Zee Studios வழங்க, MIG Production & Studios இணைந்து தயாரித்துள்ளது.

ஒரு தீவிரமான சமூக – தேசிய கதையம்சத்தை மையமாகக் கொண்ட புதிய திரைப்படமான ‘தி இந்தியா ஸ்டோரி’ படத்தில் காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே இணைந்து நடித்துள்ளனர். இப்படம் வரும் ஜூலை 24ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தை சேட்டன் DK இயக்க, சாகர் B ஷிண்டே எழுதி தயாரித்துள்ளார். இந்த படம் தேசிய அளவில் தாக்கம் ஏற்படுத்தும் முக்கியமான பிரச்சினையை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது. ‘தி இந்தியா ஸ்டோரி’ The India Story (அல்லது The India Story: Slow Poison) என்ற பெயரிலும் அறியப்படும் இப்படம், குறிப்பாக பூச்சிக்கொல்லி விவசாயத்தில் இரசாயனங்களின் தவறான பயன்பாடு மற்றும் அதனைச் சுற்றியுள்ள சர்ச்சைகளை வெளிச்சமிட்டு காட்டுகிறது. ஒரு குடும்பத்தின் கதையை மட்டுமே கூறாமல், பொதுமக்களின் உடல்நலம் மற்றும் பாதுகாப்பை பாதிக்கும் மிகப் பெரிய பிரச்சினையாக இந்த…

Read More

பிரைம் வீடியோ தனது தமிழ் ஒரிஜினல் சஸ்பென்ஸ் டிராமா சீரிஸான ‘எக்ஸாம்’ (Exam) சீரிஸின் உலகளாவிய வெளியீட்டு தேதியை அறிவித்துள்ளது — மே 15 முதல் ஸ்ட்ரீமாகிறது

வால்வாட்சர் ஃபிலிம்ஸ் (Wallwatcher Films) நிறுவனத்தின் சார்பில், கிரியேட்டிவ் தயாரிப்பாளர்களான புஷ்கர் மற்றும் காயத்ரி தயாரிப்பில், தேசிய விருது பெற்ற இயக்குநர் A.சற்குணம் எழுதி இயக்கியுள்ள இந்த சஸ்பென்ஸ் டிராமாவில், துஷாரா விஜயன் மற்றும் அதிதி பாலன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும், அப்பாஸ் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார் ‘எக்ஸாம்’ சீரிஸ் மே 15 முதல் இந்தியா மற்றும் உலகம் முழுவதும் 240-க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் பிரைம் வீடியோவில் ஒளிபரப்பாகும். இந்த சீரிஸ் தமிழில் வெளியாவதுடன், தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டும், ஆங்கிலம் உட்பட 15 மொழிகளில் சப் டைட்டில்களுடன் வெளியாகும் சென்னை, இந்தியா—ஏப்ரல் 27, 2026—இந்தியாவின் மிகவும் பிரபலமான பொழுதுபோக்கு தளமான பிரைம் வீடியோ, தனது அடுத்த தமிழ் ஒரிஜினல் சீரிஸான ‘எக்ஸாம்’ சீரிஸ் மே 15…

Read More

*’இரண்டு வானம்’ திரைப்படத்தின் உணர்ச்சிமிகு பயணத்தை வெளிப்படுத்தும் கவித்துவமான ‘வெள்ளிச்சுடரே’ பாடல்!*

சில பாடல்கள் ஆன்மாவை இதமாக வருடி, மனதிற்கும் காதுகளுக்கும் இனிய இசையை கொடுக்கும். அப்படியான ஒரு இதமான பாடலாக வெளியாகியுள்ளது ‘வெள்ளிச்சுடரே’. விஷ்ணு விஷால், மமிதா பைஜு நடிப்பில், திபு நினன் தாமஸ் இசையில், மத்ராரேஷியின் வரிகளில் ‘இரண்டு வானம்’ திரைப்படத்திலிருந்து வெளியாகியுள்ள இந்தப் பாடல், ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது. கபில் கபிலனின் இனிமையான குரலும் பாடலுக்கும் இதம் சேர்க்கிறது. ஒவ்வொரு வரியும் நெஞ்சை தொடும் உணர்வுகளால் நிரம்பி, கேட்பவரை அதன் உலகிற்குள் இழுத்துச் செல்கிறது. இந்தப் பாடலின் சிறப்பே இசை, வரிகள் மற்றும் குரல் என அனைத்தும் ஒன்றோடொன்று அற்புதமாக கலந்திருப்பதுதான். பாடலின் ஆரம்பத்தில் மிதமான வேகத்தில் கிதார் இசை ஒலிக்க, பாடல் வரிகளும் குரலும் காதுகளுக்கு இனிமை சேர்க்கின்றன. பின்னர், இசை மெதுவாக அதிகமாகி உச்சத்துக்குச் செல்லும் போது, நாட்டுப்புற இசைக் கூறுகளும்…

