நடிகர் ரியோ ராஜ் தனது முதல் தயாரிப்பு நிறுவனமான River Route Studios-ஐ தொடங்கியுள்ளார்.

நடிகர் ரியோ ராஜ் தனது முதல் தயாரிப்பு நிறுவனமான River Route Studios-ஐ தொடங்கியதை பெருமையுடன் அறிவித்துள்ளார். இது அவரது திரைப்பயணத்தில் ஒரு முக்கியமான புதிய அத்தியாயமாகும். தனது தொழில்வாழ்க்கையின் தொடக்கம் முதலே புதிய திறமைகளை ஆதரித்து வந்த ரியோ ராஜ், பல அறிமுக இயக்குநர்களுடன் இணைந்து நினைவில் நிற்கும் வெற்றிப் படைப்புகளை வழங்கியுள்ளார். இந்தப் புதிய முயற்சியின் மூலம், அர்த்தமுள்ள மற்றும் ஈர்க்கக்கூடிய கதைகளை சொல்லும் தனது ஆர்வத்தை மேலும் விரிவுபடுத்தியுள்ளார். அகமகிழ்ச்சியுடன் ரியோ ராஜ் இதுபற்றிக் கூறும் பொழுது: “இது என் நீண்டநாள் கனவு. என்னை நம்பி என் பயணத்திற்கு ஆதரவளித்த அனைவருக்கும் — என் குடும்பத்தினர், என் பெற்றோர், திரைப்படத் துறையில் உள்ள என் நண்பர்கள், மற்றும் ஊடக நண்பர்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இவர்களின் இடையறாத ஊக்கமும் நம்பிக்கையும் தான்…

Read More

நடிகை பிரியங்கா மோகன் நடிப்பில் உருவாகி இருக்கும் ’மேட் இன் கொரியா’ டிரெய்லரை வெளியிட்ட நெட்ஃபிலிக்ஸ்!

ரைஸ் ஈஸ்ட் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், ரா.கார்த்திக் இயக்கத்தில் நடிகை பிரியங்கா மோகன் நடிப்பில் உருவாகியுள்ள ’மேட் இன் கொரியா’ மார்ச் 12 முதல் நெட்ஃபிலிக்ஸ் தளத்தில் பிரத்யேகமாக ப்ரீமியர் ஆகிறது. நீங்கள் கனவு காணும் விஷயங்கள் உங்கள் கதையின் தொடக்கம் மட்டுமே! தமிழ்நாட்டின் ஒரு சிறிய நகரிலிருந்து முன்பின் அறிமுகமில்லாத தென் கொரியாவின் சியோல் நகரத்திற்கு செல்லும் செண்பாவின் வாழ்க்கைப் பயணத்தை உணர்வுப்பூர்வமாக சொல்லும் ‘மேட் இன் கொரியா’ திரைப்படத்தின் டிரெய்லரை இன்று நெட்ஃபிலிக்ஸ் வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு மற்றும் சியோல் நகரங்களை அடிப்படையாகக் கொண்ட இந்த கதையில் செண்பா தனது வாழ்க்கையில் எதிர்கொள்ளும் புதிய அனுபவங்கள், சவால்கள் மற்றும் புது உறவுகள் வழியாக தன்னம்பிக்கையையும் சுய அடையாளத்தையும் கண்டுபிடிக்கும் பயணமே இப்படத்தின் மையக்கரு என்பதையே டிரெய்லர் வெளிப்படுத்துகிறது. ரைஸ் ஈஸ்ட் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், ரா.கார்த்திக் இயக்கத்தில் நடிகர்கள்…

Read More

ஜியோஹாட்ஸ்டாரின் (JioHotstar)  புதிய படைப்பு ‘ரிசார்ட்’ – மார்ச் 13 முதல் ஒளிபரப்பாகிறது!

