மில்லியன் ஸ்டுடியோ புரொடக்ஷன்ஸ், எம்.எஸ். மன்சூர் வழங்கும் குகன் சென்னியப்பன் இயக்கத்தில், நடிகர்கள் சத்யராஜ் & வசந்த் ரவி நடித்துள்ள ’வெப்பன்’ திரைப்படம் மே மாதம் வெளியாகிறது! குகன் சென்னியப்பன் இயக்கத்தில் நடிகர் சத்யராஜ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சயின்ஸ் ஃபிக்ஷன் த்ரில்லர் படமான ’வெப்பன்’ மே மாதம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது என்பதை படக்குழு அறிவித்துள்ளது. படத்தின் எழுத்தாளர்-இயக்குநர் குகன் சென்னியப்பன் கூறும்போது, ”இந்த மாதம் உலகம் முழுவதும் உள்ல திரையரங்குகளில் வெளியாக ’வெப்பன்’ திரைப்படம் தயாராகி வருகிறது என்பதை அறிவிப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இந்தப் படத்தில் எல்லோருமே சிறப்பான உழைப்பைக் கொடுத்துள்ளோம். நிச்சயம் அனைவருக்கும் படம் பிடிக்கும் என்றும் நம்புகிறேன். சூப்பர் ஹ்யூமன் எலிமெண்ட்டை அடிப்படையாகக் கொண்டு சயின்ஸ் ஃபிக்ஷன் ஆக்ஷன் த்ரில்லராக ‘வெப்பன்’ படத்தை உருவாக்கியுள்ளோம். படத்தின் ஆரம்பத்தில் இருந்து…
Read MoreCategory: சினிமா செய்திகள்
விமர்சன ரீதியாகப் பாராட்டுக்களைப் பெற்ற “ஹாட் ஸ்பாட்” மே 17 முதல் அமேசானில்
மே 17 முதல், அமேசான் ப்ரைம் மற்றும் ஆஹா ஓடிடி தளங்களில், ப்ளாக்பஸ்டர் ஹிட் திரைப்படம் “ஹாட் ஸ்பாட்” ஸ்ட்ரீமாகவுள்ளது !!! சமீபத்தில் பெரும் பரபரப்பை கிளப்பி, ரசிகர்களிடம் ஏகோபித்த வரவேற்பைக் குவித்த, இயக்குநர் விக்னேஷ் கார்த்திக்கின் “ஹாட் ஸ்பாட்” திரைப்படம் வரும் மே 17 முதல், அமேசான் ப்ரைம் மற்றும் ஆஹா ஓடிடி தளங்களில், ஸ்ட்ரீமாகவுள்ளது. கே ஜே பி டாக்கீஸ் மற்றும் 7 வாரியார் பிலிம்ஸ் பட நிறுவனங்கள் சார்பில் கே ஜே பாலமணி மார்பன் மற்றும் சுரேஷ்குமார் இணைந்து தயாரிக்க, இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில், சிக்ஸர் எண்டர்டெயின்மெண்ட் சார்பில், தினேஷ் கண்ணன் வெளியிட, ஆண் பெண் உறவின் பேசாத பக்கங்களைப் பேசிய ஹாட் ஸ்பாட் திரைப்படம் கடந்த மார்ச் 29 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இப்படத்தில் கலையரசன், 96 பட…
Read Moreஆன்மிகத் தொடுதலுடன் அதிரடியான ஆக்ஷன் கிளைமாக்ஸ் கொண்ட டபுள் ஐஸ்மார்ட் டீசர்
நடிகர்கள் உஸ்தாத் ராம் பொதினேனி, சஞ்சய் தத் நடிப்பில் பூரி ஜெகன்நாத், சார்மி கவுர், பூரி கனெக்ட்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள பான் இந்தியன் படமான ’டபுள் ஐஸ்மார்ட்’ திரைப்படத்தின் டிமாக்கிகிரிகிரி டீசர் டபுள் டோஸ் ஆக்ஷன் & என்டர்டெயின்மென்ட்டுடன் வெளியாகியுள்ளது! ’ஐஸ்மார்ட் ஷங்கர்’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இந்தப் படத்தின் சீக்குவலான ‘டபுள் ஐஸ்மார்ட்’ படத்திற்காக நடிகர் உஸ்தாத் ராம் பொதினேனி மற்றும் இயக்குநர் பூரி