அவன் இவன் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமான ஜனனி அதே படத்தில் தனது நடிப்பிற்காக நல்ல பெயரையும் பெற்றார். அதனை தொடர்ந்து தெகிடி, பலூன், ஹாட்ஸ்பாட் உள்ளிட்ட தமிழ் திரைப்படங்களிலும் மலையாள படங்களிலும் நடித்துள்ளார். நடிகை ஜனனிக்கு சென்னையில் பிறந்து வளர்ந்து துபாயில் குடிபெயர்ந்து விமானியாக பணியாற்றி வரும் தனது காதலரான சாய் ரோஷன் ஷாம் என்பவருடன் கடந்த ஆண்டு நிச்சயதார்த்தம் நடந்தது. தற்போது சாய் ரோஷன் ஷாம் – ஜனனி இருவருக்கும் குடும்பத்தினர் முன்னிலையில் மகாபலிபுரம் அருகே உள்ள நட்சத்திர ஓட்டலில் இன்று திருமணம் நடைபெற்றது. இந்நிகழ்வில் இரு வீட்டாரின் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் கலந்துக் கொண்டனர்.
Read MoreCategory: சினிமா செய்திகள்
துரந்தர் பழிவாங்கல்: 11 நாட்களிலேயே முதல் பாகத்தின் வாழ்நாள் வசூலை முறியடித்து சாதனை!
இரண்டாவது வாரயிறுதியிலும் வசூல் வேட்டையை தொடரும் துரந்தர் பழிவாங்கல் படம், உலகளவில் ரூ. 1365 கோடியை வசூலித்து பிரம்மாண்ட சாதனை படைத்துள்ளது. ஜியோ ஸ்டுடியோஸ் & பி62 ஸ்டுடியோஸ் தயாரிப்பில், ஆதித்யா தார் இயக்கத்தில் உருவாகியுள்ள துரந்தர் பழிவாங்கல் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் வரலாற்று சாதனைகளை படைத்து வருகிறது. எவராலும் அசைக்க முடியாத மாபெரும் ஹிந்தி படமாக உருவெடுத்துள்ள இப்படம், உலகளவில் ரூ. 1365 கோடியும், இந்தியாவில் ரூ. 867 கோடியும் வசூலித்து அசத்தியுள்ளது. வெறும் 11 நாட்களிலேயே துரந்தர் முதல் பாகத்தின் மொத்த வாழ்நாள் வசூலையும் முறியடித்து, உலகளாவிய மார்க்கெட்டில் தனது அசாதாரண ஆதிக்கத்தை நிலைநிறுத்தியுள்ளது. படம் வெளியான முதல் நாள் மற்றும் சிறப்பு திரையிடல்களில் இருந்தே, இந்த ஸ்பை-ஆக்ஷன் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் ஒரு சுனாமியை ஏற்படுத்தியது. அதிக வசூல் செய்த சிறப்பு திரையிடல்கள்,…
Read Moreராவடி’ படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்தது
செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனத்தின் S. S. லலித் குமார் தயாரிப்பில், நடிகர்கள் பஸில் ஜோசப் & L. K. அக்ஷய் குமார் நடிக்கும் ‘ராவடி’ படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்தது. சென்னை மற்றும் ஒகேனக்கலில் படப்பிடிப்பு நடந்து முடிந்து, தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்து வருகிறது. நடிகர்கள் பஸில் ஜோசப் – L. K. அக்ஷய் குமார் ஆகியோர் இணைந்து நடிக்கும் தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய இரு மொழிகளில் உருவாகி வரும் ‘ராவடி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் தற்போது முழுமையாக நிறைவடைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இந்த படத்தின் பெரும்பாலான காட்சிகள் சென்னை மற்றும் ஒகேனக்கல் பகுதியில் படமாக்கப்பட்டுள்ளன. இயற்கை அழகுடன் கூடிய ஒகேனக்கல் லொக்கேஷன், படத்திற்கு வித்தியாசமான காட்சியமைப்பை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அறிமுக இயக்குநர் விக்னேஷ் வடிவேல் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த…
Read Moreகலகலப்பான பொலிடிகல் காமெடி கமர்ஷியல் படமான “TN 2026” வரும் ஏப்ரல் 10 ஆம் தேதி திரைக்கு வருகிறது!!
