உஸ்தாத் ராம் பொதினேனியின் “டபுள் ஐஸ்மார்ட்” டீசர் தேதி அறிவிப்பு

உஸ்தாத் ராம் பொதினேனி, பூரி ஜெகன்நாத், சார்மி கவுர், பூரி கனெக்ட்ஸின் கிரேஸி இந்தியன் புராஜெக்ட் ‘டபுள் ஐஸ்மார்ட்’ டிமாக்கிகிரிகிரி டீசர் மே 15 அன்று வெளியாகிறது! ரசிகர்களின் எதிர்பார்ப்புகளுக்கு உள்ளாகி இருக்கும் ‘ஐஸ்மார்ட் ஷங்கர்’ படத்தின் டபுள் இம்பேக்ட் ரெடி! டைனமிக் இயக்குநர் பூரி ஜெகன்நாத் மற்றும் உஸ்தாத் ராம் பொதினேனியின் அட்டகாசமான கூட்டணியில் மிகவும் எதிர்பார்க்கப்படும் பான் இந்திய திரைப்படமான ‘டபுள் ஐஸ்மார்ட்’ படத்தின் மாஸ் ஆக்‌ஷன் என்டர்டெய்ன்மெண்ட் டீசர் மே 15 ஆம் தேதி ராமின் பிறந்தநாளன்று வெளியாகிறது. டீசர் அறிவிப்பு போஸ்டரில் ராம் ஒரு பவர் பேக் அவதாரத்தில் இருக்கிறார். டைகர் ஸ்ட்ரிப் சட்டை மற்றும் டோர்ன் ஜீன்ஸ் அணிந்துள்ள ராம் ஒரு கையில் சிகரெட்டையும், மற்றொரு கையில் பட்டாசுகளையும் பிடித்திருக்கிறார். இதில் இருந்து மாஸ் ஆக்‌ஷன் ட்ரீட் ரசிகர்களுக்கு இருக்கிறது…

Read More

’உயிர் தமிழுக்குப் படத்தைப் பாராட்டிய லைக்கா சுபாஸ்கரன்

இயக்குநர் அமீர் கதாநாயகனாக நடித்து நேற்று (மே-10 ) வெளியாகியுள்ள படம் ‘உயிர் தமிழுக்கு’. ஆன்டி இண்டியன் படத்தை தயாரித்த மூன் பிக்சர்ஸ் தயாரிப்பாளர் ஆதம்பாவா இந்தப்படத்தை தயாரித்துள்ளதுடன் இயக்குநராகவும் அடியெடுத்து வைத்துள்ளார். அரசியல் பின்னணியில் உருவாகியுள்ள இந்தப்படத்தில் கதாநாயகியாக சாந்தினி ஶ்ரீதரன் நடித்துள்ளார். முக்கிய வேடங்களில் இமான் அண்ணாச்சி, சரவண சக்தி, கஞ்சா கருப்பு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு இப்படம் மூலம் வெற்றிகரமாக ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார் இசையமைப்பாளர் வித்யாசாகர். அரசியல் பின்னணியில் உருவாகி உள்ள இந்த படத்தில் அமீர் கதாநாயகனாக நடித்திருக்கிறார் என்பதால் படம் குறித்து ரிலீசுக்கு முன்பிருந்தே எதிர்பார்ப்பு அதிகம் இருந்தது. தற்போது படம் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பு பெற்று வருகிறது இந்த நிலையில் தற்போது லைக்கா புரொடக்ஷன்ஸ் திரு. சுபாஸ்கரன் லண்டனில் ‘உயிர் தமிழுக்கு’ படத்தை பார்க்க…

