ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேசனல் மற்றும் டர்மரிக் மீடியா இணைந்து தயாரிக்க, சிவகார்த்திகேயன் நடிப்பில், சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் உருவாகும் புதிய திரைப்படம் “சேயோன்”. துடிப்புமிக்க அதிரடியான புதிய கதாபாத்திரத்தில் சிவகார்த்திகேயன் தோன்றும் இந்தப் படம் ஒரு கிராமியப் பின்னணியில் மிகச்சிறந்த பொழுதுபோக்குச் சித்திரமாக மலரவிருக்கிறது. நமது மண் சார்ந்த உணர்வுகளுடன் அதிரடி காட்சிகள், அட்டகாசமான பாடல்கள் என குடும்பத்தின் அனைத்து உறுப்பினர்களும் ரசிக்கும்படியான ஒரு முழுமையான ‘கமர்ஷியல் எண்டர்டெயினராக’, 2026-ஆம் ஆண்டின் மிகப்பெரிய குடும்பக் கொண்டாட்டமாக “சேயோன்” அமையும். அனைத்து தரப்பின் பாராட்டுதலோடு, வசூல் ரீதியாகவும் பெரும் சாதனை படைத்த ‘அமரன்’ படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு, சிவகார்த்திகேயன் மீண்டும் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேசனல் நிறுவனத்துடன் இணைவது ஒரு முக்கியமான மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது. அனுபவமும் இளமையும் கைகோர்க்கும் இந்த வெற்றிக் கூட்டணி மாநில மொழி எல்லைகளைக் கடந்து…
Read MoreCategory: சினிமா செய்திகள்
Moonwalk திரைப்படத்தின் ‘Yethu’ பாடலுக்கு ஆப்பிரிக்கன குழந்தைகளின் இசைக்குழு நடமாடி வீடியோ பதிவிட்ட நிலையில் அதற்கு ஏ.ஆர்.ரஹ்மான் கமெண்ட் செய்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.
மூன்வாக் திரைப்படத்தில் இடம்பெற்ற ‘ஏத்து’ வீடியோ பாடல் இன்ஸ்டாகிராமை அதிர வைத்துள்ளது. இது ஒரு பெரிய நடன ட்ரெண்டாக மாறி, உலகம் முழுவதும் வேகமாக வைரலாகி வருகிறது. ஆப்பிரிக்கா, ஜப்பான், அமெரிக்கா, இங்கிலாந்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பிரான்ஸ், ஸ்வீடன் உள்ளிட்ட பல நாடுகளைச் சேர்ந்தவர்கள் இந்த ட்ரெண்டில் உற்சாகமாக கலந்து கொண்டு, பாடலின் உணர்வை காப்பாற்றியபடி அதிக ஆற்றலுடன் ரீல்ஸ் செய்து பதிவிட்டு வருகின்றனர். Yethu பாடல் வெளியான இரண்டு வாரங்களிலேயே யூடியூபில் 11 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது. மேலும், சர்வதேச விமர்சகர்கள் Yethu பாடலை பார்த்து ஆர்வத்துடன் கருத்து தெரிவித்து வருகின்றனர். தற்போது சமூக ஊடகங்களில் “Yethu” பாடலை கொண்டு செய்யப்பட்ட ரீல்கள் 100 மில்லியன் பார்வைகளை கடந்து படுவைரலாகி வருகிறது. ஜனவரி 27ஆம் தேதி தொடங்கிய இந்த ட்ரெண்ட், இன்றளவும் சற்றும் குறையாமல்…
Read Moreயுனெஸ்கோ தலைமையிலான உலகளாவிய ஐ.நா மேடையில் 6 வயதேயான இந்தியாவின் இளம் குழந்தை சுற்றுச்சூழல் ஆர்வலரான ரூஹி மொஹசப் கௌரவிக்கப்பட்டு வரலாற்று சாதனை புரிந்துள்ளார்.