KRG Kannan Ravi Group சார்பில் கண்ணன் ரவி மற்றும் தீபக் ரவி தயாரிப்பில், உமாபதி ராமையா இயக்கத்தில், நட்டி நாயகனாக நடிக்க, பரபரப்பான பொலிடிகல் காமெடி கமர்ஷியல் படமாக உருவாகியுள்ள திரைப்படம் “TN 2026”. இப்படம் வரும் ஏப்ரல் 10 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ளதாக அதிகாரப்பூர்வ போஸ்டர் வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது. அரசியல் பகடி கலந்து, சமூக அக்கறை மிக்க கருத்துக்களுடன் அனைவரும் ரசிக்கும் கமர்ஷியல் படமாக இப்படம் உருவாகியுள்ளது. தற்போது வெளியாகியிருக்கும் போஸ்டரில், நட்டி நடுநாயகமாக மேடையின் மீது கையை உயர்த்தி நிற்க, அருகில் முக்கிய கதாப்பாத்திரங்கள் கோஷமிட, சுற்றிலும் பெரும் கூட்டம் கொடிகள் மற்றும் பகடியான வசன பதாகைகளுடன் சூழ்ந்து நிற்கிறது. பார்த்தவுடன் ஈர்க்கும் இந்த போஸ்டர் இணையம் முழுவதும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. தம்பி ராமையா கதை…
Read Moreதமிழ் மற்றும் மலையாளம் ஆகிய இரு மொழிகளில் உருவான ZEE5 ஒரிஜினல் சீரிஸ் ‘காக்கி சர்கஸ்’ ஏப்ரல் 10 முதல் ஸ்ட்ரீமிங்காகிறது!
தமிழ் மற்றும் மலையாள ZEE5 இன்று தங்களது அடுத்த ஒரிஜினல் சீரிஸான ‘காக்கி சர்கஸ்’ ஐ அறிவித்துள்ளது. வித்தியாசமான நகைச்சுவை, அதிரடி, கற்பனை மற்றும் திரில்லர் அம்சங்கள் கலந்த இந்த ஏழு எபிசோடுகள் கொண்ட சீரிஸ், ஒரு சப்-ஜெயிலை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது. தயாரிப்பு நிலையில் ஒன்ஸ் அப்பான் எ டைம் இன் காயம்குளம் ( ‘Once Upon a Time in Kayamkulam’ ) என்ற பெயரில் உருவான இந்த சீரிஸ், தற்போது ‘காக்கி சர்கஸ்’ என்ற புதிய பெயரில் பார்வையாளர்களை சந்திக்க வருகிறது. இந்த சீரிஸின் தனித்துவமான நகைச்சுவை, விசித்திரமான கதாபாத்திரங்கள் மற்றும் எதிர்பாராத திருப்பங்கள் நிரம்பிய உலகத்தை இந்த தலைப்பு அழகாக பிரதிபலிக்கிறது. இந்த சீரிஸை அமீன் பாரிஃப் எழுதி இயக்கியுள்ளார். ரைஸ் ஈஸ்ட் என்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் சார்பில் ஸ்ரீநிதி சாகர் தயாரித்துள்ளார்.…
Read Moreஇராமாயணத்தின் பாரம்பரியத்தை கொண்டாடும் வகையில் ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுன் கீக் பிக்சர்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி டோமட்சு கோசானோவுக்கு ’சீதா ராம கல்யாணம்’ ஓவியத்தை பரிசளித்தார்!
