பிரமாண்ட நட்சத்திர பட்டியலின் சக்திவாய்ந்த சேர்க்கையில் – தற்போது நடிகர் சுனில், விஜய் மில்டனின் தமிழ்-தெலுங்கு இருமொழி படத்தில் இணைந்துள்ளார்.

புகழ்பெற்ற இயக்குநரும் ஒளிப்பதிவாளருமான விஜய் மில்டன் இயக்கும், ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கும் தமிழ்-தெலுங்கு இருமொழி திரைப்படத்தில், பிரபல நடிகர் சுனில் இணைந்ததை ரஃப் நோட் புரொடக்ஷன் மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறது. பல்வேறு கதாப்பாத்திரங்களிலும் திரைப்படத் துறைகளிலும் தனது பலதரப்பட்ட திறமைகளுக்குப் பெயர் பெற்ற நடிகர் சுனில், பல ஆண்டுகளாக திரைத்துறையில் பணி புரிந்த அனுபவத்தையும், மயக்கும் திரை ஆளுமையையும் இந்தத் திரைப்படத்தின் மூலம் கொண்டு வருகிறார். ‘மரியாதா ராமண்ணா’, ‘அந்தலா ரமுடு’, ‘புஷ்பா’ போன்ற திரைப்படங்களில் நினைவில் நிற்கும் நகைச்சுவை மற்றும் தனித்துவமான கதாபாத்திரங்களின் மூலம் தெலுங்கு சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை உருவாக்கியுள்ள சுனில், இந்த திரைப்படத்தின் மதிப்பை பெருக்குவதுடன், மற்ற மாநில ரசிகர்களிடையே பரவலான வரவேற்பையும் உறுதி செய்கிறது. இந்தத் திரைப்படத்தில், சுனில் தனது இயல்பான வசீகரத்தன்மையுடன், எதிர்பாராத உணர்ச்சிப் பரிமாணங்களைக் கொண்ட ஒரு கதாபாத்திரத்தில்…

Read More

ஜூன் 13 அன்று வெளியாகும் ஹிஸ்டாரிக்கல் கலந்த ஹரார் திரைப்படம் ” ஹோலோகாஸ்ட் “

Shutter Frames ( சட்டர் பிரேம்ஸ் ) என்ற பட நிறுவனம் சார்பில் பிபின் மிட்டாதில் தயாரித்துள்ள ஹாரர் படத்திற்கு ” ஹோலோகாஸ்ட் ” என்று வித்தியாசமாக தலைப்பு வைத்துள்ளார். இந்த படத்தில் ஜெயகிருஷ்ணன், ஷர்மிளா, நந்தன் உன்னி, தன்வி வினோத், மிதுன் வெம்பலக்கல், ப்ரீத்தி ஜினோ, நஸ்ரின் நசீர் ஆகியோர் இந்த படத்தில் நடித்துள்ளனர். ஷ்யாம் நடித்த காவியன் படத்திற்கு இசையமைத்த ஷ்யாம் மோகன் M. M இசையமைத்துள்ளார், ஒளிப்பதிவை விபின் ராஜ் செய்துள்ளார். எடிட்டிங் செய்து கிரியேட்டிவ் இயக்குனராக பணியாற்றியுள்ளார் டினோ ஜாய் புத்தெட்டு. ரெஜித் V சந்து நடனம் அமைத்துள்ளார். வசனம் – மனோஜ் குமார். மேக்கப் – ராகேஷ், வினு, சுகுமாரன் புராஜெக்ட் டிசைனராக ஶ்ரீனிவாசன் G D பணியாற்றியுள்ளார். பப்ளிசிட்டி டிசைனர் – இந்திர பிரபாகரன் மக்கள் தொடர்பு –…

Read More

“படை தலைவன்” திரைப்படத்தை, கேப்டன் சினி கிரியேஷன்ஸ் நிறுவனம், தமிழகமெங்கும் ஜூன் 13 ஆம் தேதி 500 திரையரங்கில் வெளியிடுகிறது !!

