பிப்ரவரி 2026 – ரோட்டர்டாம், IFFR 2026 இல் NETPAC விருதுக்கு மயிலா பரிந்துரை!

செம்மலர் அன்னம் இயக்கத்தில், நியூட்டன் சினிமா தயாரிப்பில் உருவான மயிலா, 2026 ஆம் ஆண்டு நடைபெறும் ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழா (IFFR) யில் NETPAC விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இம்மாதம் தொடக்கத்தில் ரோட்டர்டாமில் உலக சினிமா திரையிடலைப் பெற்ற இந்தத் திரைப்படம், ஆசிய சினிமாவை மேம்படுத்தும் நெட்பேக் (Network for the Promotion of Asian Cinema – NETPAC) வழங்கும் இவ்விருதுக்குத் தேர்வாகியுள்ளது. படைப்பாற்றல், பண்பாட்டு ஆழம் மற்றும் திரைப்படக் கலைச் சிறப்பை பிரதிபலிக்கும் சிறந்த ஆசிய திரைப்படங்களை NETPAC விருது கௌரவிக்கிறது. ஒரு இளம் பணிபுரியும் பெண்ணின் மரியாதை மற்றும் சுயாதீனத்தை நோக்கிய பயணத்தை நெருக்கமாகவும் யதார்த்தமாகவும் சித்தரிக்கும் இந்தத் திரைப்படம், ரோட்டர்டாமில் நடைபெற்ற அதன் திரையிடலில், படம் பார்த்த பார்வையாளர்களிடமிருந்து பெரும் பாராட்டுகளை பெற்றது. இந்தப் பரிந்துரை, மயிலா திரைப்படத்தின் சர்வதேச திரைப்பட…

Read More

ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்திய “மை லார்ட்” படக்குழு!

ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜெயந்தி அம்பேத்குமார் தயாரிப்பில், ராஜுமுருகன் இயக்கத்தில்,  நட்சத்திர நடிகரான சசிகுமார் கதையின் நாயகனாக அழுத்தமான வேடத்தில்  நடித்திருக்கும் ‘ மை லார்ட்’ ( My Lord) எனும் திரைப்படம் – பிப்ரவரி மாதம் 13 ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. நேற்று ஆயிரக்கணகான ரசிகர்கள் முன்னிலையில்,  பட வெளியீட்டை ஒட்டி படக்குழுவினர்  ரசிகர்களைச் சந்தித்து அவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து, பாடல் பாடி, பட வசனங்கள் பேசி, ரசிகர்களை உற்சாகப்படுத்தினர். மேலும் மை லார்ட் படம் குறித்த தகவல்களை ரசிகர்களோடு பகிர்ந்து கொண்டனர். இந்நிகழ்வினில் இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் பேசியதாவது.., மை லார்ட் ரசிகர்களுக்கு  ஒரு முழுமையை கொடுக்கும் படமாக இருக்கும். ஒரு சாப்பாடு சாப்பிட்டால் நமக்கு  என்ன ஒரு திருப்தி, ஒரு நிறைவு கிடைக்குமோ, அதுபோல…

Read More

பிப்ரவரி 13 ஆம் தேதி மாதவனின் ‘மின்னலே’ படத்தை ரீ ரிலீஸ் செய்யும் ரோமியோ பிக்சர்ஸ் ராகுல்*

சி டிவி என்டர்டெயின்மென்ட் லிமிடெட் நிறுவனம் சார்பில் டாக்டர் முரளி மனோகர் தயாரிப்பில் இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் மாதவன் – ரீமா சென் நடிப்பில் உருவான திரைப்படம் ‘மின்னலே’. கடந்த தசாப்தங்களில் வெளியாகி ரசிகர்களின் பேராதரவை பெற்ற முன்னணி நட்சத்திரங்களின் திரைப்படங்கள் தற்போது ரீ ரிலீஸ் ஆவது லேட்டஸ்ட் ட்ரெண்ட். அந்த வகையில் மாதவன் – கௌதம் வாசுதேவ் மேனன் – ஹாரிஸ் ஜெயராஜ் கூட்டணியில் உருவான ‘மின்னலே ‘ திரைப்படம்- காதலர் தினத்தை முன்னிட்டு பிப்ரவரி 13 ஆம் தேதி தமிழகம் முழுவதும் மீண்டும் வெளியாகிறது. இந்த திரைப்படத்தை ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ராகுல் வெளியிடுகிறார். மின்னலே – இந்த திரைப்படத்தின் மூலம் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்குநராக அறிமுகமானார் என்பதும், ‘அலைபாயுதே’ படத்தின் வெற்றிக்குப் பிறகு மாதவன் நடித்த…

