துரந்தர் ‘ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வீடியோ வெளியீடு!!

மும்பை, ஜூலை 6, 2025 : ஜியோ ஸ்டுடியோஸ் மற்றும் B 62 ஸ்டுடியோஸ் , ரன்வீர் சிங்கின் பிறந்த நாளை முன்னிட்டு, 2025 ஆம் ஆண்டில் மிகவும் எதிர்பார்க்கப்படும் அதிரடி திரில்லர் திரைப்படமான ‘ துரந்தர் ‘ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கிற்கான வீடியோவை இன்று வெளியிட்டுள்ளது. இயக்குநர் ஆதித்யா தர் ( உரி : தி சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்) இயக்கத்தில் உருவாகி வரும் இந்த திரைப்படத்தில் ரன்வீர் சிங் , சஞ்சய் தத், அக்ஷய் கண்ணா, ஆர். மாதவன், அர்ஜுன் ராம்பால் ஆகியோர் நடித்துள்ளனர். இரண்டு நிமிடம் 40 வினாடிகள் கொண்ட இந்த வீடியோவில் மர்மம் – துணிச்சல் – அதிரடி ஆக்சன் காட்சிகள் – ஆகியவை கலவையாக இடம்பெற்று கண்களுக்கு விருந்தளிக்கின்றன. இதற்கு ஷாஷ்வத் ஆற்றல்மிக்க இசையை வழங்கி இருக்கிறார். ஜாஸ்மின் சான்ட்லஸின் குரலும்,…

Read More

பல்டி” படத்தில் இசையமைப்பாளராக ஒப்பந்தமாகியுள்ளார் சாய் அபயங்கர் !!

ஆல்பம் பாடல்களான “கச்சி சேரா”, “ஆச கூடா”, “சித்திர புத்திரி” போன்ற சென்ஷேசனல் ஹிட் பாடல்களால், இசைத்துறையில் தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கிய சாய் அபயங்கர், இப்போது திரையுலகிலும் கலக்க ஆரம்பித்துள்ளார். முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கும் பல படங்களுக்கு இசையமைத்து வரும் அவர், தற்போது ஷேன் நிகாமின் 25வது படமான “பல்டி” படத்திற்கு இசையமைப்பாளராக ஒப்பந்தமாகியுள்ளார். இத்திரைப்படம் இயக்குநர் உன்னி சிவலிங்கம் என்பவரின் அறிமுக முயற்சியாகவும், இசைக்கும் , ஆக்‌ஷனுக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் படமாகவும் உருவாகி வருகிறது. மேலும் வரும் திருவோண பண்டிகை வெளியீடாக இப்படம் வெளியாகவுள்ளது. இப்படம் அதிரடி ஆக்சன் களத்தில், பெரும் பொருட்செலவில், பிரம்மாண்டமாக உருவாகவுள்ளது. சாய் அபயங்கர் இப்படத்தின் மூலம் மலையாளத்திலும் அறிமுகமாகிறார் என்பது குறிப்பிடதக்கது. இதற்காக வெளியான ஒரு பிரத்யேக ப்ரோமோ வீடியோவில், மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் ஒரு போன்…

Read More

சமஸ்கிருத்தில் திரைப்படம் இயக்க போகிறேன்… நடிகர் மன்சூர் அலிகான்!