இந்திய கலாச்சாரத்தின் பெருமையை வெளிப்படுத்தும் வகையில் ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுன் ஜப்பானைச் சேர்ந்த கீக் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டோமாட்சு கோசானோவை சந்தித்து உரையாடினார். இதுமட்டுமல்லாது, ‘சீதா ராம கல்யாணம்’ ஓவியத்தையும் அவருக்கு பரிசாக வழங்கினார். இந்திய கலாச்சாரத்தின் மீது நடிகர் அல்லு அர்ஜூன் கொண்டுள்ள ஆழ்ந்த அன்பையும் மரியாதையையும் இது பிரதிபலிக்கிறது. மேலும் இந்த சந்திப்பின் போது, இந்தியாவின் மிகப் புகழ்பெற்ற இதிகாசங்களில் ஒன்றான இராமாயணம் பற்றிய வரலாற்று மற்றும் ஆன்மீக முக்கியத்துவத்தையும் அல்லு அர்ஜுன் பகிர்ந்து கொண்டார். இராமாயணத்தின் மதிப்பு மற்றும் கலாச்சார முக்கியத்துவம் குறித்தும் அவர் விளக்கமாக எடுத்துரைத்தார். இந்த ஓவிய பரிசளிப்பு தருணம் பாரம்பரியம், ஆன்மீகம் மற்றும் கலை வெளிப்பாடு ஆகியவற்றின் மீது இரு நாடுகளும் கொண்டிருக்கும் ஈடுபாட்டை வெளிப்படுத்தியதோடு, இந்தியா மற்றும் ஜப்பான் நாடுகளுக்கிடையேயான கலாச்சார…
Read Moreஜியோ ஹாட்ஸ்டாரில் வெளியாகும் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி நடிக்கும் ‘முத்து என்கிற காட்டான்’ இணையத் தொடருக்கான பத்திரிகையாளர் சந்திப்பு
‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி நடிப்பில் மணிகண்டன் – பி. அஜித் குமார் இயக்கத்தில் ஜியோ ஹாட் ஸ்டார் டிஜிட்டல் தளத்தில் மார்ச் மாதம் 27 ஆம் தேதி முதல் வெளியாகும் ‘முத்து என்கிற காட்டான்’ பத்து அத்தியாயங்கள் கொண்ட இணையத் தொடரை விளம்பரப்படுத்தும் வகையில் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. தேசிய விருது வென்ற படைப்பாளியான இயக்குநர் மணிகண்டன் மற்றும் இயக்குநரும், படத்தொகுப்பாளருமான பி. அஜித் குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘முத்து என்கிற காட்டான்’ இணையத் தொடரில் விஜய் சேதுபதி, மிலிந்த் சோமன், சுதேவ் நாயர், முத்துக்குமார், சிங்கம் புலி, கலைவாணி பாஸ்கர், வி ஜே பார்வதி, ரிஷா ஜேக்கப், வடிவேல் முருகன், அபி நட்சத்திரா உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். மது நீலகண்டன் மற்றும் சண்முகசுந்தரம் இணைந்து ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த இணையத் தொடருக்கு…
Read More‘ஹபீபி’ திரைப்படத்திற்கு தனது அனுபவம் மூலம் வழிகாட்டி வலுசேர்த்துள்ளார் கஸ்தூரி ராஜா!
ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது ‘ஹபீபி’ திரைப்படம். வலுவான கதை சொல்லல், ஆழமான உணர்வுகள் மற்றும் கலாச்சாரத்தை மையமாகக் கொண்ட கதைக்களத்தோடு மறக்க முடியாத சினிமா அனுபவத்தையும், மொழிகளை தாண்டி பல தரப்பட்ட ரசிகர்களையும் ஈர்க்கும் படமாகவும் இது உருவாகி வருகிறது. ’ஹபீபி’ திரைப்படத்தில், திரைத்துறையில் அனுபவம்மிக்க இயக்குநர் கஸ்தூரி ராஜா இணைந்திருப்பது படத்தின் தரத்தை மேலும் உயர்த்தியுள்ளது. அவரது நீண்டகால அனுபவமும், வழிகாட்டுதலும் ஆதரவும் இந்தப் படத்தை மேலும் செழுமைபடுத்தியுள்ளதோடு படக்குழுவினருக்கும் பெரும் பலமாக மாறியுள்ளது. படத்தில் தனது பங்களிப்பு குறித்து கஸ்தூரி ராஜா பகிர்ந்து கொண்டதாவது, “’ஹபீபி’ திரைப்படத்தில் எனது பங்கு படக்குழுவினரை ஆதரித்து அவர்களை மேலும் வலுப்படுத்தியதுதான். ஒரு நல்ல கதை எப்போதும் தனது பார்வையாளர்களை கண்டடையும் என்று நான் நம்புகிறேன். இந்த திரைப்படத்தில் அந்த உண்மைத்தன்மை…
Read MoreRoll Time Studios* – தயாரிப்பில் ரியோ ராஜ் – சானியா ஐயப்பன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் கோலாகலமாக தொடங்கியது.