Read More

பிராகரண்ட் நேச்சர் ஃபிலிம் கிரியேஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘HALF: The Chronicles of Two Half-Blooded Vampires’ திரைப்படத்தின் இரண்டாம் போஸ்டரை வெளியிட்டது!

பிரம்மாண்டமான த்ரில்லர் வேம்பயர் கதைக்காக ’கோலம்’ படஅணியினர் மீண்டும் ஒன்றிணைந்துள்ளனர். இந்தக் கதையில் நடிகர்கள் அமலா பால், ரஞ்சித் சஜீவ், ஐஸ்வர்யா ராஜ் மற்றும் அப்பாஸ் ஆகியோர் நடிக்கின்றனர். ஆக்ஷன் கொரியோகிராபியை ஹாலிவுட் ஸ்டண்ட் எக்ஸ்பர்ட் வெரி ட்ரை யூலிஸ்மேன் கவனிக்கிறார். பிராகரண்ட் நேச்சர் ஃபிலிம் கிரியேஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியிருக்கும் வேம்பயர் த்ரில்லர் திரைப்படமான ‘HALF’-ன் இரண்டாவது போஸ்டரை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. படத்தின் இருண்ட மற்றும் தீவிரமான உலகத்தை இந்த போஸ்டர் வெளிப்படுத்துகிறது. ‘பிரணயம்’, ‘பரிவார்’, ‘கோலம்’ போன்ற படங்களைத் தயாரித்த பிராகரண்ட் நேச்சர் ஃபிலிம் கிரியேஷன்ஸ் பேனரின் கீழ் அன்னே சஞ்சீவ் மற்றும் சஞ்சீவ் பிகே இந்தப் படத்தை தயாரித்துள்ளனர். ’கோலம்’ மூலம் கவனம் பெற்ற இயக்குநர் சம்ஜத் இந்த படத்தை இயக்கியுள்ளார். வேம்பயர் கதைக்களத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள இந்தத் திரைப்படம் அடையாளம்,…

Read More

பிப்ரவரி இம்மாதம் 27ஆம் தேதி திரையில் ஆரி அர்ஜுனன் நடிக்கும் “4த் ஃப்ளோர்” !!

MANO CREATION சார்பில் தயாரிப்பாளர் A.ராஜா தயாரிப்பில், இயக்குநர் L R சுந்தரபாண்டி இயக்கத்தில், நடிகர் ஆரி அர்ஜுனன் கதாநாயகனாக நடிக்க, வித்தியாசமான களத்தில் மர்மங்கள் நிறைந்த பரபரப்பான திரில்லராக உருவாகியுள்ள “4த் ஃப்ளோர்” திரைப்படம், வரும் பிப்ரவரி மாதம் 27 ஆம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் டிரெய்லரை தமிழ் திரையுலகின் முன்னணி பிரபலங்களான விஜய் சேதுபதி, ஆர்யா, பா ரஞ்சித், விஜய் ஆண்டனி ஆகியோர் சமூக வலைத்தளம் வழியே இன்று வெளியிட்டனர். இன்று வெளியான டிரெய்லர் ஆரம்ப கட்டத்தில் ஒரு அபார்ட்மெண்டில் நடக்கும் அமானுஷ்ய சம்பவங்களை காட்டுகிறது. ஹாரர் படம் என்று நினைக்கையில் அப்படியே தடம் மாறி, கொலைகளை அதன் விசாரணைகளைக் காட்டி ஒரு அசத்தலான திரில்லர் அனுபவமாக நிறைவு பெறுகிறது. கனவு, கொலைகள், விசாரணை என வெவ்வேறு பாதைகளில் கதை பயணிக்கிறது.…