“அகம் பிரம்மாஸ்மி” ஆல்பம் அதற்கு முன்னோட்டமாக எடுத்துள்ளேன். சமஸ்கிருத மந்திரங்கள், ஸ்லோகங்கள் பயன்படுத்தி ‘அகம் பிரம்மாஸ்மி’ என்ற ஆல்ப பாடலை எழுதி, இசையமைத்து, பாடியுள்ளார் நடிகர் மன்சூர் அலிகான்!   ‘ராஜாதி ராஜ ராஜ குலத்துங்க ராஜ மார்த்தாண்ட ராஜ கம்பீர காத்தவராய கிருஷ்ண காமராஜன்’ படத்தில் பாடல்கள், இசை, நான் அமைத்திருந்தேன். வாணி ஜெயராம், சந்திரபோஸ், சொர்ணலதா, டி.எஸ்.ராகவேந்தர் ஆகியோரை பாட வைத்திருந்தேன். சில்க் ஸ்மிதா, டிஸ்கோ சாந்தி ஆகியோருடன் ஒரு பாடலுக்கு ஆடியிருந்தேன். ‘டிப் டாப் தமிழா’ ஆல்பம் இசையமைத்து வெளியிட்டேன். தமிழ் என் தாய் மொழி. மூத்த மொழி, தொன்மையான மொழி. கலைஞனுக்கு மொழி, இனம், நாடு வித்யாசம் கிடையாது. அந்த வகையில் சமஸ்கிருதத்தில் ஜதி பிடித்திருந்தது. பரதநாட்டியம், குச்சிப்புடி நடன அசைவுகளுக்கும், சிவ தாண்டவம் ஆடவும் சமஸ்கிருதம் பொருத்தமாக இருந்தது. அதனால்…

Read More

ஓஹோ எந்தன் பேபி’ திரைப்படம் எனது கனவு” நடிகர் ருத்ரா!

ரோமியோ பிக்சர்ஸ் மற்றும் விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் பெருமையுடன் தயாரித்து வழங்கும் ரொமாண்டிக் எண்டர்டெய்னர் திரைப்படம் ‘ஓஹோ எந்தன் பேபி’ இன் அசோசியேஷன் வித் குட் ஷோ. இந்தப் படத்தை கிருஷ்ணகுமார் ராமகுமார் இயக்கி இருக்க நடிகர்- தயாரிப்பாளர் விஷ்ணு விஷாலின் இளைய சகோதரர் ருத்ரா கதாநாயகனாக அறிமுகமாகிறார். படம் ஜூலை 11 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது. படம் குறித்து நடிகர் ருத்ரா பகிர்ந்து கொண்டதாவது, “என்னுடைய அண்ணன் விஷ்ணு விஷால் என்னை ஹீரோவாக அறிமுகம் செய்வதற்கு நான் கொடுத்து வைத்திருக்க வேண்டும். சினிமா தான் என்னுடைய முதல் நண்பன். உதவி இயக்குநராக இருந்து பின்பு நடிகராகலாம் என்றுதான் சினிமா பயணத்தைத் துவங்கினேன். இந்த படம் எவ்வளவு முக்கியம் என்பது எனக்கு தெரியும். நான் நன்றாக நடித்து இருக்கிறேன் என்றால் அதற்கு காரணம் இயக்குநர் கிருஷ்ணா தான்.…

Read More

வடிவேலு – பகத் பாசில் நடிக்கும் ‘மாரீசன்’ ஜூலை 25ஆம் தேதி வெளியாகிறது

தமிழ் திரையுலகின் பிரபல நடிகர்களான வடிவேலு – பகத் பாசில் இருவரும் இணைந்து மிரட்டும் ‘மாரீசன்’ திரைப்படம் எதிர்வரும் 25ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது என படக்குழுவினர் பிரத்யேக புகைப்படத்தை வெளியிட்டு உற்சாகமாக அறிவித்துள்ளனர். இயக்குநர் சுதீஷ் சங்கர் இயக்கத்தில் வி. கிருஷ்ணமூர்த்தி கதை, திரைக்கதை, வசனம் எழுதி, கிரியேட்டிவ் டைரக்டராக பணியாற்றியுள்ள ‘மாரீசன் ‘ திரைப்படத்தில் வடிவேலு, பகத் பாசில், கோவை சரளா, விவேக் பிரசன்னா, சித்தாரா, பி. எல். தேனப்பன், லிவிங்ஸ்டன் , ரேணுகா, சரவணா சுப்பையா , கிருஷ்ணா, ஹரிதா, டெலிபோன் ராஜா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கலைச்செல்வன் சிவாஜி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். ஸ்ரீ ஜித் சாரங் படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்ள, மகேந்திரன் கலை இயக்கத்தை கவனித்திருக்கிறார். கிராமிய பின்னணியிலான ட்ராவலிங்…

Read More

தமிழ் சினிமாவில் ஒரு நம்பிக்கைக்குரிய புது முகம்: லவ் மேரேஜ் மூலம் அசத்திய நடிகை மீனாட்சி தினேஷ்!

