பாட்னாவில் நடந்த ‘புஷ்பா 2: தி ரூல்’ டிரெய்லர் வெளியீட்டு நிகழ்ச்சியின் மூலம் தென்னிந்திய நடிகர் அல்லு அர்ஜூன் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியதை ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களும் மகிழ்ச்சியுடன் கொண்டாடினர். கிட்டத்தட்ட ஒரு மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்கள் நிகழ்வை கண்டுகளித்தனர். இந்த நிகழ்வு ‘புஷ்பா’ திரைப்படம் எந்தளவிற்கு ரசிகர்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்பதை உணர்த்துகிறது. தனது நடிப்பால் மட்டுமல்லாது திறமையான நடனம் மூலமும் புஷ்பா கதாபாத்திரத்தின் மூலமும் உலகம் ரசிகர்களைக் கவர்ந்திருக்கிறார் நடிகர் அல்லு அர்ஜூன். படத்திற்கான புரோமோஷன்களின் ஒரு பகுதியாக கடந்த நவம்பர் 24 அன்று ‘புஷ்பா2’ படக்குழு சென்னை வந்தடைந்தது. தாம்பரம், சாய்ராம் கல்லூரியில் நடைபெற்ற இந்த ப்ரீ ரிலீ ஈவண்ட்தான் இப்போது ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளாகியுள்ளது. படத்தை விநியோகிக்கும் ஏஜிஎஸ் எண்டர்டெயின்மெண்ட் நிகழ்வு நடக்கும் ஏரியா முழுவதும் ‘புஷ்பா2’ தீம்…
Read MoreCategory: சினிமா செய்திகள்
திருச்சியை பூர்வீகமாகக் கொண்ட டெல் கே.கணேசனின் ‘டிராப் சிட்டி’ மூலம் ஹாலிவுட்டில் தடம் பதிக்கிறார் யோகி பாபு
திருச்சியை பூர்வீகமாகக் கொண்ட டெல் கே.கணேசன், கைபா பிலிம்ஸ் பேனரில் தடைகளைத் தகர்த்து இந்தியத் திறமைகளை உலகப் பார்வையாளர்களுக்கு அறிமுகப்படுத்தி, ஹாலிவுட்டில் முக்கிய ஆளுமையாக உருவெடுத்துள்ளார். ரசிகர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தும் திரைப்படங்களைத் தயாரிப்பதில் தொடங்கி சிறந்த இந்திய மற்றும் மேற்கத்திய சினிமாவை ஒன்றிணைப்பது வரை, கணேசனின் பயணம் தமிழ்நாடு மற்றும் ஹாலிவுட் இடையே ஒரு கலாச்சாரப் பாலத்தை உருவாக்குவதற்கான அவரது அர்ப்பணிப்பை எடுத்துக்காட்டுகிறது. கணேசனின் முயற்சிகள் சர்வதேச அரங்கில் இந்திய திறமைகளை தொடர்ந்து வெளிச்சம் போட்டுக் காட்டி வருகின்றன. பிரபல தமிழ் நடிகர் நெப்போலியனை ‘டெவில்ஸ் நைட்: டான் ஆஃப் தி நைன் ரூஜ்’ படத்தின் மூலம் ஹாலிவுட்டில் அறிமுகப்படுத்திய அவர், புகழ்பெற்ற தமிழ் இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி. பிரகாஷ் குமாரையும் ஹாலிவுட்டிற்கு தனது திரைப்படங்கள் மூலம் அழைத்து சென்றார். அவரது அடுத்த படைப்பான ‘டிராப்…
