மார்ச் 6 ஆம் தேதி வெளியாகும் ‘யார்ரா அந்த பையன் நான் தான் அந்த பையன்’!

அறிமுக இயக்குநர் பால்ராஜ் எழுதி இயக்கி, கதையின் நாயகனாக நடித்திருப்பதோடு, பி.ஆர் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரித்திருக்கும் படம் ‘யார்ரா அந்த பையன் நான் தான் அந்த பையன்’. வித்தியாசமான தலைப்போடு, சமுதாயத்தில் நடக்கும் பல்வேறு பிரச்சனைகள் குறித்து பேசியிருக்கும் கமர்ஷியல் திரைப்படமாக உருவாகியுள்ள இப்படம் வரும் மார்ச் 6 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த நிலையில், இப்படத்தின் பத்திரிகையாளர்கள் சிறப்பு காட்சி சமீபத்தில் நடைபெற்றது. இதில் பங்கேற்று படம் பார்த்த பத்திரிகையாளர்கள் படத்தை வெகுவாக பாராட்டியுள்ளனர். குறிப்பாக சிறிய முதலீட்டில் தயாரிக்கப்பட்டிருந்தாலும், தற்போதைய காலகட்டத்தில் சமுதாயத்திற்கு தேவையான கருத்தை சொல்லியிருப்பதோடு, அதை ரசிகர்களுக்கு பிடிக்கும் வகையில் கமர்ஷியலாக கையாண்ட விதம் படத்தை ரசிக்க வைப்பதாக, தெரிவித்துள்ளனர். பத்திரிகையாளர்கள் பாராட்டை தொடர்ந்து உற்சாகமடைந்த படத்தின் தயாரிப்பாளர், இயக்குநர் மற்றும் கதையின் நாயகனான பால்ராஜ் படம்…

Read More

மார்ச் 6 முதல் ZEE5-ல் ‘காந்தி டாக்ஸ்’ உலக டிஜிட்டல் வெளியீடு!

இயக்குநர் கிஷோர் பாண்டுரங் பெலேகர் இயக்கத்தில், விஜய் சேதுபதி, அரவிந்த் சாமி, அதிதி ராவ் ஹைதாரி நடித்த விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட இந்த திரைப்படம், மார்ச் 6 முதல் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள மொழிகளில் ZEE5-ல் வெளியாகிறது திரையரங்குகளில் சிறப்பான வரவேற்பைப் பெற்ற திரைப்படமான ‘காந்தி டாக்ஸ்’, தற்போது அதன் உலக டிஜிட்டல் வெளியீட்டை மார்ச் 6 முதல் ZEE5-ல் கொண்டாடவுள்ளது. இந்த படம் அதன் சக்திவாய்ந்த மற்றும் உலகளாவிய கதையம்சத்தை அதிகமான பார்வையாளர்கள் அனுபவிக்கவும் வகையில் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள மொழிகளில் ஒளிபரப்பாகிறது. லிங்க் – https://www.youtube.com/watch?v=FRTJ8TWC78g Zee Studios, Moviemill மற்றும் Kyoorius நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படம், அதன் துணிச்சலான கதை சொல்லல், வலுவான நடிப்பு மற்றும் மொழியைத் தாண்டிய தனித்துவமான திரைப்பட அணுகுமுறைக்காக பரவலாக பாராட்டப்பட்டது. கிஷோர்…

Read More

சூர்யா நடிக்கும் ‘விஸ்வநாத் & சன்ஸ்’ இணையத்தை கலக்கும் அசத்தலான இரண்டு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் !!