Read More

இயக்குநர் ஜீவா சங்கர் இயக்கத்தில் உருவாகும் ‘வலை’ திரைப்படத்தில் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தும் விதமாக நடிகர் அதர்வா முரளி இரட்டை வேடத்தில் நடித்துள்ளார்

அனைத்து வயது ரசிகர்களையும் கவரும் நடிகராக அதர்வா முரளி அடுத்தடுத்து நல்ல கதையம்சம் உள்ள படங்களைத் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். திரையரங்குகள் மற்றும் ஓடிடி தளத்தில் பாராட்டப்பட்ட ‘DNA’ திரைப்படத்திலும், சமீபத்தில் வெளியான ‘பராசக்தி’ திரைப்படத்திலும் அதர்வாவின் திறமையான நடிப்பு பாராட்டப்பட்டது. இப்போது, முதல் முறையாக ‘வலை’ திரைப்படத்தில் இரட்டை வேடத்தில் நடித்து ரசிகர்களை ஆச்சரியப்படுத்த இருக்கிறார் அதர்வா முரளி. சமீபத்தில் வெளியான இந்தப் படத்தின் டீசர் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது. ’நான்’, ‘அமர காவியம்’ போன்ற படங்களை இயக்கிய ஜீவா சங்கர் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். திரைப்படம் குறித்து இயக்குநர் ஜீவா சங்கர் கூறுகையில், “ராமேஸ்வரத்தை கதைக்களமாகக் கொண்ட இந்த திரைப்படம் சரா மற்றும் குட்டி என இரண்டு கதாபாத்திரங்களைச் சுற்றி நகர்கிறது. இந்த இரண்டு கதாபாத்திரங்களிலும் அதர்வா முரளி நடித்துள்ளார். முழுக்க முழுக்க மீனவர் சமூகத்தின்…

Read More

 ₹120 கோடி AP–TG ஒப்பந்தம்: தில் ராஜுவின் ( Dil Raju’s)SVC-யுடன் யாஷ் & KVN-ன் டாக்ஸிக் திரைப்பட ஒப்பந்தம், வரலாற்றுச் சாதனை! 

‘டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் கிரோன்-அப்ஸ் (Toxic: A Fairytale for Grown-ups) திரைப்படம், திரையரங்குகளில் வெளியாகும் முன்பே இந்திய சினிமா வரலாற்றில் புதிய சாதனையை படைத்துள்ளது. பான்-இந்திய சினிமாவின் விதிகளையே மாற்றியமைக்கும் வகையில், ஆந்திரா–தெலுங்கானா (AP–TG) விநியோக உரிமையை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் (SVC) நிறுவனம், தயாரிப்பாளர் தில் ராஜு தலைமையில், ரூ.120 கோடி (கமிஷன் அடிப்படையிலான முன்பணம்) செலுத்தி கைப்பற்றியுள்ளது. இது தெலுங்கு மொழி அல்லாத ஒரு திரைப்படத்திற்கான மிகப்பெரிய விநியோக ஒப்பந்தமாக அதிகாரப்பூர்வமாக பதிவாகியுள்ளது. டாக்ஸிக் படத்தின் தயாரிப்பு நிறுவனங்களான KVN Productions மற்றும் Monster Mind Creations ஆகியவற்றுக்கும், SVC-க்கும் இடையே ஏற்பட்ட இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க ஒப்பந்தம், இந்தப் படத்தின் மீது திரைத்துறை வைத்திருக்கும் அளவிட முடியாத நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது. AP–TG உரிமைக்காக மூன்று முன்னணி நிறுவனங்கள்…

Read More

‘தாய்நிலம்’ படத்தில் இடம்பெற்ற ‘ஆகாயம் மேலே’ பாடலுக்கு தமிழக அரசின் 2 விருதுகள்” ; உற்சாகத்தில் படக்குழுவினர்