VJ COMBINES தயாரிப்பில், கேப்டன் விஜயகாந்த் அவர்களின் மகன் நடிகர் சண்முக பாண்டியன் நடிப்பில், இயக்குநர் U அன்பு இயக்கத்தில், காட்டு யானைகளின் வாழ்வியல் பின்னணியில், அங்கு வாழும் மக்களின் வாழ்க்கைக் கதையை சொல்லும் படமாக உருவாகியுள்ள படம் படை தலைவன். இப்படத்திற்கு இசை இசைஞானி இளையராஜா, ஒளிப்பதிவு எஸ் ஆர் சதீஷ்குமார், படத்தொகுப்பு அகமத் இப்படத்தின் தியேட்டர் விநியோக உரிமையை கேப்டன் சினி கிரியேஷன்ஸ் நிறுவனர் எல் கே சுதீஷ் கைப்பற்றுள்ளார்.. சமீபத்தில் வெளியான இப்படத்தின் டிரெய்லர் மற்றும் பாடல்கள் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. புதுமையான திரைக்கதையில், முழுவதும் காட்டுக்குள் நடக்கும் கதைக்களத்தில் பரபரப்பான திருப்பங்களுடன் இப்படத்தின் திரைக்கதை உருவாக்கப்பட்டுள்ளது. எஸ் ஆர் சதீஷ்குமாரின் கேமரா காடும் காடு சார்ந்த இடங்களை மிகவும் தத்ரூபமாக படம் பிடித்துள்ளது. பெரும் பொருட் செலவில் vj…

Read More

ஜூன் 13 முதல் மலையாள திரைப்படமான ‘ஆலப்புழா ஜிம்‌கானா’ ஆட்டம் காட்ட வருகிறது: Sony LIV-இல் ஸ்ட்ரீமிங்!

திரையரங்குகளில் ரசிகர்களின் மனங்களை வென்ற பிறகு, விளையாட்டு, நகைச்சுவை மற்றும் உணர்வுகள் கலந்து உருவாக்கப்பட்ட ஆலப்புழா ஜிம்‌கானா திரைப்படம், இப்போது OTT தளத்தில் களமிறங்குகிறது — ஜூன் 13 முதல் Sony LIV-இல் பிரத்தியேகமாக ஸ்ட்ரீமிங் ஆகிறது.சிரிப்புக்கு தயாராகுங்கள்! இந்தக் கதை, ஜோஜோ ஜான்சன் (நஸ்லன்) எனும் சோம்பேறித் தனமான கல்லூரி மாணவனைப் பற்றியது. அவன் கல்லூரியில் சேர பொய்யாக குத்துச்சண்டை ஒதுக்கீட்டின் மூலம், ஒரு வழியாக தேர்ந்தெடுக்கிறான். ஆனால் அவனும், அவனைப் போலவே குழப்பத்தில் இருக்கும் நண்பர்களும், கடினமாகவும் கட்டுப்பாட்டுடனும் பயிற்சி அளிக்கும் கோச் ஆண்டனி ஜோஷுவா (லூக்‌மேன் அவரன்)வை சந்திக்கிறார்கள். அவர் கடின உழைப்பும், வியர்வையும், உண்மையான சண்டையையும் வலியுறுத்துபவர். ஆரம்பத்தில் ஒரு குறுக்கு வழியாக இருந்தது, விரைவில் வியர்வை, சுயவிழிப்பு மற்றும் உயிருள்ள நட்புறவின் ஒரு போராளியின் பயணமாக மாறுகிறது. தன் பாத்திரத்தைப்…

Read More

கமல் அவர்களின் துணிச்சலை, ஆற்றல் மிகு பேராண்மையை போற்றி! பாராட்டுகிறேன் – மன்சூர் அலிகான்.

இந்த விடுமுறைகளில் கமல் மற்றும் சிம்பு, மற்றும், திரிஷா பிராட்டியார் நடித்த தக் லைஃப் பார்த்து சினிமாவை வாழ வைக்கும் வெகுஜன மக்களுக்கு! மிக்க, மிக்க நன்றிகள்! மேலும் திருமிகு கமல்ஹாசன் மிகுந்த நாகரிக வரலாற்று பாங்குடன் பொதுவாக தாய் தமிழில் இருந்து தோன்றிய சகோதரத்துவ மொழி கன்னடம் என்று வாஞ்சையுடன்! தாய்மை உள்ளத்தோடு குறிப்பிட்டதை தவறாக கன்னட சொந்தங்கள் நமது திராவிட உறவுகள் அரசியல் செய்வது வேதனையானது. அதுவும். ஒரு நீதிபதி அவர்களே! மன்னிப்புகள் என்பது! தான் தோன்றித்தனம். சகோதரர் சிவராஜ்குமார் கன்னட திரைச்செல்வம். இந்த சர்ச்சை முடிவு பெற வேண்டும் கமல் அவர்களின் துணிச்சலை, ஆற்றல் மிகு பேராண்மையை போற்றி! பாராட்டுகிறேன்! திரைப்பட கூலித் தொழிலாளி … மன்சூர் அலிகான்.