ஜியோஹாட்ஸ்டார் (JioHotstar) தளம் தனது அடுத்த அதிரடி வெளியீடான ‘ரிசார்ட்’ எனும் வெப் சீரிஸை அறிவித்துள்ளது. இந்த சீரிஸ் வரும் மார்ச் 13 முதல் ஒளிபரப்பாகிறது. வாரந்தோறும் வெள்ளிக்கிழமை 4 புதிய எபிசோட்கள் வெளியாகும் வகையில், இதன் ஒளிபரப்புத் திட்டமிடப்பட்டுள்ளது. பிரபல ‘எருமை சாணி’ புகழ் விஜய் குமார் ராஜேந்திரன் இத்தொடரில் கதாநாயகனாக நடிப்பதோடு, கதையையும் எழுதியுள்ளார். சின்னத்திரையின் முன்னணி இயக்குநரான பிரவீன் பென்னட் உடன் விஜய் குமார் ராஜேந்திரன் முதன்முறையாக இந்த சீரிஸின் மூலம் கைகோர்த்துள்ளார். ‘ஆர்.ஆர் ரிசார்ட்’ (RR Resort) என்ற கற்பனையான சொகுசு விடுதியில் இக்கதை நகர்கிறது. முறையான கல்வி கற்காத, ஆனால் சமையல் கலையில் அபார திறமை கொண்ட ஹவுஸ்கீப்பிங் ஊழியர் வெற்றி, ஒரு தலைசிறந்த செஃப் (Chef) ஆக வேண்டும் என்று கனவு காண்கிறார். ஒருபுறம் அவரது லட்சியம், மறுபுறம்…

Read More

தொண்டு நிறுவனர் பரமட்டாவின் ஆண்டின் சிறந்த குடிமகனாக அறிவிக்கப்பட்டார் ஜனவரி 25, 2026,

மோசஸ் வேதமுத்து ஆண்டின் சிறந்த குடிமகனாக அறிவிக்கப்பட்டார். பரமட்டாவிலும் மேற்கு சிட்னியிலும் தேவைப்படுபவர்களுக்கு ஆதரவளிப்பதற்காக அர்ப்பணிப்புடன் செயல்படும் ஒரு அயராத சமூக வக்கீல், பரமட்டாவின் 2026 ஆம் ஆண்டின் சிறந்த குடிமகனாக அங்கீகரிக்கப்பட்டுள்ளார். வீடற்றவர்கள் மற்றும் புகலிடம் தேடுபவர்களுக்கான ஆதரவு அமைப்பின் (SOHAS அறக்கட்டளை) நிறுவனர் மற்றும் தலைவரான மோசஸ் வேதமுத்து, மேற்கு சிட்னி முழுவதும் வீடற்ற மக்கள், புகலிடம் கோருவோர், சர்வதேச மாணவர்கள், புலம்பெயர்ந்தோர் மற்றும் முதியோர்களுக்கு ஆதரவளிக்கும் தன்னார்வப் பணிக்காக வருடாந்திர குடிமகன் விருது வழங்கும் விழாவில் விருது பெற்றார். ஆண்டின் சிறந்த குடிமகனாக அறிவிக்கப்பட்டது ஒரு அசாதாரண மரியாதை என்று வேதமுத்து கூறினார், இது அவரை தொடர்ந்து சிறப்பாகச் செயல்படவும் மற்றவர்களை ஊக்குவிக்கவும் தூண்டுகிறது. “இது எனக்கு பெருமை மற்றும் நோக்கத்தை நிரப்பும் ஒரு மரியாதை,” வேதமுத்து கூறினார். “ஒரு நல்ல குடிமகனாக…

Read More

‘பெத்தி’ படத்தின் இரண்டாவது சிங்கிள் சூப்பர் ஹிட் – 46M+ பார்வைகளுடன் டிரெண்டிங்!

மெகா பவர் ஸ்டார் ராம் சரண் நடனமாடுவது மட்டும் அல்ல, திரையை முழுவதும் தனது ‘ரிதம்’ மூலம் ஆளும் தனித்துவமான ஸ்டைல் கொண்டவர். மிகுந்த எதிர்பார்ப்பில் உருவாகி வரும் பான்-இந்தியா திரைப்படமான பெத்தி படத்தின் முதல் சிங்கிள் ‘சிக்கிரி சிக்கிரி’ வெளியானபோது, அவரது கிரேஸ், பவர், மற்றும் ஆளுமை ஒன்று சேர்ந்து ரசிகர்களை உற்சாகப்படுத்தியது. அந்தப் பாடல் உடனே வைரலாகி, அடுத்த பாடலுக்கான எதிர்பார்ப்பை அதிகரித்தது. நேற்று வெளியான இரண்டாவது சிங்கிள் ‘ரை ரை ரா ரா’ ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தப் பாடல் ஐந்து மொழிகளில் சேர்த்து 46.1 மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வைகள் மற்றும் 800K+ லைக்குகள் பெற்று புதிய சாதனை படைத்துள்ளது. குறிப்பாக தெலுங்கில் மட்டும் 29.21 மில்லியன் பார்வைகள் பெற்று, முன்பு ‘‘சிக்கிரி சிக்கிரி’ பாடல் 24 மணி நேரத்தில் பெற்ற…

