சென்னையில் நடைபெறும் RUC ஸ்போர்ட்ஸ் ஃபிலிம் ஃபெஸ்டிவல், ரைஸ் அப் சாம்பியன்ஷிப் அறக்கட்டளையை அறிமுகப்படுத்துகிறது!

விளையாட்டு மற்றும் சினிமாவின் தனித்துவ கொண்டாட்டமான RUC ஸ்போர்ட்ஸ் ஃபிலிம் ஃபெஸ்டிவல் செப்டெம்பர் 3 மற்றும் 4 அன்று சென்னை, தி.நகரில் உள்ள AGS சினிமாஸில் அறிமுகமாகிறது. காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை ஆங்கிலம், இந்தி மற்றும் தமிழ் மொழிகளில் பிளாக்பஸ்டர் மற்றும் விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட படங்களை இரண்டு நாட்களுக்கு பெரிய திரையில் பார்த்து கொண்டாடலாம். காலத்தால் அழியாத கிளாசிக் படைப்புகள் முதல் சமீபத்திய வெற்றிகள் வரை ரசிகர்களுக்கு மறக்க முடியாத திரையனுபவத்தை கொடுக்க இருக்கிறது. விளையாட்டு நமக்கு எப்படி ஊக்கமளிக்கிறது, உந்துதல் கொடுக்கிறது மற்றும் மைதானத்திற்கும் அப்பாற்பட்டு நம் வாழ்வில் எப்படி முக்கியமான அங்கம் வகிக்கிறது ஆகியவற்றை ஒவ்வொரு திரையிடலும் நமக்கு உணர்த்தும். விளையாட்டு வீரர்கள், ரசிகர்கள், திரைப்படத்துறையினர் என அனைவரும் ஒரே இடத்தில் கூடி விளையாட்டின்…

Read More

‘குற்றம் புதிது’ படம் மூலம் ரசிகர்களின் மனம் கவர வருகிறார் நடிகர் தருண் விஜய்!

ஸ்டைல், அர்ப்பணிப்பு மற்றும் திறமையுள்ளவர்களை தமிழ் சினிமா எப்போதும் வரவேற்கும்! அந்த வகையில், நாளை வெளியாக இருக்கும் ‘குற்றம் புதிது’ படம் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமாக இருக்கிறார் நடிகர் தருண் விஜய். லெஜெண்ட் நடிகர்கள் புரூஸ் லீ, ஜாக்கி சான் மற்றும் டோனி ஜா போன்ற முகத்தோற்றம் தருண் விஜய்க்கு இருப்பதாக படத்தின் முதல் பார்வை போஸ்டரை ரசிகர்கள் கொண்டாடினர். SRM கல்லூரி மாணவர்கள் மத்தியில் தருண் புகழ்பெற்றவராக இருப்பதால் நாளை (ஆகஸ்ட் 29, 2025) வெளியாக இருக்கும் அவரின் ‘குற்றம் புதிது’ பட போஸ்டரை மாணவர்கள் ஷேர் செய்து வருகின்றனர். திருவள்ளூரில் உள்ள குழந்தைகள் நல மருத்துவரின் மகனான தருண் விஜய் சென்னை போன்ற இந்த பெரும் நகரத்தில் மற்றவர்களைப் போலவே சாதாரண மேன்ஷனில் தங்கி தனது கனவை நிறைவேற்றியுள்ளார். ‘குற்றம் புதிது’…

Read More

”’அந்த ஏழு நாட்கள்’ படத்தின் கதைக்கு தலைப்பை தேர்ந்தெடுத்ததே பாக்யராஜ் சார்தான்!”