Read More

சன் பிக்சர்ஸ் – அல்லு அர்ஜுன் -அட்லீயின் #AA22xA6 படத்தில் இணைந்த பாலிவுட் பிரபலம் தீபிகா படுகோன்

சன் பிக்சர்ஸ் – ஐகான் ஸ்டார்’ அல்லு அர்ஜுன் – இயக்குநர் அட்லீ இணைந்திருக்கும் #AA22xA6 படம் தொடர்பான புதிய தகவலை படக் குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். நூறு கோடி… இருநூறு கோடி… ஐநூறு கோடி ரூபாய் என தொடர்ந்து இந்திய அளவிலான வசூல் கிளப்பில் இணைந்த படங்களை தயாரித்து, வெற்றிகரமான தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் சார்பில் பிரபல தயாரிப்பாளர் கலாநிதி மாறன் முதன் முறையாக பான் வேர்ல்ட் திரைப்படமாக இந்த திரைப்படத்தை பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரிக்கிறார். தமிழ் திரையுலகில் வெற்றிகரமான இயக்குநராக பயணிக்கத் தொடங்கி, ‘ ஜவான்’ படத்தின் மூலம் இந்திய சினிமாவில் தன் பிரத்யேக முத்திரையை பதித்த இயக்குநர் அட்லீ இயக்கத்தில் உருவாகும் #AA22xA6 படத்தில், இந்திய சினிமாவின் உலகளாவிய வசூலில் புதிய சரித்திர சாதனையை படைத்த ‘ஐகான் ஸ்டார்’ அல்லு அர்ஜுன்…

Read More

மொமண்ட் என்டர்டெயின்மெண்ட்ஸ் நிறுவனம், தனது மூன்றாவது படைப்பாக மெட்ராஸ் மோஷன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்காக ‘மெட்ராஸ் மேட்னி’ படத்தை தயாரித்துள்ளது!

‘மோ’, ‘மாயோன்’ மூலம் திரைப்படங்களை ஃபர்ஸ்ட் காப்பி முறையில் வெற்றிகரமாக தயாரிப்பதில் முத்திரை பதித்த ஜி. ஏ. ஹரிகிருஷ்ணன் தலைமையிலான மொமண்ட் என்டர்டெயின்மெண்ட்ஸ் நிறுவனம், தனது மூன்றாவது படைப்பாக மெட்ராஸ் மோஷன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்காக ‘மெட்ராஸ் மேட்னி’ படத்தை தயாரித்துள்ளது. கார்த்திகேயன் மணி தயாரிப்பு மற்றும் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் சத்யராஜ், காளி வெங்கட், ஷெல்லி கிஷோர், ரோஷினி ஹரிப்ரியன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். உலகமெங்கும் இன்று வெளியாகி இருக்கும் ‘மெட்ராஸ் மேட்னி’ திரைப்படம் அதன் நேர்த்தியான தயாரிப்புக்காக அனைத்து தரப்பு பாராட்டுகளை பெற்று வரும் நிலையில், மொமண்ட் என்டர்டெயின்மெண்ட்ஸ் தனது நான்காவது படைப்பை அறிவித்துள்ளது. செல்வராகவன், யோகி பாபு, ஜெ டி சக்கரவர்த்தி, ஷைன் டோம் சாக்கோ, சுனில் உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் நடிக்கும் இப்படத்தை மொமண்ட் என்டர்டெயின்மெண்ட்ஸ் தயாரித்து வருகிறது. ராதாரவி, சரஸ்வதி மேனன் மற்றும்…

Read More

தக்‌ஷன் விஜய் கதாநாயகனாக நடித்திருக்கும் படம் “துண்டு பீடி”.

