ஹைதராபாத்தில் நடக்கும் ஆத்வி சேஷின் பான்-இந்தியா அதிரடித் திரைப்படமான ‘டகோயிட்’ படப்பிடிப்பில், நடிகை ஸ்ருதி ஹாசன் இணைந்துள்ளார் !! ஆத்வி சேஷின் மெகா பான்-இந்திய ஆக்ஷன் திரைப்படமான ‘டகோயிட்’ படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் துவங்கி நடந்து வருகிறது. இந்த படப்பிடிப்பில் கதாநாயகியாக நடிக்கும் நடிகை ஸ்ருதி ஹாசன் பங்கேற்றுள்ளார். இந்த ஷெட்யூலில் படத்தின் முக்கியமான காட்சிகள் மற்றும் பிரமாண்டமான ஆக்ஷன் காட்சிகளை படமாக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். நடிகை ஸ்ருதி ஹாசன் நடிகர் ஆத்வி சேஷுடன் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட செல்ஃபியைப் பகிர்ந்து, இனிமையான ஷீட்டிங் அனுபவம் எனக்குறிப்பிட்டுள்ளார். இரண்டு முன்னாள் காதலர்கள், தங்கள் வாழ்க்கையை மாற்ற வேண்டி, தொடர்ச்சியான கொள்ளைகளை ஒன்றாக இணைந்து செய்கிறார்கள். இதனை பரபரப்பான திருப்பங்களுடன் சொல்லும் திரைப்படம் தான் ‘டகோயிட்’. ஆத்வி சேஷின் ‘க்ஷணம்’ மற்றும் ‘கூடாச்சாரி’ உள்ளிட்ட பல தெலுங்கு…
Read MoreCategory: சினிமா செய்திகள்
”தோனிமா” திரைப்படத்தில் பொறுப்பற்ற கணவராக காளி வெங்கட்
சாய் வெங்கடேஸ்வரன் தயாரிப்பில், இயக்குநர் ஜெகதீசன் சுப்பு இயக்கத்தில், நடிகர்கள் காளி வெங்கட் – ரோஷ்னி பிரகாஷ் நடித்துள்ள படம் ’தோனிமா’! சாதாரண ஆண், பெண்ணின் அன்றாட வாழ்க்கையின் உண்மையான மற்றும் உணர்ச்சிபூர்வமான சாரத்தை படம் பிடிக்கும் குறிப்பிடத்தக்க திரைப்படங்களை தமிழ் சினிமா உருவாக்கியுள்ளது. இந்த வரிசையில், சாய் வெங்கடேஸ்வரன் தயாரிப்பில் ஜெகதீசன் சுப்பு எழுதி இயக்கிய ’தோனிமா’ திரைப்படமும் இணைந்துள்ளது. நடுத்தரக் குடும்பங்களின் யதார்த்த அனுபவங்களை இந்தப் படம் திரையில் காட்ட இருக்கிறது. தற்போது இயக்குநர் பாலாவின் ’வணங்கான்’ படத்தில் நடித்து வரும் நடிகை ரோஷ்னி பிரகாஷ், இந்தப் படத்தில் தனது குடும்பத்தை விடாமுயற்சியுடன் போராடி முன்னெடுத்து செல்லும் தனம் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவரது கணவராக வரும் கோடி கதாபாத்திரம் குடும்பத்தின் மீது பொறுப்பற்ற ஒருவர். இதில் நடிகர் காளி வெங்கட் நடித்துள்ளார். இந்த…
Read Moreஇனிதே நடந்து முடிந்த உமாபதி ராமையா – ஐஸ்வர்யா அர்ஜூன் திருமணம்
நடிகர் அர்ஜுன் அவர்களின் மகள் ஐஸ்வர்யா அர்ஜூனுக்கும் நடிகர் தம்பி ராமையாவின் மகன் உமாபதி ராமையாவுக்கும் நேற்று (10 ஜூன்) கெருகம்பாக்கத்தில் உள்ள ஶ்ரீ யோக ஆஞ்சநேயர் கோவிலில் திருமணம் இனிதே நடைபெற்றது. விஷால் கார்த்தி துருவா சர்ஜா ஜெகபதி பாபு சமுத்திரகனி K.S. ரவிக்குமார் G.K.ரெட்டி S.R. பிரபு K.E. ஞானவேல்ராஜா விஜய குமார் செந்தில் நாஞ்சில் சம்பத் சாண்டி மாஸ்டர் உள்ளிட்ட பலர் இத்திருமணத்திற்கு வருகை தந்து மணமக்களை வாழ்த்தினர்.