தாய்லாந்து தலைநகர் பாங்காங்கில், ஐ.நா. ஆசிய-பசிபிக் தலைமையகத்தில் நடைபெற்ற 2026 ஆம் ஆண்டிற்கான ஜி.சி.இ. (Global Conference on Education for a Sustainable Future (GCE 2026) மாநாட்டில், உரையாற்ற காமன் கிரவுண்ட் இன்டர்நேஷனல் அகாடமி (Common Ground International Academy) பள்ளியின் முதலாம் வகுப்பு மாணவி ரூஹி மொஹசப் முக்கிய உரையாளராக (Keynote Speaker) அழைக்கப்பட்டிருந்தார். அங்கு ரூஹிக்கு பூடான் நாட்டின் கல்வியமைச்சர் திரு. யீசாங் டீ தாப்பா SDG Impact Award – விருதை வழங்கி கௌரவித்தார். இந்த சர்வதேச மாநாடு யுனெஸ்கோ இளைஞர் கல்வி ஆராய்ச்சி மையம் (UNESCO Youth Education Research Center) தலைமையில், பாங்காக்கில் உள்ள ஐ.நா மாநாட்டு மையத்தில் ( United Nations Conference Centre, Bangkok) நடைபெற்றது. மேலும், ஐ.நா. பொருளாதார மற்றும் சமூக கவுன்சில்…
Read Moreமேக்கரை என்ற மலைக் கிராமத்தில் நடக்கும் தொடர் கொலைகளைப் பற்றிய ‘தி டார்க் ஹெவன்’ திரைப்படம் ஏப்ரல் 3 ஆம் தேதி உலகெங்கும் வெளியாகிறது!
மக்களிடம் மரபு வழியாகப் பரவிச் செல்வாக்கு பெற்ற தொன்மம் சார்ந்த கதைகளுக்கு தனி நிறமுண்டு. அவ்வகையில் சமூகத்தில் நிலவும் ஒரு நாட்டார் கதையை அடிப்படையாக வைத்து உருவாக்கியிருக்கும் க்ரைம் த்ரில்லர் திரைப்படமாக ‘தி டார்க் ஹெவன்’ உருவாகியுள்ளது. இந்தப் படம் ஒரு மலைக் கிராமத்தில் ஏழு வருடங்களுக்கு ஒரு முறை வருகிற ஜூலை மாதங்களில் நடக்கும் தொடர் கொலைகளை விசாரிக்கும் ஒரு போலீஸ்காரரைப் பற்றியது. இப்படம் பற்றி, படத்தைத் தயாரித்து இயக்கும் இயக்குநர் பாலாஜி பேசும் போது, “இந்த படம், தடயங்களே இல்லாமல் நடக்கும் தொடர் கொலைகளை, காவல் அதிகாரி எப்படிக் கையாள்கிறார் என்பதை மையமாகக் கொண்டது. இப்படத்தின் கதாநாயகனாக சித்து நடித்துள்ளார்.பிக்பாஸ் புகழ் தர்ஷிகா கதாநாயகியாக நடித்திருக்கிறார். இவர்களுடன் நிழல்கள் ரவி, வேல ராமமூர்த்தி, ரித்விகா, அருள் ஜோதி, ஜெயகுமார் ஜானகிராமன் போன்றவர்களும் நடித்திருக்கிறார்கள். இதுவரை…
Read Moreவிஜய் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘காதல் ரீசெட் ரிபீட்’ படத்தின் டீசர் வெளியானது
Malali Manvi Movie Makers, D Studios, சன்னி டென்வி (Denvi Productions) தயாரிப்பில், பிரபா பிரேம்குமார் இணை தயாரிப்பில், விஜய் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘காதல் ரீசெட் ரிபீட்’ திரைப்படத்தின் டீசர் நேற்று அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. முன்னணி இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் முன்னதாக வெளியிட்ட பாடல்கள் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், புதுமையான காதல் கதையைச் சொல்லும் இப்படத்தின் டீசர், சமூக வலைத்தளங்களில் வெளியான சில மணி நேரங்களிலேயே ரசிகர்களிடையே கவனம் ஈர்த்து வருகிறது. ஒரு அழகான காதல் கதையாகத் தொடங்கும் டீசர், ‘ரீசெட்’ – ‘ரிபீட்’ என்ற தலைப்புக்கேற்றவாறு, எதிர்பாராத திருப்பங்கள், உணர்ச்சி பூர்வமான காட்சிகள் மற்றும் புதுமையான கதை சொல்லல் பாணியுடன் பார்வையாளர்களின் ஆர்வத்தை தூண்டும் வகையில் அமைந்துள்ளது. இது ஒரு சாதாரண காதல் கதை அல்ல, எந்த மாதிரியான காதல் கதை…
Read More‘நாய் சேகர்’ புகழ் கிஷோர் ராஜ்குமார் எழுதி, இயக்கி, நாயகனாக நடிக்கும் காதலும் நகைச்சுவையும் கலந்த கலகலப்பான ‘கோயம்பத்தூர் மாப்பிள்ளை’ படத்தில் பிரபல மலையாள நடிகை அன்னா பென் நாயகியாக நடிக்கிறார்
