தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமான ஜனனி அதே படத்தில் தனது நடிப்பிற்காக நல்ல பெயரையும் பெற்றார். அதனை தொடர்ந்து தெகிடி, பலூன், ஹாட்ஸ்பாட், விதி மதி உள்ளிட்ட தமிழ் திரைப்படங்களிலும் மலையாள படங்களிலும் நடித்துள்ளார். இந்த நிலையில் சென்னையில் பிறந்து வளர்ந்து துபாயில் குடிபெயர்ந்து விமானியாக பணியாற்றி வரும் தனது காதலரான சாய் ரோஷன் ஷாம் என்பவரை திருமணம் செய்து கொள்ளப் போவதாக நிச்சயதார்த்த புகைப்படங்களை பகிர்ந்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகை ஜனனி தெரிவித்துள்ளார். கடந்த ஏப்ரல் 11 ஆம் தேதி சென்னையில் இவரது நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ள நிலையில், இந்த ஆண்டு இறுதிக்குள் இருவரும் திருமணம் செய்து கொள்ளப் போவதாக தெரிவித்துள்ளனர். https://www.instagram.com/p/DIgfP7NSSn9/?igsh=MW1yZjk3ejR3bW0wbA==
Read MoreCategory: சினிமா செய்திகள்
”என்னடி செஞ்ச என்னோட நெஞ்ச” – மையல் படத்திலிருந்து மெலோடி இசையை விரும்பும் இசைநாயகர்களுக்கான இனிய இசை விருந்தாக வெளியாகியுள்ளது!
மெல்லிசை, மனதை வருடும் குரல்கள், கவிதையாய் பேசும் வரிகள்… இவை அனைத்தும் இணையும் போது, இசை நாயகர்களின் உள்ளங்களை தீண்டும் ஒரு மந்திரம் உருவாகிறது. கூட மேல கூட வச்சு, கண்கள் இரண்டால் போன்ற இனிமை நிரம்பிய பாடல்களின் வரிசையில் இப்போது இணையப்போகும் இன்னொரு மர்ம மாயம் – மையல் படத்தில் இருந்து வெளிவந்துள்ள “என்னடி செஞ்ச என்னோட நெஞ்ச”. இந்த சுகாத இசை அனுபவத்தை இசையமைப்பாளர் அமர்கீத் தனது நுட்பமான இசை பாணியால் உயிரூட்டுகிறார். பாடலுக்குச் சுவை கூட்டும் விதமாக, சத்யப்ரகாஷ் மற்றும் வந்தனா ஸ்ரீனிவாசன் ஆகியோரின் மென்மையான குரல்கள் பாடலின் உணர்வுகளை நம் உள்ளங்களில் நேரடியாகப் பதிய செய்கின்றன. மிக எளிமையாக அமைக்கப்பட்ட இசை பின்னணி, பாடலின் உணர்வுபூர்வ தன்மையை தெளிவாக வெளிப்படுத்துகிறது. ஏகாதசி எழுதிய வரிகள், எளிமை மற்றும் அழகிய உணர்வுகளின் இணைவு.…
Read More50 மில்லியன் ஸ்ட்ரீமிங் நிமிடங்களைக் கடந்து சாதனை படைத்த “கிங்ஸ்டன்” திரைப்படம்
தமிழின் முன்னணி ஓடிடித் தளமான ZEE5 ல் சமீபத்தில் வெளியான கிங்ஸ்டன் திரைப்படம், வெளியான வெறும் 48 மணி நேரத்திற்குள், 50 மில்லியன் ஸ்ட்ரீமிங் நிமிடங்களைக் கடந்து சாதனை படைத்துள்ளது. இப்படம் கடற்கரை கிராம பின்னணியில், அசத்தலான விஷுவல்களுடன், ஃபேண்டஸி அம்சங்கள் நிறைந்த, புதுமையான ஹாரர் படமாக அனைவரையும் கவர்ந்துள்ளது. இயக்குநர் கமல் பிரகாஷ் இயக்கத்தில், இப்படத்தில் ஜிவி பிரகாஷ் மற்றும் திவ்யா பாரதி, இளங்கோ குமரவேல், சபுமோன் அப்துசமத் மற்றும் சேதன் கடம்பி ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர். கிங்ஸ்டன் திரைப்படம், துணிச்சலான கடத்தல்காரரான கிங்ஸ்டன் (ஜி.வி. பிரகாஷ்) என்பவனின் கதையை விவரிக்கிறது. உள்ளூர் ரௌடியிடம் வேலை பார்க்கும் கிங்ஸ்டன், ரௌடி கிராமத்தை ஏமாற்றுவதை அறிந்து, அவனுக்கு எதிராகக் களமிறங்குகிறான். தன் கிராமத்தை மீட்கும் பொருட்டு, மீன் பிடிக்க முடியாமல், பல வருடங்களாகச் சபிக்கப்பட்ட கடற்பகுதிக்குள், தன்…
Read More45” திரைப்பட டீசர் வெளியீட்டு விழா !