Read More

நடிகர் அஜித் குமார் பிறந்தநாளை ஸ்டைலா, ஸ்வாக்காக கொண்டாட மே 1 அன்று மீண்டும் வெளியாகிறது ‘பில்லா’ திரைப்படம்!

நடிகர் அஜித் குமார் நடிப்பில் வெளியான தமிழ் திரையுலகின் ஐகானிக் ப்ளாக்பஸ்டர் திரைப்படமான ‘பில்லா’, அவரது பிறந்தநாளை முன்னிட்டு மே 1ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் மீண்டும் திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியாகிறது. இந்த மறுவெளியீட்டை எம்.டி. பி. ஆண்டனி தாஸ் வழங்குகிறார். மாநிலம் முழுவதும் பட வெளியீட்டை சசிகலா புரொடக்ஷன் மேற்பார்வை செய்கிறது. இன்றைய பார்வையாளர்களுக்கான அனுபவத்தை மேம்படுத்தும் வகையில், இந்த படம் 7.1 டால்பி டிஜிட்டல் ஒலி அமைப்புடனும் புதிய போஸ்டர் வடிவமைப்புகளுடன் வெளியாகிறது. 2007ஆம் ஆண்டு வெளியான ’பில்லா’ திரைப்படம் அப்போதே மிகப்பெரிய வெற்றி பெற்று, நடிகர் அஜித் குமாரின் திரை வாழ்க்கையில் முக்கியமான மைல்கல்லாக அமைந்தது. அஜித் குமாரின் ஸ்டைல் மற்றும் ஸ்கிரீன் பிரசென்ஸை மறுவரையறை செய்த இந்த படம், அவரை மிகவும் ஸ்டைலிஷான புதிய தோற்றத்தில் ரசிக்க வைத்தது. இன்றும் அதன்…

Read More

ஜான் கொக்கேன், திலீபன், பவன், அர்ஜுன் சிதம்பரம், விவேக் பிரசன்னா முக்கிய வேடங்களில் நடிக்கும் ‘பிளாஸ்ட்’ திரையரங்குகளில் விரைவில் வெளியாகிறது

முன்னணி நட்சத்திரங்கள் மற்றும் இயக்குநர்களுடன் மெகா பட்ஜெட் படங்கள், அறிமுக இயக்குநர்கள் மற்றும் நடிகர்களுடன் புதிய டிரெண்டை தொடர்ந்து உருவாக்கும் படங்கள் என அடுத்தடுத்து முத்திரை பதித்து வரும் ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் ‘கோட்’, ‘லவ் டுடே’, ‘டிராகன்’ மெகா வெற்றிப் படங்களை தொடர்ந்து, 28வது படைப்பாக கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ், கல்பாத்தி எஸ். சுரேஷ் தயாரிப்பில் ‘பிளாஸ்ட்’ திரைப்படத்தை உருவாக்கியுள்ளது. ‘ஆக்ஷன் கிங்’ அர்ஜுன், அபிராமி, ப்ரீத்தி முகுந்தன் முதன்மை வேடங்களில் நடிக்கும் இப்படத்தை பிரதீப் ரங்கநாதனின் உதவி இயக்குநர் சுபாஷ் கே ராஜ் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார். ‘பிளாஸ்ட்’ திரைப்படத்தின் தலைப்பும் முதல் பார்வை போஸ்டரும் இன்று வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது. திரைப்படம் குறித்து பேசிய இயக்குநர் சுபாஷ் கே ராஜ், “அனைத்து தரப்பு ரசிகர்களும்…

Read More

வாரி வாரி பாடல் மூலம் ரசிகர்களை கவர்ந்த பாப் நட்சத்திர பாடகி தீ (DHEE)

