”இயக்குநர் ராமிடம் நிறைய கற்றுக் கொண்டேன்”- நடிகை கிரேஸ் ஆண்டனி!

ஜியோ ஹாட்ஸ்டார் – ஜிகேஎஸ் புரொடக்‌ஷன் – செவன் சீஸ் & செவன் ஹில்ஸ் புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் ராம் இயக்கத்தில் ஃபீல் குட் படமான ‘பறந்து போ’ ஜூலை 4 அன்று வெளியாகிறது. நடிகை கிரேஸ் ஆண்டனி, “ராம் சார் படத்துக்காக என்னை அழைத்தபோது அவர் யாரென்றே தெரியாது. ஆனால், அவருடைய ‘பேரன்பு’ படம் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. அவருடைய கதையில் நான் நடித்ததில் நிறைய கற்றுக் கொண்டேன். அவருடைய டெடிகேஷன் வேற லெவல்! சிவா, அஞ்சலியுடன் நடித்தது மகிழ்ச்சி. ராம் சார் என் மேல் அதிக நம்பிக்கை வைத்தார். படம் உங்களுக்கும் பிடிக்கும்” என்றார். *நடிகர்கள்:* சிவா, கிரேஸ் ஆண்டனி, மாஸ்டர் மிதுன் ரியான், அஞ்சலி, அஜு வர்கீஸ், விஜய் யேசுதாஸ் மற்றும் பலர் இதில் நடித்துள்ளனர்.

Read More

சத்யராஜ் – காளி வெங்கட் நடித்த ‘மெட்ராஸ் மேட்னி’ ஜூலை நான்காம் தேதியன்று டிஜிட்டல் தளங்களில் வெளியீடு

 மெட்ராஸ் மோஷன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளரும், இயக்குநருமான கார்த்திகேயன் மணி இயக்கத்தில் சத்யராஜ், காளி வெங்கட், ரோஷினி ஹரிப்பிரியன், விஷ்வா நடிப்பில் கடந்த ஜூன் மாதம் வெளியாகி விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்ற திரைப்படம் ‘மெட்ராஸ் மேட்னி’ திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களின் பாராட்டைப் பெற்ற திரைப்படங்களுக்கு டிஜிட்டல் தளங்களிலும் மிகப்பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் மெட்ராஸ் மேட்னி திரைப்படம் ஜூலை நான்காம் தேதியன்று அமேசான் பிரைம் (இந்தியா), சன் நெக்ஸ்ட்,சிம்பிள் சவுத் ( வேர்ல்ட் வைட்) மற்றும் டென்ட் கொட்டா ஆகிய முன்னணி டிஜிட்டல் தளங்களில் வெளியாகிறது. நடுத்தர மக்களின் வாழ்வியலை உணர்வுபூர்வமாகவும் , யதார்த்தமாகவும் விவரித்திருக்கும் ‘மெட்ராஸ் மேட்னி ‘ திரைப்படத்திற்கு டிஜிட்டல் தள ரசிகர்களிடத்திலும் வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது

Read More

மார்வெல் குடும்பத்தின் மிஸ்டர் ரீட், சூ ஸ்டார்ம் மற்றும் பிறரின் பவர் பற்றி இங்கே பார்க்கலாம்!

மார்வெல் ஸ்டுடியோஸின் ‘ஃபென்டாஸ்டிக் ஃபோர்: ஃபர்ஸ்ட் ஸ்டெப்ஸ்’, ஜூலை 25 அன்று ஆங்கிலம், இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகிறது. 1960களில், MCU உலகத்தில் ரீட் ரிச்சர்ட்ஸ் மற்றும் அவரது குழுவினரைக் காண ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர். இந்த புதிய பயணத்தில் அவர்களின் சக்தி எந்தளவுக்கு ரசிகர்களைக் கட்டிப்போட இருக்கிறது என்பதை இங்கே பார்க்கலாம். *ரீட் ரிச்சர்ட்ஸ் கதாபாத்திரத்தில் பெட்ரோ பாஸ்கல் (மிஸ்டர் ஃபென்டாஸ்டிக்):* ஃபென்டாஸ்டிக் ஃபோர் குழுவின் தலைவரான ரீட் ரிச்சர்ட்ஸ் தனது உடலை கட்டுக்கோப்பாக மாற்றி கடுமையாக தயாராகி உள்ளார். ரீட் தன் உடலை ரப்பரைப் போல மட்டும் வளைப்பதில்லை. தனக்கேற்றபடி இருக்கும் இடத்தையும் வடிவமைத்துக் கொள்பவர். அவரது சூப்பர்ஹுமன் அறிவுத்திறனுடன் இணைந்து, MCU-ல் மிகவும் வலிமையான அறிவியலாளர். அவரது அசாத்தியங்களை திரையில் காணத் தயாராகுங்கள்! *சூ ஸ்டோர்ம் கதாபாத்திரத்தில் வனேசா…