மலையாள சினிமாவில் தனது நடிப்பால் வலுவான முத்திரையை பதித்த நடிகை மீனாட்சி தினேஷ், சண்முக பிரியன் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடிப்பில் சமீபத்தில் வெளியான லவ் மேரேஜ் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கால் பதித்துள்ளார். லவ் மேரேஜ் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனங்களைப் பெற்றுள்ளது. மேலும் படத்தில் மீனாட்சியின் கதாபாத்திரம் தனித்துவமாக வடிவமைக்கப்பட்டு விமர்சகர்கள் மற்றும் சினிமா ஆர்வலர்கள் அனைவரது கவனத்தை. பெற்றுள்ளது. 18+ மற்றும் இரட்டா போன்ற வித்யாசமான, தாக்கத்தை ஏற்படுத்தும் கதாபாத்திரங்களில் நடித்து பெயர் பெற்றவர் மீனாட்சி தினேஷ். அதே போல தமிழில் லவ் மேரேஜ் படத்திலும் தனது அழுத்தமான கதாபாத்திரம் மற்றும் நடிப்பின் மூலம் அதே தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளார். ரசிகர்கள் மற்றும் சினிமா விமர்சகர்கள் மீனாட்சி தினேஷின் எதார்த்தமான நடிப்பு மற்றும் ஸ்க்ரீன் பிரசன்சை பாராட்டியுள்ளனர். மேலும் மீனாட்சி…

Read More

ரிலீஸ்க்கு முன்பே சாதனை படைக்கும் ரஜினியின் கூலி!

சன் பிக்சர்ஸின் கூலி திரைப்படம் வெளியாவதற்கு முன்பே வெளிநாடுகளில் சாதனை படைக்கிறது, ரஜினிகாந்த் படங்களில் முக்கியமான ஒன்றாக மாற உள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள சன் பிக்சர்ஸின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படமான கூலி, இதுவரை வெளிநாடுகளில் அதிக திரையில் ரிலீஸ் செய்யப்படும் ஒரு தமிழ் படம் என்ற சாதனையை பெற்று தலைப்புச் செய்திகளில் இடம் பெறப்போகிறது உறுதி .ரஜினி உடன் கூலி படத்தில் இந்திய திரைப்படத் துறையைச் சேர்ந்த நாகார்ஜுனா, சத்யராஜ், ஆமிர் கான், உபேந்திரா, சௌபின் ஷாஹிர், ஸ்ருதி ஹாசன் மற்றும் பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். இயக்குனர் லோகேஷ் கனகராஜுடன் தொடர்ந்து நான்காவது முறையாக இணைந்து கூலி படத்திற்கு இசையமைத்துள்ளார் அனிருத். கூலி படத்தின் முதல் சிங்கிள் Chikitu ஏற்கனவே இணையத்தில் புயலைக் கிளப்பி வருகிறது. சூப்பர் ஸ்டார்…

Read More

வியோம் என்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனம் தயாரிப்பில், இயக்குனர் டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கத்தில் புது படம் உருவாகிறது.