Read More

கதை சொல்லும் செயலியும் ஆடியோ OTTயுமான ரேடியோ ரூம் செயலி

ஊடகத்துறை ஜாம்பவான்கள் உருவாக்கியுள்ள புதுமையான கதை சொல்லும் செயலியும் ஆடியோ OTTயுமான ரேடியோ ரூம் பொருத்தமான குரல்கள், பிரத்யேக இசை மற்றும் சிறப்பு சப்தங்கள் உடன் சிலிர்க்க வைக்கும் கேட்கும் அனுபவத்தை ரேடியோ ரூம் வழங்கும் ரீஜனல் ஸ்டோரி டெல்லர்ஸ் (Regional Story Tellers) குழுமத்தின் தலைவர் AL. வெங்கடாசலம் எனும் வெங்கிக்கு ஊடக வட்டாரங்களில் அறிமுகம் தேவையில்லை. விஜய் தொலைக்காட்சி மற்றும் புது யுகம் தொலைக்காட்சிகளில் தலைவராக இருந்த இவர், சுயாதீன தயாரிப்பாளராகவும் இயக்குநராகவும் தரமான பல நிகழ்ச்சிகளை உருவாக்கியவர் ஆவார். வெங்கியின் பரந்த அனுபவத்தினாலும் சீரிய திறமையினாலும் ரேடியோ ரூம் என்ற புதிய முன்முயற்சி உருவாக்கப்பட்டுள்ளது. ரீஜனல் ஸ்டோரி டெல்லர்ஸ் குழுமத்தின் புதுமையான கதை சொல்லும் செயலியும் ஆடியோ OTTயுமான ரேடியோ ரூம் செயலி சென்னையில் பிரம்மாண்டமாக அறிமுகப்படுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பிரபல எழுத்தாளர் ராஜேஷ்குமார்,…

Read More

வெற்றியின் புதிய படத்தில் இணைந்த இளைய திலகம்

முதன்மை கதாபாத்திரத்தில் துள்ளல் கலந்த அப்பாவாக இளைய திலகம் பிரபு நடிக்க.. 8 தோட்டாக்கள் வெற்றி கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக கேரளத்து பைங்கிளி கிருஷ்ண பிரியா அறிமுகம் ஆகிறார் இவர்களுடன் மன்சூர் அலிகான், ஆர் வி உதயகுமார், இமான் அண்ணாச்சி, லிவிங்ஸ்டன், தங்கதுரை, மற்றும் பலர் நடிக்கின்றனர், கிரசன்ட் சினி கிரியேஷன்ஸ் சார்பில் பெரும் பொருட்செலவில் இளம் தயாரிப்பாளர் KM சபி மற்றும் பாரூக் பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்க கிராமத்து கதைக்களத்தில் நகைச்சுவை கலந்த குடும்பச் சித்திரமாக திரைப்படம் உருவாகிறது! மகாகந்தன் அறிமுக இயக்குனர். வெற்றிப்பட இயக்குனர்களான வசந்த் சாய் மற்றும் நந்தா பெரியசாமி அவர்களுடன் பணிபுரிந்த மகா கந்தன் இயக்கத்தில் கத்திரி வெயிலிலும் அதிரி புதிரியாய் தயாராகிறது! ஆண்மகனின் அனைத்து பாடல்களையும் கவிப்பேரரசு வைரமுத்து பட்டைதீட்ட… அடுக்குமொழி நாயகர் டி ஆர் ஒரு பாடலை பாடுவது…

Read More

60 வயது ஆசிரியராக ஜே.எஸ்.கே நடிக்கும் “குற்றம் கடிதல் 2”

தயாரிப்பாளர்-இயக்குந‌ர்-நடிகர் ஜே எஸ் கே முதன்மை வேடத்தில் நடிக்கும் ‘குற்றம் கடிதல் 2’ திரைப்படத்தை எஸ் கே ஜீவா இயக்குகிறார் 60 வயது ஆசிரியரை சுற்றி நடக்கும் கதையின் படப்பிடிப்பு விரைவில் தொடங்குகிற‌து விநியோகம், தயாரிப்பு, நடிப்பு, இயக்கம் என திரையுலகின் பல்வேறு துறைகளில் இயங்கி வரும் பன்முகத்தன்மை கொண்ட ஆளுமையான‌ ஜே எஸ் கே, தற்போது ‘குற்றம் கடிதல் 2’ படத்தில் முதன்மை வேடத்தில் நடிக்க தயாராகி வருகிறார்.   2015ம் ஆண்டு திரைக்கு வந்து தேசிய விருது உள்ளிட்ட அங்கீகாரங்களையும் பெரும் வரவேற்பையும் பெற்ற ஜே எஸ் கே தயாரிப்பில் உருவான‌ ‘குற்றம் கடிதல்’ படத்தின் இரண்டாம் பாகத்தை எஸ் கே ஜீவா எழுதி இயக்குகிறார். ஜேஎஸ்கே ஃபிலிம் கார்ப்பரேஷன் இப்படத்தை தயாரிக்கிறது. ஆர் பார்த்திபன் நடித்த ‘புதுமை பித்தன்’, கார்த்திக் நடித்த ‘லவ்லி’…

