வில் – திரை விமர்சனம்

  தொழிலதிபர் ஒருவர் தனது சொத்துக்களை தனது வாரிசு களான இரண்டு மகன்களுக்கு சரிசமமாக  பிரித்து உயில் எழுதி வைக்கிறார். அதே சமயம், அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள வீடு ஒன்றை மட்டும் ஒரு பெண்ணின் பெயருக்கு உயில் எழுதியிருக்கிறார். அவரது இறப்புக்கு பின் வழக்கறிஞர் மூலம் இந்த தகவல் குடும்பத்துக்கு தெரிய வர… யார் என்றே தெரியாத பெண்ணுக்கு தந்தை எழுதி வைத்த அந்த வீட்டை அபகரிக்கும் நோக்கில் மொத்த குடும்பமும் வேலை செய்கிறது. வேறு ஒரு பெண்ணை பேசி வைத்து கோர்ட்டில் நிறுத்துகிறார்கள். அந்தப் பெண் போலி என கண்டுபிடிக்கும் நீதிபதி, பெரியவர் யாருக்கு தன் வீட்டை எழுதி வைத்தாரோ அந்தப் பெண்ணை கண்டுபிடித்து கோர்ட் டில் நிறுத்த போலீஸ் அதிகாரிக்கு உத்தரவிடுகிறார். போலீஸ் அதிகாரி அந்த பெண்ணை கண்டுபிடித்து கோர்ட்டில் நிறுத்தினாரா? எழுதி வைக்கும்…

Read More

வேடுவன் – இணையத்தொடர் விமர்சனம்

வேடுவன் என்றால் வேட்டைக்காரன் என்று பொருள். ரகசிய போலீஸ் அதிகாரியான கண்ணா ரவிக்கு காவல்துறையின் என்கவுண்டர் லிஸ்ட்டில் இருக்கும் நபர்களை வேட்டையாடுவது தான் அசைன்மென்ட். அதன்படி குறிப்பிட்ட ஏரியாவை தன் கைவசம் வைத்திருந்த ஒரு தாதாவை மாறுவேடத்தில் வந்து போட்டுத் தள்ளுகிறார். இந்தப் பட்டியலில் காவல்துறையால் நெருங்க முடியாத தூரத்தில் இருந்த தாதா ஒருவனை என்கவுண்டர் செய்யும் அடுத்த அசைன்மென்ட் கொடுக்கப்படுகிறது ஊருக்குள் பெரிய மனிதனாக, மக்களின் பிரச்சினைகளை தீர்த்து வைக்கும் மாமனிதனாக அதே நேரம் காவல்துறைக்கு சவாலாக இருக்கும் சஞ்சீவை காலி பண்ண அவர் இருக்கும் ஊருக்கு வருகிறார். அங்குள்ள ஹோட்டல் ஒன்றில் பரோட்டா மாஸ்டராக வேலை பார்த்துக் கொண்டே அந்த தாதாவின் ஒவ்வொரு அசைவையும் கண்காணிக்கிறார். அப்போதுதான் அந்த தாதாவின் மனைவி தன் கல்லூரிக்கால தோழியின் கணவன் என்பது தெரிய வர… இப்போது நம்…

Read More

மருதம் – திரைவிமர்சனம்

விவசாயிகள் நிலத்தை அவர்களுக்கே தெரியாமல் ஆட்டையை போடும் வங்கிகள் தான் கதைக்களம். ராணிப்பேட்டை அருகே இருக்கும் கிராமம் ஒன்றில் மனைவி, மகன் என மகிழ்ச்சி பொங்க வாழ்ந்து வருகிறார் விவசாயி கன்னியப்பன். நல்ல மகசூல் போதிய வருமானம் என்று போய்க் கொண்டிருக்கும் சந்தோஷ வாழ்க்கையில் ஓர் பேரிடி விழுகிறது. வாங்காத கடனுக்காக அவரது நிலத்தை வங்கி ஒன்று ஏலம் விட்டு விடுகிறது.விசயம் அறிந்து வங்கியில் முறையிடும் விதார்த்துக்கு, நியாயம் நஹி. இது குறித்து காவல்துறையில் அவர் கொடுக்கும் புகாரும் கண்டுகொள்ளப்படாமல் போக… இதில் ஏதோ மோசடி இருக்கிறது, என்பதை உணரும் கன்னியப்பன், மோசடியின் பின்னணியை கண்டறிந்து, நிலத்தை மீட்கும் முயற்சியில் ஈடுபடுகிறார். அதில் அவருக்கு வெற்றி கிடைத்ததா என்பது கிளைமாக்ஸ். நாயகனாக நடித்திருக்கும் விதார்த், வழக்கும் போல் தான் ஏற்றுக்கொண்ட கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்க்கும் வகையில் நடித்திருக்கிறார்.…