Read More

மத்திய கிழக்கில் நிலவும் அசாதாரண சூழ்நிலை காரணமாக யாஷின் ‘டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் கிரோன்-அப்ஸ்’  திரைப்படம் வெளியீட்டு தேதி 4 ஜூன் 2026க்கு ஒத்திவைப்பு

கே வி என் புரொடக்ஷன்ஸ் KVN Productions மற்றும் மான்ஸ்டர் மைண்ட் கிரியேசன்ஸ் Monster Mind Creations நிறுவனங்கள் இன்று மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஆக்ஷன்-டிராமா திரைப்படமான ‘டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் கிரோன்-அப்ஸ்’ படத்தின் உலகளாவிய திரையரங்கு வெளியீட்டின் மறுதேதியை நிர்ணயித்துள்ளதாக அறிவித்துள்ளனர். முதலில் 2026 மார்ச் 19 அன்று உலகம் முழுவதும் வெளியிட திட்டமிடப்பட்டிருந்த இந்த படம், தற்போது மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் பதற்றம் மற்றும் பிராந்திய அசாதாரண சூழ்நிலை காரணமாக இத்திரைப்படத்தின் வெளியீட்டு தேதி 2026 ஜூன் 4ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. அவர்களின் முக்கிய விநியோக கூட்டாளிகளில் ஒருவரான Phars Films வழங்கிய ஆலோசனையின் பேரில், கல்‌ஃப் பகுதிகளில் அதிகரித்து வரும் பதற்றம் மற்றும் அதன் விளைவாக அங்குள்ள திரையரங்குகளின் செயல்பாடுகளில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை கருத்தில் கொண்டு, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.…

Read More

மார்ச் 6 ஆம் தேதி வெளியாகும் ‘யார்ரா அந்த பையன் நான் தான் அந்த பையன்’!

அறிமுக இயக்குநர் பால்ராஜ் எழுதி இயக்கி, கதையின் நாயகனாக நடித்திருப்பதோடு, பி.ஆர் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரித்திருக்கும் படம் ‘யார்ரா அந்த பையன் நான் தான் அந்த பையன்’. வித்தியாசமான தலைப்போடு, சமுதாயத்தில் நடக்கும் பல்வேறு பிரச்சனைகள் குறித்து பேசியிருக்கும் கமர்ஷியல் திரைப்படமாக உருவாகியுள்ள இப்படம் வரும் மார்ச் 6 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த நிலையில், இப்படத்தின் பத்திரிகையாளர்கள் சிறப்பு காட்சி சமீபத்தில் நடைபெற்றது. இதில் பங்கேற்று படம் பார்த்த பத்திரிகையாளர்கள் படத்தை வெகுவாக பாராட்டியுள்ளனர். குறிப்பாக சிறிய முதலீட்டில் தயாரிக்கப்பட்டிருந்தாலும், தற்போதைய காலகட்டத்தில் சமுதாயத்திற்கு தேவையான கருத்தை சொல்லியிருப்பதோடு, அதை ரசிகர்களுக்கு பிடிக்கும் வகையில் கமர்ஷியலாக கையாண்ட விதம் படத்தை ரசிக்க வைப்பதாக, தெரிவித்துள்ளனர். பத்திரிகையாளர்கள் பாராட்டை தொடர்ந்து உற்சாகமடைந்த படத்தின் தயாரிப்பாளர், இயக்குநர் மற்றும் கதையின் நாயகனான பால்ராஜ் படம்…

Read More

மார்ச் 6 முதல் ZEE5-ல் ‘காந்தி டாக்ஸ்’ உலக டிஜிட்டல் வெளியீடு!