Read Moreரோட்டரி கிளப் ஆஃப் மெட்ராஸ் நார்த் வழங்கிய குளோபல் ஐகான் விருது – டத்தோஸ்ரீ டாக்டர் எம். சரவணனுக்கு சிறப்பான அங்கீகாரம்
மலேசிய நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் மலேசிய இந்திய காங்கிரஸின் துணைத் தலைவரான டத்தோஸ்ரீ டாக்டர் எம். சரவணனின் வெற்றிப் பயணத்தில் மற்றுமொரு மைல்கல்லாக, ரோட்டரி கிளப் ஆஃப் மெட்ராஸ் நார்த் அவருக்கு மதிப்புமிக்க குளோபல் ஐகான் விருதை வழங்கி கௌரவித்தது. நவம்பர் 24ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) சென்னையில் உள்ள எத்திராஜ் கல்லூரியில் நடைபெற்ற டான்ஸ் ஆஃப் டிஸ்ட்ரிக்ட் சீசன் 12 நிகழ்ச்சியில் அவருக்கு விருது வழங்கப்பட்டது. விழாவில் ரோட்டரி சங்க தலைவர் ஷபீர் நசீர், செயலர் மேரி அமுதா, டிஓடி தலைவர் ஜோசப் ராஜா, வொகேஷனல் இயக்குநர் பிரியதர்ஷினி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பிராந்திய ஒத்துழைப்பை வளர்த்தல், ஒற்றுமையை ஊக்குவித்தல், எல்லைகளை தாண்டி ஆதரவற்றோரை மேம்படுத்துதல் உள்ளிட்டவற்றில் டாக்டர் சரவணனின் முன்மாதிரியான தலைமைத்துவத்திற்காகவும், அரசியல், ஆன்மிகம் மற்றும் இலக்கியம் போன்ற துறைகளில் பன்முக ஆளுமைக்காகவும் இந்த…
Read Moreசீர் வாசகர் வட்டம் வெளியீடு: உலக சினிமாவின் பொக்கிஷம் ரூ.200க்கு!
முன்பதிவு அறிவிப்பு. முதல் 5,000 படிகள் மட்டும். 100 இடங்களில் முன்பதிவு. #உலக_சினிமா #செழியன் #மக்கள்_பதிப்பு #சீர்_வாசகர்_வட்டம் வாசக தோழமைகளுக்கு வணக்கம். சீர் வாசகர் வட்டத்தின் மக்கள் பதிப்பு நூல்களின் வரிசையில் ஒரு மகுடமாக இயக்குநர் – ஒளிப்பதிவாளர் செழியனின் ‘உலக சினிமா’ வர உள்ளது. விகடனில் தொடராக வெளிவந்து இலட்சக்கணக்கான வாசகர்களின் சினிமா ரசனையை மாற்றிய தொடர் அது. தமிழ் வாசகர்களுக்கு உலக சினிமாவைப் பற்றிய நல்ல திறப்பை ஏற்படுத்திய 93 நல்ல படங்களைப் பற்றிய கட்டுரைகளையும் 93 நல்ல சிறுகதைகள் என்றுகூட சொல்லலாம். மூன்று பாகங்களாக நூல்வடிவம் பெற்று லட்சம் படிகளுக்கு மேல் விற்பனையான நூல் இப்போது சீர் வாசகர் வட்டம் வெளியீடாக 760 பக்கங்களில் கெட்டி அட்டையில் ஒரே நூலாக 200 ரூபாய் விலையில் நல்ல தரத்தோடு வெளிவர உள்ளது. சாத்தியமில்லாத இந்த…
Read Moreஅஜித் மேனன் – அனில் வர்மா இணைந்த ட்ரூ விஷன் ஸ்டோரீஸ் வெளியீடு!