ஜெகன்நாத் ஆகியோர் மீண்டும் இணைந்துள்ளனர். ’ஐஸ்மார்ட் ஷங்கர்’ படத்தை விட டபுள் மடங்கு ட்ரீட் ‘டபுள் ஐஸ்மார்ட்’ படத்தில் இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. நடிகர் ராமின் பிறந்தநாள் ஸ்பெஷலாக ‘டபுள் ஐஸ்மார்ட்’ படத்தின் டிமாக்கிகிரிகிரி டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. ஹைதராபாத்தில் உள்ள ஒரு ஆய்வகத்தில் தன்னைச் சுற்றியுள்ள சில விஞ்ஞானிகளுடன் இருக்கும் கதாநாயகனின் கதாபாத்திரத்தை விவரிக்க சில மோசமான…
Read Moreசுஹாசினி மணிரத்னம், வரலட்சுமி சரத்குமார் நடிப்பில் “தி வெர்டிக்ட்”
அக்னி எண்டர்டெயின்மெண்ட் (அமெரிக்கா) அதன் சென்னை துணை நிறுவனத்துடன் இணைந்து கோலிவுட்டில் தனது முதல் திரைப்படத்தை அறிவிப்பதில் பெருமிதம் கொள்கிறது. இத்திரைப்படம் முழுக்க முழுக்க அமெரிக்காவின் டெக்சாஸ், ஆஸ்டினில் படமாக்கப்பட்டுள்ளது. அக்னி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் முதல் திரைப்படமாக உருவாகும் “தி வெர்டிக்ட்” கோர்ட்ரூம் டிராமா, திரில்லராக உருவாகியுள்ளது. தயாரிப்பாளர் திரு. பிரகாஷ் மோகன்தாஸ் மற்றும் இயக்குநர் கிருஷ்ணா சங்கர் இருவரும் டெக்சாஸில் வசிப்பவர்கள். இப்படம் முழுக்க முழுக்க அமெரிக்காவின் ஆஸ்டின், டெக்சாஸில் படமாக்கப்பட்ட முதல் சர்வதேச இந்தியத் திரைப்படமாகும். மேலும் ஒரு சுவாரஸ்யமாக, இப்படம் 23 நாட்களில் படமாக்கப்பட்டுள்ளது. நடிகை சுஹாசினி மணிரத்னம், வரலக்ஷ்மி சரத்குமார், ஸ்ருதி ஹரிஹரன், வித்யுலேகா ராமன் & பிரகாஷ் மோகன்தாஸ் ஆகியோரோடு உள்ளூர் அமெரிக்கக் கலைஞர்களும் ஐந்து முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். புதுப்பேட்டை, 7ஜி ரெயின்போ காலனி படப்புகழ் ஒளிப்பதிவாளர் அரவிந்த்…
Read Moreஅமேசான் ப்ரைமில் ஆகஸ்ட் 29, 2024 முதல் லார்ட் ஆஃப் தி ரிங்க்ஸ் : தி ரிங்க்ஸ் ஆஃப் பவர் சீசன் 2
பிரைம் வீடியோவின் லார்ட் ஆஃப் தி ரிங்க்ஸ்: தி ரிங்க்ஸ் ஆஃப் பவர், இரண்டாவது சீசன் அதிகாரப்பூர்வ டீஸர் டிரெய்லர் அறிமுகம் மற்றும் கீ ஆர்ட்டுடன் மீண்டும் வருகிறது – இரண்டாவது சீசன் பிரைம் வீடியோவில் 2024ஆகஸ்ட் 29, அன்று அறிமுகமாகிறது J.R.R.டோல்கியன் -இன் பழம்பெரும் புகழ் பெற்ற வில்லன் சௌரன் (sauron) .மிடில் எர்த்தின் செகண்ட் ஏஜ் -ஐ இருளடையச் செய்யும் முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் வேளையில் அதற்கான அரங்கை இந்த புதிய சீசன் நிர்மாணிக்கிறது இணைப்பு : https://youtu.be/3RQ92y1IQaI மும்பை, இந்தியா- மே 16, 2024 – பிரைம் வீடியோ, அதன் எதிர் வரவிருக்கும் மாபெரும் வெற்றித் தொடர் ‘லார்ட் ஆஃப் தி ரிங்ஸ் :ரிங்ஸ் ஆஃப் பவர்” இன் இரண்டாவது சீசனின் முதல் காட்சியை அமேசானின் முதல் முதலான அறிமுக நிகழ்ச்சியில் நியூயார்க்…
Read Moreதிரைத்துறை கனவை நனவாக்க அரிய வாய்ப்பு!
