மாபெரும் வெற்றி பெற்ற ‘பிச்சைக்காரன்’ படத்தை தொடர்ந்து இயக்குநர் சசி மற்றும் நடிகர் விஜய் ஆண்டனி கூட்டணி மீண்டும் இணைகிறது. இரட்டை நாயகர்கள் கொண்ட கதையாக உருவாகவுள்ள இந்த புதிய திரைப்படத்தில் விஜய் ஆண்டனி அவரது தங்கை மகன் அஜய் திஷான் உடன் நடிக்கிறார். சசி இயக்கிய மற்றுமொரு வெற்றிப் படமான ‘சிவப்பு மஞ்சள் பச்சை’ திரைப்படத்தை தயாரித்த இரமேஷ் P. பிள்ளை, அபிஷேக் ஃபிலிம்ஸ் பேனரில் இந்த புதிய திரைப்படத்தையும் தயாரிக்கிறார். ‘லப்பர் பந்து’ மற்றும் ‘மாமன்’ புகழ் சுவாசிகா முக்கிய வேடத்தில் நடிக்கிறார். தமிழ்நாட்டின் வட மாவட்டத்தில் நடந்த உணர்ச்சிப்பூர்வமான சம்பவத்தின் அடிப்படையில் இப்படத்தின் கதை அமைந்துள்ளது. சசி இயக்கத்தில் தனது தங்கை மகன் அஜய் திஷான் அறிமுகமாவது குறித்து விஜய் ஆண்டனி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இன்னும் பெயரிடப்படாத இப்படத்திற்கு பாலாஜி ஶ்ரீராம் இசையமைக்கிறார்,…
Read MoreCategory: சினிமா செய்திகள்
பாடலாசிரியர் திரு. நா.முத்துக்குமார் அவர்களின் 50வது பிறந்தநாளை கொண்டாடும் பொருட்டு நடைபெற இருக்கும் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி !
அன்புக்குரிய தமிழ் திரையுலக நண்பர்கள், பத்திரிக்கை, ஊடகங்கள், மற்றும் சிறப்பு விருந்தினர்கள் அனைவருக்கும் வணக்கங்கள். தமிழ் சினிமா பாடல்களை தனது எழுத்துக்களால் இலக்கியமாக்கிய பாடலாசிரியர் நா.முத்துக்குமார் அவர்களின் 50வது பிறந்தநாளினில், அவர் தமிழ் இலக்கியத்திற்கும், தமிழ் திரையிசைப் பாடல்களுக்கும் ஆற்றிய ஈடு இணையற்ற பங்களிப்புகளை கொண்டாடும் விதமாக நடக்கவிருக்கும் மாபெரும் இசை நிகழ்ச்சியை அறிவிப்பதில் பெருமிதம் கொள்கிறோம். தனது எழுத்தால் ஒரு தலைமுறைக்கே காதலையும், ஆறுதல்களையும், நம்பிக்கைகளையும் கொடுத்துக் கொண்டிருக்கும், அழியா புகழ் கொண்ட இந்த மாபெரும் கவிஞனுக்கு மரியாதை செய்யும் விதமாக, நா.முத்துக்குமாரின் பாடல்களுக்கு இசையமைத்த இசையமைப்பாளர்களும் பின்னணி பாடகர்களும் பங்கேற்கும் ஒரு பிரமாண்டமான இசை நிகழ்ச்சியாக இது அமைய இருக்கிறது. வீசும் காற்று முழுக்க, தன் கவிதைகளை பாடல்களாக கலந்திட வைத்திருக்கும் இந்த கலைஞனோடு தங்களுக்கு ஏற்பட்ட மறக்கமுடியாத நிகழ்வுகளையும், பணியாற்றிய நினைவுகளையும் ரசிகர்களிடம்…
Read Moreஇயக்குனர் ராமின் “பறந்து போ” படத்தின் முதல் பாடல் வெளியீடு
வணக்கம். நான் இயக்குநர் ராம். எங்களுடைய “பறந்து போ” திரைப்படம் வரும் ஜூலை 4-ஆம் தேதி வெளிவர இருக்கிறது. அதனுடைய முதல் பாடல் வெளியாகி இருக்கிறது. அதற்கு ‘Sunflower – not a single not a teaser’ என்று பெயரிட்டு இருக்கிறோம். பாடலோடு சில காட்சித் துண்டுகளும் இடம் பெறுவதால் இவ்வாறு பெயரிட்டு இருக்கிறோம். எல்லோரையும் போல் எனக்கும் சூரியகாந்தியை மிகவும் பிடிக்கும். ஒரு நல்ல சூரியோதயத்தில் சூரியகாந்தி தோட்டத்தில் படம் பிடிக்கிற ஒரு அரும் வாய்ப்பு என்னுடைய முதல் படத்தில் எனக்குக் கிடைத்தது. கற்றது தமிழின் இன்னும் ஓர் இரவு பாடலை ஆந்திர மாநிலத்து கடப்பாவின் சூரியகாந்தி தோட்டத்தில் படம் பிடித்தோம். தங்கமீன்களின், ஆனந்த யாழைப் பாடலை சூரியகாந்தி தோட்டத்தில் எடுக்க வேண்டும் என்று நினைத்திருந்தோம். ஆனால் சூரியகாந்தி பூக்கும் காலம் வாய்க்காததால் கேரளாவில்…