நடிகர் சூர்யா நடிக்கும் அடுத்த படம் #சூர்யா46 தற்போது அதிகாரப்பூர்வமாக ‘விஸ்வநாத் & சன்ஸ்’ என பெயரிடப்பட்டுள்ளது. பெயரே சொல்வது போல், இப்படம் ஒரு அழகான, உணர்ச்சிபூர்வமான குடும்பக் கதையாக உருவாகியுள்ளது. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்களில் சூர்யா ஒரு குழந்தையுடன் தோன்றும் காட்சி, ரசிகர்களுக்கு பழைய நினைவுகளை எழுப்பும் வகையில் நெகிழ்ச்சியும், நம்பிக்கையும் கலந்த இனிய உணர்வை தருகிறது. முன்னதாக ‘வாத்தி’ மற்றும் ‘லக்கி பாஸ்கர்’ போன்ற வெற்றிப் படங்களை வழங்கிய இயக்குநர் வெம்கி அட்லூரி (Venky Atluri) இந்தப் படத்தை இயக்குகிறார். உணர்வுப்பூர்வமான கதை சொல்லலில் வல்லவரான இவர், இந்தப் படத்திலும் மறக்க முடியாத அனுபவத்தை வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தில் மமிதா பைஜு, ராதிகா சரத்குமார், ரவீனா டாண்டன் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர். குடும்பத்தோடு கொண்டாடும் அசத்தலான திரை அனுபவமாக…

Read More

ஓ பட்டர் ப்ளே போன்ற கதையை நான் கேட்டதே இல்லை- தயாரிப்பாளர்

ஓ பட்டர்ஃப்ளை திரைப்படம், ஆன்ட்ஹில் சினிமா நிறுவனத்தின் முதல் தயாரிப்பாகும். பாலம்பூர் டாக்கீஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கப்படும் இப்படத்திற்கு, துல்சியா நிறுவனம் கன்சல்டிங் தயாரிப்பாளராக பணியாற்றியுள்ளது. ஒரு வலுவான மற்றும் திறமையான கூட்டணியில் இப்படம் உருவாகியுள்ளது. அறிமுக இயக்குநர் விஜய் ரங்கநாதன் இப்படத்தை எழுதி இயக்கியுள்ளார். நிவேதிதா சதிஷ், சிபி சந்திரன், அதுல், நாசர், லட்சுமி பிரியா சந்திரமௌலி மற்றும் கீதா கைலாசம் உள்ளிட்ட திறமையான நட்சத்திர பட்டாளம் இப்படத்தில் நடித்துள்ளது. உறவுகளின் மென்மையையும், கணிக்க முடியாத தன்மையையும் ஒரு த்ரில்லர் பாணியில் பேசும் இப்படம் வரும் மார்ச் 6ம் தேதி திரையரங்குளில் வெளியாக உள்ளது. இந்நிலையில் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் கலந்து கொண்டு பேசினர். *ஒளிப்பதிவார் வேதராமன் சங்கரன்* அவர்கள் பேசும்போது, ஓ பட்டர்ஃப்ளை படத்தை மிகவும் சிரமப்பட்டு எளிதாக…

Read More

விஸ்வராகம் பாகம் 2 : இசை நினைவஞ்சலி

காலத்தைத் தாண்டி நம்முடன் பயணிக்கும் சில குரல்கள் உண்டு. அவை நம்முள் ஒரு தாக்கத்தை மட்டும் உருவாக்குவது அல்ல, வாழ்நாள் துணையாகவே மாறிவிடும். நம் ஆனந்தம், துயரம், சொல்ல முடியாத ஏக்கம் — எல்லாவற்றிலும் அவை ஒலித்துக்கொண்டே இருக்கும். வாணி ஜெயராம் அவர்களின் குரல் அப்படிப்பட்ட ஒரு அரிய பொக்கிஷம். அவரின் மறைவின் மூன்றாம் ஆண்டு நினைவாக, விஸ்வராகாம் – பாகம் 2 ஒரு பணிவான நினைவஞ்சலியாக சமர்ப்பிக்கப்படுகிறது. இசையில் அவர் வெளிப்படுத்திய அதே நயமும், உண்மையும், இந்த ஆல்பத்தின் ஒவ்வொரு நொடிகளிலும் பிரதிபலிக்கின்றன. 🎼 விஸ்வராகம் பாகம் 2 : இசை நினைவஞ்சலி இந்த இசைத் தொகுப்பின் மையத்தில், தென்னிந்திய சினிமாவின் உணர்ச்சிப் பிம்பத்தை உருவாக்கிய மகா இசையமைப்பாளர் M. S. விஸ்வநாதன் (MSV) அவர்களுக்கு மரியாதை செலுத்தப்பட்டுள்ளது. தலைமுறைகளைத் தாண்டி வாழும் அவரது மெட்டுகள்,…

Read More

‘ஜமா’ புகழ் பாரி இளவழகன் – ரம்யா ரங்கநாதன் நடிக்கும் ‘அன்பே டயானா’ டைட்டில் டீசர் வெளியீடு… ரசிகர்களின் அமோக வரவேற்பு!

