கன்னட சினிமாவின் மூலம் திரைத்துறையில் அறிமுகமான பிரியங்கா மோகன் நீண்ட இடைவேளைக்குப் பிறகு மீண்டும் ஒரு பிரம்மாண்ட படைப்பில் இணைந்துள்ளார். தமிழ், தெலுங்கு திரையுலகில் தொடர்ந்து கவனம் ஈர்த்து வரும் இவர், தற்போது “666 ஆப்பரேஷன் ட்ரீம் தியேட்டர்” என்ற வித்தியாசமான தலைப்பைக் கொண்ட கன்னட படத்தின் மூலம், சாண்டல்வுட்டிலும் கலக்கவுள்ளார். இப்படத்தில் பிரியங்கா மோகன் ஏற்கும் கதாப்பாத்திரத்தின் ஃபர்ஸ்ட் லுக் நேற்று வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. Vaishak J Films தயாரிப்பில், ஹேமந்த் M ராவ் இயக்கதில், கர்நாடக சக்கரவர்த்தி சிவராஜ்குமார், இளம் நட்சத்திர நடிகர் டாலி தனஞ்சயா இணைந்து நடிக்கும் இப்படம், 70 களின் காலகட்டத்தை மையப்படுத்தி, பிரம்மாண்டமான ரெட்ரோ ஸ்டைல் ஃபேண்டஸி படமாக உருவாகி வருகிறது. தனது அறிமுகப்படமான 2016ல் வெளியான ஒந்த் கதே ஹெல்லா Ondh Kathe…
Read MoreCategory: சினிமா செய்திகள்
ஒரு திரைப்பட ஆல்பத்திற்காக முதல்முறையாக வெளியான ‘மூன்வாக் மினி கேசட்’ ( Moonwalk Mini Cassette ) — ஒரு சிறப்பு இசை அனுபவம் !!
Behindwoods Productions நிறுவனம், மூன்வாக் படத்தின் மினி கேசட்டை யூடுயூபில் வெளியிட்டுள்ளது. இது ஒரு திரைப்படத்திற்காக தமிழ் திரையுலகில் இதுவரை யாரும் செய்திடாத ஒரு தனித்துவமான இசை அனுபவமாகும். மூன்வாக் திரைப்படத்தின் அனைத்து 5 பாடல்களையும் A R ரஹ்மான் பாடியுள்ளார். இது அவரது இசைப் பயணத்தில் ஒரு வரலாற்றுச் சாதனையாகும். மூன்வாக் திரைப்படம் 2026 ஆம் ஆண்டு கோடைக்காலத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. பொதுவாக ஒரு பாடலை A R ரஹ்மான் பாடியிருந்தாலே ரசிகர்கள் கொண்டாடும் நிலையில், மூன்வாக் மினி கேசட் அந்த அனுபவத்தை இன்னும் உயர்த்துகிறது. யூடுயூபில் ஒரே வீடியோவாக, ஆல்பத்தில் உள்ள அனைத்து 5 பாடல்களையும் தலா 1 நிமிட பீட்ஸாக இணைத்து வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ரசிகர்கள் முழு ஆல்பத்தையும் தொடர்ச்சியாக, ஒரே அமர்வில் ரசிக்க முடிகிறது. இது இசை ரசிகர்களுக்கு…
Read Moreநடிகை ஸ்ருதிஹாசன், விஜய் சேதுபதிக்காக பாடிய பாடல் – 🎵டிரைன் படத்தின் கன்னக்குழிக்காரா !!