Read Moreசூப்பர் ஸ்டார் ஃபிலிம்ஸ் பேனரில் சமீர் அலி கான் தயாரித்து இயக்கி நாயகனாக நடிக்கும் கலகலப்பான காதல் கதை ‘தமிழ் பையன் இந்தி பொண்ணு’
மான்சி, ஆடுகளம் நரேன், பிரம்மாஜி, சோனியா போஸ், உதயதீப் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர் ‘காதல் மட்டும் வேணா’ திரைப்படத்தை இயக்கி நடித்த சமீர் அலி கான் தற்போது ‘தமிழ் பையன் இந்தி பொண்ணு’ எனும் படத்தை தயாரித்து இயக்குவதோடு நாயகனாகவும் நடிக்கிறார். சூப்பர் ஸ்டார் ஃபிலிம்ஸ் பேனரில் உருவாகும் இத்திரைப்படம் ஒரு கலகலப்பான காதல் கதை ஆகும். அதிக பொருட்செலவில் பாலிவுட் படங்களுக்கு இணையாக மிகவும் ஸ்டைலான முறையில் இப்படத்தை வடிவமைத்திருப்பதாக சமீர் அலி கான் தெரிவித்தார். மான்சி நாயகியாக நடிக்கும் இப்படத்தில் ஆடுகளம் நரேன், பிரம்மாஜி, அலி, சோனியா போஸ், மாலா பார்வதி, தீபிகா அமின், உதயதீப், கும்கி அஸ்வின் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். “திருச்சூரில் பிறந்து கோயம்புத்தூரில் வளர்ந்த நான் விஸ்காம் பட்டம் பெற்ற பின்பு ‘காதல் மட்டும் வேணா’ திரைப்படத்தை இயக்கி…
Read Moreநடிகர் அருண் விஜய் வெளியிட்ட விக்ராந்த் நடிக்கும் ‘வில்’ பட டீஸர்
தமிழ் திரையுலகின் பிரபல நட்சத்திரங்களான விக்ராந்த்- சோனியா அகர்வால் முக்கியமான வேடங்களில் நடித்திருக்கும் ‘வில் ‘எனும் திரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை முன்னணி நட்சத்திர நடிகரான அருண் விஜய் அவருடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு, படக் குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார். இயக்குநர் எஸ். சிவராமன் இயக்கத்தின் உருவாகியுள்ள ‘வில்’ திரைப்படத்தில் விக்ராந்த், சோனியா அகர்வால், அலேக்யா, பதம் வேணு குமார், மோகன் ராமன் , ‘லொள்ளு சபா’ சுவாமிநாதன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள். டி. எஸ். பிரசன்னா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு நடிகை சோனியா அகர்வாலின் சகோதரரான சௌரப் அகர்வால் இசையமைத்திருக்கிறார். நீதிமன்ற பின்னணியில் நடைபெறும் இந்த திரைப்படத்தை ஃபுட் ஸ்டெப்ஸ் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் மற்றும் கோத்தாரி மெட்ராஸ் இன்டர்நேஷனல் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கிறது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் ஒரு…
Read Moreஆந்தணி தாசனின் தமிழ் இண்டி சூப் பாடல் “போனாலே போனாலே” – பிரேக்-அப்புகளை நகைச்சுவையுடன் சிந்தனையூட்டும் பாடல் மே 28-ஆம் தேதி வெளியாகிறது