Read More

இறுதி முயற்சி – திரை விமர்சனம்

கோவையில் பிரபல ஜவுளிக்கடை உரிமையாளராக இருந்து நொடித்துப் போனவர் ரஞ்சித். கடையை விருத்தி செய்வதற்காக கந்துவட்டிக்கார கும்பலிடம் ரூ 80 லட்சம் வட்டிக்கு வாங்குகிறார். வாங்கிய கடனுக்கு மேலாக வட்டி கட்டியும் இன்னும் ஒரு கோடி ரூபாய் கட்ட வேண்டும் என்கிறது கந்துவட்டி கும்பல். அதற்காக வீட்டுக்கே வந்து அந்த கும்பல் மிரட்டவும் செய்கிறார்கள். மேலும் மேலும் வட்டி பணம் கட்டி மேற்கொண்டு முதல் இல்லாமல் கடையை மூட வேண்டியதாகிறது. இதன் பிறகு கந்து வட்டி கும்பல் தொல்லை இன்னும் அதிகமாகிறது. அவரது குடும்பத்தை வீட்டுக்காவலில் வைத்து, கடனை வசூலிக்க அவர்களை பலவழிகளில் துன்புறுத்துகிறார்கள். இதில் உச்சகட்டமாக வட்டிக்கீடாக மனைவியையும் மகளையும் கடத்தி போய் விடுவோம் என்றும் மிரட்டுகிறார்கள். கடன் பிரச்சனையை சமாளிக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொள்ளும் ரஞ்சித்துக்கு கடன் கேட்டு போகிற இடமெல்லாம் அவமானமே மிஞ்சுகிறது.…

Read More

மரியா – திரை விமர்சனம்

கிறித்துவ மத பெண் துறவியை மையமாக வைத்து சர்ச்சைக்குரிய கதை யை சொல்லியிருக்கிறார்கள். சாய்ஸ்ரீ பிரபாகரன், பெண் துறவியாக இருக்கிறார்.துறவு வாழ்க்கையில் இருந்து வெளியேறி உறவு வாழ்க்கைக்குள் நுழைய விரும்புகிறார். தன் விருப்பத்தை தாயிடம் சொல்லும் போது, அவரோ துறவு வாழ்க்கை என்பது எல்லா பெண்களுக்கும் அமையாது. கடவுளால் அதற்கெ ன்று தேர்ந்தெடுக்கப் பட்டவர்கள் மட்டுமே அதில் நுழைய முடியும். அதனால் அது பற்றி இனி மறுபேச்சு பேசாதே என்று துரத்தி விடுகி றார் வெளியூர் வந்து ஒன்று விட்ட சகோதரி தங்கி இருக்கும் ஹாஸ்டலுக்கு வருகிறாள் துறவி. தங்கையும் இன்னொரு தோழி யும் ஆளுக்கு ஒரு ஆண் துணையை தேர்ந்தெடுத்து அங்கே லிவிங் டுகெ தராக வாழ்ந்து வருகிறார்கள். இதுபற்றி துறவி தன் தங்கையிடம் அதிர்ச்சியுடன் கேட்க… அவ்ளோ சர்வ சாதாரணமாக, ‘ஒன்றாக வேலை பார்க்கிறோம்.…

Read More

இட்லி கடை – திரை விமர்சனம்

தேனி மாவட்டத்தில் உள்ள சங்கராபுரம் கிராமத்தில் சிவநேசன் ( ராஜ் கிரண் ) இட்லி கடை தான் ருசியின் அடையாளம். ஆட்டுக்கல்லில் அரிசி உளுந்தை அரைத்து ஆவி பறக்க அவர் சுட்டுப் போடும் இட்லிக்கு சுற்று வட்டார ஊர்களின் அத்தனை நாக்குகளும் அடிமை. தனது வயதான காலத்தில் தன் ஒரே மகன் முருகனும் ( தனுஷ்) இந்த தொழிலை தாங்கி பிடிப்பான் என்று நம்புகிறார் அப்பா சிவனேசன். ஆனால் முருகனுக்கு வெளியூர் சென்று லட்சங்களில் பணம் பார்க்க ஆசை. மகனின் விருப்பத்தை மென்மையாய் அப்பா சிவனேசன் மறுக்க, அப்படியானால் இதே இட்லி கடையை பல கிளைகளாக வெளியூர்களில் விரிவுபடுத்துவோம் என்று மகன் சொல்ல, அப்படி செய்தால் இதே ருசியை எல்லா ஊரிலும் கொடுக்க முடியாது என்று சிவனேசன் அதற்கும் தடை போட, கேட்டரிங் முடித்து பாங்காங்க்கில் ஸ்டார்…