இயக்குநர் சுந்தர் இயக்கத்தில் விஞ்ஞானத்தை மையமாகக் கொண்ட காதல் திரைப்படமாக உருவாகியிருக்கிறது ‘அந்த ஏழு நாட்கள்’ திரைப்படம். இந்த படத்தில் ஒரு அசம்பாவிதத்தைத் தவிர்க்கும் கதாநாயகனாக நடித்துள்ள வினித் என்கிற அஜித்தேஜ் ஒரு வானியற்பியல் மாணவராகவும், நாயகி ஸ்ரீஸ்வேதா வழக்கறிஞராகவும் நடித்துள்ளனர். பெஸ்ட்காஸ்ட் ஸ்டுடியோஸ் தயாரிப்பு நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் முரளி கபீர்தாஸ் இந்தத் திரைப்படத்தை தயாரித்துள்ளார். வெறும் பொழுதுபோக்கிற்காக மட்டுமல்லாமல் தனித்துவமான தரமான கதைகள் மூலம் பார்வையாளர்களுக்கு நல்ல சினிமா அனுபவத்தை வழங்குவதையும் தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், எழுத்தாளர்கள் என புது திறமையானவர்களுக்கு வாய்ப்பு கொடுப்பதை நோக்கமாகவும் கொண்டிருக்கிறார் தயாரிப்பாளர் முரளி கபீர்தாஸ். படம் குறித்து தயாரிப்பாளர் முரளி கபீர்தாஸ் பகிர்ந்து கொண்டதாவது, “நான் படம் தயாரிக்க வேண்டும் என முடிவு செய்தபோது ரசிகர்கள் இதற்கு முன்பு பார்த்திராத நல்ல கதைகள் மற்றும் நல்ல சினிமா அனுபவத்தை…

Read More

தமிழ் சினிமாவின் வெளிநாட்டு முன்னணி சக்தி மணமுடித்தார்: அகிம்சா என்டர்டெயின்மென்ட் நிறுவனர் வித்துர்ஸ், லிஷாவுடன் திருமணம்

சென்னை, — தமிழ் திரைப்படங்களை உலகளவில் பரப்பியதில் முக்கிய பங்கு வகிக்கும் அகிம்சா என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் நிறுவனர் வித்துர்ஸ், தனது நீண்டகால துணைவி லிஷாவுடன் திருமணம் செய்து கொண்டார். சென்னையில் நடைபெற்ற இந்த பிரமாண்டமான திருமண வரவேற்பு விழா, தமிழ் சினிமாவின் முன்னணி பிரபலங்களை ஒன்றிணைத்த ஒரு பிரமுகமான நிகழ்வாக அமைந்தது. நடிகர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், இசைக்கலைஞர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்ட இந்த விழா, மறக்க முடியாத ஒரு தருணமாக இருந்தது. வித்துர்ஸ் மற்றும் அவரது நிறுவனம் அகிம்சா என்டர்டெயின்மென்ட், கடந்த சில ஆண்டுகளில் தமிழ் திரைப்படங்களை இங்கிலாந்து, ஐரோப்பா, வட அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு வெளிநாட்டு சந்தைகளுக்கு வெற்றிகரமாக கொண்டு சென்றுள்ளது. புதிய முயற்சிகள், தரமான விநியோகம், புதுமுக இயக்குநர்களுக்கு ஆதரவு ஆகியவற்றின் மூலம், நிறுவனம் உலகளாவிய தமிழ் சினிமா வட்டாரத்தில் நம்பிக்கையான பெயராக…

Read More

96 ஜோடி ஆதித்யா பாஸ்கர், கௌரி கிஷன் மீண்டும் இணையும் படம்

Origin Studios சார்பில் கண்ணதாசன் புதிய படம் ஒன்றை தயாரிக்கிறார் இப்படத்துக்கு இன்னும் பெயரிடப்படவில்லை. Production NO 1 என தற்காலிகமாக பெயர் சூட்டப்பட்டுள்ளது. ராஜ்குமார் ரங்கசாமி இப்படத்தை இயக்குகிறார். எல்.ராமச்சந்திரன் ஒளிப்பதிவு செய்கிறார். ஜோன்ஸ் ரூபர்ட் இசை அமைக்கிறார். இவர் பொறியாளன், சட்டம் என் கையில் படத்திற்கு இசையமைத்தவர். குட் நைட், லவ்வர் , டூரிஸ்ட் ஃபேமிலி, போன்ற படங்களுக்கு எடிட்டிங் செய்த பரத் இப்படத்துக்கு எடிட்டிங் செய்கிறார். படம் பற்றி இயக்குனர் ராஜ்குமார் ரங்கசாமி கூறியதாவது: இந்த உலகில் காதலும் அன்பும் அதன் இயல்பு தன்மையை மாற்றாமல் இருப்பதை நாம் ஒப்புக் கொள்ளும் அதே வேளையில் அவற்றின் வடிவம் காலத்திற்கு ஏற்ப மாறிக்கொண்டே இருப்பதை நாம் மறுக்க இயலாது. 90s கிட்ஸ், 2K கிட்ஸ் .. வரிசையில் இன்றைய இளைஞர்களை ஜெனரேஷன் ஆல்ஃபா என்று…