Read More

துன் பாடலுக்காக இணைந்த மூவர்!!

“மிதூன், அரிஜித் மற்றும் நான் ஒன்றாக இணையும்போது, மக்கள் எங்களிடம் ஒரு மறக்க முடியாத பாடலை எதிர்பார்க்கிறார்கள்!” – சையாரா படத்தின் அடுத்த பாடலான ‘துன்’ பாடலுக்காக மூவரும் ஒன்றாக இணைந்தது குறித்து மோஹித் சூரி. அரிஜித் சிங், மிதூன் மற்றும் மோஹித் சூரி என மூவரும் நாளை வெளியாகவுள்ள சையாராவின் அடுத்த பாடலான ‘துன்’ பாடலுக்காக மீண்டும் இணைந்துள்ளார்கள். இந்த மூவரும் ஹிந்தி திரைப்படத்துறையில் வரலாற்று அளவில் வெற்றி பெற்ற பாடல்கள் சிலவற்றை உருவாக்கியுள்ளனர்.இதில் ஆஷிகி 2 படத்திலிருந்து ‘தும் ஹி ஹோ’ பாடலும் அடங்கும்.மேலும், இந்த கூட்டணியில் உருவாகும் இசைக்காக மக்கள் தங்கள் மீது வைத்திருக்கும் எதிர்பார்ப்பை மோஹித் விரும்புகிறார். மோஹித் கூறுகையில், “நட்சத்திரங்கள் இணையும்போது, ​​ஆச்சரியங்கள் நிகழும் என்பார்கள். என் வாழ்க்கையில் முதலில் மிதூனையும் பின்னர் அரிஜித் சிங்கையும் கொண்டு வந்ததற்கு நான்…

Read More

”இயக்குநர் ராமின் ’பறந்து போ’ மிகப்பெரிய வெற்றிப் படம்!”- ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வர்

ஜியோ ஹாட்ஸ்டார் – ஜிகேஎஸ் புரொடக்‌ஷன் – செவன் சீஸ் & செவன் ஹில்ஸ் புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் ராம் இயக்கத்தில் ஃபீல் குட் படமான ‘பறந்து போ’ ஜூலை 4 அன்று வெளியாகிறது. சிவா, கிரேஸ் ஆண்டனி, மாஸ்டர் மிதுன் ரியான், அஞ்சலி, அஜு வர்கீஸ், விஜய் யேசுதாஸ் மற்றும் பலர் இதில் நடித்துள்ளனர். படம் குறித்து ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வர் பகிர்ந்து கொண்டதாவது, ”இயக்குநர் ராமின் ‘பறந்து போ’ படம் பார்த்தேன். ராம் சினிமாவை பார்க்கும் விதம் வேறு விதமாக இருக்கும். தனது படங்களில் மெல்லிய மனித உணர்வுகளைக் கடத்துவதில் வல்லவர். குழந்தைகள் உலகத்தை எப்படி பார்க்க வேண்டும் என்பதை கவிதையாக படைத்திருக்கிறார் இயக்குநர் ராம். மகிழ்ச்சி, நகைச்சுவை, அழுகை, துக்கம் என பல உணர்வுகளை இந்தப் படத்தில் கடத்தியிருக்கிறார். அப்பாவாக நடித்திருக்கும் சிவா, அம்மாவாக…

Read More

மாபெரும் எதிர்பார்ப்பை உருவாக்கும் ஹரி ஹர வீரமல்லு!!

