இசையமைப்பாளர் மற்றும் நடிகர் என இரண்டு துறைகளிலும் சிறந்து விளங்கும் வெகு சிலர்களில் ஜிவி பிரகாஷ்குமாரும் ஒருவர். தேசிய மற்றும் சர்வதேச அளவில் புகழ்பெற்ற இசையமைப்பாளர் ஆன பின்பு நடிகராகவும் தனக்கான இடத்தை தக்க வைத்துள்ளார். திரைத்துறையினர் மற்றும் வர்த்தக வட்டாரத்தில் இவரது படங்கள் வணிக ரீதியாக வெற்றியடைந்துள்ளது. நல்ல கதையம்சம் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடித்து ரசிகர்களைக் கவர்ந்துள்ளார். தற்போது மு. மாறன் இயக்கத்தில், JDS ஃபிலிம் ஃபேக்டரி பேனரில் ஜெயக்கொடி அமல்ராஜ் தயாரிப்பில் ஜிவி பிரகாஷ்குமார் நடித்துள்ள ‘பிளாக்மெயில்’ திரைப்படம் ஆகஸ்ட் 1, 2025 அன்று உலகளவில் திரையரங்குகளில் வெளியாகத் தயாராக உள்ளது. படம் குறித்து ஜிவி பிரகாஷ்குமார் பகிர்ந்து கொண்டதாவது, “’பிளாக்மெயில்’ படத்தின் ஃபைனல் அவுட்புட் பார்த்த பிறகு, மு. மாறன் ஒரு கதை சொல்லியாகவும் இயக்குநராகவும் தன்னை அடுத்த கட்டத்திற்கு எடுத்து…
Read MoreCategory: சினிமா செய்திகள்
‘கிங்டம்’ ட்ரைலர் வெளியீடு – எதிர்பார்ப்பின் உச்சத்தை எட்டியுள்ளது !
விஜய் தேவராகொண்டா நடித்துள்ள “கிங்டம்” படத்தின் அதிகாரபூர்வ ட்ரைலர் வெளியாகி, ரசிகர்களிடையே வானளாவிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. இந்தப் படத்தை கவுதம் தின்னனூரி இயக்க, நாக வம்சி மற்றும் சாய் சௌஜன்யா இணைந்து தயாரிக்கின்றனர். படம் வரும் ஜூலை 31, 2025 அன்று திரைக்கு வரவுள்ளது. ட்ரைலர் ஒரு கதையை மிக வலிமையாகவும் தாக்கத்தோடும் கொண்டு வருகிறது. சாதாரண ஆக்ஷன் மட்டும் அல்லாமல், கதாபாத்திரங்களுக்கிடையிலான நெருக்கத்தை உணர்த்தும் பல உணர்வுபூர்வமான காட்சிகளும் இடம்பெற்றுள்ளன. விஜயின் ‘சூரி’ மற்றும் சத்யதேவின் ‘சிவா’ இடையேயான காட்சிகள் மிகுந்த கேமிஸ்ட்ரியுடன் உள்ளடக்கப்பட்டு, படம் ஒரு ஆழமான உணர்வை வழங்கப் போவதைக் காட்டுகின்றன. கதையின் உணர்வும், விழிப்பும் பார்வையாளர்களை ஈர்க்கும் விதமாக உள்ளது. விஜய் தேவராகொண்டாவின் நடிப்பு, அவர் வழங்கிய மிகச் சிறந்த நிகழ்வாகவே கருதப்படுகிறது. அவரது ரௌத்திரம் , உணர்ச்சிப்பூர்வமான அன்பு மற்றும்…
Read More“கண்களை இமைக்கக்கூட நேரம் இருக்காது ! ‘பிளாக்மெயில்’ ஒரு பரபரப்பான, உணர்வுப்பூர்வமான, முழுமையான பொழுதுபோக்கு படைப்பு!” – நடிகை பிந்து மாதவி
எந்த கதாபாத்திரம் குடுத்தாலும் , அதை தனது ஆழமான உணர்வால் உயிரோட்டமுடன் பதிவு செய்யும் நடிகை பிந்து மாதவி, தனது திறமையை நிரூபித்துவிட்டவர். எப்போதுமே சவாலான மற்றும் வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்வு செய்யும் பிந்து மாதவி, தற்போது பிளாக்மெயில் பட குழுவிலிருந்தும் பாராட்டுக்கள் குவிந்துவருகிறது. ஆகஸ்ட் 1, 2025 அன்று உலகமெங்கும் திரையிடப்பட உள்ள இந்த படத்தில் நடித்த அனுபவத்தைப் பற்றி பிந்து மாதவி மனம் திறந்து