உலகளாவிய கவனத்தை ஈர்த்து வரும் புகழ்பெற்ற ஆஸ்திரேலியா-தமிழ் பாடகி மற்றும் பாடலாசிரியரான தீ (Dhee), ‘வாரி வாரி’ என்ற புதிய, துணிச்சலான மற்றும் உணர்ச்சி மிக்க தனிப்பாடலுடன் மீண்டும் ரசிகர்களை சந்தித்துள்ளார். வோண்டாகர்ள் மற்றும் திவா சாவேஜ் ஆகியோருடன் இணைந்து வெளியான “Ancient Seed” மற்றும் எட் ஷீரனுடன் இணைந்து இடம்பெற்ற “Don’t Look Down” போன்ற சர்வதேச அளவிலான பாடல்களில் தொடர்ந்து பங்கேற்று வந்த அவர், தற்போது இந்த புதிய பாடலை வெளியிட்டுள்ளார். மேலும், இந்த ஆண்டின் தொடக்கத்தில் கிராமி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட பாடலாசிரியர் சாவன் கோடேச்சா, ரிபப்ளிக் ரெக்கார்ட்ஸ் நிறுவனத்துடன் இணைந்து நிறுவிய விஸ்வா ரெக்கார்ட்ஸ் (Visva Records US) நிறுவனத்துடன் தீ (Dhee) ஒப்பந்தம் செய்துள்ளார். புகழ்பெற்ற இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையிலும், கவிஞர் விவேக் எழுதிய வரிகளுடனும், விஸ்வா ரெக்கார்ட்ஸுடன் இணைந்து,…

Read More

R.S இன்ஃபோடெயின்மென்ட் தயாரிப்பில் ‘மண்டாடி’ படப்பிடிப்பு நிறைவு – பின்னணி பணிகள் முழு வேகத்தில்!

பிரபல தயாரிப்பு நிறுவனமான RS Infotainment நிறுவனத்தின் தலைவர் எல்ரெட் குமார் தயாரிக்கும் மண்டாடி திரைப்படத்தின் படப்பிடிப்பு, நீண்ட மற்றும் சவாலான படப்பிடிப்புக்குப் பிறகு வெற்றிகரமாக நிறைவு பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் உள்ளிட்ட கடலோர பகுதிகளில், கடினமான சூழ்நிலைகளில் இந்தப் படம் படமாக்கப்பட்டுள்ளது. கதையின் ஆழத்தையும், அதன் இயல்பான ஆற்றலையும் உண்மைத்தன்மையுடன் வெளிப்படுத்தும் வகையில், படக்குழு மிகுந்த உழைப்புடன் பணியாற்றியுள்ளது. பெருமளவிலான ஆக்ஷன் காட்சிகள், உணர்ச்சி மிகுந்த தருணங்கள் மற்றும் படகு பந்தய காட்சிகள் ஆகியவை மிகத் துல்லியமாக உருவாக்கப்பட்டுள்ளன. இயக்குநர் மதிமாறன் புகழேந்தி இயக்கியுள்ள மண்டாடி, தனித்துவமான விளையாட்டு பின்னணியில் அமைந்த, வலுவான கதை சொல்லலுடன் உருவாகியுள்ளது. படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில், படம் தற்போது பின்னணி (Post Production) பணிகளுக்கு நகர்ந்துள்ளது. நடிகர் சூரி இந்தப் படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். உள்ளடக்கமிக்க திரைப்படங்களில் தனது பயணத்தை…

Read More

*பியாண்ட் பிக்சர்ஸ் (Beyond Pictures) தயாரிப்பில், கவின் ஹீரோ – புதிய இயக்குனருடன் வித்தியாசமான குடும்ப படம்!*

தமிழ் திரைப்பட உலகில் தொடர்ந்து புதிய முயற்சிகளை மேற்கொண்டு வரும் பியாண்ட் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம், தனது இரண்டாவது தயாரிப்பை மிகுந்த உற்சாகத்துடன் அறிவித்துள்ளது. இப்படத்தை சுஷ்மா சினி ஆர்ட்ஸ் (Sushma Cine Arts) இணைந்து வழங்குகிறது இந்த புதிய திரைப்படத்தில் இளம் நடிகர் கவின் ஹீரோவாக நடிக்கிறார். இது அவர் நாயகனாக நடிக்கும் 11வது திரைப்படமாகும் என்பது குறிப்பிடத்தக்கது. காதல், நகைச்சுவை என பல்வேறு கதாபாத்திரங்களில் தன்னை நிரூபித்துள்ள கவின், இந்த முறை முழுக்க குடும்பத்தை மையமாகக் கொண்ட கதையில் நடிக்க உள்ளார். இந்த திரைப்படம் குடும்ப உணர்வுகளை மையமாகக் கொண்டு உருவாக இருப்பதாக கூறப்படுகிறது. சமகால வாழ்க்கை முறையையும், உறவுகளின் நுணுக்கங்களையும் பேசும் இப்படம், எல்லா தரப்பினரையும் கவரும் வகையில் அனைத்து கமர்ஷியல் அம்சங்களுடன் உருவாகவுள்ளது. மேலும், இப்படத்தின் படப்பிடிப்பு மே மாத இறுதியில்…

