தமிழ் தொலைக்காட்சி வரலாற்றில் மக்களை வெகுவாக கவர்ந்திழுத்த இரண்டு நிகழ்ச்சிகள், சூப்பர் சிங்கர் மற்றும் குக் வித் கோமாளி. இந்த வாரம் இந்த இரண்டு நிகழ்ச்சிகளும் ஒன்றாக இணையும் ஒரு மெகா சங்கமம், தொலைக்காட்சி வரலாற்றில் முதல் முறையாக நிகழவுள்ளது. தமிழக மக்களின் நெஞ்சங்களில் தனித்த இடம் பிடித்த, விஜய் டிவியின், சூப்பர் சிங்கர் சீனியர் நிகழ்ச்சி 10 வருடங்களைக் கடந்து, வெற்றி நடை போட்டு வருகிறது அதே போல ஒரு சமையல் போட்டி நிகழ்ச்சியை புதுவிதமான நையாண்டியுடன் அணுகிய, குக் வித் கோமாளி நிகழ்ச்சி, 6 வது சீசனை கடந்து, ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று நடந்து வருகிறது. பட்டி தொட்டியெங்கும் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கும் இந்த இரண்டு நிழச்சிகளின் பங்கேற்பாளர்களும் ஒன்றாக பங்கேற்க, “சூப்பர் சிங்கர் சீசன் 11 & குக் வித்…
Read MoreCategory: சினிமா செய்திகள்
மர்மமும் அதீத சக்தியும் சங்கமிக்கும் “சுமதி வளவு” – ZEE5-இல் செப்டம்பர் 26 முதல் உலகம் முழுக்க டிஜிட்டல் பிரீமியர் செய்யப்படுகிறது !
~ இயக்குநர் விஷ்ணு சசி சங்கர் இயக்கியுள்ள இந்த மலையாள ஹாரர்–திரில்லர் படத்தில் அர்ஜுன் அசோகன், கோகுல் சுரேஷ், சைஜு குரூப், பாலு வர்கீஸ், மாளவிகா மனோஜ், ஷிவதா ஆகியோர் நடித்துள்ளனர். ZEE5-இல் வரும் செப்டம்பர் 26 முதல் மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி மொழிகளில் ஸ்ட்றீமிங் செய்யப்படவுள்ளது ~ இந்தியாவின் முன்னணி ஓடிடி தளமான ZEE5, ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் மலையாள ஹாரர்–காமெடித் திரைப்படமான சுமதி வளவு திரைப்படத்தை வரும் செப்டம்பர் 26 அன்று உலக டிஜிட்டல் பிரீமியராக வெளியிடுகிறது. இயக்குநர் விஷ்ணு சசி சங்கர் இயக்கியுள்ள இப்படத்தில் அர்ஜுன் அசோகன், கோகுல் சுரேஷ், சைஜு குரூப், பாலு வர்கீஸ், மாளவிகா மனோஜ் மற்றும் ஷிவதா ஆகியோர் நடித்துள்ளனர். மேலும், நாடு முழுவதும் பார்வையாளர்கள் ரசிக்கும்படி தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் இப்படம்…
Read Moreநடிகர் ராகவா லாரன்ஸ் விடுத்த வேண்டுகோள்!
தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான மல்லர் கலையில் மாற்றுத்திறனாளிகளை ஊக்குவித்து வருகிறார் நடிகர் ராகவா லாரன்ஸ். எளியவர்களுக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கும் உதவுவதிலும் ஊக்குவிப்பதிலும் பெருமகிழ்ச்சி அடைபவர் நடிகர் லாரன்ஸ். அந்த வகையில், தற்போது தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான மல்லர் கலையில் ஆர்வம் கொண்ட மாற்றுத்திறனாளிகளை ஊக்குவித்து வருகிறார் லாரன்ஸ். இதுகுறித்து நடிகர் லாரன்ஸ் தனது சமூகவலைதளப்பக்கத்தில் மல்லர் கலையில் அசத்தும் மாற்றுத் திறனாளிகளோடு வெளியிட்டிருக்கும் வீடியோவில், “இரண்டு கை, கால்கள் நன்றாக இருப்பவர்களே மல்லர் கம்பத்தில் பேலன்ஸ் செய்து ஏறுவது கடினம். அதில் மாற்றுத் திறனாளிகள் சாதிப்பது எவ்வளவு சவாலான விஷயம். ஆனால், அந்த சவாலை செய்கிறார்கள் என்றால் அதுதான் அவர்கள் வாழ்வாதாரம். இதன் மூலம் தங்கள் குடும்பத்தையும் பார்க்கிறார்கள். அதனால், இந்த வீடியோவை பார்ப்பவர்கள் உங்கள் வீட்டில் நடக்கும் விசேஷங்கள், விழாக்கள் மற்றும் மற்ற நிகழ்ச்சிகளிலும்…
Read Moreசென்னை பல்லாவரத்தில் உள்ள வேல்ஸ் பல்கலைக்கழகம் தனது சட்டபள்ளியின் பத்தாம் ஆண்டு நிறைவு விழாவை வெகு விமரிசையாக கொண்டாடியது.
பல்லாவரத்தில் அமைந்துள்ள வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் சட்டப் பள்ளியின் பத்தாவது ஆண்டு நிறைவு விழா பல்கலைக்கழக வளாகத்தில் இன்று 20/09/2025 நடைபெற்றது. தலைமை விருந்தினராக மாண்புமிகு உச்சநீதிமன்ற நீதிபதி. திரு என். கோட்டீஷ்வர்சிங் , கெளரவ விருந்தினராக மாண்புமிகு உச்ச நீதிமன்ற நீதிபதி. திரு.ஆர்.மகாதேவன் மற்றும் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி திரு.மணிந்திர மோகன் ஸ்ரீவஸ்தவா அவர்கள் சிறப்பு விருந்தினராகவும் கலந்துகொண்டு சிறப்பித்தனர். மாண்புமிகு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி திரு. எம். நிர்மல் குமார், மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி திரு. ஜி.கே. இளந்திரையன், மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி. திரு.டி.பரத சக்கரவர்த்தி, மாண்புமிகு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி திருமதி.ஆர்.கலைமதி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். இவ்விழாவில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலின் தலைவர் திரு. எம் .எஸ். அமல்ராஜ்…
Read Moreதக்ஷன் விஜய் நடிக்கும் புதிய படம் “வெற்று காகிதம்”!
மகிழ் புரொடக்சன்ஸ் சி.பியூலா தயாரிப்பில், மகிழ் குழுவினர் இயக்கத்தில் உருவாகிறது ‘வெற்று காகிதம்’. தங்கைக்காக வாழும் அண்ணனின் கதை. இன்றைய இளைஞர்களுக்கான கதை. குடும்ப பாசம், செண்டிமெண்ட் கலந்து, ஜனரஞ்சகமாக உருவாகிறது ‘வெற்று காகிதம்’. தத்ரூபமாக சண்டை போட்டுள்ளார் வளர்ந்து வரும் ஹீரோ தக்ஷன் விஜய்! தக்ஷன் விஜய், சாந்தினி, அப்புகுட்டி, இமான் அண்ணாச்சி, சத்தியம் டிவி முக்தார், கூல் சுரேஷ், ஸ்ரீதர், ஜீவா, தீபா, மதிச்சியம் பாலா, ஹலோ கந்தசாமி, நமோ நாராயணன், சத்யா ஆகியோர் நடித்துள்ளனர். படத்தை மகிழ் குழுவினர் இயக்குகின்றனர். ஒளிப்பதிவு திலீபன், கலை கார்த்திக், சீனு, சண்டைப் பயிற்சி கிக்காஸ் காளி, அஷ்ரப் குருக்கள், சுரேஷ். மக்கள் தொடர்பு கோவிந்தராஜ். சென்னை, பழனி, கேரளா ஆகிய பகுதிகளில் படப்பிடிப்பு நடத்தி, பிரமாண்டமாக தயாரித்து வருகிறார் சி.பியூலா மகிழ். இறுதிக்கட்ட படப்பிடிப்பில் ‘வெற்று…
Read Moreஹொம்பாலே பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள, “காந்தாரா சேப்டர் 1” படத்தின் தமிழ் டிரெய்லரை நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிடுகிறார்!