பவர் ஸ்டார் பவன் கல்யாண் நடிப்பில் உருவாகும் பெரும் எதிர்பார்ப்புக்குரிய வரலாற்றுப் படைப்பான ‘ஹரி ஹர வீரமல்லு’ திரைப்படத்தில் முகலாய சக்கரவர்த்தி ஔவரங்கசீப்பாக பாபி டேயோல் நடிக்கிறார் பலருக்கும் தெரிந்த ஒன்றே. இத்திரைப்படத்தை இயக்குநர் ஜோதி கிருஷ்ணா இயக்கி உள்ளார். படப்பிடிப்பின் ஆரம்ப கட்டங்களில் பாபி டேயோல் அவர்களின் சில காட்சிகள் படமாக்கப்பட்டிருந்தன. ஆனால் பின்பு, பாபி டேயோல் நடித்த ‘அனிமல்’ திரைப்படத்திலுள்ள அவரின் பிரமிக்கவைக்கும் நடிப்பை பார்த்த பிறகு, ஜோதி கிருஷ்ணா அவர்கள் அவரது கதாபாத்திரத்தை முழுமையாக மறுபதிவை செய்து, புதியதொரு வடிவமைப்பில் உருவாக்க முடிவு செய்தார். “பாபி டேயோல் அவர்களின் ‘அனிமல்’ படத்தில் அளித்த அந்த மௌன நடிப்பு நம் அனைவரையும் அதிசயத்தில் ஆழ்த்தியது. சொற்கள் இல்லாமல், முகபாவனைகளின் வழியாகவே ஆழமான உணர்வுகளை வெளிப்படுத்தும் அவரது திறமை எனக்கு மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியது. அதனால்தான்,…

Read More

“சட்டென்று மாறுது வானிலை” ஃபர்ஸ்ட் லுக் வெளியானது !!

BV Frames சார்பில் பாபு விஜய் தயாரித்து இயக்க, ஜெய், மீனாட்சி கோவிந்தராஜன் நடிப்பில், இன்றைய சமகால பிரச்சனையை அழுத்தமாகப் பேசும், புதுமையான ரொமான்டிக் திரில்லராக உருவாகியுள்ள “சட்டென்று மாறுது வானிலை” புதிய படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. முன்னணி இயக்குநர் ஏ ஆர் முருகதாஸிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய பாபு விஜய் இப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். இன்றைய சமூகத்தில் நடக்கும் மிக முக்கிய பிரச்சனை ஒன்றை மையமாக வைத்து, காதலும் திரில்லரும் கலந்து, கமர்ஷியல் அம்சங்களுடன் இப்படம் உருவாகியுள்ளது. காவல்நிலையத்தில் காவலர்கள் தாக்க, நாயகன் ஜெய் அடிவாங்கி கதறுவதையும் காட்டும் ஃபர்ஸ்ட் லுக் தற்போதைய சமூகத்தின் நிலையை அப்படியே பிரதிபலித்து, மனதை உருக்குகிறது. மிக ஆழமான வலியைப் பிரதிபலிக்கும் ஃபர்ஸ்ட் லுக் ரசிகர்களிடம் பெரும் பாராட்டுக்களைக் குவித்து வருகிறது. பிரபஞ்சம் அடுத்தடுத்து ஒளித்து…

Read More

ஃபேமிலி படம் இயக்குநர் செல்வகுமார் திருமாரன் இயக்கத்தில், ஹிர்து ஹாரூன் நடிக்கும் “டெக்ஸாஸ் டைகர்”!!