இந்திய அளவில் முன்னணியில் உள்ள எழுத்தாளரான அஜித் மேனன் மற்றும் பாடலாசிரியர் அனில் வர்மா ஆகியோர் இணைந்து தொகுத்த ட்ரு விஷன் ஸ்டோரீஸ் எனும் புத்தக வரிசையில் ஆறாம் தொகுதியான ‘ஹிடன் அஜெண்டாஸ் ஷுட் -ரெடி’ எனும் நூல் வெளியிடப்பட்டிருக்கிறது. இதற்காக சென்னையின் மையப் பகுதியில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது இந்த விழாவில் ‘ஏசியா வில்லே’ எனும் ஊடக நிறுவனத்தின் உரிமையாளரும், மூத்த ஊடகவியலாளருமான சசிகுமார் எழுத்தாளர்கள், அஜித் மேனன்- சுனில் வர்மா, தயாரிப்பாளர்கள் ராம்குமார் கணேசன், திரிநாத் மல்ஹோத்ரா, டி. சிவா தனஞ்செயன் உள்ளிட்ட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். ‘ஹிடன் அஜெண்டாஸ்’ என்பது வாசகர்களால் பரபரப்பாக வாசிக்கப்பட்ட புத்தகமாகும். இந்த புத்தகத்தில் இடம் பெறும் கதாபாத்திரங்கள் முதல் பக்கத்திலேயே வாசகர்களின் மனதை கவர்ந்து விடுகின்றன. ஒவ்வொரு பக்கத்தையும் வாசிக்கும் போதே…
Read Moreகானா அரசரின் 50 வருட திரைத்துரை மற்றும் தன் பிறந்த நாளான இன்று ” சிங்கிளா இருந்தா சிங்கம் மச்சான் ” எனும் பாடலை வெளியிட்டுள்ளார்
சென்னை புரொடக்க்ஷன்ஸ் எழில் இனியன் தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ” காத்து வாக்குல ஒரு காதல் “.கதையின் நாயகனாகவும் மாஸ் ரவி நடித்து இயக்கி உள்ளார். கதா நாயகிகளாக லட்சுமி பிரியா, மஞ்சுளா, மற்றும்சூப்பர் சுப்பராயன், சாய் தீனா, சத்யா, கல்லூரி வினோத், ஆதித்யா கதிர், தங்கதுரை, பவர் ஸ்டார், கபாலி விஸ்வந்த்,மேனக்சன் மிப்பு மொசக்குட்டி பிரியதர்ஷினி, பிரியங்கா ரோபோ சங்கர் மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் ” சிங்கிளா இருந்தா சிங்கம் மச்சான் ” எனும் பாடலை சிறப்பாக பாடியும், தன் பிறந்த நாளான இன்று தேனிசை தென்றல் தேவா வெளியிடுள்ளார் இப்பாடலில் இயக்குநரும் நடிகருமான மாஸ் ரவி, சஞ்சனா சிங், தங்கதுரை, ஆதித்யா கதிர், பவர் ஸ்டார் நடனமாடியுள்ளனர். தற்போது இப்படத்தின் லிரிக் வீடியோவை இன்று ( 20.11.2024 ) 5 ஸ்டார்…
Read Moreவடசென்னை கதைக் களத்தில் உருவாகி இருக்கும் படம் ‘சொர்க்கவாசல்’!!
இயக்குநரும், முன்னணி நடிகருமான ஆர். ஜே. பாலாஜி முதன்மை வேடத்தில் நடித்திருக்கும் ‘சொர்க்கவாசல்’ திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதற்காக சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் நடைபெற்ற நிகழ்வில் முன்னணி நட்சத்திர இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மற்றும் பிரபல இசையமைப்பாளர் அனிருத் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு முன் னோட்டத்தை தொடங்கி வைத்தார். அறிமுக இயக்குநர் சித்தார்த் விஸ்வநாத் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘சொர்க்கவாசல்’ படத்தில் ஆர். ஜே. பாலாஜி, இயக்குநரும் நடிகருமான செல்வராகவன், ஒளிப்பதிவாளரும் நடிகருமான நட்டி என்கிற நட்ராஜ், நடிகை சானியா ஐயப்பன், ஷஃரப் உதீன், ஹக்கீம் ஷா, பாலாஜி சக்திவேல், கருணாஸ், ரவி ராகவேந்திரா, அந்தோணி தாசன், சாமுவேல் ராபின்சன், எழுத்தாளர் ஷோபா சக்தி, மௌரிஷ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். பிரின்ஸ் ஆண்டர்சன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு கிறிஸ்டோ சேவியர் இசையமைத்திருக்கிறார். சர்வைவல்…
Read Moreபூஜையுடன் தொடங்கிய யோகிபாபு படம்