வடசென்னை லவ் & காமெடி களேபரம் – ‘அன்பே டயானா’ டைட்டில் டீசர் ட்ரெண்டிங்! பெரம்பூர் பின்னணியில் பரபரக்கும் காதல் கதை – ‘அன்பே டயானா’டைட்டில் டீசர் வெளியீடு! மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் (Million Dollar Studios) மற்றும் நியோ கேசில் கிரியேஷன்ஸ் (Neo Castle Creations) இணைந்து தயாரித்துள்ள ‘அன்பே டயானா’ (Anbe Diana) திரைப்படத்தின் அசத்தலான டைட்டில் டீசர் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. யுவராஜ் கணேசன், சத்யா கரிகாலன் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படத்தில், ‘ஜமா’ புகழ் பாரி இளவழகன் கதாநாயகனாக நடித்ததுடன், கதை, திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார். அவருக்கு ஜோடியாக ரம்யா ரங்கநாதன் கதாநாயகியாக நடித்துள்ளார். தமிழ் சினிமாவில் தனித்துவமான கதைகளைக் கொண்டு வெற்றி கண்ட மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ், ‘குட் நைட்’, ‘லவ்வர்’, ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ போன்ற படங்களுக்குப்…

Read More

டெல்லியில் நடைபெற்ற அகில இந்திய கான்பரன்சில் பங்கேற்ற நடிகர் செளந்தரராஜா

தமிழ் சினிமாவில் நாயகனாகவும் இணைநாயகனாகவும் கவனம் பெற்ற நடிகர் செளந்தரராஜா, தன்னுடைய மண்ணுக்கும் மக்களுக்கும் அறக்கட்டளை மூலம் கடந்த சில ஆண்டுகளாக இயற்கை, சுற்றுச்சூழல் மற்றும் விவசாயம் தொடர்பான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். மரங்கள் நடுதல், ஏரி மற்றும் குளங்களை தூர்வாருதல், தூய்மை பணிகள் மேற்கொள்ளுதல், இயற்கை விவசாயிகளை ஊக்குவித்தல் உள்ளிட்ட பல்வேறு சமூக சேவைகளை தொடர்ந்து செய்து வருகிறார். இதன் தொடர்ச்சியாக, டெல்லியில் நடைபெற்ற Vishwa Yuvak Kendra அமைப்பு நடத்திய NGO–CSR கான்பரன்சில் தமிழ்நாட்டைச் சேர்ந்த நடிகர் செளந்தரராஜா மூன்று நாட்கள் பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த என்.ஜி.ஓ. அமைப்புகள் கலந்து கொண்டன. மேலும், சுற்றுச்சூழல் தொடர்பான கருத்தரங்குகள் மற்றும் பயிற்சி நிகழ்ச்சிகளில் அமைச்சர், பன்னாட்டு நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகள் (CEO) மற்றும் தொழில் வல்லுநர்கள் உள்ளிட்ட…

Read More

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இயக்குநர் மணிகண்டன் இணையும் முத்து என்கிற காட்டான் சீரிஸின் டீசர் வெளியானது !!

