நிச்சயதார்த்த புகைப்படங்களை பகிர்ந்து காதலரை அறிமுகப்படுத்தினார் நடிகை ஜனனி!

தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமான ஜனனி அதே படத்தில் தனது நடிப்பிற்காக நல்ல பெயரையும் பெற்றார். அதனை தொடர்ந்து தெகிடி, பலூன், ஹாட்ஸ்பாட், விதி மதி உள்ளிட்ட தமிழ் திரைப்படங்களிலும் மலையாள படங்களிலும் நடித்துள்ளார்.

இந்த நிலையில் சென்னையில் பிறந்து வளர்ந்து துபாயில் குடிபெயர்ந்து விமானியாக பணியாற்றி வரும் தனது காதலரான சாய் ரோஷன் ஷாம் என்பவரை திருமணம் செய்து கொள்ளப் போவதாக நிச்சயதார்த்த புகைப்படங்களை பகிர்ந்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகை ஜனனி தெரிவித்துள்ளார். கடந்த ஏப்ரல் 11 ஆம் தேதி சென்னையில் இவரது நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ள நிலையில், இந்த ஆண்டு இறுதிக்குள் இருவரும் திருமணம் செய்து கொள்ளப் போவதாக தெரிவித்துள்ளனர்.

https://www.instagram.com/p/DIgfP7NSSn9/?igsh=MW1yZjk3ejR3bW0wbA==

Related posts

Leave a Comment