பேசுகிறார். “ஒவ்வொரு கலைஞனும் தனது வாழ்க்கையில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் தருணத்தை தேடிக்கொண்டே இருப்பார்,” என்கிறார் பிந்து மாதவி. “பெண்கள் தங்களுக்குரிய தனிப்பட்ட இடத்தை பெறுவதற்காக தொடர்ந்து சவால்களை எதிர்கொள்கிறார்கள். ஆனால் இயக்குநர் மு. மாரன் பிளாக்மெயில் கதையை விவரித்த நேரத்தில், அது என்னுடன் உடனடியாக ஒரு இணைப்பை ஏற்படுத்தியது. இது எனக்காகவே காத்திருந்த ஒரு கதாபாத்திரம் போல…
Read More‘சூப்பர் ஹீரோ’ தேஜா சஜ்ஜா நடிக்கும் ‘மிராய்’ படத்தின் முதல் பாடல் ‘வைப் இருக்கு பேபி..’ வெளியீடு
‘சூப்பர் ஹீரோ’ தேஜா சஜ்ஜா – கார்த்திக் கட்டமனேனி – டி. ஜி. விஸ்வ பிரசாத் – கிருத்தி பிரசாத் – பீப்பிள் மீடியா ஃபேக்டரி – கூட்டணியில் உருவாகும் பான் இந்திய திரைப்படமான ‘மிராய் ‘ படத்தில் இடம்பெறும் முதல் பாடலான ‘வைப் இருக்கு பேபி’ எனும் பாடலின் முழு லிரிக்கல் வீடியோவும் வெளியிடப்பட்டுள்ளது. ‘ஹனுமான்’ படத்தின் பிரம்மாண்ட வெற்றி மூலம் நாடு முழுவதும் பிரபலமான ‘சூப்பர் ஹீரோ’ தேஜா சஜ்ஜா- ‘சூப்பர் யோதா’வாக நடிக்கும் இந்தப் படத்தை கார்த்திக் கட்டமனேனி இயக்குகிறார். இந்த திரைப்படத்தை முன்னணி பட தயாரிப்பு நிறுவனமான பீப்பிள் மீடியா ஃபேக்டரி நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர்கள் டி.ஜி. விஸ்வ பிரசாத் மற்றும் கிருத்தி பிரசாத் ஆகியோர் தயாரிக்கிறார்கள். இப்படத்தின் கிளிம்ப்ஸ் மற்றும் டீசர் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இப்படத்தில்…
Read Moreஅனைத்து தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய திரைப்படத் தயாரிப்பு நிறுவனம் இலங்கையில் தொடக்கம்!
இலங்கையில் ட்ரீம் லைன் என்கிற பெயரில் சகல வசதிகளுடன் கூடிய ஒரு திரைப்படத் தயாரிப்பு நிறுவனம் தொடங்கப்பட்டுள்ளது.அதன் தொடக்க விழாவில் தென்னிந்திய திரைப்பட இயக்குநர் அமீர், லப்பர் பந்து கதாநாயகிகள் சுவஸ்திகா, சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி, எழுத்தாளர் பவா செல்லத்துரை மற்றும் பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். இலங்கையில் சினிமா கலைஞர்களுக்காக முன்னெடுக்கப்படும் செயற்பாடாக யாழ்ப்பாணம் நீர்வேலியில் சிறீஸ்கந்தராஜா அவர்கள் ட்ரிம்லைன் புரடக்ஷன்ஸ் எனும் புதிய திரைப்பட தயாரிப்பு நிறுவனம் தொடங்கப்பட்டுள்ளார். ஒரு திரைப்படத்திற்கான நவீன தொழில்நுட்ப வசதிகள் அனைத்தும் இந்த நிறுவனத்தில் அமைந்துள்ளன. DI, Edit, Atmos Sound with Mix Preview Theater, Foly Sounds, Dubbing Theater போன்ற ஒழுங்கமைப்புகளுடன் படப்பிடிப்புக்குப் பிந்தைய பணிகள் நடக்கும் தொழில்நுட்பக்கூடமும் அதற்கான ஸ்டுடியோவும் அமைந்துள்ளன. திரைப்படங்களை எடுப்பதற்கான நவீன தரத்திலான ஏரி அலெக்ஸா SXT கேமரா, அபெச்சர்…
Read Moreகிரைம் திரில்லர் படத்தில் தான்யா ரவிச்சந்திரன்!