தன் முதல் தமிழ் இண்டி ஹிட் “காதல் ஊத்திகிச்சு” எனும் வெற்றிப் பாடலுக்குப் பிறகு, ஸ்வான் ஸ்டூடியோஸ் தனது இரண்டாவது இயல்பான சிங்கிளான “போனாலே போனாலே” மூலம் திரும்பி வந்துள்ளது — இதயம் நிறைந்த உணர்வுகளும் கூர்மையான நகைச்சுவையும் கலந்த ஒரு புதிய பிரேக்-அப் பார்வையை இந்த பாடல் முன்வைக்கிறது. இந்தப் பாடலின் மையக் கரு, காதல் முறிவுக்குப் பிறகான உணர்ச்சி அமுக்கங்களை சித்தரிக்கிறது. தனது தோழரான கலைஞரிடம் தன் இதயவலி பற்றி ஒரு பாடலாகக் கொண்டு வரக் கோரும் ஒரு இளைஞனின் பார்வையில் கூறப்படும் இந்த கதை, காதலில் முழுமையாக விழுந்து பின்னர் தனியாக விலகியவர்களுக்கெல்லாம் நெருக்கமாகத் தோன்றும். இசை ஒலிப்புத்தாக்கம் கீர்த்தன் மூலம் உருவாக்கப்பட்டுள்ள இந்தப் பாடல் ஆன்மீக நிழல்கள் மற்றும் நாட்டுப்புற நடனத் தொகுப்புகளை இணைக்கும் வண்ணம் அமைந்துள்ளது. சந்தோஷ் எழுதிய பாடல்…
Read Moreஏ.ஐ.தொழில்நுட்பம் மூலம் கதை மாந்தர்கள் அறிமுகம்
எழுத்தாளரும் பாடலாசிரியருமான கபிலன்வைரமுத்து எழுதி 2020ஆம் வெளிவந்த அம்பறாத்தூணி என்ற சிறுகதைத் தொகுப்பு தற்போது ஒலிப்புத்தகமாக வெளியாகியிருக்கிறது. கதை ஓசை தீபிகா அருண் குரலில் ஸ்டோரி டெல், கூகுள் ப்ளே ஸ்டோர், ஆப்பிள் பாட்காஸ்ட் போன்ற முன்னணி ஒலித் தளங்களில் அம்பறாத்தூணி ஒலிப்புத்தகம் இன்று வெளியானது. சிறுகதைகளில் இடம் பெறும் வெவ்வேறு கதாபாத்திரங்களை அறிமுகம் செய்யும் வண்ணம், முழுக்க முழுக்க ஏ.ஐ தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட அறிமுகக் காணொளியைக் கபிலன்வைரமுத்து மற்றும் கதை ஓசை குழு தங்கள் சமூக வலைத்தள பக்கங்களில் பகிர்ந்திருக்கிறார்கள். வேலூர் சிப்பாய் புரட்சி, பூலித்தேவன் ராணுவ முகாம், லியோ டால்ஸ்டாயின் உதவி பெற்ற அகதிகள் கப்பல், பப்புவா நியூ கினியா நாட்டில் நடைபெற்ற ஆழ்கடல் சுரங்கம், மஞ்சவேலம்பட்டி பாகவத சமீன்தார், முப்பத்தோராம் நூற்றாண்டு பெண் என பல்வேறு வரலாற்று மற்றும் அறிவியல் புனை கதைகளின்…
Read Moreஇளம் கலைஞர்களுக்கு வாய்ப்பு.. தயாரிப்பாளர் அவதாரம் எடுத்த நடிகர் யாஷ்-ன் தாய் புஷ்பா அருண்குமார்
ராக்கிங் ஸ்டார் யாஷ்-ன் தாயார் புஷ்பா அருண்குமார் தயாரிப்பாளர் அவதாரம் எடுத்திருக்கிறார். பி.ஏ. புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் புஷ்பா அருண்குமார் தயாரிக்கும் முதல் திரைப்படத்திற்கு “கொத்தாலவாடி” என தலைப்பிடப்பட்டு இருக்கிறது. புதுமுகங்களுக்கு வாய்ப்பளிக்கும் குறிக்கோளுடன் பி.ஏ. புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தொடங்கப்பட்டு இருக்கிறது. நடிகர் டாக்டர் ராஜ்குமாரின் மனைவி பரவதம்மா ராஜ்குமார் போன்று புஷ்பா அருண்குமார் இளம் நடிகர், நடிகை மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு தனது தயாரிப்பு நிறுவனம் மூலம் வாய்ப்பளிக்க முடிவு செய்துள்ளார். தற்போது கன்னட திரையுலகில் பயணத்தை தொடங்கியுள்ள பி.ஏ. புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தொடர்ந்து தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள திரையுலகிலும் படங்களை தயாரிக்க முடிவு செய்துள்ளனர். தயாரிப்பாளர் புஷ்பா அருண்குமார் தயாரிக்கும் முதல் திரைப்படமான “கொத்தாலவாடி”-இல் பிருத்வி அம்பார் கதாநாயகனாக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக காவ்யா ஷைவா நடித்துள்ளார். இந்தப் படத்தை இயக்குநர் ஶ்ரீராஜ்…
Read Moreபேட்மிட்டன் வீராங்கனை டூ நடிகை: குயின்சி ஸ்டான்லி!
