உணர்வுப்பூர்வமான காதல் கதையாக உருவாகியுள்ள ’18 மைல்ஸ்’ கடந்த சில வாரங்களாகவே பார்வையாளர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. சதீஷ் செல்வகுமார் இயக்கத்தில் அசோக் செல்வன் மற்றும் மிர்ணா நடிப்பில் உருவாகியுள்ள ’18 மைல்ஸ்’-ல் இருந்து 14 நிமிடங்கள் கொண்ட புரோலாகை சமீபத்தில் திங்க் மியூசிக் வழங்கியது. இது ’18 மைல்ஸ்’ மீதான எதிர்பார்பை இன்னும் அதிகமாக்கியுள்ளது. படத்திற்கு மேலும் வலு சேர்க்கும் வகையில் இயக்குநர் மணி ரத்னம் ’18 மைல்ஸ்’ பார்த்துவிட்டு ஒட்டுமொத்த குழுவினருக்கும் தன் பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து இயக்குநர் சதீஷ் செல்வகுமார் பகிர்ந்து கொண்டதாவது, “இயக்குநர் மணி ரத்னம் சார் கொடுத்த பாராட்ட எங்கள் அணியில் உள்ள அனைவருக்குமே மறக்க முடியாதது. மெட்ராஸ் டாக்கீஸ் அலுவலகத்தில் புரோலாக் திரையிட்டு காட்டும் வாய்ப்பு எங்களுக்குக் கிடைத்தது. மிக நுணுக்கமாகவும் நேர்த்தியாகவும் இருந்ததாக மணி சார் பாராட்டினார்.…
Read MoreCategory: சினிமா செய்திகள்
SIIMA விருது விழாவில் நம்பிக்கை நட்சத்திரமாக மகுடம் சூடியுள்ளார் நடிகை சான்யா ஐயர்!
இளைமை, சாதுர்யம் மற்றும் நடிப்புத் திறமை ஆகியவற்றை ஒருங்கே பெற்றவர் நடிகை சான்யா ஐயர். அர்ப்பணிப்பு, ஒழுக்கம் மற்றும் திரை வசீகரத்துடன் தென்னிந்திய சினிமாவில் நம்பிக்கை நட்சத்திரமாக மிளிர்கிறார். விடாமுயற்சி மற்றும் நடிப்பு மீதான ஆர்வத்துடன் கன்னட சினிமாவில் 15 வருடங்களுக்கும் மேலாக தனக்கான இடத்தை தக்க வைத்துள்ளார். ‘நம் அம்மா ஷாரதே’, ‘அரசி’, ‘புட்டகௌரி மதுவே’ போன்ற தொடர்களில் குழந்தை நட்சத்திரமாகவும், ‘கஜா’, ‘முகபுதா’ மற்றும் ‘விமுக்தி’ போன்ற படங்களிலும் மறக்க முடியாத கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களைக் கவர்ந்துள்ளார். கன்னட பிக் பாஸ் ஓடிடி சீசன் 1 வெற்றியாளராக அவர் பெற்ற வெற்றியும், 2024 ஆம் ஆண்டில் வெளியான இந்திரஜித் லங்கேஷின் கௌரி திரைப்படத்தில் அவர் கதாநாயகியாக நடித்ததும் இன்று இந்திய சினிமாவில் மிகவும் நம்பிக்கைக்குரிய நட்சத்திரங்களில் ஒருவராக இருக்கிறார் சான்யா. இதுகுறித்து சான்யா பகிர்ந்து…
Read Moreஈழத்தமிழ் சினிமா வரலாற்றில் முதன்முறையாக இசைஞானி இளையராஜாவின் இசையில் ஓசை பிலிம்ஸ் வழங்கும் “அந்தோனி” முழுநீளத் திரைப்படம்.