நேமி புரொடக்ஷன்ஸ் சார்பில் டாக்டர் அமர் ராமச்சந்திரன் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘தாய்நிலம்’. இப்படத்தை அபிலாஷ் ஜி.தேவன் இயக்கியுள்ளார். தேசிய விருது பெற்ற பிரபல மலையாள இசையமைப்பாளர் திரு அவுசப்பச்சன் இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார். தமிழில் இவர் இசையமைக்கும் முதல் படம் இது. அப்பா, மகள் பாசப் பின்னணியில் இலங்கைப் போரின் கோர தாண்டவத்தை எடுத்துக்கூறும் படமாக உருவாகி இருக்கும் இத்திரைப்படத்தில் கவிஞர் தாமரை எழுதி, வர்ஷா ரஞ்சித் பாடியுள்ள ‘ஆகாயம் மேலே’ என்கிற பாடல் ஈழத் தமிழ் மக்களின் இழப்புகளையும் வலியையும் அனாதையாகத் தவிக்கும் மக்களின் வாழ்க்கையையும் பற்றி கூறும் விதத்தில் அமைந்திருக்கிறது. ‘தாய்நிலம் திரைப்படம்’ மாஸ்கோ, டோராண்டோ, ஸ்வீடன், பெங்களூரு இன்டர்நேஷனல், உட்பட 12 சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்துகொள்ள தேர்வு செய்யப்பட்டது. அதில் சிறந்த திரைப்படம், சிறந்த புதுமுக இயக்குநர், சிறந்த இசை,…

Read More

‘பள்ளிச்சட்டம்பி’ (Pallichattambi’) படத்தின் படப்பிடிப்பு நிறைவு : ஏப்ரல் 9 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது

இயக்குநர் டிஜோ ஜோஸ் ஆண்டனி ( Dijo Jose Antony) இயக்கத்தில் டொவினோ தாமஸ் கதாநாயகனாக நடிக்கும் ‘பள்ளிச்சட்டம்பி’ எனும் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. இதனை இயக்குநர் டிஜோ ஜோஸ் ஆண்டனி அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார். இயக்குநர் டிஜோ ஜோஸ் ஆண்டனி 2018 ஆம் ஆண்டில் ‘குயின் – (Queen) படத்தை இயக்கி, இயக்குநராக அறிமுகமானார். அதை தொடர்ந்து பிளாக் பஸ்டர் ஹிட்டான ‘ஜன கன மன’ ( Jana Gana Mana) படத்தை இயக்கியிருந்தார். அதற்குப் பிறகு ‘மலையாளி ஃபிரம் இந்தியா’ ( Malayalee From India) எனும் திரைப்படத்தையும் இயக்கினார். அழுத்தமான சமூகம் சார்ந்த கருத்துக்களை மெயின் ஸ்ட்ரீம் சினிமாவில் சொல்ல முடியும் என்பதையும் நிரூபித்தார். அத்துடன் இயக்குநர் டிஜோ – சமகால மலையாள திரையுலகத்தில் தனக்கென ஒரு தனித்துவமான இடத்தை பிடித்துள்ளார்.…

Read More

வித் லவ் – விமர்சனம்.. காதல் என்றென்றும் தொடரும்..

வித் லவ் விமர்சனம்.. காதல் என்றென்றும் தொடரும்.. கதை… அபிஷன் ஜீவிந்த் – அனஸ்வரா ராஜன் நாயகன் நாயகி இருவரும் திருமணம் செய்து கொள்வதற்காக.. வீட்டில் சொன்னபடி சந்திக்கின்றனர்.. அப்போதுதான் இவர்கள் இருவரும் ஒரே பள்ளியில் ஜூனியர் சீனியர் என்பது தெரிய வருகிறது. உனக்கு இதற்கு முன்பு ஏதேனும் காதல் இருந்ததா என்று இருவரும் கேட்கவே இருவருக்கும் காதல் இருந்தது என்கின்றனர்… அப்படியானால் ஒரு இடைவெளி விட்டு நாம் பழைய காதலை சந்திப்போம்.. அதன் பிறகு என்ன நடக்குது பார்க்கலாம் என்று பயணிக்கின்றனர்.. அதன் பிறகு நடப்பது எல்லாம் மீதிக்கதை. நடிகர்கள்.. அபிஷன் ஜீவிந்த், அனஸ்வரா ராஜன், தேனி முருகன், “கலைமாமணி” சரவணன், ஹரிஷ் குமார், காவ்யா அனில், சச்சின் நாச்சியப்பன், சாச்சனா, R.J. ஆனந்தி, டிம்பிள் கண்ணாம் சித்தார்த் டூரிஸ்ட் ஃபேமிலி இயக்கி சின்ன கேரக்டர்…

Read More