சிறப்பாகப் பணியாற்றியதற்காக டாக்டர் ராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார். திருமதி பெ. தேன்மொழி அவர்கள் 12.12.1990 முதல் ஆசிரியர் பணியில் தொடர்ந்து சிறப்பாகப் பணியாற்றி வருகிறார். மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக மாணவர்களின் கல்வி வளர்ச்சி, திறன் மேம்பாடு மற்றும் நல்வாழ்வில் அக்கறையுடன் செயல்பட்டு வரும் அவரது கல்விப் பணிக்கு கிடைத்துள்ள இந்த விருது, அவரது அர்ப்பணிப்பிற்கான உயரிய அங்கீகாரமாக அமைந்துள்ளது. மேலும், திருமதி பெ. தேன்மொழி அவர்கள் பிரபல பாடகர் அறிவு அவர்களின் தாயார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆசிரியர் பணி – வகுப்பறையைத் தாண்டிய சமூகப் பொறுப்பு ஒரு சிறந்த ஆசிரியரின் பணி என்பது மாணவர்களுக்கு பாடங்களை…
Read Moreசெப்டம்பர் 18 ஆம் தேதி வெளியாகும் புதுமுகங்களின் ‘கோல்ட் கால்- Cold Call’ திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியீடு
புதுமுக நடிகர்கள் சித்து மூலி மணி- ஸ்ரீ வைஷ்ணவ் -சந்தோஷ் – கிருஷ்ணா விஜய் – ஆகிய நான்கு அறிமுக கலைஞர்கள் கதையின் நாயகர்களாக கலகலப்பான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘கோல்டு கால் – Cold Call’ திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை தமிழ் திரையுலகின் பிரபல நடிகரான ஆர்யா அவருடைய சமூக ஊடகத்தில் வெளியிட்டு, படக் குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார். இயக்குநர் தம்பிதுரை இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘கோல்டு கால்’. இதில் சித்து மூலி மணி, ஸ்ரீ வைஷ்ணவ், சந்தோஷ், கிருஷ்ணா விஜய் , ஸ்ரீகாந்த், பாலாஜி ராஜசேகர், அமிதா ரங்கநாதா, நிஷா ஹெக்டே, கீர்த்தனா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஜி. என். சரவணன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு பிரணவ் கிரிதரன் இசையமைத்திருக்கிறார். சுரேஷ் ஆறுமுகம் படத்தொகுப்பு பணிகளை கவனித்திருக்கிறார். கமர்சியல் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும்…
Read More‘அன்பில் அவன்’ செப்டம்பர் 25- முதல், உலகமெங்கும் திரையரங்குகளில் !
முன்னணி இளம் நடிகர் அசோக் செல்வன் நடிப்பில் உருவாகியுள்ள காதல் திரைப்படமான ‘அன்பில் அவன்’ வரும் செப்டம்பர் 25ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வ போஸ்டர் மூலம் அறிவித்துள்ளது. ஆர். கார்த்திகேயன் இயக்கத்தில் உருவாகியுள்ள, இப்படம் காதல் கதைக்களத்துடன், அழகான உணர்வுகளையும் கலந்து, சிறந்த பொழுதுபோக்கு திரைப்படமாக உருவாகியுள்ளது. இப்படத்தின் கதையை ‘போர் தொழில்’ பட இயக்குநர் விக்னேஷ் ராஜா எழுதியுள்ளார். இப்படத்தில் அசோக் செல்வனுடன் ப்ரீத்தி முகுந்தன், சபு மோன், அப்துல் சமத், கதிர் பாலு, மஹா டெல்லி கணேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கௌதம் ராஜேந்திரன் ஒளிப்பதிவு செய்ய, கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். ஆர்.கே. செல்வா படத்தொகுப்பையும், மணிகண்டன் ஸ்ரீனிவாசன் கலை இயக்கத்தையும் கவனித்துள்ளனர். ஐங்கரன் இன்டர்நேஷனல் மற்றும் ஹேப்பி ஹை பிக்சர்ஸ் சார்பில் கே. கருணா மூர்த்தி, அசோக் செல்வன்,…
Read Moreமுதல் பார்வை மற்றும் டிரெய்லரை இயக்குநர் வெங்கட் பிரபு, கார்த்திக் சுப்புராஜ், சசிகுமார், சமுத்திரக்கனி, நித்திலன் சாமிநாதன், ஶ்ரீகணேஷ் உள்ளிட்ட முக்கிய திரையுலக பிரபலங்கள் வெளியிட்டனர்