SP Suraj Production சார்பில் சுமதி.உமா ரமேஷ் ரெட்டி மற்றும் எம் ரமேஷ் ரெட்டி தயாரிப்பில், கன்னட சக்கரவர்த்தி டாக்டர் சிவராஜ்குமார், ரியல் ஸ்டார் உபேந்திரா, இராஜ் பி ஷெட்டி இணைந்து நடிக்க, பிரபல இசையமைப்பாளர் அர்ஜுன் ஜான்யா இயக்கத்தில், மிரட்டலான ஃபேண்டஸி ஆக்சன், திரில்லராக உருவாகியுள்ள கன்னட திரைப்படம் 45. கன்னட திரையுலகின் மூன்று முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து மிரட்ட, மிகப்பெரும் பொருட்செலவில் பிரம்மாண்ட ஆக்சன் படமாக இப்படம் உருவாகியுள்ளது. பெரும் எதிர்பார்ப்பைக் கிளப்பியிருக்கும் இப்படம், தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளிலும் வெளியாகிறது. இப்படத்தின் தமிழ் பதிப்பின் டீசர் வெளியீட்டு விழா சென்னையில் படக்குழுவினர் கலந்துகொள்ள, பத்திரிகை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது. இந்நிகழ்வினில் இயக்குநர் அர்ஜுன் ஜன்யா பேசியதாவது… அனைவருக்கும் வணக்கம் சென்னைக்கு நான் ஃபேன் பாய். 25 வருடமாக இசையமைப்பாளராக வேலை…
Read Moreசோனி பிக்சர்ஸ் என்டர்டெயின்மென்ட் இந்தியா வழங்கும்* *”பேடிங்டன் இன் பெரு”
மைக்கேல் பாண்ட் உருவாக்கிய பேடிங்டன் எனும் கரடியின் கதாபாத்திரத்தை அடிப்படையாகக் கொண்ட, லைவ் ஆக்ஷன் அனிமேஷன் நகைச்சுவை படமான ‘பேடிங்டன் (2014)’ பாக்ஸ் ஆஃபிஸில் வெற்றி பெற்றது. அதன் வெற்றியின் அடிப்படையில், ‘பேடிங்டன் 2 (2017)’ என இரண்டாம் பாகமும் எடுக்கப்பட்டது. முதலிரண்டு பாகங்களையும் பால் கிங் இயக்கினார். முதல் படம், பெருவின் காடுகளிலிருந்து லண்டன் தெருக்களுக்கு இடம்பெயர்ந்து, ப்ரெளன் குடும்பத்தினரால் தத்தெடுக்கப்பட்ட ஒரு மென்மையான மற்றும் கண்ணியமான கரடியைப் பற்றியது. அடுத்த பாகத்தில், செய்யப்படாத குற்றத்திற்காக பேடிங்டன் சிறையில் அடைக்கப்படுகிறது. விடுதலை அடைய தானொரு நிரபராதி என நிரூபிக்க வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகிறது. தற்போது அப்படவரிசையில் மூன்றாவது பாகமாக ‘பேடிங்டன் இன் பெரு’ எனும் படம் வெளியாகிறது. பேடிங்டனின் அத்தையைக் கண்டுபிடிக்க ப்ரெளன் குடும்பம் பெருவியன் காடுகளுக்குள் செல்கிறது. இப்படத்தின் மூலமாக இயக்குநராக அறிமுகமாகிறார் டூகுல்…
Read Moreநாளை முதல் படப்பிடிப்புக்கு அவுட்டோர் யூனிட் அனுப்பமாட்டோம்!