ஓசை பிலிம்ஸ் திரைப்பட நிறுவனத்தின் தயாரிப்பில், நாயகனாக கயல் வின்சன்ட் மற்றும் நாயகியாக காதலிக்க நேரமில்லை TJ.பானு ஆகியோருடன் பெரும்பான்மையான ஈழத்திரைக் கலைஞர்களும் பிரபல இந்தியக் கலைஞர்களும் இணைந்து நடிக்கும் “அந்தோனி” என்கின்ற புதிய திரைப்படத்திற்கு இசையமைக்கின்றார் Maestro “ இசைஞானி” இளையராஜா அவர்கள். அந்தோனி திரைப்படமானது இலங்கை – யாழ்ப்பாணத்தில் கடந்த 05.03.2025 ல் பூசையுடன் ஆரம்பிக்கப்பட்டு, 45 நாட்களுக்கு மேலாக இரவு பகல் பாராது படப்பிடிப்புகள் நடைபெற்று 30.04.2025 ல் நிறைவுபெற்றிருந்தது. திரைப்படத்தின் Post Production பணிகள் சித்திரைமாதம் படத்தொகுப்புடன் (எடிற்றிங்) வேலைகள் ஆரம்பிக்கப் பட்டுப் பின்னர் குரல்ப்பதிவுகள் (டப்பிங்) நிறைவுசெய்யப்பட்டு 10.08.2025ல் இசையமைப்புக்குத் தாயாராகியது. எமது ஈழத்தமிழ் சினிமாவுக்கு ஒரு உலகறிந்த இசையமைப்பாளரை ஒழுங்கு செய்வதே சிறந்ததாக இருக்கும் எனும் எண்ணம் படத்தயாரிப்புக் காலங்களிலேயே கலந்துரையாடப்பட்டதால் இசைஞானி இளையராஜாவே அவர்கள் இத்திரைப்படத்திற்கு தகுந்த…
Read Moreவித்தியாசமான ஹாரர்-ஃபாண்டஸி காமெடி – “ஹவுஸ் மேட்ஸ்” செப்டம்பர் 19 முதல் ZEE5-ல் ஸ்ட்ரீமாகிறது!
~ T. ராஜா வேல் இயக்கத்தில், S. விஜயபிரகாஷ் தயாரிப்பில் SK Productions சார்பில் உருவான ஹவுஸ் மேட்ஸ் திரைப்படத்தில், தர்ஷன் – ஆர்ஷா சாந்தினி பைஜு முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் வரும் செப்டம்பர் 19 முதல் ZEE5 தமிழ் ஓடிடியில் ஸ்ட்ரீமாகிறது ~ இந்தியாவின் முன்னணி ஓடிடி தளமான ZEE5, தனது அடுத்த அதிரடி வெளியீடாக ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த “ஹவுஸ் மேட்” தமிழ் திரைப்படத்தை வெளியிடவுள்ளது. ஹாரர், ஃபாண்டஸி மற்றும் காமெடி ஆகிய மூன்று ஜானர்களையும் கலந்த இந்தப் படம், இயக்குநராக T. ராஜா வேலின் அறிமுக படமாகும். S. விஜயபிரகாஷ் தயாரிப்பில், ல் SK Productions சார்பாக உருவாகியுள்ளது. தர்ஷன் – ஆர்ஷா சாந்தினி பைஜு ஆகியோர் ஹீரோ, ஹீரோயின்களாக நடிக்க, காளி வெங்கட், வினோதினி வைத்தியநாதன், தீனா, அப்தூல் லீ…
Read Moreசிவனின் அருளாசியில், காந்தாரா சேப்டர் 1 (Kantara Chapter 1 ) இசை ஆல்பத்திற்காக, தில்ஜித் தோசாஞ் ஒரு பாடல் பாடியுள்ளார் !!
தேசிய விருது பெற்ற நடிகர்-பாடகர் தில்ஜித் தோசாஞ், (Diljit Dosanjh) இயக்குநர்–நடிகர் ரிஷப் ஷெட்டியுடன் காந்தாரா சேப்டர் 1 இசை ஆல்பத்திற்காக கைகோர்த்துள்ளார். இன்ஸ்டாகிராமில் உணர்ச்சிமிகு பதிவொன்றை பகிர்ந்த தில்ஜித், காந்தாரா திரைப்படம் தன்னை எவ்வளவு ஆழமாக பாதித்தது என்பதை நினைவுகூர்ந்து பகிர்ந்துள்ளார் : “காந்தாரா என்ற அற்புத படைப்பை உருவாக்கிய என் சகோதரர் @rishabshettyofficial க்கு பெரு வணக்கம். இந்த படத்துடன் எனக்கு ஒரு தனிப்பட்ட தொடர்பு இருக்கிறது, அதை இப்போது சொல்ல முடியாது. ஆனால் திரையரங்குகளில் வராஹ ரூபம் பாடல் ஒலித்தபோது, பேரானந்தத்தில் கண்ணீர் விட்டேன்.” மேலும் வரவிருக்கும் ப்ரீக்வல் குறித்து தனது உற்சாகத்தை வெளிப்படுத்திய தில்ஜித்.., இசையமைப்பாளர் B. அஜனீஷ் லோக்நாத்திற்கு (B. Ajaneesh Loknath) நன்றி தெரிவித்தார். “ஒரே நாளில் அவரிடம் இருந்து நிறைய கற்றுக்கொண்டேன்,” என்று குறிப்பிட்டார். தில்ஜித் தோசாஞ் –…
Read More100 பிரபலங்கள் வெளியிடும் ‘அடியே வெள்ளழகி’ ஆல்பம் பாடல்!