கனவுக் கல்வி ! கட்டணமின்றி! “திரைகள் வழி சமத்துவம் நோக்கி” என்ற நோக்குடன் செயல்பட்டு வரும் , இயக்குனர் வெற்றிமாறனின் பன்னாட்டு திரை- பண்பாடு ஆய்வகம் வேல்ஸ் பல்கலைக்கழகத்துடன் (விஸ்டாஸ்) இணைந்து தனித்துவமான, படைப்புலகத்திற்கான பாதையை அறிமுகம் செய்யும் திரைப்படக் கல்வியில் மூன்றாண்டு இளங்கலைப் பட்டப்படிப்பை ( B.Sc., Film studeis) 100% உதவித்தொகையுடன் வழங்குகிறது. விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. +2 தேர்ச்சி பெற்ற மாணவர்கள் அனைவரும் விண்ணப்பிக்கலாம் . முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும். மாணவர் சேர்க்கை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. உங்கள் திரைத்துறை கனவை நனவாக்க அரிய வாய்ப்பு! B.Sc Film Studies (3 year Degree Course) https://iifcinstitute.com/admission/
Read Moreஅடையாரில் மற்றொரு நடனப்பள்ளி துவங்கிய கிகி சாந்தனு
சின்னத்திரை தொகுப்பாளினி- நாட்டிய மங்கை -நடிகை- என பன்முக திறன் கொண்ட திருமதி கிகி சாந்தனு பாக்கியராஜ் சென்னை அடையாறில் ‘ ‘கிகி’ஸ் டான்ஸ் ஸ்டூடியோ’ எனும் பெயரில் இரண்டாவது நாட்டிய பயிற்சி பள்ளியை தொடங்கினார். இதற்காக நடைபெற்ற தொடக்க விழாவில் தமிழ் திரையுலகத்திலிருந்து ஏராளமான பிரபலங்கள் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர். நாட்டியம், நடனம் என்பது இளம் வயதினருக்கு அவர்களின் திறமைக்கேற்ப வாய்ப்பு வழங்கும் கலையாக இருந்தாலும்.. அவர்களின் உடல் ஆரோக்கியத்தையும், மன வலிமையையும், சமூகத்துடன் நல்லிணக்கத்துடன் வாழ வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தும் கலையாகவும் திகழ்கிறது. இதனால் நாட்டிய பயிற்சி பள்ளிகளில் தங்களது குழந்தைகள் நாட்டிய பயிற்சியைப் பெற பெற்றோர்கள் மனமுவந்து அனுமதி அளிக்கிறார்கள். சிறார்களும், சிறுமிகளும் தங்களின் மன அழுத்தத்திலிருந்து விடுதலை பெறவும், கவன சிதறலிலிருந்து ஒருமுகமான கவனத்தை பெறவும், உத்வேகத்துடன் தொடர்ந்து…
Read Moreகார்த்தி பிறந்தநாளில் நலத்திட்ட பணிகளுக்கு களம் காணும் ரசிகர்கள்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் கார்த்தி. இவருக்கு தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என ஏராளமான ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. இவர்கள் வெறும் ரசிகர்கள் மட்டுமில்லாமல் மாவட்டம் தோறும் பொது மக்களுக்கு பல நல்ல காரியங்களை செய்பவர்களாகவும் இருக்கிறார்கள். வருகிற மே 25 ஆம் தேதி நடிகர் கார்த்தி பிறந்தநாள் கொண்டாட இருக்கிறார். இதற்காக இவரது ரசிகர்கள் தமிழகம் முழுக்க 300க்கும் மேற்பட்ட நலத்திட்ட நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றன. சென்னை