டிரைபாட் டிராவல் மற்றும் டி ஹெச் எஃப் ஃபிலிம் கார்ப்பொரேஷன் பேனர்களில் ராமு கண்ணன் மற்றும் தேவகி நித்யானந்தம் தயாரிப்பில் ராமு கண்ணன் இயக்கத்தில் உருவாகியுள்ள குறும்படம் ‘ஹோப்’. படைப்பாக்கத்தில் எந்த சமரசமும் இல்லாமல் ஒரு திரைப்படத்திற்கு உரித்தான பட்ஜெட்டில் உலகத்தரத்தில் உருவாகியுள்ள ‘ஹோப்’ படத்தில் ‘நாடோடிகள்’ புகழ் அபிநயா ஆனந்த், சுரேஷ் கண்ணன் மற்றும் ராஜேஸ்வரி முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ‘ஹோப்’ முதல் பார்வை மற்றும் டிரெய்லரை கடந்த ஞாயிறு (06.09.2026) அன்று காலை இயக்குநர் வெங்கட் பிரபு, இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், இயக்குநர்-நடிகர் சசிகுமார்,இயக்குநர்-நடிகர் சமுத்திரக்கனி, இயக்குநர் பி.எஸ். வினோத்ராஜ், இயக்குநர் நித்திலன் சாமிநாதன், ஒளிப்பதிவாளர் விஜய் கார்த்திக் கண்ணன், படத்தொகுப்பாளர் பிரவீன் கே எல், பிரதீப் ஈ. ராகவ், கமலா திரையரங்க நிர்வாக இயக்குநர் விஷ்ணு கமல் மற்றும் திரைப்பட மக்கள் தொடர்பாளர் நிகில் முருகன் வெளியிட்டனர். ‘ஹோப்’…
Read Moreநடிகரும் இயக்குநருமான ரிஷப் ஷெட்டி வெளியிட்ட ‘பிக்காசோ’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்!
கன்னட திரையுலகின் முன்னணி நட்சத்திரமான டாக்டர் சிவராஜ்குமார் மற்றும் இளம் தலைமுறையின் கவனம் பெற்ற நடிகர் அபிஷன் ஜீவிந்த் இணைந்து நடிக்கும் புதிய படத்தின் தலைப்பும், ஃபர்ஸ்ட் லுக்கும் வெளியாகியுள்ளது. ‘பிக்காசோ’ (‘PICASSO’) என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை நடிகரும் இயக்குநருமான ரிஷப் ஷெட்டி வெளியிட்டார். டிராமா கம்பெனி வழங்கும் இப்படத்தின் மூலம் கவுதம் சிவராமன் இயக்குநராக அறிமுகமாகிறார். பழம்பெரும் நட்சத்திரமான டாக்டர் சிவராஜ்குமாரின் தனித்துவமான திரை ஆளுமையுடன், அடுத்த தலைமுறை கலைஞரான அபிஷன் ஜீவிந்த்தின் புதிய தலைமுறை நடிப்புத் திறன் இணையும் இப்படம், ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. வித்தியாசமான காட்சியமைப்புடன் வெளியாகியுள்ள ‘பிக்காசோ’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. டாக்டர் சிவராஜ்குமாரும் அபிஷன் ஜீவிந்த்தும் பாரம்பரிய வெள்ளை உடையில், வெடித்த பட்டாசுகளின் நடுவே அமர்ந்திருக்கும் வகையில் இந்த ஃபர்ஸ்ட் லுக்…
Read Moreஇளையராஜா, ராமராஜன் இணையும் 25வது படம் “கடவுள் தந்த பரிசு”
திரையுலகில் தனது 50வது வருடத்தில் ராஜநடை போட்டு, பவனி வரும் இசைஞானி இளையராஜா, மக்கள் நாயகன் ராமராஜன் இணையும் புதிய திரைப்படத்திற்கு ‘கடவுள் தந்த பரிசு’ என்று பெயரிடப்பட்டுள்ளது. புதுமுக இயக்குனர் காசிமாயன் கதை, திரைக்கதை எழுதி, இயக்குகிறார். நகைச்சுவை பகுதியை ராஜகோபால் எழுதுகிறார். வசனத்தை ராஜகோபால், எம்.அடைக்கலம் இருவரும் எழுதுகிறார்கள். செந்தில், கோவை சரளா இருவரும் நீண்ட இடைவெளிக்குப் பிறகு, ராமராஜனுடன் இணைந்து, இந்த படத்தில் காமெடியில் கலக்க உள்ளார்கள். இசைஞானியும், மக்கள் நாயகனும் மீண்டும் எப்போது இணைவார்கள் என்று ஏங்கும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில், பாடல் பதிவுடன் பணிகள் தொடங்கியது. அதை தொடர்ந்து படப்பிடிப்பிற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. மக்கள் தொடர்பு கோவிந்தராஜ்.
Read More