தமிழில் கபளீகரம், ஐ அம் வெயிட்டிங் மற்றும் மலையாளத்தில் இத்திகார கொம்பன் ஆகிய படங்களில் நடித்துள்ளார்! மகிழ் புரொடக்சன்ஸ் சார்பில் சி.பியூலா மகிழ் தயாரித்துள்ள படம் ‘துண்டு பீடி’ . தக்‌ஷன் விஜய் கதாநாயகனாக நடிக்கிறார். தலைவாசல் விஜய், சாய் தீனா, வனிதா விஜயகுமார், வேல ராமமூர்த்தி மற்றும் பலர் நடித்துள்ளனர். போதை பொருட்களை விற்க்கும் ஒருவனால் பாதிக்கப்பட்ட இருவர், அவருக்கு எதிராக போராடி ஜெயித்தார்களா? இல்லையா? என்று படம் விறுவிறுப்பாக படமாக்கப்பட்டுள்ளது!    

Read More

மறைந்த இயக்குநர் விக்ரம் சுகுமாரனின் குடும்பத்திற்கு தயாரிப்பாளர் கண்ணன் ரவி ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கினார்!

தனது தனித்துவமான கதைசொல்லலுக்கு பெயர் பெற்ற இயக்குநர் விக்ரம் சுகுமாரனின் எதிர்பாராத மறைவு தமிழ் திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. விக்ரம் சுகுமாறனின் இந்த திடீர் மறைவு திரையுலகினருக்கு மட்டுமல்ல அவரது குடும்பத்தினருக்குமே ஈடுசெய்ய முடியாத இழப்பு. இந்த நேரத்தில் மறைந்த இயக்குநர் விக்ரம் சுகுமாரனின் குடும்பத்திற்கு ஆதரவளிக்கும் விதமாக அவரது கடைசிப் படமான ’இராவண கோட்ட’த்தைத் தயாரித்த தயாரிப்பாளர் கண்ணன் ரவி ரூ. 5 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார். நடிகர் சாந்தனு பாக்யராஜ், அம்மா கிரியேஷன்ஸ் டி. சிவா, FEFSI தலைவர் இயக்குநர் ஆர்.கே. செல்வமணி உள்ளிட்ரோர் முன்னிலையில் விக்ரம் சுகுமாரனின் தாயாரிடம், தயாரிப்பாளர் கண்ணன் ரவி மகன் தீபக் ரவி காசோலையை வழங்கினார். இந்த இழப்பு குறித்து கண்ணன் ரவி கூறுகையில், “இயக்குநர் விக்ரம் சுகுமாரனின் திடீர் இழப்பு எங்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர் திறமையும்…

Read More

தன்னம்பிக்கையின் சிலையாக தமிழ்ச்செல்வி –  விஜய் டிவி “சின்ன மருமகள்” தொடரின் நெஞ்சைத் தொடும் கதை!

தமிழ் சின்னத்திரை உலகில், மக்களின் பேராதரவைப் பெற்ற, தமிழின் முன்னணி தொலைக்காட்சியான  விஜய் தொலைக்காட்சியில், திங்கள் முதல் வெள்ளி வரை ஒவ்வொரு நாளும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகும் தொடர் “சின்ன மருமகள்”. மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்ற இத்தொடர் தற்போது உச்சகட்டத்தை எட்டியுள்ளது. பொதுவாகவே தமிழில் நெடுந்தொடருக்கு,  தமிழக பெண்களிடம் பெரும் வரவேற்பு உள்ளது. குடும்ப கதைகள், குடும்பத்தில் சிக்கி உழலும் பெண்களின் வலிகளைச் சொல்லும் கதைகளுக்கு,  நம் தமிழ்ப்பெண்களிடம் தனி வரவேற்பு உண்டு. அந்த வகையில் மருத்துவராகும் கனவோடு திருமண வாழ்க்கையில் உழலும், தமிழ்செல்வியின் கதையை சொல்லும், “சின்ன மருமகள்” தொடர், மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று வருகிறது. இத்தொடரின் கதை,  இப்போது உச்சகட்ட பரபரப்பை எட்டியுள்ளது. மருத்துவருக்குப் படிக்க வேண்டும் என்ற கனவில் இருக்கும் தமிழ்ச்செல்வி, திருமணமான நிலையில், மாமியார் வீட்டின் சிக்கல்களால்,  தான்…

Read More