Read More

‘சிங்கா’: இந்தியாவில் முதல்முறையாக உண்மையான சிங்கத்துடன் எடுக்கப்படும் முழுநீளத் திரைப்படம்

எட்செட்ரா என்டெர்டெயின்மென்ட் பேனரில் வி. மதியழகன், தித்திர் ஃபிலிம் ஹவுஸ் உடன் இணைந்து தயாரிக்க கே.சி. ரவிதேவன் இயக்கத்தில் ஷ்ரிதா ராவ் முதன்மை வேடத்தில் நடிக்கிறார் இந்தியாவிலேயே முதல்முறையாக உண்மையான சிங்கத்துடன் முழுநீளத் திரைப்படம் ஒன்று உருவாக்கப்பட்டு வருகிறது. ‘சிங்கா’ என்ற பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை எட்செட்ரா என்டெர்டெயின்மென்ட் பேனரில் வி. மதியழகன், தித்திர் ஃபிலிம் ஹவுஸ் உடன் இணைந்து பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரிக்கிறார். ‘உலக நாயகன்’ கமல் ஹாசனின் உதவி இயக்குநரும் திரைப்படக் கல்லூரி மாணவருமான கே.சி. ரவிதேவன் இயக்கும் ‘சிங்கா’ திரைப்படத்தில் ‘லெனின் பாண்டியன்’, பிரபு சாலமன் இயக்கத்தில் ‘கும்கி 2’ உள்ளிட்ட படங்களில் நடித்த ஷ்ரிதா ராவ் நாயகியாக நடிக்கிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் பான்-இந்தியா படமாக உருவாகி வரும் ‘சிங்கா’, வி. மதியழகன் தயாரிக்கும் 14வது படமாகும்.…

Read More

தமிழ் சினிமாவின் வெளிநாட்டு முன்னணி சக்தி மணமுடித்தார்: அகிம்சா என்டர்டெயின்மென்ட் நிறுவனர் வித்துர்ஸ், லிஷாவுடன் திருமணம்

சென்னை, — தமிழ் திரைப்படங்களை உலகளவில் பரப்பியதில் முக்கிய பங்கு வகிக்கும் அகிம்சா என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் நிறுவனர் வித்துர்ஸ், தனது நீண்டகால துணைவி லிஷாவுடன் திருமணம் செய்து கொண்டார். சென்னையில் நடைபெற்ற இந்த பிரமாண்டமான திருமண வரவேற்பு விழா, தமிழ் சினிமாவின் முன்னணி பிரபலங்களை ஒன்றிணைத்த ஒரு பிரமுகமான நிகழ்வாக அமைந்தது. நடிகர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், இசைக்கலைஞர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்ட இந்த விழா, மறக்க முடியாத ஒரு தருணமாக இருந்தது. வித்துர்ஸ் மற்றும் அவரது நிறுவனம் அகிம்சா என்டர்டெயின்மென்ட், கடந்த சில ஆண்டுகளில் தமிழ் திரைப்படங்களை இங்கிலாந்து, ஐரோப்பா, வட அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு வெளிநாட்டு சந்தைகளுக்கு வெற்றிகரமாக கொண்டு சென்றுள்ளது. புதிய முயற்சிகள், தரமான விநியோகம், புதுமுக இயக்குநர்களுக்கு ஆதரவு ஆகியவற்றின் மூலம், நிறுவனம் உலகளாவிய தமிழ் சினிமா வட்டாரத்தில் நம்பிக்கையான பெயராக…

Read More

சாய் அப்யங்கரின் மலையாள சினிமா அறிமுகப் பாடல் – “ஜாலக்காரி”(Jaalakaari) வெளியானது

“கச்சி சேரா (Kachi Sera),” “ஆச கூட (“Aasa Kooda),” “சித்திர பூத்திரி (Sithira Poothiri),” “விழி வீழுது” (Vizhi Veezhudhu) போன்ற வைரல் ஹிட் சிங்கிள்களால் 21 வயதிலேயே சமூக வலைதளங்களில் பெரும் ரசிகர் பட்டாளத்தை பெற்ற சாய் அப்யங்கர், இப்போது தனது முதலாவது மலையாள சினிமா பாடலை வெளியிட்டுள்ளார். ஷேன் நிகம் ( Shane Nigam) நடிக்கும் “பல்டி” படத்தில் இடம்பெறும் “ஜாலக்காரி” பாடல் வெளியானவுடன் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. வினாயக் சசிகுமார் (Vinayak Sasikumar) எழுதியுள்ள இந்தப் பாடலை, சாய் அப்யங்கர் (Sai Abhyankar) தானே இசையமைத்து, சாய் மற்றும் “கூலி” படத்தின் ஹிட் பாடல் “மோனிகா” m-வைப் பாடிய சுப்லாஷினி (Subhlashini ) இணைந்து பாடியுள்ளனர். சாயின் அறிமுகப் புரமோ வீடியோ ஏற்கனவே சமூக வலைதளங்களில் 4 மில்லியனுக்கு மேற்பட்ட…

