இளையராஜா, ராமராஜன் இணையும் 25வது படம் “கடவுள் தந்த பரிசு”

திரையுலகில் தனது 50வது வருடத்தில் ராஜநடை போட்டு, பவனி வரும் இசைஞானி இளையராஜா, மக்கள் நாயகன் ராமராஜன் இணையும் புதிய திரைப்படத்திற்கு ‘கடவுள் தந்த பரிசு’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

புதுமுக இயக்குனர் காசிமாயன் கதை, திரைக்கதை எழுதி, இயக்குகிறார்.  நகைச்சுவை பகுதியை ராஜகோபால் எழுதுகிறார். வசனத்தை ராஜகோபால், எம்.அடைக்கலம் இருவரும் எழுதுகிறார்கள்.

செந்தில், கோவை சரளா இருவரும் நீண்ட இடைவெளிக்குப் பிறகு, ராமராஜனுடன் இணைந்து, இந்த படத்தில் காமெடியில் கலக்க உள்ளார்கள்.

இசைஞானியும், மக்கள் நாயகனும் மீண்டும் எப்போது இணைவார்கள் என்று ஏங்கும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில், பாடல் பதிவுடன் பணிகள் தொடங்கியது. அதை தொடர்ந்து படப்பிடிப்பிற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

மக்கள் தொடர்பு கோவிந்தராஜ்.

Related posts

Leave a Comment