முன்னணி காமெடி நடிகராக வலம் வரும் யோகி பாபு, கதையின் நாயகனாக நடிக்கும் படங்களும் மிகப்பெரிய வெற்றி பெற்று வருகிறது. அந்த வகையில், யோகி பாபு கதையின் நாயகனாக நடிக்கும் புதிய படத்திற்கு ‘பரலோகத்தில் இருக்கும் எங்கள் பிதாவே’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. குடும்பத்துடன் பார்க்க கூடிய கலகலப்பான கமர்ஷியல் திரைப்படமாக உருவாகும் இப்படத்தை ஒர்க்கிங் ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் (Working House Productions) நிறுவனம் சார்பில் அருண்குமார் தயாரிக்கிறார். இதுவரை மக்கள் பார்க்காத புதிய தோற்றத்தில் கதையின் நாயகனாக நடிக்கும் யோகி பாபுவு க்கு ஜோடியாக சிம்ரன், செளமியா, பிரியா ஆகிய மூன்று கதாநாயகிகள் நடிக்கிறார்கள். இவர்களுடன் பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். கதை, திரைக்கதை, வசனம் எழுதி முருகேஸ்வர காந்தி இயக்கும் இப்படத்திற்கு கெளதம் ஒளிப்பதிவு செய்கிறார். ஜெப்ரி இசையமைக்கிறார்.…
Read Moreஜாலியோ ஜிம்கானா படத்தில் பிரபுதேவாவுடன் நடனமாடியது மகிழ்ச்சியான அனுபவம்” நடிகை மடோனா செபாஸ்டியன் நெகிழ்ச்சி
நடிகை மடோனா செபாஸ்டியன் தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் முன்பே பிரேமம் படத்தில் ‘செலின்’ என்ற அற்புதமான கதாபாத்திரத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் தனக்கென தனி இடம் பிடித்தார். எவர்கிரீன் ஃபீல் குட் ரொமாண்டிக் திரைப்படமான ‘காதலும் கடந்து போகும்’ படத்தில் அவரது அற்புதமான நடிப்பு கோலிவுட்டில் பாராட்டுகளை வாங்கித் தந்தது. அதேபோல, தனுஷின் ’பா. பாண்டி’ திரைப்படத்தில் அவரது நடிப்பு விமர்சகர்கள் மத்தியில் பாராட்டப்பட்டது. நடிகர் விஜயின் ‘லியோ’ படத்தில் அவரது ஆக்ஷன் அவதாரம் பார்வையாளர்களை ஆச்சரியப்படுத்தியது. இப்போது நடிகர் பிரபுதேவாவுடன் அவர் நடித்திருக்கும் ‘ஜாலி ஓ ஜிம்கானா’ திரைப்படம் வெளியீட்டிற்குத் தயாராக உள்ளது. நடிகை மடோனா செபாஸ்டியன் கூறும்போது, “இதுவரை தமிழ் சினிமாவில் நான் நடித்த கதாபாத்திரங்கள் தனித்துவமானவை. ஆனால், ஒரு கமர்ஷியல் படத்தின் கதாநாயகியாக நான் நடித்திருப்பது இதுவே முதல்முறை. பல…
Read Moreகாட்சிகளை புதிய கோணத்தில் உருவாக்குவதில் ஒப்பற்றவர் இயக்குனர் கார்த்திக் நரேன்” – நடிகர் சரத்குமார்
நடிகர் சரத்குமாரின் ஒப்பற்ற நடிப்புத்திறன் அவர் நடிக்கும் படங்களின் தரத்தை இன்னும் ஒருபடி மேலே உயர்த்தும். நடிகர்கள் அதர்வா முரளி மற்றும் ரஹ்மானுடன் இணைந்து இவர் நடித்திருக்கும் ‘நிறங்கள் மூன்று’ திரைப்படம் நவம்பர் 22 அன்று திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. படம் குறித்து நடிகர் சரத்குமார் கூறும்போது, ”நான் இத்தனை வருடங்களில் பல இயக்குநர்களுடன் பணிபுரிந்திருக்கிறேன்அவர்களின் தனித்தன்மையில் ஈர்க்கப்பட்டிருக்கிறேன். அந்த வகையில், புதிய காட்சிகளை உருவாக்குவதில் கார்த்திக் நரேன் திறமையானவர். காட்சிகளை தொடர்ந்து மேம்படுத்தி வருவதோடு நடிகர்களை வித்தியாசமான பரிமாணத்தில் வெளிப்படுத்த தன்னால் முடிந்தவரை சிறந்ததை கொடுப்பார். மனிதர்களின் இருண்ட பக்கம் மற்றும் ஆழமான உணர்வுகளை ‘நிறங்கள் மூன்று’ திரைப்படம் காட்டும். இதற்கு மேல் நான் சொன்னால் கதையின் சுவாரஸ்யம் கெட்டு விடும். ஆனால், பார்வையாளர்களுக்கு திரையரங்குகளில் சிறந்த அனுபவம் கிடைக்கும் என்பதை மட்டும் என்னால்…
Read More