திரைத்துறை ஜாம்பவான்கள் கலந்து கொள்ளும் பிரம்மாண்ட கலை நிகழ்ச்சிகளை வெற்றிகரமாக தயாரித்து, உருவாக்கி, நடத்துவதன் மூலம் இந்திய ஊடக வெளியில் தனக்கென ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ள முன்னணி ஊடகத் தயாரிப்பு மற்றும் திறமை மேலாண்மை நிறுவனமான நாய்ஸ் அண்டு கிரைன்ஸ் (Noise and Grains), திரைப்பட தயாரிப்பில் களம் இறங்கியுள்ள முதல் படத்திற்கு ‘கோயம்பத்தூர் மாப்பிள்ளை’ என்று பெயரிடப்பட்டிருக்கிறது. படப்பிடிப்பு சமீபத்தில் வெற்றிகரமாக நிறைவடைந்த நிலையில், ‘கோயம்பத்தூர் மாப்பிள்ளை’ படத்தின் முதல் பார்வையை காதலர் தினத்தை முன்னிட்டு பிரபல இயக்குநரும் கோயம்புத்தூர் மண்ணின் மைந்தருமான லோகேஷ் கனகராஜ் வெளியிட்டார். ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை பாராட்டிய அவர், படக்குழுவினருக்கு வாழ்த்துகளை தெரிவித்தார். நாய்ஸ் அண்டு கிரைன்ஸ் பேனரில் கார்த்திக் ஸ்ரீநிவாஸ் மற்றும் மகாவீர் அசோக் தயாரிக்கும் இப்படத்தை ‘நாய் சேகர்’ திரைப்படத்தை இயக்கிய ராஜ்குமார் எழுதி இயக்கியுள்ளார்.…
Read Moreஅலர் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் மலர்விழி நடேசன் மற்றும் டாக்டர் ஷிவானி சுப்பிரமணி வழங்கும், மலர்விழி நடேசன் இயக்குநராக அறிமுகமாகும் நடிகர் சந்தோஷ் பிரதாப் நடிப்பில் உருவாகி இருக்கும் ’சிக்னல் அட் 11.30’ திரைப்படத்தின் முதல் பார்வை வெளியீடு!
’காலம் யாருக்காகவும் காத்திருக்காது’ என்ற பழமொழி அனைவரது வாழ்வுடனும் ஒத்துப்போகும் ஒன்று. இதனை அடிப்படையாகக் கொண்டு உருவான விறுவிறுப்பான திரில்லர் திரைப்படம்தான் ‘சிக்னல் அட் 11.30’. அலர் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் மலர்விழி நடேசன் மற்றும் டாக்டர் ஷிவானி சுப்பிரமணி இணைந்து வழங்கும் இப்படத்தில் சந்தோஷ் பிரதாப் கதாநாயகனாக நடித்துள்ளார். உணர்வுப்பூர்வமாகவும் தீவிரமான கதைக்களத்துடனும் உருவான இப்படத்தின் முதல் பார்வை ரசிகர்களை கவர்ந்துள்ளது. சமீபத்தில் சென்னையிலுள்ள ஒரு பிரபல கல்லூரியில் நடைபெற்ற நிகழ்வில் இப்படத்தின் முதல் பார்வை வெளியிடப்பட்டது. இதுகுறித்து தயாரிப்பாளர்கள் மலர்விழி நடேசன் மற்றும் டாக்டர் ஷிவானி சுப்பிரமணி கூறியதாவது, “‘சிக்னல் அட் 11.30’ படத்தின் கதை கேட்டதுமே எங்களுக்கு மிகவும் பிடித்துவிட்டது. மிக சாதாரணமாக இந்தப் படத்தின் கதை கேட்க ஆரம்பித்து, பின்பு மறக்க முடியாத பயணமாக இது மாறியது. இந்தக் கதையில் கதாநாயகன் கதாபாத்திரம்…
Read Moreடொவினோ தாமஸ் நடிக்கும் ‘பள்ளிச்சட்டம்பி’ படத்தின் முதல் பாடல் வெளியீடு
ஜேக்ஸ் பிஜாய் (Jakes Bejoy) – டொவினோ தாமஸ் காம்போ மீண்டும் ட்ரெண்டிங்கில் இடம் பிடித்திருக்கிறது. டிஜோ ஜோஸ் ஆண்டனியின் ( Dijo Jose Antony) ‘பள்ளிச்சட்டம்பி’ படத்தின் தமிழ் பதிப்பு பாடலான ‘காட்டு செண்பகம்’ வெளியிடப்பட்டிருக்கிறது டிஜோ ஜோஸ் ஆண்டனி இயக்கத்தில் டொவினோ தாமஸ் கதாநாயகனாக நடித்த ‘பள்ளிச்சட்டம்பி’ படத்தின் முதல் பாடலான ‘காட்டு செண்பகம்’ எனும் பாடலின் தமிழ் பதிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பாடல் இசையமைப்பாளர் ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்து ஏற்கனவே இசை ஆர்வலர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகிறது. இப்பாடலின் தமிழ் பதிப்பின் வரிகளை மோகன் ராஜா எழுதியுள்ளார். இது பாடலுக்கு ஒரு புதிய பாடல் வரிகளையும், அழகியலையும் வழங்குகிறது. இந்த பாடலை அகில் ஜே சந்த் மற்றும் ஆவணி மல்ஹார் ( Avani Malhar) பாடியுள்ளனர். இவர்களின் ஆத்மார்த்தமான குரல்கள்.. இசையமைப்பின் உணர்ச்சி…
Read More– பெயர்களின் அர்த்தத்தை விளக்கி மகிழ்ச்சியான நிமிடத்தை பகிர்ந்த மெகாஸ்டார் சிரஞ்சீவி. !!
