காசி விஸ்வநாதர் முதல் கங்கை நதி வரை: ‘தேரே இஷ்க் மே’ படத்திற்காக வாரணாசியை ஒளிரச் செய்த தனுஷ், க்ரிதி சனோன் மற்றும் ஆனந்த் L ராய்!

தேரே இஷ்க் மே படம் நவம்பர் 28 ஆம் தேதி இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியாகிறது. ஆனந்த் L ராய் இயக்கத்தில், பூஷன் குமார் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘தேரே இஷ்க் மே’ படத்திற்கான எதிர்பார்ப்பு விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்துள்ளது. படத்தின் விறுவிறுப்பான டிரெய்லர் மற்றும் AR ரஹ்மானின் மனதை வருடும் பாடல்களால், நாடு முழுவதும் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. முன்பதிவு தொடங்கிய 24 மணி நேரத்திற்குள் டிக்கெட்டுகள் வேகமாக விற்று தீர்ந்தன. படம் பிரம்மாண்டமாக வெளியாவதை முன்னிட்டு, நட்சத்திரங்களான தனுஷ் மற்றும் க்ரிதி சனோன், இயக்குநர் ஆனந்த் L ராயுடன் வாரணாசிக்கு வருகை தந்துள்ளனர். தனுஷ் மற்றும் இயக்குநர் ஆனந்த் L ராய் ஆகியோரின் இந்த பயணத்திற்கு உத்வேகம் அளித்த காசி நகரம், இருவரின் மனதிலும் நீண்ட காலமாக ஒரு…

Read More

“ஹர ஹர மகாதேவ்!”: தேரே இஷ்க் மே படத்திற்காக வாரணாசியில் தனுஷ்.. க்ரிதி சனோனுடன் பகிர்ந்த ஸ்பெஷல் படங்கள்!

இயக்குநர் ஆனந்த் L ராய் இயக்கத்தில், தனுஷ் மற்றும் க்ரிதி சனோன் நடிப்பில் உருவாகியுள்ள ‘தேரே இஷ்க் மே’ படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. பூஷன் குமார் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தின் முன்பதிவு நாடு முழுவதும் அமோகமாக நடைபெற்று வருகிறது. இதன் மூலம், ரசிகர்கள் இந்த படத்தை காண எவ்வளவு ஆவலுடன் காத்திருக்கிறார்கள் என்பது தெளிவாகிறது. இந்த உற்சாகத்தை மேலும் அதிகரிக்கும் வகையில், நடிகர் தனுஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வாரணாசியில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். படக்குழுவினர் அங்கு விளம்பர பணிகளில் ஈடுபட்டுள்ள நிலையில், இந்த புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. அதில், தனுஷ், க்ரிதி சனோன் மற்றும் இயக்குநர் ஆனந்த் L ராய் ஆகியோர் காசியில் படகில் பயணம் செய்து கொண்டே சிரித்து பேசும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. மூவருக்கும் இடையே உள்ள…

Read More

நந்தமூரி பாலகிருஷ்ணா –கோபிசந்த் மலினேனி – வெங்கட சதீஷ் கிலாரு – விருத்தி சினிமாஸ் இணையும் வரலாற்று சிறப்புமிக்க மாபெரும் படமான #NBK111 பிரமாண்டமாக தொடங்கியது !!

காட் ஆஃப் மாஸஸ் நந்தமூரி பாலகிருஷ்ணா, தொடர்ந்து அடங்காத ப்ளாக்பஸ்டர் வெற்றிப்பாய்ச்சலுடன், மீண்டும் பாக்ஸ்ஆஃபிஸை அதிரவைக்க தயாராக உள்ளார்.  ‘வீரசிம்ஹாரெட்டி’ மூலம் வசூல் சாதனைகளை புரட்டி போட்ட பாலகிருஷ்ணா –கோபிசந்த் மலினேனி கூட்டணி, இப்போது இன்னும் பிரம்மாண்டமான வரலாற்று களத்தில் மீண்டும் இணைகிறது. இந்த படத்தை, பான்–இந்திய அளவிலான “பெத்தி” எனும் படத்தை தயாரித்து வரும் வெங்கட சதீஷ் கிலாரு, விருத்தி சினிமாஸ் சார்பில் மிகப்பெரும் பட்ஜெட்டில் தயாரிக்கிறார். அழகு நாயகி நயன்தாரா, பாலகிருஷ்ணாவின் ஜோடியாக இப்படத்தில் இணைந்துள்ளார்.  சிம்ஹா, ஜெய் சிம்ஹ , ‘ஸ்ரீ ராம ராஜ்யம்’ ஆகிய படங்களுக்குப் பிறகு பாலகிருஷ்ணா – நயன்தாரா இணையும் நான்காவது படம் இதுவாகும். ஹைதராபாத்தில் இன்று நடைபெற்ற மாபெரும் பூஜை விழாவினைத் தொடர்ந்து,  இப்படம் அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டது. ஆந்திர பிரதேச அமைச்சர்கள் அனகனி சத்ய பிரசாத் மற்றும் கோட்டிப்பட்டி ரவி குமார்…