கே.சி.பி.மிதுன் சக்கரவர்த்தி மற்றும் ஜீவிதா நடிப்பில் உருவான “அடியே வெள்ளழகி” பாடலின் முதல் பார்வையை 100க்கும் மேற்பட்ட சினிமா பிரபலங்கள் வெளியிட்டார்கள் .இதுவரை கலையுலகம் காணாத பிரம்மாண்ட புதுமை இது. வருகிற 12-ஆம் தேதி கட்டெறும்பு சேனலில் இந்தப்பாடல் வெளிவருகிறது .இந்த ஆல்பம் பாடலைக் கட்டெறும்பு ஸ்டாலின் தயாரித்துள்ளார் . அனைவரும் கண்டு மகிழும்படி உருவாக்கப்பட்டுள்ளது.இயற்கை எழில் கொஞ்சும் இடங்களில் காதல் என்கிற மெல்லுணர்வை வெளிப்படுத்தும் வகையில் இந்தப் பாடல் உருவாக்கியுள்ளது. இந்தப் பாடலில் நாயகனாக மிதுன் சக்கரவர்த்தி நடித்துள்ளார். இவர்,பில்லாபாண்டி, தேவராட்டம், புலிக்குத்திபாண்டி அங்காரகன், கருப்பு பெட்டி போன்ற பல படங்களில் தோன்றி சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி அறியப்பட்ட நடிகரான கே.சி.பிரபாத்தின் மகன். மிதுன் சக்கரவர்த்தி,இயக்குநர் முத்தையா இயக்கத்தில் உருவான கொடி வீரன் படத்தில் சிறுவனாக அறிமுகம் செய்யப்பட்டவர். தொடர்ந்து பில்லாபாண்டி, கருப்புபெட்டி போன்ற படங்களில்…
Read Moreதவிர்க்க முடியாத காரணங்களால் தற்காலிகமாக வெளியீடு தள்ளிவைக்கப்பட்ட ‘தணல்’ திரைப்படம் தற்போது திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது!
‘தணல்’ படத்தின் ஆழமான உணர்வுகள், நடிகர்களின் திறமையான நடிப்பு மற்றும் வலுவான கதைசொல்லல் ஆகியவற்றிற்காகத் தொடர்ந்து ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடம் இருந்து நேர்மறையான பாராட்டுகள் கிடைத்து வருகிறது. இந்தப் பாராட்டுகள் மூலம் திரையரங்குகளில் ‘தணல்’ படம் பார்க்க வரும் பார்வையாளர்கள் எண்ணிக்கையும் திரையரங்குகளில் அதிகரித்துள்ளது. ‘தணல்’ குறித்து முன்னணி எக்ஸ்பிட்டர் பகிர்ந்து கொண்டதாவது, “‘தணல்’ படம் திரையிடப்பட்ட நாள் முதலே பார்வையாளர்கள் எண்ணிக்கை திரையரங்குகளில் அதிகமாகத் தொடங்கியது. விறுவிறுப்பாகவும் அதேசமயம் மனதைத் தொடும் கதையாகவும் இருப்பதாக படம் பார்த்த பார்வையாளர்கள் சொல்கின்றனர். கூட்டம் அதிகரித்து வருவதால் அதற்கேற்றாற் போல கூடுதல் காட்சிகள் திரையிட திட்டமிட்டுள்ளோம்” என்றார். ரசிகர்களின் அன்புக்கும் ஆதரவுக்கும் படத்தின் தயாரிப்பாளர்கள் நன்றி தெரிவித்துள்ளனர். தயாரிப்பு அணியில் இருந்து செய்தி தொடர்பாளர் பேசியதாவது, “‘தணல்’ படத்திற்கு நிறைய அன்பு கிடைத்து வருவது மகிழ்ச்சியாக உள்ளது. படத்தின்…
Read Moreஉன்னதமான காதல் திரைப்படமாக உருவாகியுள்ள “சரீரம்” செப்டம்பர் 26 திரைக்கு வருகிறது !!