Read Moreதிருவான்மியூரில், தேசிய கைத்தறி & கைவினைப் பொருட்கள் கண்காட்சியை துவக்கி வைத்த கீர்த்தி சாந்தனு
சென்னையில் இந்த கோடை விடுமுறையை குடும்பத்துடன் கொண்டாடவும், வீட்டுக்குப் பெண்களுக்கு குடும்பத்திற்குத் தேவையான பொருட்களை வாங்கும் வகையில், திருவான்மியூரில், தேசிய கைத்தறி & கைவினைப் பொருட்கள் கண்காட்சி இன்று துவங்கியது. சின்னத்திரை புகழ் கீர்த்தி சாந்தனு இந்த கண்காட்சியினை துவக்கி வைத்தார். இந்தியாவின் பல மாநிலங்களிலிருந்தும், முழுமையாக கைகளால் தயாரிக்கப்பட்ட பொருட்கள், ஆடை, அணிகலன்கள், வீட்டுக்கு தேவையான அழகு சாதன பொருட்கள், பேக்ஸ், பர்னிச்சர்கள் என அனைத்து பொருட்களும் இந்த கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ளது. குடும்பத்தோடு அனைவரும் சுற்றிப்பார்ப்பதுடன் ஜாலியாக ஷாப்பிங்கும் செய்யும் வகையில் ஒரு அருமையான வாய்ப்பாக இந்த கண்காட்சி இருக்கும். இந்த கண்காட்சியினை திறந்து வைத்த கீர்த்தி சாந்தனு பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்ததாவது… இந்த அருமையான கண்காட்சியினை திறந்து வைத்ததில் மகிழ்கிறேன். வட இந்தியா சென்று தேடித்தேடி வாங்கும் பொருட்களை, இங்கு நீங்கள் எளிமையாக வாங்கலாம். சுற்றுலா…
Read Moreஹாட் ஸ்டாரில் ஸ்டீரிமிங் ஆக இருக்கும் அரண்மணை – 4
இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார் இந்த ஆண்டின் மிகப்பெரிய தமிழ் பிளாக்பஸ்டரான இயக்குநர் சுந்தர் சியின் “அரண்மனை 4” திரைப்படத்தை ஜூன் 21 முதல் ஸ்ட்ரீமிங் செய்யவுள்ளது. சூப்பர்ஹிட் ஹாரர் காமெடி ஜானரில் அரண்மனை படத்தொடரின் தொடர்ச்சியாக வெளியான இந்தப் படத்தில், சுந்தர் சி உடன் நடிகைகள் தமன்னா, ராஷி கண்ணா மற்றும் நடிகர் யோகி பாபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். கமர்ஷியல் என்டர்டெய்னர்களை ரசிகர்கள் கொண்டாடும் வகையில் உருவாக்குவதில் மாஸ்டர் என்று அறியப்பட்ட சுந்தர் சி மீண்டும் ஹாரர் காமெடியில் ஒரு அழுத்தமான கதையுடன் இப்படத்தைத் தந்துள்ளார். அரண்மனை 4 முந்தைய படங்களின் கதைக்களத்திலிருந்து மாறுபட்டு, ஒரு புத்துணர்ச்சியூட்டும் புதிய கதைக்களத்தைக் கொண்டுள்ளது, இது சரவணன் என்ற வக்கீலைச் சுற்றி அமைக்கப்பட்டுள்ளது. ஒரு நாள் சரவணன் தன் சகோதரியும் அவள் கணவனும்…
Read Moreதளபதி பிறந்தநாளை முன்னிட்டு போக்கிரி ரீ-ரிலிஸ்