அவுட்டோர் யூனிட் என்பது கேமரா, லைட்ஸ், ஜெனரேட்டர், ஜிம்மி, பேந்தர், கிரிப்ஸ் மற்றும் ஒளிப்பதிவுக்கு தேவையான அனைத்து உபகரணங்களையும் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு வாடகைக்கு கொடுக்கும் ஒரு தனி முதலாளி அமைப்பாகும். கிட்டத்தட்ட 40 வருடங்களுக்கு மேலாக இந்த தொழிலை திரைப்படத் தயாரிப்பாளர்களுடன் இணைந்து தொழில் செய்து, தற்போது 100 உறுப்பினர்களுடன் தென்னிந்திய சினிமா அண்ட் டிவி அவுட்டோர் யூனிட் அசோசியேஷன் வளர்ச்சி அடைந்துள்ளது. இந்த சங்கத்துக்கும், தென்னிந்திய தொழிலாளர் சம்மேளனத்துக்கும் எவ்வித தொழில் ஒப்பந்தமும் கிடையாது. ஆயினும் திரைத்துறையின் நலனுக்காக தென்னிந்திய தொழிலாளர் சம்மேளனத்தில் அங்கம் வகிக்கும், லைட்மேன் சங்கம் மற்றும் டெக்னிசியன் சங்கம் ஆகிய இரு சங்க உறுப்பினர்களுக்கும் வேலைவாய்ப்பு அளித்து வருகிறது. தொழில் யாருக்கும் பாதிப்புமின்றி நடந்து கொண்டிருந்த நேரத்தில் தொழிலாளர் சம்மேளத்தின் நிர்வாகிகளாக திரு R.K. செல்வமணி, திரு சுவாமிநாதன்…
Read Moreஹரீஷ் கல்யாணின் #HK15 பட அறிவிப்பு போஸ்டர் வெளியானது !!
IDAA PRODUCTIONS தயாரிப்பில், இயக்குநர் வினீத் வரபிரசாத் இயக்கத்தில், நடிகர் ஹரீஷ் கல்யாணின் 15 வது படமாக உருவாகும் #HK15 படத்தின், அதிராகப்பூர்வ அறிவிப்பு போஸ்டர், தமிழ்ப் புத்தாண்டையொட்டி வெளியாகியுள்ளது. வித்தியாசமான களங்களில் தனித்துவமான கதாப்பத்திரங்களைத் தேர்ந்தெடுத்து நடித்து வரும் ஹரீஷ் கல்யாண், லப்பர் பந்து படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு, இப்படத்தில் முற்றிலும் மாறுபட்ட ஆக்சன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக ப்ரீத்தி முகுந்தன் நடித்துள்ளார். வடசென்னை வாழ் இளைஞர்களின் வாழ்க்கையை மையப்படுத்தி ஹைப்பர் கான்செப்டில், வித்தியாசமான ஆக்சன் திரில்லராக இப்படம் உருவாகியுள்ளது. லிஃப்ட் படம் மூலம் கவனம் ஈர்த்த, இயக்குநர் வினீத் வரபிரசாத் இப்படத்தை இயக்கியுள்ளார். IDAA PRODUCTIONS பெரும் பொருட்செலவில் பிரம்மாண்ட படைப்பாக இப்படத்தைத் தயாரித்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு, சென்னை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் நடத்தப்பட்டுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு, இன்னும்…
Read Moreபுதிய சங்கத்தின் மூலம் உதவி இயக்குனர்களின் உரிமைகளை மீட்டெடுப்போம் – சங்கத்தின் தலைவர் முஜீப்
தமிழ்நாடு திரைப்பட உதவி இயக்குநர்கள் சங்கத்தின் உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் நிகழ்வு சென்னை சாலிகிராமத்தில் உள்ள சங்க அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் திரைப்பட இயக்குனர்கள் சற்குணம், ரா வெங்கட், சரவண சக்தி ஆகியோர் கலந்துகொண்டு, உதவி இயக்குநர்களுக்கு அடையாள அட்டையை வழங்கினார்கள். இந்நிகழ்வினில்.. செய்தியாளர்களிடம் பேசிய சங்கத்தின் தலைவர் முஜீப்…. இந்த சங்கத்தில் 400க்கும் மேற்பட்டோர், உறுப்பினர்களாக இருக்கிறார்கள். சினிமா தொடங்கி நூற்றாண்டுகள் கடந்தும் திரைப்படத்துறையில் உதவி இயக்குனர்களின் அடையாளமும், அங்கீகாரமும், உரிமையும் முழுமையாக கிடைக்காமல் உள்ளது.இந்த சங்கத்தின் மூலம் உதவி இயக்குனர்களின் உரிமைகள் மீட்டெடுக்கப்படும். தொழிலாளர் சம்மேளத்துடன் இணைந்து செயல்பட வேண்டும் என்பது எங்களின் நோக்கம் என்றார்.