ஹொம்பாலே பிலிம்ஸ் சார்பில் மிகப்பெரிய படைப்பாக உருவாகி வரும் “காந்தாரா சேப்டர் 1” படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த ஆவலுக்கு மேலும் வலு சேர்க்கும் வகையில், பிரபல தமிழ் நட்சத்திர நடிகர் சிவகார்த்திகேயன் இந்தப் படத்தின் தமிழ் டிரெய்லரை 22 செப்டம்பர் 2025 மதியம் 12:45 மணிக்கு வெளியிடுகிறார். 2022-ம் ஆண்டு வெளிவந்து பெரும் வெற்றி பெற்ற காந்தாரா படத்தின் முன்கதையாக உருவாகும் இந்தப் படத்தை, ரிஷப் ஷெட்டி எழுதி இயக்கியுள்ளார். விஜய் கிரகந்தூர் தயாரிப்பில் உருவாகும் இந்த படம், புராணங்களால் நிரம்பிய கதைக்களத்தில், கண்கவர் காட்சியமைப்புகளுடன், பார்வையாளர்களை தெய்வீகமும் சக்தியும் நிறைந்த பண்டைய உலகத்துக்குக் கொண்டு செல்லும் படைப்பாக உருவாகியுள்ளது. காந்தாரா சேப்டர் 1 உலகளாவிய அளவில் 2 அக்டோபர் 2025 அன்று, கன்னடம், தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி…
Read Moreமைத்ரி மூவி மேக்கர்ஸ் வழங்கும் ‘Dude’ படத்தின் ‘நல்லாரு போ’ பாடல் ரசிகர்களின் மனதைக் கவர்ந்துள்ளது!
திரைப்படங்களின் இசையும் பாடல்களும் பலருக்கும் உணர்வுப்பூர்வமாக இரண்டற கலந்திருப்பது. இதனை மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் வெளிவர இருக்கும் ‘Dude’ படம் மீண்டும் நிரூபித்துள்ளது. ஹை எனர்ஜி பாடலாக வெளியான ‘ஊரும் பிளட்டும்’ பாடல் ஹிட்டுக்கு பிறகு தற்போது இரண்டாவது பாடலான ‘நல்லாரு போ’ ஆன்மாவை தொடும் உணர்வுப்பூர்வமான பாடலாக வெளியாகியுள்ளது. குறிப்பாக பெண் இசை ரசிகர்கள் இந்தப் பாடலை கொண்டாடி வருகின்றனர். சாய் அபயங்கர் இசையமைப்பில், ஏக்கம், காதல், பிரிவு ஆகியவற்றின் கலவையாக விவேக் பாடல் வரிகள் எழுதியிருக்க, திப்பு மற்றும் மோஹித் செளஹான் இந்த அர்த்தமுள்ள மெலோடி பாடலை பாடியுள்ளனர். நமக்கு பிடித்தவர்கள் எந்தக் காரணத்திற்காக நம்மை விட்டு பிரிந்தாலும் ‘எங்கிருந்தாலும் வாழ்க…’ என வாழ்த்துவதை கருவாகக் கொண்டு இந்தப் பாடல் உருவாகியுள்ளது. பொதுவாக மற்ற பிரேக்கப் பாடல்களில் கசப்பும் வேதனையும் இருக்கும். ஆனால்,…
Read Moreஹைரபாத்தை சேர்ந்த முன்னணி இயக்குநர்கள் மற்றும் கதை சொல்லிகளை நேரில் சந்தித்த நெட்ஃபிலிக்ஸ் சீஃப் கண்டெண்ட் ஆபிசர் பெலா பஜாரியா!