G.V.P. PICTURES வழங்கும், இயக்குநர் G.V. பெருமாள் எழுதி, தயாரித்து, இயக்க, புதுமுகங்கள் தர்ஷன், சார்மி நடிப்பில், உன்னதமான காதல் திரைப்படமாக, கடவுள் தந்த சரீரத்தின் பெருமையை பேசும் படைப்பாக உருவாகியுள்ள திரைப்படம் “சரீரம்”. இப்படம் வரும் செப்டம்பர் 26 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. கடவுள் ஒவ்வொருவருக்கும் தந்த தனிக் கொடை தான் சரீரம். அதன் அருமை யாருக்கும் புரிவதில்லை, தன் சரீரத்தை மாற்றிக்கொள்ளும் உரிமை எவருக்குமில்லை, இந்த கருத்தை ஆழமாக பேசும் படைப்பாகவும் இளமை துள்ளும் காதல் படைப்பாகவும் இப்படத்தை எழுதி தயாரித்து உருவாக்கியுள்ளார் அறிமுக இயக்குநர் G.V. பெருமாள். ஒரு காதல் ஜோடி, அவர்களின் காதலுக்கு குடும்பமே எதிர்ப்பு தெரிவிக்க, வாழ வழி தெரியாமல், காதலுக்காக ஆண் பெண்ணாகவும், பெண் ஆணாகவும் தங்கள் பாலினத்தையே மாற்றிக்கொள்கிறார்கள். அந்த காதல் ஜோடியை இந்த…
Read Moreதிரைக்கதை எழுத்தாளர் & நடிகை சாந்தி பாலச்சந்திரனின் எழுத்து லோகா Chapter 1 – சந்திராவை வரலாற்றில் பதித்தது
உலகளாவிய வசூலில் அதிர்வலை ஏற்படுத்தி வரும் லோகா: Chapter 1 – சந்திரா, இந்திய திரையுலகின் மிகப்பெரிய தயாரிப்பு நிறுவனங்களையே ஆச்சரியத்தில் ஆழ்த்தும் வகையில், மலையாளத் திரையுலகிலிருந்து எழுந்து வந்த எதிர்பாராத சூப்பர் ஹிட் எனப் போற்றப்படுகிறது. துல்கர் சல்மானின் Wayfarer Films தயாரிப்பில், கல்யாணி பிரியதர்ஷன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தும், டொமினிக் அருண் இயக்கியுள்ள இப்படம் தற்போது பெருமையுடன் ₹200 கோடி கிளப்பில் இணைந்துள்ளது. மேலும், இந்த தொடரின் அடுத்த பாகங்கள் தயாரிப்பில் உள்ளன என துல்கர் அறிவித்திருப்பது சினிமா ரசிகர்களின் ஆர்வத்தை பலமடங்கு உயர்த்தியுள்ளது. மிகுந்த பாராட்டைப் பெற்ற நடிப்புகள், செழுமையான தயாரிப்பு மதிப்புகள், தொழில்நுட்பத் திறமைகள் ஆகியவை இதனை உயர்த்திக் கொண்டிருந்தாலும், இந்த படைப்பின் ஆழத்தை அதிகரித்த முக்கிய அம்சமாகும் – நடிகையுமான சாந்தி பாலச்சந்திரன் இணை எழுத்தாளராக பங்களித்திருப்பது. தமிழ் ரசிகர்கள்…
Read Moreமுதன்முறையாக, நடனம், நடிப்பு என ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த பிரபுதேவா, Sony LIV தமிழ் ஒரிஜினல் சேதுராஜன் IPS மூலம் OTT உலகில் அறிமுகமாகிறார்.
கிராமிய தமிழ்நாட்டின் அரசியல் சூழலை மையமாகக் கொண்ட இந்த crime thriller தொடரில், பிரபுதேவா தன் வழக்கமான கவர்ச்சியை விட்டு விலகி, பலத்த கம்பீரத்துடன், அரசியலுடன் பின்னிப்பிணைந்த கொலை வழக்கை விசாரிக்கும் காவலராக நடிக்கிறார். ஆற்றல், அடையாளம், நீதிக்கான போராட்டம் ஆகியவை மையமாகும். இந்தக் கதையில், பிரபுதேவாவின் நடிப்புப் பரிமாற்றம் பார்வையாளர்களுக்கு புதிய அனுபவமாக இருக்கும். தனது கதாபாத்திரம் குறித்து பிரபுதேவா கூறியது: சேதுராஜன் IPS ஒரு காவலர் மட்டும் அல்ல, கடமை, அடையாளம், அரசியல் ஆகிய புயலில் சிக்கிக்கொள்ளும் மனிதர். இந்தக் கதாபாத்திரம் எனக்கு முந்தைய அனுபவங்களிலிருந்து முற்றிலும் வேறுபட்டு, மிகவும் சவாலாக இருந்தது. இந்தக் கதை இன்றைய காலகட்டத்திற்கு தேவையானது என நம்புகிறேன். வேரூன்றிய தைரியமான கதைகளை முன்வைக்கும் Sony LIV, இந்தத் தொடரையும் அதே உறுதிப்பாட்டுடன் வழங்குகிறது.” ரஃபிக் இஸ்மாயில் இயக்கத்தில் உருவாகும்…
Read More