Read Moreபிரபுதேவா நடிப்பில் சீனாவில் படமாக்கப்பட்ட ” எங் மங் சங்
வாசன் விஷுவல் வென்ச்சர்ஸ் நிறுவனம் தமிழ் சினிமாவின் அடையாளமாக விளங்கி வருகிறது. ஆர்.வி. உதயகுமார் உள்ளிட்ட பல திறமையான இயக்குனர்களையும், நடிகர், நடிகைகளையும் அறிமுகப்படுத்திய நிறுவனமாக விளங்கிவருகிறது. ஆர்யா நடிப்பில் பாலா இயக்கத்தில் “ நான் கடவுள் ”, ஆர்யா, நயன்தாரா, சந்தானம் நடிப்பில் “ பாஸ் என்கிற பாஸ்கரன் ”, ஜெயம் ரவி நடித்த “நிமிர்ந்து நில் ” போன்ற சூப்பர் ஹிட் படங்கள் உட்பட 50 க்கு மேற்பட்ட படங்களை தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போது வாசன் விஷுவல் வென்ச்சர்ஸ் நிறுவனம் நடன புயல் பிரபுதேவாவின் வித்தியாசமான நடிப்பில், “ எங் மங் சங் ” என்ற படத்தை தயாரித்துள்ளது. படத்தின் பெரும்பாலான காட்சிகள் சீனாவில் படமாக்கப்பட்டுள்ளது.17ஆம் நூற்றாண்டில் நடப்பது போன்ற ஒரு கதை அமைப்பில் தொடங்கி, 1980 இல் நடக்கும் கதை, அப்போது…
Read Moreநேச்சுரல் ஸ்டார்’ நானி – இயக்குநர் சைலேஷ் கொலானு – வால் போஸ்டர் சினிமா – யுனானிமஸ் புரொடக்ஷன்ஸ் – கூட்டணியில் உருவான ‘ ஹிட் : தி தேர்ட் கேஸ் ‘ படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது
‘நேச்சுரல் ஸ்டார்’ நானி நடிப்பில் மே மாதம் முதல் தேதியன்று வெளியாகும் திரைப்படமான ‘ஹிட் : தி தேர்ட் கேஸ்’ படத்தில் மிகவும் தீவிரமான மற்றும் ஆக்ரோஷமான அவதாரத்தை வெளியிட உள்ளார். இந்த திரைப்படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. நானி ஒரு ப்ளாக் பஸ்டர் ஹிட் பட வரிசையில் வேகமாக பயணிப்பதால் மட்டுமல்ல.. கிளிம்ப்ஸ், டீசர், பாடல்கள் மற்றும் விளம்பரப்படுத்தும் ஸ்டைலுக்கு கூட பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது. இயக்குநர் டாக்டர் சைலேஷ் கொலானு இயக்கத்தில் வால் போஸ்டர் சினிமா நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் பிரசாந்த் திபிர்னேனி, நானியின் சொந்தப் பட நிறுவனமான யுனானிமஸ் புரொடக்ஷனுடன் இணைந்து தயாரித்திருக்கும் இந்த திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. நானி ஏற்றிருக்கும் கதாபாத்திரமான அர்ஜுன் சர்க்காருக்கு கடுமையான தொனியை அமைக்கும் வகையில், ஒரு இறுக்கமான காட்சியுடன் முன்னோட்டம் தொடங்குகிறது. அவர், ‘ஒரு…
Read More