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்துள்ள முத்து என்கிற காட்டான் வெப் சீரிஸின் டீசர் சமீபத்தில் வெளியாகி சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. ஜியோ ஸ்டார் வெளியீடாக உருவாகியுள்ள இந்த சீரிஸ் விரைவில் OTT தளத்தில் வெளியாக உள்ளது. டீசரில் , மூன்று வருடமாக புகார் ஏதும் வராததால் மூடப்படும் தருவாயில் இருக்கும் ஒரு சிறிய கிராமத்தின் காவல் நிலையம், ஒரு மனிதனின் வெட்டப்பட்ட தலையால் உயிர் பெறுகிறது. “முத்துவின் தலை’. யார் இந்த முத்து? அவனது உடல் எங்கே? என்ற தேடல் ஏராளமான ஆச்சரியங்களும் மர்மங்களும் நிறைந்ததாக உள்ளது. மர்மம் கலந்த காட்சிகள் மற்றும் வித்தியாசமான கதாபாத்திர வடிவமைப்பு என பார்வையாளர்களின் கவனத்தை வலுவாக ஈர்க்கின்றது. குறிப்பாக, விஜய் சேதுபதி தலை புதிய தோற்றத்தில் காட்சியளிப்பது ரசிகர்களிடையே ஆவலை அதிகரித்துள்ளது. இந்த சீரிஸின் கதை…

Read More

ராக்கிங் ஸ்டார் ‘ யாஷ் நடிக்கும் ‘டாக்ஸிக் எ ஃபேரி டேல் ஃபார் கிரோன் அப்ஸ்’ ( Toxic A Fairy Tale for Grown Ups) படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ‘தபாஹி ‘ மார்ச் 2 ஆம் தேதி வெளியாகிறது

‘தபாஹி’ – ஃபர்ஸ்ட் சிங்கிள் போஸ்டர்: யாஷ் – கியாரா இணைந்து மார்ச் 2 ஆம் தேதி டாக்ஸிக் உலகின் ஆர்வத்தையும், விருப்பத்தையும் கொண்டு வருகிறார்கள். டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் கிரோன் அப்ஸ்’ ( Toxic A Fairy Tale for Grown Ups) படத்தின் முதல் பாடல் மார்ச் 2 ஆம் தேதி வெளியிடப்படுகிறது ‘தபாஹி’ ஃபர்ஸ்ட் சிங்கிள் போஸ்டர்: டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் கிரோன் அப்ஸ்’ ( Toxic A Fairy Tale for Grown Ups) படத்தில் தீவிரமான மற்றும் உணர்ச்சிமிக்க இசை அத்தியாயமாக இருக்கும் என்பதை உறுதி செய்கிறது. ‘ராக்கிங் ஸ்டார்’ யாஷ் மற்றும் கியாரா அத்வானி காற்று வீசும் கடலோரத்தில் அன்போடு இருக்கும் காட்சி.. ஒரு மெட்டு கேட்கப்படுவதற்கு முன்பே நெருப்பு, ஆசை மற்றும்…

Read More

திரைத்துறையில் இரண்டாம் அத்தியாயத்தை இப்போது தான் தொடங்கியுள்ளேன் – வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் கலாச்சார விழாவில் நடிகர் தனுஷ்

வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் கடந்த இரண்டு நாட்களாக ‘ வேல்ஸ் நக்ஷத்ரா 2026’ என்ற கலாச்சார விழா நடைபெற்றது.  தேசிய விருது பெற்ற நடிகர் தனுஷ்  சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இந்த விழாவில் 140 கல்லூரிகளைச் சேர்ந்த 1,150 மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர். மொத்தம் ரூ.5 லட்சம் பரிசுத்தொகை, கோப்பைகள் மற்றும் பல்வேறு விருதுகள் வழங்கப்பட்டன. முதல் நாள் நிகழ்வில் இயக்குநர் பிரேம் குமார், டூரிஸ்ட் ஃபேமலி திரைப்பட இயக்குநர் அபிஷன் ஜீவந்த், நடிகர் கென் கருணாஸ், பிரபல யூடியூபர் வி.ஜெ.சித்து மற்றும் ஹர்ஷத் கான், இசையமைப்பாளர்  சாய் அப்யங்கர், பாடகி ஷிவாங்கி கிருஷணகுமார் உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர். இரண்டாம் நாள் நிகழ்ச்சிகளில்  நடிகர் தனுஷ் நடிகைகள் பிரியங்கா மோகன் மற்றும் கல்யாணி பிரியதர்ஷன்  ஆகியோரும் பங்கேற்றனர். நடிகர் தனுஷ் விழாவில் பேசுகையில் “நமக்கு கிடைத்துள்ளதை பெரிய ஆசிர்வாதமாக…

Read More