Read More

சினிமா மேஸ்ட்ரோ ஜேம்ஸ் கேமரூன் புதுமை மற்றும் தொலைநோக்கு பார்வையுடன் சினிமா உருவாக்கத்தை மறுவரையறை செய்திருக்கிறார்!

ஒவ்வொரு சில வருடங்களுக்கும் உலகளவில் ஒரு திரைப்படம் அதன் வெளியீட்டு தேதியை மட்டும் குறிக்காமல் திரைப்பட உருவாக்கத்திலும் புதிய மாற்றத்தைக் குறிக்கிறது. இந்தமுறை புதிய மாற்றத்தை காண டிசம்பர் 19 ஆம் தேதி தயாராகுங்கள். இயக்குநர் ஜேம்ஸ் கேமரூனின் ’அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்’ திரைப்படம் வெளியாவது உலகளாவிய தொழில்நுட்ப நிகழ்விற்கான கவுண்ட்டவுன் போல ரசிகர்கள் காத்திருக்கின்றனர். பல ஆண்டுகளாக இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் ஒரு புதிய படத்துடன் வரும்போதெல்லாம் பிரம்மாண்டமான கதை சொல்லல், புதிய தொழில்நுட்பம் என சினிமா மொழியையே மாற்றி அமைக்கிறார். மற்றவர்கள் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும்போது, ஜேம்ஸ் கேமரூன் அதைக் கண்டுபிடித்தார். ’தி டெர்மினேட்டர்’ மற்றும் ’ஏலியன்ஸி’ன் ஆரம்ப நாட்களிலிருந்தே, ஜேம்ஸ் கேமரூனுக்கு அறிவியலில் அதீத ஆர்வம் இருந்தது. புதிய உலகங்களை கற்பனை செய்வதில் அவர் திருப்தியடையவில்லை, அவற்றை உருவாக்கும் இயந்திரங்களை அவர் விரும்பினார்.…

Read More

உளவியல் த்ரில்லர் கதையான ‘ஸ்டீபன்’ படத்தின் புதிய டிரெய்லரை வெளியிட்டது நெட்ஃபிலிக்ஸ்!

மும்பை, 26 நவம்பர், 2025:நிஜ உலகின் யதார்த்தம் பெரும்பாலும் புனைகதைகளை விட அந்நியமாக இருக்கும். அந்தவகையில், குற்ற உணர்வு மற்றும் அப்பாவித்தனம் பற்றி உங்களுக்குத் தெரியும் என்று நீங்கள் நினைக்கும் அனைத்தையும் ஸ்டீபன் கேள்வி கேட்கத் துணிகிறார். வெளியாக இருக்கும் தமிழ் உளவியல் த்ரில்லர் கதையான ‘ஸ்டீபன்’ டிரெய்லரை நெட்ஃபிலிக்ஸ் இன்று வெளியிட்டது. ஒரு மனிதன் ஒரு காவல் நிலையத்திற்குள் நுழைந்து கொலை செய்ததாக ஒப்புக்கொள்வதில் இருந்து டிரைய்லர் தொடங்குகிறது. நீங்கள் எதை யூகிக்கிறீர்களோ நிச்சயம் அது கதையில் பிரதிபலிக்காது. கதையின் தீவிரத்தை இசை மேலும் அதிகமாக்கும். அறிமுக இயக்குநர் மிதுன் பாலாஜி இயக்கத்தில், கோமதி ஷங்கர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘ஸ்டீபன்’ கதை குற்ற உணர்வு, ஒழுக்கம், சரி மற்றும் தவறுக்கு இடையிலான மெல்லிய இடைவெளியை ஆராயும் த்ரில்லர் கதை. இந்த ஆண்டு நெட்ஃபிலிக்ஸின் துணிச்சலான,…

Read More

‘அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்’ திரைப்படத்திற்கான டிக்கெட் புக்கிங்கில் புக் மை ஷோ செயலியில் 1 மில்லியனுக்கும் அதிகமான இந்தியர்கள் டிக்கெட் முன்பதிவு செய்திருக்கின்றனர்!