இயக்குநர் கிஷோர் பாண்டுரங் பெலேகர் இயக்கத்தில், விஜய் சேதுபதி, அரவிந்த் சாமி, அதிதி ராவ் ஹைதாரி நடித்த விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட இந்த திரைப்படம், மார்ச் 6 முதல் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள மொழிகளில் ZEE5-ல் வெளியாகிறது திரையரங்குகளில் சிறப்பான வரவேற்பைப் பெற்ற திரைப்படமான ‘காந்தி டாக்ஸ்’, தற்போது அதன் உலக டிஜிட்டல் வெளியீட்டை மார்ச் 6 முதல் ZEE5-ல் கொண்டாடவுள்ளது. இந்த படம் அதன் சக்திவாய்ந்த மற்றும் உலகளாவிய கதையம்சத்தை அதிகமான பார்வையாளர்கள் அனுபவிக்கவும் வகையில் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள மொழிகளில் ஒளிபரப்பாகிறது. லிங்க் – https://www.youtube.com/watch?v=FRTJ8TWC78g Zee Studios, Moviemill மற்றும் Kyoorius நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படம், அதன் துணிச்சலான கதை சொல்லல், வலுவான நடிப்பு மற்றும் மொழியைத் தாண்டிய தனித்துவமான திரைப்பட அணுகுமுறைக்காக பரவலாக பாராட்டப்பட்டது. கிஷோர்…

Read More

சூர்யா நடிக்கும் ‘விஸ்வநாத் & சன்ஸ்’ இணையத்தை கலக்கும் அசத்தலான இரண்டு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் !!

நடிகர் சூர்யா நடிக்கும் அடுத்த படம் #சூர்யா46 தற்போது அதிகாரப்பூர்வமாக ‘விஸ்வநாத் & சன்ஸ்’ என பெயரிடப்பட்டுள்ளது. பெயரே சொல்வது போல், இப்படம் ஒரு அழகான, உணர்ச்சிபூர்வமான குடும்பக் கதையாக உருவாகியுள்ளது. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்களில் சூர்யா ஒரு குழந்தையுடன் தோன்றும் காட்சி, ரசிகர்களுக்கு பழைய நினைவுகளை எழுப்பும் வகையில் நெகிழ்ச்சியும், நம்பிக்கையும் கலந்த இனிய உணர்வை தருகிறது. முன்னதாக ‘வாத்தி’ மற்றும் ‘லக்கி பாஸ்கர்’ போன்ற வெற்றிப் படங்களை வழங்கிய இயக்குநர் வெம்கி அட்லூரி (Venky Atluri) இந்தப் படத்தை இயக்குகிறார். உணர்வுப்பூர்வமான கதை சொல்லலில் வல்லவரான இவர், இந்தப் படத்திலும் மறக்க முடியாத அனுபவத்தை வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தில் மமிதா பைஜு, ராதிகா சரத்குமார், ரவீனா டாண்டன் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர். குடும்பத்தோடு கொண்டாடும் அசத்தலான திரை அனுபவமாக…

Read More

ஓ பட்டர் ப்ளே போன்ற கதையை நான் கேட்டதே இல்லை- தயாரிப்பாளர்

ஓ பட்டர்ஃப்ளை திரைப்படம், ஆன்ட்ஹில் சினிமா நிறுவனத்தின் முதல் தயாரிப்பாகும். பாலம்பூர் டாக்கீஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கப்படும் இப்படத்திற்கு, துல்சியா நிறுவனம் கன்சல்டிங் தயாரிப்பாளராக பணியாற்றியுள்ளது. ஒரு வலுவான மற்றும் திறமையான கூட்டணியில் இப்படம் உருவாகியுள்ளது. அறிமுக இயக்குநர் விஜய் ரங்கநாதன் இப்படத்தை எழுதி இயக்கியுள்ளார். நிவேதிதா சதிஷ், சிபி சந்திரன், அதுல், நாசர், லட்சுமி பிரியா சந்திரமௌலி மற்றும் கீதா கைலாசம் உள்ளிட்ட திறமையான நட்சத்திர பட்டாளம் இப்படத்தில் நடித்துள்ளது. உறவுகளின் மென்மையையும், கணிக்க முடியாத தன்மையையும் ஒரு த்ரில்லர் பாணியில் பேசும் இப்படம் வரும் மார்ச் 6ம் தேதி திரையரங்குளில் வெளியாக உள்ளது. இந்நிலையில் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் கலந்து கொண்டு பேசினர். *ஒளிப்பதிவார் வேதராமன் சங்கரன்* அவர்கள் பேசும்போது, ஓ பட்டர்ஃப்ளை படத்தை மிகவும் சிரமப்பட்டு எளிதாக…

Read More