Read More

விநாயகர் சதூர்த்தி தினத்தில், விகாஷ் நடித்த “துச்சாதனன்” படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

விவா பிலிம்ஸ், வி.ஜி.ஸ்டுடியோஸ் மற்றும் தாய் திரையரங்கம் இணைந்து தயாரிக்கும் “துச்சாதனன்” திரைப்படம் செப்டம்பர் 12ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இதில் விகாஷ், சிங்கம்புலி, தமிழ் செல்வி, மணிமாறன் மற்றும் பலர் நடித்துள்ளனர். கதை, திரைக்கதை, வசனம் எழுதி தளபதி இயக்கியுள்ளார். இசை விஜய் பிரபு, ஒளிப்பதிவு பாலமுருகன். படத்தில் இரண்டு சண்டைக் காட்சிகள் ராக்கி ராஜேஷ் சிறப்பாக அமைத்துக் கொடுத்துள்ளார். நடனம் பவர் சிவா. மக்கள் தொடர்பு கோவிந்தராஜ் கவனிக்கிறார். படத்தைப் பற்றி இயக்குநர் கூறும்போது, பெற்றோர்கள் குழந்தைகளுக்கு கேட்பதை எல்லாம் வாங்கிக் கொடுக்கிறார்கள், படிக்க வைக்கிறார்கள், சொத்து சேர்த்து வைக்கிறார்கள். பள்ளியில் ஆசிரியர்கள் மொழிப்பாடம், அறிவியல், கணிதம், கணிப்பொறி என எல்லாமும் கற்றுத் தருகிறார்கள். ஆனால் பெற்றோரும் சரி, ஆசிரியர்களும் சரி குழந்தைகளுக்கு ஒழுக்கமாக வாழ்வது எப்படி என்பதை கற்றுத் தர தவறி விடுகின்றனர்.…

Read More

G. M பிலிம் கார்ப்பரேஷனின் தயாரிப்பில் திரௌபதி – 2 திரைப்படம் பிரம்மாண்டமாக, பெரிய பட்ஜெட்டில் உருவாகி வருகிறது!!

நேதாஜி புரொடக்‌ஷன்ஸ் சார்பில் சோழ சக்கரவர்த்தி என்பவருடன் இணைந்து G. M பிலிம் கார்ப்பரேஷனின் தயாரிப்பில் திரௌபதி – 2 திரைப்படம் பிரம்மாண்டமாக, பெரிய பட்ஜெட்டில் உருவாகி வருகிறது. இப்படத்தை பழைய வண்ணாரப்பேட்டை, திரௌபதி, ருத்ர தாண்டவம், பகாசூரன் ஆகிய படங்களை இயக்கிய மோகன்.ஜி இயக்கி உள்ளார். இப்படத்தில் ரிச்சர்ட் ரிஷி கதாநாயகனாகவும், ரக்‌ஷனா இந்துசூடன் கதாநாயகியாகவும் நடித்து உள்ளனர். மேலும் இப்படத்தில் நட்டி நடராஜ் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர்களுடன் Y.G மகேந்திரன், நாடோடிகள் பரணி, சரவண சுப்பையா, வேல ராமமூர்த்தி, சிராக் ஜானி, தினேஷ் லம்பா, கணேஷ் கெளரங், திவி, தேவயானி சர்மா, அருணோதயன் ஆகியோர் நடித்துள்ளனர்.   இத்திரைப்படத்திற்கு எழுத்தாளர் பத்மா சந்திரசேகர், மோகன்.ஜி இணைந்து வசனம் எழுதியுள்ளனர். “ஜிப்ரான்” இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவு “பிலிப் ஆர். சுந்தர்”, நடனம் “தனிகா டோனி”, சண்டை…

Read More