இந்த ஆண்டில் உலக ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் ‘அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்’ திரைப்படத்திற்கான டிக்கெட் புக்கிங்கில் புக் மை ஷோ செயலியில் 1 மில்லியனுக்கும் அதிகமான இந்தியர்கள் டிக்கெட் முன்பதிவு செய்ய ஆர்வம் காட்டியிருக்கின்றனர்! இயக்குநர் ஜேம்ஸ் கேமரூனின் புகழ்பெற்ற அறிவியல் புனைகதை சீரிஸின் மூன்றாவது பாகமான ‘அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்’ திரைப்படத்திற்கான எதிர்பார்ப்பு இந்தியாவில் புதிய உச்சத்தை எட்டியுள்ளது. பட வெளியீட்டிற்கு ஒரு மாதத்திற்கும் குறைவான நாட்களே உள்ள நிலையில், இந்தியாவின் முன்னணி பொழுதுபோக்கு தளமான புக் மை ஷோ செயலியில் 1 மில்லியனுக்கும் அதிகமான (1.2 + மில்லியன் ) இந்தியர்கள் டிக்கெட் முன்பதிவு செய்ய ஆர்வம் காட்டியிருக்கின்றனர். புக் மை ஷோவில் இந்த டிக்கெட் முன்பதிவு ஆர்வம் ‘அவதார்’ படத்தின் மீது இந்தியர்களின் எதிர்பார்ப்பை இன்னும் வலுவாக்கியுள்ளது.…

Read More

சினிமா பேக்டரி மாணவியின் ‘தி லாஸ்ட் பேக்கப்’ – AI Film Festival Award சாதனை

சினிமா பேக்டரி அகாடமியில் படிக்கும் மாணவி ஸ்ரீ ரிதன்யா இயக்கிய ஏஐ குறும்படம் ‘தி லாஸ்ட் பேக்கப்’ கோவா சர்வதேச திரைப்பட விழாவில் உலகளாவிய பிரிவில் தேர்வாகி, மேலும் வரலாற்றுச் சாதனையாக முதல் AI Film Festival Award–ஐ வென்று பெருமை சேர்த்துள்ளது. இந்த சிறப்பு விருதை ஆஸ்கர் விருது பெற்ற இயக்குநர் சேகர் கபூர் நேரடியாக வழங்கியது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் உருவான ஏஐ குறும்படம் ஒரு சர்வதேச மேடையில் இப்படியாக அங்கீகாரம் பெறுவது அரிதான சாதனை. சினிமா பேக்டரி அகாடமி சார்பில் அதன் நிர்வாக இயக்குனர் ராஜேஷ் ரவீந்திரன் தயாரித்துள்ள படம் ‘தி லாஸ்ட் பேக்கப் முழுக்க முழுக்க ஏஐ தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டு மாணவி ஸ்ரீ ரிதன்யா படம் இயக்கி உருவாக்கியுள்ளார். இந்த திரைப்படம் 3030ஆம் ஆண்டின் எதிர்கால சென்னை நகரத்தை மையமாகக் கொண்ட…

Read More

விஜய் சேதுபதி,  பூரி ஜெகன்னாத் இணையும் #PuriSethupathi படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது!!