தென்னிந்தியாவின் கலாச்சாரம், அதன் கதைகள், மொழி இவை அனைத்தும் நெட்ஃபிலிக்ஸ் வளர்ச்சிக்கான முக்கிய ஆதாரம். நெட்ஃபிலிக்ஸ் வழங்கும் அசல் கதைகள் முதல் திரையங்கிற்கு பிறகான ஓடிடி வெளியீடு வரை அதன் தரம் மற்றும் கதை சொல்லல் இந்தியா மட்டுமல்லாது உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்கள் மத்தியில் பெரும் நம்பிக்கையை விதைத்துள்ளது. பஜாரியாவின் ஹைதராபாத் வருகை இதுபோன்ற அசல் கதைகளைப் பெறுவதில் நெட்ஃபிலிக்ஸின் அர்பணிப்பைக் காட்டுவது மட்டுமல்லாது, திறமை வாய்ந்த கதை சொல்லிகளை கொண்டாடுவதாகவும் அமைந்துள்ளது.
Read Moreஆக்சன் கிங்’ அர்ஜுன் – ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும், ‘தீயவர் குலை நடுங்க’ படத்தின் அதிரடி டீசர் வெளியானது !!
இயக்குநர் ஏ ஆர் முருகதாஸ் வெளியிட்ட “தீயவர் குலை நடுங்க” படத்தின் டீசர் ஜி. எஸ். ஆர்ட்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜி. அருள்குமார் தயாரிப்பில், ‘ஆக்சன் கிங்’ அர்ஜுன்- ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில், அறிமுக இயக்குநர் தினேஷ் இலெட்சுமணன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘தீயவர் குலை நடுங்க’ திரைப்படத்தின் அதிரடி டீசர் இன்று அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. முன்னணி இயக்குநர் ஏ ஆர் முருகதாஸ், இன்று இப்படத்தின் டீசரை சமூக வலைத்தளம் வழியே வெளியிட்டு படக்குழுவை வாழ்த்தியுள்ளார். சட்டத்தை தாண்டி நியாயம் இருக்கும், நியாயத்தை தாண்டி தர்மம் இருக்கும், ஆனால் இறுதியில் தர்மமே ஜெயிக்கும் என்பதை மையப்படுத்தும் இந்த க்ரைம் திரில்லர் படத்தின் டீசர், ஆக்சன் கிங் அர்ஜூனின் ஆக்சன் விஸ்வரூபத்தையும், மென்மையான ஐஸ்வர்யா ராஜேஷின் மர்மமிகு பாத்திரத்தையும் அழகாக வெளிப்படுத்துவதோடு, ஒரு விசாரணையை பரபர…
Read Moreகண்ணா ரவி நாயகனாக நடிக்கும், “வேடுவன்”, ZEE5 இன் அடுத்த அதிரடி தமிழ் வெப் சீரிஸ் அக்டோபர் 10 ஆம் தேதி முதல் ஸ்ட்ரீமாகிறது!
இந்தியாவின் முன்னணி ஓடிடி தளமான ZEE5, தனது அடுத்த அதிரடி தமிழ் ஒரிஜினல் சீரிஸான “வேடுவன்” சீரிஸ், வரும் அக்டோபர் 10 ஆம் முதல் ஸ்ட்ரீமாகவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. நடிகர் கண்ணா ரவி முதன்மைப் கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்த சீரிஸ், வலுவான உணர்ச்சி பூர்வமான கதை சொல்லலையும், ஆழமான நடிப்பையும் இணைக்கும் சக்திவாய்ந்த டிராமாவாக உருவாகியுள்ளது. மண் சார்ந்த பாரம்பரியக் கதைகளை தைரியமாக சொல்லும் முயற்சியில் தொடர்ந்து முன்னோடியாக பணியாற்றி வரும் ZEE5, வேடுவன் மூலம் அத்தகைய முயற்சியை மீண்டும் மேற்கொண்டுள்ளது. பல அடுக்குகள் கொண்ட மனித உணர்வுகள், எது சரி, எது தவறு என்பதிலான சிக்கல்கள், கடமைக்காக தரப்படும் தனிப்பட்ட விலை போன்ற அம்சங்களை பிரதிபலிக்கும் இந்த சீரிஸ், ஒரு சாதாரண டிராமா மட்டுமல்ல, வாழ்க்கையில் எடுக்கும் முடிவுகளும் அதன் விளைவுகளையும் ஆழமாக சித்தரிக்கும்…
Read More