கனகரத்னா மூவிஸ் சார்பில் எஸ்.சத்தியராமமூர்த்தி அவர்கள் தயாரிப்பில் நடிகர் மற்றும் இயக்குனர் பிரபுதேவா அவர்களின் இயக்கத்தில் ‘தளபதி’விஜய்,அசின்,வடிவேலு,நாசர்,பிரகாஷ்ராஜ், நெப்போலியன், ஆனந்தராஜ், ஸ்ரீமன், வின்சென்ட் அசோகன் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் நடிப்பில் 2007-ஆம் ஆண்டு ஜனவரி-14 பொங்கல் தினத்தன்று வெளியாகிய போக்கிரி திரைப்படம் பிரம்மாண்ட வெற்றி அடைந்தது நாம் அனைவரும் அறிந்ததே. 2005-இல் வெளியான இவரது முந்தைய திரைப்படமான திருப்பாச்சியின் வசூல் சாதனையை முறியடித்து, அவரது திரை வாழ்வில் ஒரு மைல்கல்லாக அமைந்தது போக்கிரி திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. போக்கிரி திரைப்படத்தில் காதல், ஆக்க்ஷன், நகைச்சுவை மற்றும் விறுவிறுப்பான திரைக்கதை என அனைத்து அம்சங்களும் சிறப்பாக இருந்ததனால் படம் மாபெரும் வெற்றி அடைந்தது.படத்தில் அனைத்து பாடல்களும் சிறப்பாக அமைந்திருந்தன. இத்திரைப்படம் அப்போதே ‘ஷிப்டிங்’ எனப்படும் மறுவெளியீட்டில் வெளியாகி 100-நாட்கள் ஓடி சாதனை படைத்தது. சமீபகாலமாக மறுவெளியீட்டில் வெளியாகும் திரைப்படங்கள்…
Read Moreமாஸ்டர்செஃப் இந்தியா தமிழ் பதிப்பில் வாகை சூடிய ஆகாஷ் முரளிதரன்
மாஸ்டர்செஃப் இந்தியா தமிழ் என்ற மதிப்புமிக்க பட்டத்தை வெல்வதற்கான பரபரப்பான பயணம் ஜூன் 7, 2024 அன்று பரபரப்பான இறுதிப்போட்டியில் முடிவடைந்தது. அற்புதமான சமையல் சவால்கள் மற்றும் சுவையான உணவுகள் நிறைந்த ஒரு சீசனுக்குப் பிறகு, சென்னையைச் சேர்ந்த ஆகாஷ் முரளிதரன் இந்த சீசனின் ஃபைனலில் மாஸ்டர் செஃப் பட்டத்தை வென்றார். போட்டி கடுமையாக இருந்தது, திறமையான ஹோம் குக்குகளான ஜரீனா பானு, வாணி சுந்தர் மற்றும் பவித்ரா நளின் ஆகியோர் முதல் நான்கு இடங்களுக்குள் வந்தனர். ஆகாஷ், மறந்துபோன காய்கறிகளை தனது சமையல் குறிப்புகளில் இணைத்து மீண்டும் அறிமுகம் செய்ததற்காக கொண்டாடப்பட்டு அவரது அர்ப்பணிப்புக்காக புகழ்பெற்றார், சோனி LIV இல் நடந்த முதல் டிஜிட்டல் பிரத்தியேக சீசனில் தனது மாஸ்டர்செஃப் இந்தியா தமிழ் கனவை நனவாக்கி, நடுவர்கள் மற்றும் பார்வையாளர்களின் இதயங்களை வென்றெடுத்துள்ளார். ஆகாஷ் முரளிதரனின்…
Read Moreதம்பி ராமையா மகன் கதை நாயகனாக நடிக்கும் “பித்தல மாத்தி”
ஸ்ரீ சரவணா ஃபிலிம் ஆர்ட்ஸ் தயாரிப்பில் தம்பி ராமையாவின் மகனும் நடிகருமான உமாபதி ராமையா நாயகனாக நடித்துள்ள “பித்தல மாத்தி” திரைப்படம் ஜூன் 14ம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது. இந்த திரைப்படத்தில் உமாபதி ராமையா மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியுள்ளார். மேலும் இப்படம் காமெடி கலந்த காதல் திரைப்படமாக சிறப்பாக தயாரிக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படத்தில் பால