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் ஸ்ருதிஹாசன், நடிப்புடன் மட்டுமல்லாமல் தன் இசைத் திறமையாலும் ரசிகர்களின் மனதை வென்று வருகிறார். அந்த வரிசையில், மிஷ்கின் இயக்கத்தில், விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் டிரைன் திரைப்படத்திற்காக ஸ்ருதிஹாசன் பாடியுள்ள “கன்னக்குழிக்காரா” பாடல், தற்போது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பையும் பாராட்டுகளையும் குவித்து வருகிறது. “கன்னக்குழிக்காரா” பாடல் ஒரு வழக்கமான காதல் பாடல் அல்ல. அதில் கிராமிய வாசனை, மண் மணம், எளிமை, மற்றும் உணர்ச்சி நிறைந்த காதல் வெளிப்பாடு அனைத்தும் கலந்துள்ளன. அந்த உணர்வுகளை திரையில் உயிர்ப்பிக்க, ஸ்ருதிஹாசனின் குரல் மிகப் பெரிய பலமாக மாறுகிறது. ஒரு நடிகை, தன்னுடைய குரலால் மற்றொரு நடிகரின் திரை இமேஜை மேலும் அழகாக வடிவமைப்பது என்பது அரிதான விஷயம். ஆனால் இந்தப் பாடலில் அது இயல்பாக நிகழ்ந்துள்ளது. விஜய் சேதுபதி…
Read Moreஇந்தியாவில் வெளியான மிகப்பெரிய ஹாலிவுட் திரைப்படமான ‘அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்’ 2025 ஆம் ஆண்டின் கிறிஸ்துமஸ் விடுமுறை காலத்தில் அதிகளவிலான ரசிகர்களை ஈர்த்து வருகிறது!
இயக்குநர் ஜேம்ஸ் கேமரூனின் ‘அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்’ திரைப்படம் இந்தியாவில் 2025 ஆம் ஆண்டின் மிகப்பெரிய ஹாலிவுட் வெளியீடாக மட்டுமில்லாமல், பாக்ஸ் ஆஃபிஸிலும் நல்ல வசூலைப் பெற்று இந்திய ரசிகர்கள் மத்தியில் மீண்டும் தனது இருப்பை தக்க வைத்துள்ளது. கிறிஸ்துமஸ் விடுமுறையை ஒட்டி பல படங்கள் வெளிவந்தாலும் அதை எல்லாம் தாண்டி, ‘அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்’ திரைப்படம் பாக்ஸ் ஆஃபிஸ் வசூலில் சாதனை படைத்தது மட்டுமல்லாது, இரண்டாவது வார இறுதிக்குள்ளும் வெற்றிகரமாக நுழைந்துள்ளது. கிறிஸ்துமஸ் விடுமுறை காலத்தில் திரையரங்குகளுக்கு சென்று பார்க்க ‘அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்’ திரைப்படம் குடும்ப பார்வையாளர்களின் முதல் தேர்வாக உள்ளது. மேலும், பிரம்மாண்டமான சினிமா அனுபவத்தை இந்தத் திரைப்படம் அனைத்து வயதினருக்கும் கொடுக்கிறது எனவும் ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். நாடு முழுவதும் உள்ள பார்வையாளர்களிடம் உணர்வுப்பூர்வமாக கனெக்ட் ஆன…
Read Moreசிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் மற்றும் பேஷன் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்திருக்கும் ‘தாய் கிழவி’ படத்தின் டீசர் வெளியாகியுள்ளது!
தரமான கதைகளை தேர்ந்தெடுத்து, திறமையாளர்களுக்கு வாய்ப்புகளை வழங்கி வரும் சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் மற்றும் பேஷன் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்திருக்க, அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் நடிகை ராதிகா நடிப்பில் உருவாகியுள்ள ‘தாய் கிழவி’ படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. படம் குறித்து அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் பகிர்ந்து கொண்டதாவது, “நான் இயக்குநர் மணிகண்டனிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்தேன். சிவகார்த்திகேயன் சார் இந்தப் படத்தின் கதையை கேட்டுவிட்டு நான் எதிர்பார்த்த நடிகர்கள், எதிர்பார்த்த பட்ஜெட்டை விட அதிகமாகவே கொடுத்து கதையில் எந்தவிதமான காம்ப்ரமைஸூம் செய்யாமல் நினைத்தபடியே எடுக்க வேண்டும் என அறிவுறுத்தினார். அதன்படியே படமும் நன்றாக வந்திருக்கிறது. உசிலம்பட்டி கிராமத்தில் உள்ள காடுபட்டியில் வாழும் 75 வயது மூதாட்டி மற்றும் அவரது குடும்பத்தை பற்றிய கதையாகவும், அந்த நிலப்பரப்பில் வாழும் மக்களின் பழக்க வழக்கங்கள், பேச்சுநடை, அவர்களின்…
Read Moreலைகா புரொடக்ஷன்ஸ் சுபாஸ்கரனின் ‘சிக்மா’ திரைப்பட டீசர் 5 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைக் கடந்துள்ளது!