Roll Time Studios தயாரிப்பில் புதிய திரைப்படமான “movie title” இன்று சிறப்பு பூஜையுடன் அதிகாரப்பூர்வமாக தொடங்கியது. இந்தத் திரைப்படத்தை கலை அரசு தயாரிக்குகிறார். அறிமுக இயக்குனரான கார்த்திகேயன் BK இப்படத்தினை இயக்குகிறார். இவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உடன் இணை இயக்குனராக பணிபுரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆண் பாவம் பொல்லாதது, ஸ்வீட் ஹார்ட், ஜோ போன்ற வெற்றி படம் மூலம் ரசிகர்களை கவர்ந்த ரியோ ராஜ் கதாநாயகனாக நடிக்கிறார். இருகப்பற்று, சொர்க்கவாசல் படத்தின் நாயகியாக நடித்த சானியா ஐயப்பன் இப்படத்தின் கதாநாயகியாக நடிக்கின்றார். படத்தில் முக்கிய காதாபாத்திரங்களில் அஜூ வர்கீஸ் , சிங்கம்புலி,மிர்ச்சி விஜய், கார்த்திகா. உள்ளிட்டோர் முக்கிய காதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இசையமைப்பாளர் திபு நிநான் தாமஸ் இசை அமைக்கிறார். பிரவீன் போத்தன் பட ஒளிப்பதிவாளராக அறிமுகமாகிறார். மேலும் படத்தொகுப்பை லாரண்ஸ் கிஷோர் மேற்கொள்கிறார். அறிமுக…
Read Moreசாந்தி டாக்கீஸ் தயாரிப்பில் பாரத் – சான்வே மேக்னா நடிக்கும் ‘புரொடக்ஷன் நம்பர் 4’ திரைப்படத்திற்கு இசையமைக்கிறார் நிவாஸ் கே பிரசன்னா!
தமிழ் திரையுலகில் ரசிக்கும்படியான ஹிட் பாடல்களை தொடர்ந்து கொடுத்து வருகிறார் இசையமைப்பாளர் நிவாஸ் கே. பிரசன்னா. தனது தனித்துவமான இசைக்காக கொண்டாடப்படும் அவர் தமிழ் திரையுலகின் இசையுலகில் புத்துயிர் ஊட்டியதாக பாராட்டப்படுகிறார். அவரது இசை ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெறுவதுடன், திரையரங்குகளுக்கு ரசிகர்களை ஈர்க்கும் முக்கிய அம்சமாகவும் உள்ளது. சமீபத்தில் வெளியான ‘தாய் கிழவி’ உள்ளிட்டப் பல வெற்றிப் படங்களைத் தொடர்ந்து இன்னும் பல நம்பிக்கைக்குரிய படங்களில் இசையமைக்கிறார் நிவாஸ் கே பிரசன்னா. அந்த வரிசையில், தயாரிப்பாளர் அருண் விஸ்வா தலைமையிலான சாந்தி டாக்கீஸ் நிறுவனத்தின் அடுத்த தயாரிப்பான ’புரொடக்ன் நம்பர் 4’ திரைப்படத்திற்கு அவர் இசையமைப்பாளராக இணைந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தரமான படங்களைத் தயாரித்து வரும் சாந்தி டாக்கீஸ் நிறுவனம், ஹரிஹர சுதன் அழகிரி இயக்கத்தில் உருவாகும் இந்தப் படத்தை அறிவித்ததில் இருந்தே ரசிகர்கள் மத்தியில்…
Read More