“Vyom Entertainments” நிறுவனம், இயக்குனர் டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கத்தில், செல்வராகவன் நடிப்பில் “Untitled Production No.1” என்ற பெயரில் தனது முதல் படத்தை 2–ஜூலை–2025 அன்று துவக்குகிறது. வெற்றிகரமான டிரிப் மற்றும் தூக்குதுரை ஆகிய படங்களுக்கு பிறகு, இயக்குநர் டென்னிஸ் மஞ்சுநாத் தனது அடுத்த சினிமா பயணத்தை Untitled Production No.1 எனும் பெயரில் புதிய திரைப்படத்தை ஆரம்பிக்கிறார். இந்தப் படத்தை “Vyom Entertainments” நிறுவனம் தயாரிக்க, திருமதி விஜயா சதீஷ் அதை வழங்குகிறார். இன்று அந்த திரைப்படத்திற்கான பூஜையும், சில படப்பிடிப்புகளும் தமிழ்நாட்டில் உள்ள சேலத்தில் வெற்றிகரமாக நடைபெற்றது. இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் புகழ்பெற்ற இயக்குநரும் நடிகருமான செல்வராகவன் நடிக்கிறார். அவருடன் பிரபல நடிகை குஷி ரவி இணைந்து நடிக்கிறார். இவர்களுடன், அனுபவமுள்ள நடிகர்கள் Y. G. மஹேந்திரன், மைம் கோபி, கௌசல்யா, சதீஷ்,…

Read More

நமித் மல்ஹோத்ராவின் ராமாயணம் – உலகின் மிகப்பெரிய காவியத்தின் அறிமுகம்!

உலகெங்கிலும் உள்ள 2.5 பில்லியன் மக்களால் என்றென்றும் 5000 ஆண்டுகளுக்கு முன்பாக உருவான ராமாயணம் போற்றப்படுகிறது. இந்த ராமாயணக் கதை மிகப்பிரம்மாண்டமாக இரண்டு பாகங்களாக உருவாகிறது. இந்தக் கதையில் ஹாலிவுட் மற்றும் இந்தியாவின் புகழ்பெற்ற திறமையாளர்கள் ஒன்றிணைகிறார்கள். இந்தக் கதையை நிதேஷ் திவாரி இயக்க, நமித் மல்ஹோத்ராவின் பிரைம் ஃபோகஸ் ஸ்டுடியோஸ் மற்றும் 8 முறை ஆஸ்கார் விருது பெற்ற VFX ஸ்டுடியோ DNEG, யாஷின் மான்ஸ்டர் மைண்ட் கிரியேஷன்ஸுடன் இணைந்து தயாரிக்கிறது. ராமாயணம் IMAX க்காக படமாக்கப்பட்டு முதல் பாகம் உலகம் முழுவதும் தீபாவளி 2026 மற்றும் இரண்டாம் பகுதி தீபாவளி 2027-லும் வெளியாகிறது. *ஜூலை 3, 2025:* ‘ராமாயணம்: தி இன்ட்ரடக்ஷன்’ காவியத்தை உலகளவில் பிரம்மண்டமாக ரசிகர்களுக்கு படக்குழு கொடுத்துள்ளது. இந்தக் கதையின் மாபெரும் சக்திகளான ராமர் vs ராவணன் இடையேயான போர் அறிமுகமாக…

Read More

பாலிவுட் நட்சத்திரம் அபார்ஷக்தி குரானா, ROOT படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகம்!

Verus Productions தனது முக்கிய படமான ‘ROOT – Running Out Of Time’ எனும் புதிய Sci-Fi கிரைம் த்ரில்லரை அறிவித்துள்ளது. சூரியபிரதாப் எஸ் இந்த படத்தை இயக்குகிறார், ’நாளைய இயக்குநர் – சீசன் 1’ மூலம் கவனத்தை ஈர்த்தவர், மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘கோச்சடையான்’ படத்தில் அசோசியேட் டைரக்டராக பணியாற்றியவர். படத்தின் முதன்மை கதாநாயகனாகக் கௌதம் ராம் கார்த்தி நடிக்கிறார். வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் அவரின் இந்த புதிய முயற்சி எதிர்பார்ப்பை தூண்டும் வகையில் உள்ளது. அவருடன் இணைந்து, இந்தப் படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில், பாலிவுட் பிரபல நடிகர் அபார்ஷக்தி குரானா நடிக்கிறார். இந்தப் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். ஹிந்தி சினிமாவில் ‘Stree’, ‘Helmet’, ‘Luka Chuppi’ போன்ற பல வெற்றிப் படங்களில் நடித்த இவர், இப்போது தென்னிந்திய சினிமாவில்…

Read More