லைகா புரொடக்ஷன்ஸ் சுபாஸ்கரன் வழங்கும் ‘சிக்மா’ திரைப்படத்தில் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாக, நடிகர் சந்தீப் கிஷன் கதாநாயகனாக நடித்துள்ளார். இந்தப் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானதிலிருந்து ரசிகர்கள், வர்த்தக வட்டாரங்கள் மற்றும் தமிழ் திரையுலகில் அதிக எதிர்பார்ப்புகளுடன் கூடிய படமாக உள்ளது. தற்போது படத்தின் டீசர் வெளியாகி புதிய உச்சமாக 5 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைத் தாண்டி ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பு பெற்றுள்ளது. இந்த மைல்கல் குறித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்திய லைகா புரொடக்ஷன்ஸ் தலைமை நிர்வாகி ஜி.கே.எம். தமிழ் குமரன், “’சிக்மா’ படத்தின் டீசருக்கு கிடைத்த வரவேற்பு உண்மையிலேயே மகிழ்ச்சியளிக்கிறது. இவ்வளவு குறுகிய காலத்தில் 5 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைக் கடந்துள்ளது இந்த படத்தின் மீது ஆரம்பத்திலிருந்தே நாங்கள் கொண்டிருந்த நம்பிக்கையை மேலும் வலுப்படுத்துகிறது. பார்வையாளர்களும் ‘சிக்மா’ உலகில் வலுவாக இணைந்திருப்பதை பார்ப்பது…
Read Moreகொல்கத்தாவில் எஸ்.ஏ.சிக்கு சிறந்த நடிகர் விருது!
இயக்குநர் எஸ். ஏ. சந்திரசேகரனுக்கு சிறந்த நடிகர் விருது வழங்கப்பட்டுள்ளது.’கூரன்’ என்ற திரைப்படத்தில் நடித்ததற்காக அந்த விருது வழங்கப்பட்டுள்ளது. அது பற்ற இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகரன் பேசும்போது, “நான் திரை உலகில் 45 ஆண்டுகளாகத் தயாரிப்பாளர், இயக்குநர் என்று இயங்கி வருகிறேன் .இப்போது நடிகராகவும் இருக்கிறேன்.சினிமாவில் நான் ஓய்வெடுக்க நினைத்தாலும் அது முடிவதில்லை. சினிமா ஒரு காற்று போன்றது. எப்போதும் அதை நான் சுவாசித்துக் கொண்டிருக்கிறேன். தயாரிப்பாளராக, இயக்குநராக நான் பணியாற்றி இப்போது நடிகராகவும் தொடர்கிறேன்.நான் நடித்த திரைப்படங்களில் ‘கூரன்’ என்ற படத்தில் நடித்தது, அதிலும் ஒரு நாயுடன் நடித்தது வித்தியாசமான அனுபவம். அது ஒரு நாய்க்கும் மனிதருக்குமான பாசம் சம்பந்தப்பட்ட கதை . அந்த வகையில் அந்தப் படத்தில் நடித்தது ஒரு மாறுபட்ட அனுபவமாக இருந்தது. ‘கூரன்’ படத்தில் நடித்ததற்காக எனக்கு சிறந்த நடிகர் என்ற…
Read Moreபிரம்மாண்டமான புராண காவிய கதைக்காக மீண்டும் இணையும் நடிகர் அல்லு அர்ஜூன் மற்றும் இயக்குநர் திரிவிக்ரம்!
ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுன் மற்றும் புகழ்பெற்ற இயக்குநர் திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் இருவரும் ஒரு அற்புதமான புராண காவிய கதைக்காக மீண்டும் இணைய இருக்கிறார்கள். இது அவர்கள் இணைந்து பணிபுரிய இருக்கும் நான்காவது படம் என்பது குறிப்பிடத்தக்கது. நடிகர் அல்லு அர்ஜூனுக்காகவே உருவாக்கப்பட்ட கதை இது என்பதால் ரசிகர்கள் மற்றும் திரைத்துறையினர் மிகுந்த உற்சாகத்தோடு இந்தப் படத்தை எதிர்பார்த்துள்ளனர். அல்லு அர்ஜுன் மற்றும் திரிவிக்ரம் ஆகியோர் கூட்டணி இதற்கு முன்பு பல பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்துள்ளது. அவர்களின் முந்தைய படமான ‘அலா வைகுந்தபுரமுலூ’ தென்னிந்தியா முழுவதும் பல பாக்ஸ் ஆபிஸ் சாதனைகளை முறியடித்து ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்பட்ட படமாக இருந்தது. திரைத்துறையில் வெளியான தகவல்களின்படி, இந்தப் படம் இந்திய சினிமா இதுவரை பார்த்திராத அளவு பிரம்மாண்டமான புராண கதையாக ரூ. 1000 கோடி பட்ஜெட்டில் உருவாக…
Read More‘நேஷனல் க்ரஷ்” ரஷ்மிகா மந்தனா நடிக்கும் ‘மைசா ‘ படத்தின் டீசர் வெளியீடு
அறிமுக இயக்குநர் ரவீந்திர புல்லே இயக்கத்தில் உருவாகி வரும் பெண்களை மையமாகக் கொண்ட ஆக்ஷன் பொழுதுபோக்குத் திரைப்படமான ‘மைசா’வில் கதாநாயகியாக ரஷ்மிகா மந்தனா நடிக்கிறார். இந்தப் படம் அதன் சுவாரஸ்யமான தலைப்பு மற்றும் கவனத்தை ஈர்க்கும் ஃபர்ஸ்ட் லுக் மூலம் ஏற்கனவே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அன்ஃபார்முலா ஃபிலிம்ஸ் தயாரிக்கும் ‘மைசா’ திரைப்படம்- ஒரு பெரிய பட்ஜெட்டில் பிரம்மாண்டமான பான்-இந்தியா அளவில் உருவாக்கப்பட்டு வருகிறது. இன்று, படக்குழுவினர் படத்தின் டீசரை வெளியிட்டனர். இந்த வீடியோவில், ‘மைசா’வின் இருண்ட மற்றும் தீவிரமான உலகத்தைப்பற்றிய ஒரு விறுவிறுப்பான பார்வை இடம்பெறுகிறது. மேலும் இந்த காணொளி, கதாநாயகியின் தாயின் சக்திவாய்ந்த பின்னணிக் குரலுடன் தொடங்குகிறது. அவர் தனது மகளின் மரணத்தை மீறிய துணிச்சலைப் பற்றிப் பேசி, உலகத்தைப்பார்தது “அந்தப் பெயரை நினைவில் கொள்ளுங்கள — மைசா” என்று உரக்க வலியுறுத்துகிறார். இந்தக்…
Read Moreமார்கழியில் மக்களிசை டிசம்பர் 26ல் சென்னையில் கோலாகலமாக துவங்குகிறது!!
இயக்குனர் பா.இரஞ்சித் தின் நீலம் பண்பாட்டு மையம் முன்னெடுப்பில் துவங்கப்பட்ட பிரமாண்டமான இசை நிகழ்ச்சியான ‘மார்கழியில் மக்களிசை’ ஆறாவது ஆண்டாக இம்முறை வரும் டிசம்பர் 26, 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் சென்னை பச்சையப்பன் கல்லூரி மைதானத்தில் நடக்கவிருக்கிறது. ‘மார்கழியில் மக்களிசை’ தமிழ்நாட்டில் இதுவரை நான்கு மாவட்டங்கள், மூன்று மாநிலங்கள் என 12 அரங்குகள் மற்றும் திறந்தவெளி மைதானங்களில் அரங்கேறியிருக்கிறது. நாட்டுப்புற இசை, கானா, ஒப்பாரி, பழங்குடி இசை, ராப், ஹிப் ஹாப் என ஆறு இசை வகைமையின் கீழ் நூற்றுக்கணக்கான இசைக்கலைஞர்கள் பங்கெடுத்திருக்கிறார்கள். மூவாயிரத்திற்கு அதிகமான தனியிசைக் கலைஞர்கள் இசைத்திருக்கிறார்கள். தமிழ்நாட்டில் 35 இசைக்குழுக்களும் பிற மாநிலங்களைச் சேர்ந்த 8 இசைக்குழுக்களையும் சேர்த்து இதுவரை 43 இசைக்குழுக்கள் பங்கெடுத்திருக்கிறது. நீலம் பண்பாட்டு மையம் கடந்த ஐந்து ஆண்டுகளாக ‘மார்கழியில் மக்களிசை’ நிகழ்வை ஒருங்கிணைத்துவருகிறது. இம்மண்ணில்…
Read More