கான்ஸ் திரைப்பட விழாவில் வெற்றி பெற்ற “All We Imagine As Light” படத்தின் நடிகர் ஹிர்து ஹாரூன், “டெக்ஸாஸ் டைகர்” படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். சமீபத்தில் வெளிவந்து,  உணர்வுப்பூர்வமான கமர்ஷியல் படைப்பாக, விமர்சகர்களிடமும், பார்வையாளர்களிடமும் நல்ல வரவேற்பைப் பெற்ற, “ஃபேமிலி படம்” படத்தின் இயக்குநர் செல்வகுமார் திருமாறன் இப்படத்தினை எழுதி இயக்குகிறார். “ஃபேமிலி படம்”  படத்தை தயாரித்த “UK Squad” எனும் நிறுவனத்தின் கீழ் சுஜித், பாலாஜி குமார், பாரதி குமார் மற்றும் செல்வகுமார் திருமாறன் ஆகியோர் இணைந்து “டெக்சாஸ் டைகர்” படத்தையும் தயாரிக்கின்றனர். படக்குழு, நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களைப் பற்றிய  சுவாரஸ்யமான அப்டேட்டுகள் விரைவில் ஒவ்வொன்றாக அதிகாரப்பூர்வமாக  வெளியாகும்.

Read More

ஃபேமிலி படம் இயக்குநர் செல்வகுமார் திருமாரன் இயக்கத்தில், ஹிர்து ஹாரூன் நடிக்கும் “டெக்ஸாஸ் டைகர்”!!

கான்ஸ் திரைப்பட விழாவில் வெற்றி பெற்ற “All We Imagine As Light” படத்தின் நடிகர் ஹிர்து ஹாரூன், “டெக்ஸாஸ் டைகர்” படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். சமீபத்தில் வெளிவந்து, உணர்வுப்பூர்வமான கமர்ஷியல் படைப்பாக, விமர்சகர்களிடமும், பார்வையாளர்களிடமும் நல்ல வரவேற்பைப் பெற்ற, “ஃபேமிலி படம்” படத்தின் இயக்குநர் செல்வகுமார் திருமாறன் இப்படத்தினை எழுதி இயக்குகிறார். “ஃபேமிலி படம்” படத்தை தயாரித்த “UK Squad” எனும் நிறுவனத்தின் கீழ் சுஜித், பாலாஜி குமார், பாரதி குமார் மற்றும் செல்வகுமார் திருமாறன் ஆகியோர் இணைந்து “டெக்சாஸ் டைகர்” படத்தையும் தயாரிக்கின்றனர். படக்குழு, நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களைப் பற்றிய சுவாரஸ்யமான அப்டேட்டுகள் விரைவில் ஒவ்வொன்றாக அதிகாரப்பூர்வமாக வெளியாகும்.

Read More

ZEE5 தளத்தில், Deleted Scenes உடன், “டிடி நெக்ஸ்ட் லெவல்” புது எக்ஸ்டெண்டட் வெர்ஷன் !!

இந்தியாவின் முன்னணி ஸ்ட் ரீமிங் தளமான ZEE5 தென்னிந்திய ரசிகர்களுக்கு, பிரத்தியேகமாக அவர்களுக்கு விருப்பமான மொழியில், பல சிறந்த படைப்புகளைத் தொடர்ந்து வழங்கி வருகிறது. சமீபத்திய வெளியீடான “டிடி நெக்ஸ்ட் லெவல்” வெளியீட்டின் வரவேற்பைத் தொடர்ந்து, அப்படத்திலிருந்து நீக்கப்பட்ட காட்சிகளுடன் புது வெர்ஷன் ஸ்ட்ரீம் செய்யப்படவுள்ளது. சந்தானம் நடிப்பில் சமீபத்தில் ZEE5 இல் வெளியான “டிடி நெக்ஸ்ட் லெவல்” படம் வெளியான வேகத்தில் 1 மில்லியன் பார்வை நிமிடங்களைக் கடந்து சாதனை படைத்து வருகிறது. இதனைத் தொடர்ந்து ரசிகர்களைக் கவரும் வகையில், படத்தில் இடம்பெறாமல் நீக்கப்பட்ட பல காட்சிகள் இணைக்கப்பட்டு, புதிய வெர்ஷன் ஸ்ட்ரீம் செய்யப்படவுள்ளது. திரையரங்குகளில் கண்டிராத புதிய காட்சிகளுடன் இந்த எக்ஸ்டெண்டட் வெர்ஷன், முழுமையான புது அனுபவமாக, ரசிகர்களைப் பெரிதும் உற்சாகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. “டிடி நெக்ஸ்ட் லெவல்” நீக்க்ப்பட்ட காட்சிகளுடனான புது வெர்ஷன்…

Read More