ராம் சரண் & உபாஸனா தங்கள் இரட்டைக் குழந்தைகளுக்கு வைத்த பெயர்கள்: சிவராம் மற்றும் அன்வீரா தேவி – பெயர்களின் அர்த்தத்தை விளக்கி மகிழ்ச்சியான நிமிடத்தை பகிர்ந்த மெகாஸ்டார் சிரஞ்சீவி. !! டோலிவுட் நட்சத்திர தம்பதியான ராம் சரண் மற்றும் உபாஸனா கொணிதெலா, ஜனவரி 31 அன்று இரட்டைக் குழந்தைகள் பிறந்ததையடுத்து பேரானந்தத்தில் உள்ளனர். இதன் மூலம், அவர்களின் மகள் கிளிம் காரா உடன் சேர்த்து, மூன்று குழந்தைகளின் பெற்றோராகியுள்ளனர். சமீபத்தில் நடைபெற்ற பாரம்பரியமான பெயர்சூட்டும் விழாவில், ஆன்மிக ஆழமும் குடும்பப் பெருமையும் பிரதிபலிக்கும் வகையில், இரட்டைக் குழந்தைகளின் பெயர்களை தம்பதியினர் அறிவித்தனர். இந்த பெயர்களின் அர்த்தங்களை மெகாஸ்டார் சிரஞ்சீவி சமூக வலைதளங்களில் பகிர்ந்து, பெயர்சூட்டும் விழாவிலிருந்து மனதை கொள்ளை கொள்ளும் ஒரு தருணத்தையும் பகிர்ந்துள்ளார். அவரது பதிவு: “எல்லையற்ற மகிழ்ச்சியுடனும், தெய்வீக அருளுடனும் எங்கள் இரண்டு…
Read Moreகன்னட திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ புரந்தனா ஃபிலிம் புரொடக்ஷன்ஸ் தமிழ் திரையுலகில் தனது முதல் படத்தை தயாரிக்கிறது!
ஹோம்பலே ஃபிலிம்ஸ், மைத்ரி மூவி மேக்கர்ஸ் போன்ற அண்டை திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்கள் தமிழ் திரையுலகில் காலடி எடுத்து வைத்து பான் இந்திய படங்களின் வெற்றி விகிதத்தை அதிகமாக்கியுள்ளது. அந்த வரிசையில், தற்போது மேலும் ஒரு முன்னணி தயாரிப்பு நிறுவனம் தமிழ் திரையுலகில் அடியெடுத்து வைக்கிறது. கன்னட திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ புரந்தனா ஃபிலிம் புரொடக்ஷன்ஸ், தனது மிகப்பெரிய வெற்றிப் படமான ’S/o முத்தண்ணா’ மூலம் பரவலாக அறியப்பட்டது. தற்போது ’எம்ஜிஆர்’ என்ற புதிய படத்தை தயாரித்து வருகிறது. தயாரிப்பாளர் ஹரி பிரசாத் பி.வி தலைமையிலான இந்த நிறுவனம், தற்போது தமிழ் திரையுலகில் தனது பயணத்தை தொடங்குகிறது. இந்த புதிய படத்தின் கதாநாயகனுக்காக தமிழ் திரையுலகின் பல முன்னணி நடிகர்களுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தில் நடிகர் செல்வராகவனும் இணைந்துள்ளார் என்பது…
Read More