Read More

குழந்தைகளுக்கான திரைப்படமாக உருவாகியிருக்கும் “புஜ்ஜி அட் அனுப்பட்டி

ஹாலிவுட்டில் குழந்தைகளின் திரைப்பட உலகம் மாபெரும் வணிகப் பரப்பாக உள்ளது. ஆனால் இந்தியத் திரையுலகில் உள்ள மாபெரும் குறை குழந்தைகள் இடம்பெறும் வகையில் படங்கள் உருவாகின்றன. ஆனால் அவை குழந்தைகளுக்கான படங்களாக இருப்பதில்லை. இந்நிலையில் குழந்தைகளுக்கான ஒரு திரைப்படமாக உருவாகி இருப்பதுதான் புஜ்ஜி அட் அனுப்பட்டி. இப்படத்தை ராம் கந்தசாமி எழுதி, இயக்கி, தயாரித்துள்ளார். இப்படத்தில் கமல்குமார், நக்கலைட்ஸ் வைத்தீஸ்வரி, கார்த்திக் விஜய் , குழந்தை நட்சத்திரம் பிரணிதி சிவ சங்கரன், லாவண்யாகண்மணி, நக்கலைட்ஸ் ராம்குமார், நக்கலைட்ஸ் மீனா, வரதராஜன் ஆகியோர் நடித்துள்ளனர். அண்ணன் சரவணன், தங்கை துர்கா இருவரும் ஊத்துக்குளி கிராமத்தில் பெற்றோர்களுடன் ஒரு பண்ணை வீட்டில் வசித்து வருகிறார்கள். பண்ணையின் உரிமையாளர் சிவா குழந்தைகள் மேல் பிரியம் கொண்டவர். சரவணன் ஓர் அசைவப் பிரியன். ஒரு நாள் பள்ளியிலிருந்து திரும்பும் பொழுது இருவருக்கும் வழியில்…

Read More

”ஸ்டார்” படத்தின் 8 நிமிட நீண்ட காட்சியைக் குறிப்பிட்டு கொண்டாடும் ரசிகர்கள்

ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினி சித்ரா மற்றும் ரைஸ் ஈஸ்ட் என்டர்டெய்ன்மென்ட் ஆகிய நிறுவனங்களின் தயாரிப்பில் இளன் இயக்கத்தில், யுவன் இசையில், கவின் நடிப்பில் உருவான ‘ஸ்டார்’ திரைப்படம் ரசிகர்களின் ஆரவாரமான எதிர்பார்ப்பிற்கு இடையே உலகம் முழுவதும் நேற்று திரையரங்குகளில் வெளியானது. இப்படத்தின் முன்னோட்டம் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியதால், இப்படத்தைக் காண முதல் நாள் முதல் காட்சிக்கு ஏராளமான ரசிகர்கள் திரையரங்குகளில் திரண்டனர். எட்டு நிமிடத்திற்கு மேல் நீடிக்கும் உணர்வுபூர்வமான படத்தின் உச்சகட்ட காட்சி.. சிங்கிள் ஷாட்டில் எடுக்கப்பட்டிருப்பதை கண்டு ரசிகர்கள் ஆரவாரத்துடன் கரவொலி எழுப்பி பாராட்டினர். ‘தமிழ் சினிமாவில் சிங்கிள் ஷாட்டில் படமாக்கப்பட்ட நீளமான ( எட்டு நிமிடம் 21 வினாடி) கிளைமாக்ஸ் காட்சி இதுதான்’ என்று குறிப்பிட்டிருக்கும் படக்குழுவினர், இதற்காக உழைத்த ஒட்டுமொத்த படக் குழுவினருக்கும், இதனைக் குறிப்பிட்டு பாராட்டிய ரசிகர்களுக்கும், விமர்சகர்களுக்கும்…