‘சுந்தரபாண்டியன்’ திரைப்படத்தில் கிராமத்து நட்பு, ‘இது கதிர்வேலன் காதல்’ படத்தில் நகைச்சுவை மற்றும் காதல், ‘சத்ரியன்’ படத்தில் ஆக்ஷன், ‘கொம்பு வெச்ச சிங்கம்டா’ படத்தில் கிராமத்து வீரம் மற்றும் ‘செங்களம்’ இணையத் தொடரில் அரசியல் ஆழம் எனப் பல்வேறு வகைப் படைப்புகளில் முத்திரை பதித்த இயக்குநர் எஸ். ஆர். பிரபாகரன், ‘றெக்கை முளைத்தேன்’ படத்தின் மூலம் இன்னுமொரு புதிய களத்தில் புகுந்துள்ளார். இது வரை அவர் செய்த படங்களிலேயே முற்றிலும் மாறுபட்ட விறுவிறுப்பான கிரைம் திரில்லர் ஜானரை சேர்ந்த ‘றெக்கை முளைத்தேன்’ படத்தை எழுதி, இயக்கி இருப்பதோடு தனது ஸ்டோன் எலிபெண்ட் கிரியேஷன்ஸ் நிறுவனம் மூலம் எஸ். ஆர். பிரபாகரன் தயாரித்தும் உள்ளார். தன்யா ரவிச்சந்திரன், பிரபா, குருதேவ், நித்திஷா, மெர்லின், ஜெய்பிரகாஷ், ‘ஆடுகளம்’ நரேன், கஜராஜ், மீராகிருஷ்ணன் மற்றும் ஸ்ரீ ரஞ்சனி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில்…
Read Moreபிரதீப் ரங்கநாதன் – K-Town-ல் ‘ஸ்டார்’ ஆக உயர்ந்து வரும் புதிய ‘டியூட்’
திரைபடங்களைத் தாண்டி ரசிகர்களிடம் பெரும் பாசமும் பெருமிதமும் பெற்ற சிலரே உள்ளனர். அந்த வரிசையில், பிரதீப் ரங்கநாதன் இளைஞர்களிடம் ஒரு புரட்சி அலையை உருவாக்கியிருக்கிறார். அவரைப் பார்த்து பலர் உற்சாகமும் நம்பிக்கையும் பெறுகிறார்கள். ரசிகர்களுக்கு அவர் வெறும் ‘டியூட்’ மட்டுமல்ல, சினிமா தொழில்நுட்ப ரீதியாகவும், வர்த்தக ரீதியாகவும் ஒரு நம்பகமான பெயராக மாறிவிட்டார். ‘லவ் டுடே’ மற்றும் ‘டிராகன்’ என இரு படங்கள் மூலமாக வசூலிலும் வெற்றியிலும் உச்சத்தைத் தொட்டிருக்கும் இயக்குநர்-நடிகர் பிரதீப், தனது மூன்றாவது படத்துக்கே பண்டிகை தின ரிலீஸ் எனும் முக்கியமான உயர்வை எளிதாகப் பெற்றிருக்கிறார் . இது பலருக்கு கனவாகவே இருந்தாலும்! மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம், தீபாவளிக்கு அவரது அடுத்த படம் ‘டியூட்’ வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. பிரதீப் ரங்கநாதனின் பிறந்தநாளை முன்னிட்டு, மைத்ரி மூவி மேக்கர்ஸ் அவரின் ஸ்பெஷல்…
Read More‘ஃபென்டாஸ்டிக் ஃபோர்’ திரைப்படம் தமிழ் சினிமாவில் உருவானால் எந்தெந்த நடிகர்கள் நடிக்கலாம் என்பது பற்றி பார்க்கலாம்!