தேசிய அளவிலான பேட்மிண்டன் வீராங்கனையான குயின்சி ஸ்டான்லி, மாடலாகவும், நடிகராகவும், ரியாலிட்டி ஷோ பிரபலமாகவும் மாறி, இந்திய சினிமாவில் மிகவும் நம்பிக்கைக்குரிய புதிய நட்சத்திரமாகவும் இருக்கிறார். விளையாட்டு, ஃபேஷன் மற்றும் பொழுதுபோக்கு உலகங்களை இணைக்கும் தனித்துவமான பயணத்துடன், குயின்சி தனக்கென ஒரு பாதையை உருவாக்கியுள்ளார். தனது பயணம் குறித்து குயின்சி பகிர்ந்து கொண்டதாவது, “ஆரம்ப காலத்தில் நான் தேசிய அளவிலான பேட்மிண்டன் வீராங்கனையாக என் பயணத்தைத் தொடங்கினேன். பின்னர், கிரியேட்டிவ் துறையான மாடலிங் துறையிலும் அடியெடுத்து வைத்தேன். அது என்னை நடிப்புத் துறைக்கும் கொண்டு சென்றது. இசை வீடியோக்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் நடித்த பிறகு எனக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக பிக்பாஸ் ரியாலிட்டி ஷோ அமைந்தது” என்றார். தொலைக்காட்சியில் அவரது பயணம் அடுத்து சினிமாவுக்கும் கூட்டி சென்றது. அந்த அனுபவம் பற்றி பேசியபோது, “சீரியல்களில் பணிபுரிவது எனக்கு…
Read More“இந்தக் கதைக்கரு காலம் தாண்டி நிலைத்திருக்கும்” -கராத்தே கிட் – படங்களைப் பற்றி ரால்ஃப் மாக்கியோ!!
கராத்தே கிட் – படங்களைப் பற்றி ரால்ஃப் மாக்கியோ பேசும் போது, “இந்தக் கதைக்கரு காலம் தாண்டி நிலைத்திருக்கும்” என்கிறார். கராத்தே கிட்: லெஜெண்ட்ஸ் திரையரங்குகளில் வெளியாக தயாராக இருக்கும் வேளையில், ரால்ஃப் மாக்கியோ மீண்டும் டேனியல் லாருசோவாக இந்தப் படத்தில் நடித்திருக்கிறார். இந்த முறை, ஜாக்கி சானின் கதாபாத்திரமான திரு ஹானுடன் இணைந்து, ஹானின் உறவினர் லி ஃபாங்-ஐ, நியூயார்க் நகரில் நடைபெறும் ஒரு மிக முக்கியமான போட்டிக்காக கராத்தே மற்றும் குங்க்ஃபூ ஆகிய இரண்டும் கலந்த பயிற்சிகளை அளிக்கிறார். இந்தத் தொடரில் மீண்டும் பங்கேற்கும் அனுபவம், கடந்த காலத்தைப் போற்றும் விதமாகவும், கதையை முன்னோக்கி நகர்த்தவும் தான் என்று ரால்ஃப் கூறுகிறார். “இந்தத் தொடரையும், இந்தக் கதாபாத்திரத்தையும் பாதுகாப்பதில் நான் எப்போதும் கவனமாக இருந்திருக்கிறேன்.மேலும் இந்தக் கதாபாத்திரங்களின் வளர்ச்சியும், முதல் படத்தின் கருவும், இன்னும்…
Read More