சரவணன், தம்பி ராமையா, வித்யூலேகா மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இயக்குநர் மாணிக வித்யா அவர்களுக்கு இப்படம் ஒரு மைல் கல்லாக அமையும். ஸ்ரீ சரவணா ஃபிலிம் ஆர்ட்ஸ் சார்பில் சரவணன் இப்படத்தை தயாரித்துள்ளார். இந்த கால காதலை மையப்படுத்தி சிறந்த பொழுதுபோக்கு படமாக உருவாகியுள்ள இப்படம் ஜூன் 14ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.ஜூன் மாதம் 11ம் தேதி திரு உமாபதி ராமையா வின் திருமணம் நடைபெற உள்ளது. இதே…
Read Moreநண்பர்கள் தினத்தில் டெட்பூல் & வால்வரின் முன்பதிவு
இந்திய ரசிகர்களுக்கு இந்த நண்பர்கள் தினம் மிகவும் சிறப்பானதாக ‘டெட்பூல் & வால்வரி’னோடு அமைய இருக்கிறது. ரசிகர்களிடமிருந்து பெரும் ஆதரவைப் பெற்ற பிறகு மார்வெல் ஸ்டுடியோஸ் டெட்பூல் & வால்வரின் ஐமேக்ஸ் அட்வான்ஸ் புக்கிங்கை நாளை (ஜூன் 8) ஒரு நாள் துவங்க இருப்பதாக அறிவித்துள்ளது. கோடைக்கால கொண்டாட்டமாக ஜூலை 26 ஆம் தேதி திரையரங்குகளில் படம் திரையிடப்பட இருக்கிறது. படத்தில் இருந்து வெளியான முதல் டிரெய்லர், வெளியான 24 மணி நேரத்திலேயே ஆன்லைனில் 365 மில்லியன் முறை பார்க்கப்பட்டு சாதனை படைத்தது. இரண்டாவது டிரெய்லர் இந்த வாரம் வெளியாகி முந்திய சாதனையை முறியடித்துள்ளது. இது LFGக்கான நேரம்! மார்வெல் ஸ்டுடியோஸின் ஐக்கானிக் சூப்பர் ஹீரோ டெட்பூல் மற்றும் வால்வரின் ஆங்கிலம், இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஜூலை 26 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது.
Read Moreசினிமாவில் நுழைந்த பத்திரிக்கையாளர் கோடங்கி ஆபிரகாமின் மகன் “சந்தோஷ் பிரபாகர்”
அதி வேகமான இயந்திர வாழ்க்கையில் சிக்கி பல வித போதைக்கு அடிமையாகி பாதை மாறி செல்லும் இளைஞர்களுக்கு மத்தியில் வெகு சிலரே தங்களின் கனவுகளை நிஜமாக்க ஓடுகிறார்கள். அப்படி காண்கிற கனவுகளில் பிரதானமானது சினிமாவில் நடிகராவது… ஆனால் நிஜத்தில் சினிமாவை எட்டி பிடிப்பது அவ்வளவு எளிதல்ல அதற்கு பல காரணங்கள் உண்டு. திரையுலகில் நுழைவதற்கு கண்டிப்பாக சிபாரிசு, வாரிசு என பல சூழல்களில் பலர் நேபோட்டிசம் அடிப்படையில் ஹீரோவாகவும், இயக்குனராகவும் களத்தில் இறங்கி தோல்வி கண்டு காணாமல் போகும் காலத்தில் ஒரு சாதாரண குடும்பத்தில் இருந்து கல்லூரி படிப்பை முடித்து ஒருவன் சினிமாவை அடைகிறான் என்றால் அவனுக்கு இந்த சினிமா ஏதோ ஒரு இடத்தை வழங்க காத்திருக்கிறது என்றுதான் அர்த்தம். அதிலும் முதல் படத்திலேயே வெள்ளிவிழா நாயகன் மோகன் நடிக்கும் செகண்ட் இன்னிங்க்ஸ் படமான “ஹரா” படத்தில்…
Read More