செங்கல்பட்டு திருவள்ளூர் மாவட்டங்களில் மட்டும் 25க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கின்றன. முதலாவதாக மே 12 ஆம் தேதி (நேற்று) சென்னையில் உள்ள வியாசர்பாடி, தண்டையார்பேட்டை, கோடம்பாக்கம், திருவான்மியூர் ஆகிய பகுதிகளில் நீர் மோர் வழங்குதல், முதியோர் இல்லத்தில் அன்னதானம், குழந்தைகள் காப்பகத்தில் அன்னதானம் ஆகியவை வழங்கப்பட்டது. இதை தொடர்ந்து மே-19, மே-26…
Read Moreசீன அனிமேஷன் நகைச்சுவை திரைப்படமான BOONIE BEARS: GUARDIAN CODE
இது, அறிவியல் புனைக்கதையின் அடிப்படையில் உருவாகியுள்ள சீன அனிமேஷன் நகைச்சுவைத் திரைப்படமாகும். பூனி பியர்ஸ் தொடரில் வெளியாகும் ஒன்பதாவது படமிது. இப்படத்தை Lin Yongchang-உம், Shao Heqi-உம் இயக்கியுள்ளனர். இளம் வயது ப்ரையரும் ப்ராம்பளும், கிரிஸ்டல் பீக்ஸ் காட்டில் ஏற்படும் காட்டுத்தீயில் தங்கள் தாயை இழக்கின்றனர். பல வருடங்களுக்குப் பிறகு, அவர்கள் இருவரையும் ரோபோட் ஆராய்ச்சி நிறுவனத்துக்கு அழைத்துச் செல்கிறார் விக். அங்கே, எதிர்பாராத விதமாகத் தங்கள் தாயைப் பற்றிய செய்தி ஒன்றினைக் கேள்விப்படுகின்றனர். எப்படியாவது தங்கள் தாயைக் தேடிக் கண்டுபிடிக்க வேண்டும் எனத் தீர்மானித்து, சார்லோட்டைச் சந்திக்கிறார்கள். அவளுடைய ஆம்பர் கல் அவர்களுக்கு நம்பிக்கையை அளிக்கிறது. ஸ்க்ராப் ரெபல் கும்பலால் சார்லோட் கடத்தப்பட்டபோது, சகோதரர்களான ப்ரையரும் ப்ராம்பளும் விக்குடன் இணைந்து, அவளை மீட்பதற்காக ஆபத்தான பயணத்தை மேற்கொள்கிறார்கள். அந்தச் சவாலான பயணத்தின் நடுவில், கரடி சகோதரர்களின்…
Read Moreசிவம் பஜே படத்தின் அசத்தலான பர்ஸ்ட் லுக்
‘சிவம் பஜே’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை கங்கா எண்டர்டெயின்மெண்ட்ஸ் வெளியிட்டது! கங்கா எண்டர்டெயின்மெண்ட்ஸ், மகேஸ்வர ரெட்டி மூலி தயாரிப்பில், அப்சர் இயக்கத்தில் அஸ்வின் பாபு ஹீரோவாக நடிக்கும் படம் புரொடக்ஷன் 1. இந்தப் படம் ‘சிவம் பஜே’ எனத் தலைப்பிடப்பட்டுள்ளது. இப்படத்தின் டைட்டில் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. தற்போது, அஸ்வின் பாபு கவனம் ஈர்க்கும் விதத்தில் இடம்பெறும் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. இந்த போஸ்டரில், அஸ்வின் கோபத்தோடு காணப்படுகிறார். அவர் ஒற்றைக் காலில் நின்று கோபத்துடன் ஒரு கையால் ஒரு குண்டர்களைத் தூக்குவதை இதில் பார்க்கலாம். அகோரிகள், திரிசூலங்கள், இருட்டில் காகங்கள் மற்றும் கடவுள் சிலை பின்னணியில் இருப்பதைப் பார்க்கலாம். இவை எல்லாம், படம் தீவிர ஆக்ஷன் ஜானரில் இருக்கும் என்பதை உணர்த்துகிறது. திகங்கனா நாயகியாக நடிக்க, பாலிவுட் நடிகர் அர்பாஸ் கான்,…
Read More