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, சம்யுக்தா, பூரி ஜெகன்னாத், சார்மி கௌர் JB நாராயண் ராவ் கொண்ட்ரோலா இணையும், பூரி கனெக்ட்ஸ் (Puri Connects), JB Motion Pictures தயாரிப்பில் உருவாகும் #PuriSethupathi படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது!! பிரபல முன்னணி இயக்குநர் பூரி ஜெகன்னாத், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, சம்யுக்தா, சார்மி கௌர், JB நாராயண் ராவ் கொண்ட்ரோலா கூட்டணியில், பெரும் எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ள #PuriSethupathi படத்தின் முழு படப்பிடிப்பும் அதிகாரப்பூர்வமாக நிறைவடைந்துவிட்டது. அதிரடி மாஸ் எண்டர்டெயினராக உருவாகியுள்ள இந்தப் படம், தனது இறுதி நாள் படப்பிடிப்பை எட்டிய நிலையில், பூரி  ஜெகன்னாத் – விஜய் சேதுபதி – சார்மி கௌர் ஆகியோர் பகிர்ந்த,  மகிழ்ச்சியும், உணர்ச்சியும் நிறைந்த வீடியோவை வெளியிட்டு, இந்த சிறப்பு தருணத்தை படக்குழு கொண்டாடியுள்ளனர். வீடியோவில் விஜய் சேதுபதி, பூரி ஜெகன்னாத்…

Read More

கதையை மையமாக கொண்ட செர்பன்ட்!!

தமிழ் சினிமாவில் பல்வேறு புதிய முயற்சிகளை சாத்தியப்படுத்திய தயாரிப்பாளர் கலைப்புலி S. தாணு தமிழ் சினிமாவில் புதிய முயற்சியாக உருவாகி இருக்கும் செர்பன்ட் (Narrative Cut) படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டார். பாபி ஜார்ஜ் இயக்கத்தில் உருவாகி வரும் செர்பன்ட் (Serpent) படம், நரேட்டிவ் கட் கான்செப்டில் தமிழ் சினிமாவில் ஒரு தைரியமான மற்றும் புதுமையான முயற்சியாக அமைந்துள்ளது. வழக்கமான முறைகள் மூலம் கதையை முன்வைக்காமல், தேர்ந்தெடுக்கப்பட்ட முக்கிய காட்சிகளை பயன்படுத்தி படத்தின் மையக்கரு, திரைக்கதை ஓட்டம் ஆகியவற்றை காட்சி ரீதியாக தெரிவிக்க பாபி ஜார்ஜ் முயன்றுள்ளார். இது ஒரு குறும்படமோ அல்லது பைலட்டோ போல் இல்லாமல், முழு ஸ்கிரிப்ட்டிற்கான சினிமாடிக் பார்வையை வழங்குகிறது. கதை தான் மையமாக இருக்க வேண்டும் என்ற வலுவான நம்பிக்கையுடன், பரிச்சயமான நடிகர்கள் அல்லது விரிவான இடங்களுக்கு பதிலாக புதிய முகங்களை…

Read More

நடிகர் ஹிருது ஹாரூன் நடிப்பில் உருவாகி வரும் ‘டெக்ஸாஸ் டைகர்’ படத்தின் முதல் பார்வை வெளியாகியுள்ளது!

யுகே ஸ்குவாட் தயாரிப்பு நிறுவனம் பெருமையுடன் வழங்கும் மியூசிக்கல் எண்டர்டெயினர் ‘டெக்சாஸ் டைகர்’ – சென்னையின் வண்ணமயமான பின்னணியில் பிரமாண்டமான பட்ஜெட்டில் எடுக்கப்பட்டிருக்கும் திரைப்படம் இது. யுகே ஸ்குவாட் பேனரின் கீழ், ‘ஃபேமிலி படம்’ புகழ் இயக்குநர் எழுதி, இயக்கி வரும் திரைப்படம் ‘டெக்சாஸ் டைகர்’. இளமை துள்ளலாக உருவாகி வரும் இந்தப் படத்தில் ஹிருது ஹாரூன் (‘ட்யூட்’, ’தக்ஸ்’, ‘பேட் கேர்ள்’, ‘ஆல் வி இமேஜின் ஆஸ் லைட்’, ‘முரா’ ஆகிய திரைப்படங்கள் புகழ்) மற்றும் சம்யுக்தா விஸ்வநாதன் (Mr. பாரத், ஐ அம் தி கேம்) ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் இந்தத் திரைப்படத்தில் நடித்துள்ளனர். மேலும் ரோகிணி மொல்லேட்டி, சாச்சனா, வாஃபா கதீஜா, பீட்டர் கே, பார்த்திபன் குமார், ஆண்டனி தாசன் மற்றும் சம்யுக்தா ஷான் உள்ளிட்ட நடிகர்களும் நடித்துள்ளனர். படத்தின் டைட்டில் அறிவிப்பு…

Read More