Read More

சன் நெக்ஸ்ட் ( SUN NXT) தனது முதல் பிரத்யேக நிகழ்ச்சியான ‘ஜாலி ஓ ஜிம்கானா- Jolly Oh Gymkhana ‘ ஏப்ரல் 30 தேதியன்று அறிமுகப்படுத்துகிறது. இது முழு குடும்பத்தினருக்கான ஒரு கலகலப்பான… வெளிப்படையான மற்றும் இயல்பான நட்சத்திர பேட்டி நிகழ்ச்சியாகும்

சன் நெக்ஸ்ட் ( SUN NXT) தனது பிரத்யேக நிகழ்ச்சியான ஜாலி ஓ ஜிம்கானா ( Jolly Oh Gymkhana)வை ஏப்ரல் 30 ஆம் முதல் அறிமுகப்படுத்துவதன் மூலம் நட்சத்திரங்களை மையமாகக் கொண்ட தனது பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளின் தரத்தை அடுத்த கட்டத்திற்கு உயர்த்த தயாராக உள்ளது. இது சாதாரண ஒரு பேட்டி நிகழ்ச்சி மட்டுமல்ல. உங்களுக்கு பிடித்த நட்சத்திரங்களை அவர்களின் மிகவும் இயல்பான மற்றும் தன்னிச்சையான தருணங்களில்.. முன் தயாரிப்பு ஏதுமின்றி உண்மையான மனிதர்களாக பார்க்கும் ஒரு அரிய வாய்ப்பாகும். இதில் கலகலப்பான விளையாட்டுகள், சுவராசியமான செயல்பாடுகள் மற்றும் வேடிக்கையான கேலி பேச்சுகளும் இடம்பெறுகின்றன. திரையில் இந்த நட்சத்திரங்களை ரசிக்கும் நீண்ட கால சன் டிவி ரசிகர்களுக்கும், இவர்களின் இதுவரை காணாத புதிய பரிணாமத்தைக்காண ஆவலுள்ள இளம் தலைமுறை ரசிகர்களுக்கும் ஏற்ற ஒரு நிகழ்ச்சியாக இது அமைகிறது.…

Read More

“காந்தி கிருஷ்ணாவின் படங்கள் நாவலை படிப்பது போன்ற அனுபவத்தை பெரிய திரையில் தரும்… ‘பிரேக்ஃபாஸ்ட்’ திரைப்படம் அதுபோன்ற ஒரு பயணம்” – ஜி.வி. பிரகாஷ் குமார்!

பன்முகத் திறமையும் தொடர் வெற்றிகளும்தான் திரைத்துறையில் ஒருவர் நீடித்து நிலைக்க முக்கிய காரணம். அந்த வகையில் இசையமைப்பாளர், நடிகர் என இரண்டு துறைகளிலும் வெற்றிகரமாக வலம் வருபவர் ஜிவி பிரகாஷ். பல மொழிகளிலும் பல்வேறு வகை படங்களிலும் தொடர்ந்து பிஸியாக இருக்கும் ஜிவி பிரகாஷ், இயக்குநர் காந்தி கிருஷ்ணாவுடன் மீண்டும் ‘பிரேக்ஃபாஸ்ட்’ படத்தில் இணைந்திருக்கிறார். இதற்கு முன்பு இவர்கள் இணைந்து பணிபுரிந்த ‘ஆனந்த தாண்டவம்’ படத்திற்குப் பிறகு தற்போது இவர்கள் இணைந்திருக்கும் ‘பிரேக்ஃபாஸ்ட்’ திரைப்படம் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. இப்படம் ஏப்ரல் 24ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. படத்தில் பணிபுரிந்த அனுபவம் குறித்து ஜிவி பிரகாஷ் குமார் பகிர்ந்து கொண்டதாவது, “காந்தி கிருஷ்ணா சாருடன் மீண்டும் இணைந்து பணிபுரிந்தது ஸ்பெஷலான அனுபவம். ’ஆனந்த தாண்டவம்’ என் வாழ்க்கையில் முக்கியமான கட்டத்தில் வந்த படம். அந்தப்…

Read More