Read More

டிஸ்னி + ஹாட்ஸ்டாரில் வெளியாகவிருக்கும் கள்வன்

இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மே 14 முதல், இயக்குநர் P.V. ஷங்கர் இயக்கத்தில், நடிகர் ஜி.வி. பிரகாஷ் குமார் நடிப்பில் உருவாகி, சமீபத்தில் வெளியாகி வெற்றி பெற்ற ‘கள்வன்’ திரைப்படத்தை ஸ்ட்ரீம் செய்யவுள்ளது . இப்படத்தில் பாரதிராஜா, இவானா, KPY பாலா மற்றும் பல முன்னணி நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர். இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய நான்கு மொழிகளில் ஸ்ட்ரீமாகவுள்ளது.   காடுகளின் பின்னணியில் அமைக்கப்பட்ட கதைக்களத்தில், மனதை ஈர்க்கும் சம்பவங்களுடன், அற்புதமான விஷுவல், மயக்கும் இசை மற்றும் நடிகர்களின் பாராட்டத்தக்க நடிப்பு என “கள்வன்” படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைக் குவித்தது. அரசின் வனக்காப்பாளராக மாற விரும்பும் திருடன் கெம்பன், அந்த வேலையில் சேர அவனுக்கு ரூ.2 லட்சம் லஞ்சம் தேவைப்படுகிறது. அந்த பணத்தைத் திரட்ட…

Read More

சாய்பல்லவியின் மறுபக்கத்தைக் காட்டும் வீடியோ

நாக சைதன்யா -சந்து மொண்டேட்டி- அல்லு அரவிந்த் – பன்னி வாஸ்- கீதா ஆர்ட்ஸ் ..கூட்டணியில் தயாராகும் ‘தண்டேல்’ படக்குழுவினர்- நாயகியான சாய் பல்லவியின் பிறந்த நாளை முன்னிட்டு பிரத்யேக வீடியோவை வெளியிட்டுள்ளனர். நாக சைதன்யா- சாய் பல்லவி ஜோடி ‘லவ் ஸ்டோரி’ எனும் படத்தில் திரையில் தோன்றி ரசிகர்களை மயக்கியது. மேலும் இயக்குநர் சந்து மொண்டேட்டி இயக்கத்தில் தயாராகும் ‘தண்டேல்’ திரைப்படத்தில் மீண்டும் நாக சைதன்யா- சாய் பல்லவி இணைந்திருப்பதால்.. அவர்களுக்கிடையேயான கெமிஸ்ட்ரி மற்றும் திரை தோன்றல் ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இருவரும் இணைந்து திரையில் தோன்றி ரசிகர்களை வசீகரிக்கவிருக்கிறார்கள். கீதா ஆர்ட்ஸ் நிறுவனம் மூலம் அல்லு அரவிந்த் வழங்கும் இந்த திரைப்படத்தை பிரம்மாண்டமான பொருட்செலவில் பன்னி வாஸ் தயாரிக்கிறார். இன்று சாய் பல்லவியின் பிறந்தநாள். இதற்காக படக்குழுவினர் நேற்று ஒரு அற்புதமான…

Read More

புராணக் கதையில் நடிக்கும் விஜய் தேவரகொண்டா

விஜய் தேவரகொண்டா, ராகுல் சங்கிரித்யன், மைத்ரி மூவி மேக்கர்ஸ் இணையும் புதிய பான் இந்தியா படம் அறிவிக்கப்பட்டுள்ளது தென்னிந்திய திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகர் விஜய் தேவரகொண்டாவின் பிறந்த நாளில் அவரது புதிய படம் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இயக்குநர் ராகுல் சங்கிரித்யன் இயக்கும் இப்படத்தினை மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கிறது. இப்படத்திற்கு தற்காலிகமாக VD14 என்று பெயரிடப்பட்டுள்ளது. படம் குறித்த அறிவிப்பு போஸ்டர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. ஒரு போர்வீரரின் சிலையின் பின்னணியில் “சபிக்கப்பட்ட நிலத்தின் புராணக்கதை” என்ற தலைப்புடன் கூடிய போஸ்டர் பெரும் ஆர்வத்தை தூண்டுகிறது. 1854-78 காலகட்டத்தில் வாழ்ந்த நாயகனின் கதையை இப்படம் விவரிக்கிறது. பான் இந்தியன் திட்டம் 19 ஆம் நூற்றாண்டில் நடந்த உண்மையான வரலாற்று நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டு உணர்ச்சிப்பூர்வமான ஒரு சினிமாவாக, பிரம்மாண்டமான பான் இந்திய படைப்பாக இப்படம் உருவாகிறது.…

Read More