மார்வெலின் ‘ஃபென்டாஸ்டிக் ஃபோர்’ படத்தின் கதாபாத்திரங்கள் புத்திசாலித்தனமான, நல்ல மனமுடைய அதேசமயம் திறமைசாலியாகவும் இருக்க வேண்டும். ஒவ்வொரு கதாபாத்திரத்திலும் யார் நடித்தால் சரியாக இருக்கும் என்பதை பார்க்கலாம். * மிஸ்டர் ஃபென்டாஸ்டிக் (ரீட் ரிச்சர்ட்ஸ்)- நேர்மையான தலைவர் இந்த கதாபாத்திரத்திற்கு சூர்யா பொருத்தமானவர். ஏனெனில், புத்திசாலித்தனமான திரை இருப்பு, எதிர்காலத்தை புரிந்து வைத்திருக்கும் விஞ்ஞானி கதாபாத்திரத்தில் பொருந்திப் போவார். * ஜெயம் ரவி- இவரது அமைதியான அதே சமயம் ஹீரோயிக் வைப், ரீட் கதாபாத்திரத்திற்கு பொருத்தமானதாக இருக்கும். * இன்விசிபிள் வுமன் (சூ ஸ்டோர்ம்)- வசீகரமான வலுவான பெண் நயன்தாரா- வசீகரத்தையும் அதே சமயம் வலிமையையும் ‘லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாரா திரையில் கொண்டு வருவார். கீர்த்தி சுரேஷ்- தனது உணர்வுப்பூர்வமான, ஆழமான நடிப்பிற்காக பெயர் பெற்ற கீர்த்தி சுரேஷ், சூ ஸ்டோர்மாக நடிக்க சரியான தேர்வு.…
Read Moreரசிகர்களைக் கவரும் நியூ ஏஜ் ரொமாண்டிக் த்ரில்லர் திரைப்படம் ‘அந்த ஏழு நாட்கள்’!
தயாரிப்பாளர்களில் இருந்து பார்வையாளர்கள் வரை சினிமா மீதான காதல் மட்டுமே அனைவரையும் ஒருங்கிணைக்கிறது. இவர்கள் அனைவரின் ஒரே நோக்கம் நல்ல சினிமாவை கொண்டாடுவது மட்டுமே! இந்த நோக்கமே பல நல்ல தயாரிப்பு நிறுவனங்களை உருவாக்கியுள்ளது. இவை பெருமை மிகு பல படங்களை காலம் கடந்தும் தமிழ் சினிமாவில் உருவாக்கி உள்ளது. இத்தகைய ஆர்வம் மிக்க தயாரிப்பாளர்களில் பெஸ்ட்காஸ்ட் ஸ்டுடியோஸ் தயாரிப்பாளர் முரளி கபீர்தாஸூம் ஒருவர். அவர் வெறும் பொழுதுபோக்குக்காக மட்டுமல்லாமல், தனித்துவமான, தரமான கதைகள் மூலம் பார்வையாளர்களுக்கு நல்ல சினிமா அனுபவத்தை வழங்குவதை நோக்கமாகக் கொண்டிருக்கிறார். காதல் – த்ரில்லர் ஜானரில் உருவாகியுள்ள ‘அந்த 7 நாட்கள்’ திரைப்படத்தில் அஜித்தேஜ் மற்றும் ஸ்ரீஸ்வேதா ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். எம். சுந்தர் இயக்கியுள்ளார். சச்சின் சுந்தர் இசையமைத்த இப்படத்தின் முதல் தனிப்பாடல் இன்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில்…
Read Moreஇன்றைய நவீன உலக கலையின் புது வடிவம் இந்த புதிய அம்பிகாபதி திரைப்படம் – ஈரோஸ் நிறுவனம் விளக்கம் !!
தனுஷ் நடிப்பில் வரும் 2025 ஆகஸ்ட் 1ம் தேதி, புதிய பதிப்பாக மீண்டும் திரைக்கு வரவுள்ளது அம்பிகாபதி திரைப்படம். இத்திரைப்படத்தின் புதிய கிளைமாக்ஸ் காட்சிகளுக்கு இயக்குநர் ஆனந்த் எல் ராய் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், ஈரோஸ் நிறுவனம் இந்த புதிய பதிப்பு முந்தைய படைப்பின் மாற்றமல்ல, கலையின் புது வடிவம் மட்டுமே என விளக்கமளித்துள்ளது. இயக்குநர் ஆனந்த் எல் ராய் இயக்கத்தில், இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான் இசையில், முன்னணி நட்சத்திர நடிகர் தனுஷ் மற்றும் சோனம் கபூர் நடிப்பில் உருவாகியுள்ள இத்திரைப்படத்தினை UPSWING ENTERTAINMENT PRIVATE LIMITED நிறுவனம், புத்தம் புதிய நவீன தொழில் நுட்பத்துடன், செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் சில பகுதிகளை மாற்றி வரும் 2025 ஆகஸ்ட் 1ம் தேதி திரையரங்குகளில் வெளியிடவுள்ளது. இந்நிலையில் சமீபத்தில் ஒரு பத்திரிக்கை பேட்டியில் இயக்குநர் ஆனந்த்…
Read More