Read More

பல்டி – திரை விமர்சனம்

செல்வராகவன், அல்போன்ஸ் புத்திரன், பூர்ணிமா இந்திரஜித் இந்த மூவரும் வட்டிக்கு விட்டு பணம் சம்பாதிக்கும் தாதாக்கள். இவர்களில் அதிக வட்டிக்கு பணம் கொடுத்து வட்டியும் அசலும் கட்ட முடியாதவர்களை அடி உதையோடு நிர்வாணப்படுத்தி சித்ரவதை செய்கிறார் செல்வராகவன். பஞ்சமி என்ற கபடி அணியை வைத்துக் கொண்டு தங்கள் திறமையால் ஜொலிக்கும் ஷேன் நிகம் அணி செல்வ ராகவன் தரும் அதிக பணத்துக்கு ஆசைப்பட்டு அவரது பொற்றாமரை கபடி அணியில் சேர்ந்து விளையாடுகிறார்கள். அதில் சோடா பாபு எனப்படும் அல்போன்ஸ் புத்திரனின் கபடி டீமை தோற்கடிக்கிறார்கள். இதன் பிறகு செல்வராகவனின் அடியாட்களாகவே மாறிப் போகிறார்கள். ஒரு கட்டத்தில் ஷேன் நிகமின் காதலி ப்ரீத்தி அஸ்ரானி யின் அண்ணன் குடும்பத்திற்கே செல்வ ராகவனால் பிரச்சனை வருகிறது. அதை தட்டிக் கேட்க செல்வராகவனின் அலுவலகத்துக்கே வருகிறார் ப்ரீத்தி. அங்கே அவர் அவமானப்…

Read More

அந்த 7 நாட்கள் – திரை விமர்சனம்

சூரியகிரகண ஆராய்ச்சியில் ஈடுபடும் கல்லூரி மாணவருக்கு அதிசயசக்தி கிடைக்கிறது. அதாவது ஒருவரை உற்றுப் பார்த்த மாத்திரத்தில் அவரது மரண தேதி தெரிகிறது.அது அப்படியே பலிக்கவும் செய்கிறது. இந்நிலையில் அவரது காதலியை உற்று நோக்கிய போது இன்னும் 7நாட்களில் அவள் மரணமடைவாள் என்பது தெரியவர… காதலியைக் காப்பாற்றப் போராடுகிறார். அவருக்குள் இருந்த அந்த அதிசய சக்தி அதுவரை பலித்து வந்த நிலையில், உயிருக்கு உயிரான தன் காதலியும் மரணத்தை தழுவி விடுவாளோ என்ற பதட்டம் நாயகனை ஆக்கிரமிக்க, காதலியை காப்பாற்ற அந்த ஏழு நாட்களும் விடாப்பிடியாக போராடுகிறார். காதலியை காப்பாற்ற முடிந்ததா என்பது உணர்வு பூர்வமான கிளைமாக்ஸ். அஜிதேஜ் நாயகனாக அறிமுகமாகியிருக்கிறார். நடிப்பில் எந்த இடத்திலும் அறிமுக நடிகர் இரண்டு அடையாளமே இல்லாத அளவுக்கு இயல்பாக நடித்து ஆச்சரியப்படுத்துகிறார். காதலியைக் காப்பாற்ற மேற்கொள்ளும் ஒவ்வொரு முயற்சியிலும் நடிப்பால் மனதை…

Read More

சரீரம் – திரை விமர்சனம்

கல்லூரியில் படிக்கும் தர்ஷன் பிரியனும், சர்மி விஜயலட்சுமியும் காதலர்கள். நாயகியின் குடும்பத்தார் காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். அதன் பிறகும் காதல் தொடரவே நாயகியின் குடும்பம் நாயகனை கொலை செய்யவும் முயற்சிக்கிறது. இந்த விஷயத்தில் சொத்துக்காக நாயகியை அடைய விரும்பும் அவள் தாய் மாமன் நாயகனை கொல்ல கொலை வெறியுடன் அலைகிறான். இந்தக் கொலை வெறிக்கும்பலிடம் இருந்து தப்ப காதல் ஜோடி யாரும் யோசித்துக் கூட பார்க்க முடியாத ஒரு விபரீத காரியத்தில் ஈடுபடுகிறார்கள். அது என்ன ? அதன் மூலம் அவர்களது காதல் வாழ்க்கை நீடித்ததா என்பதை வித்தியாசமான முற்றிலும் எதிர்பாராத திரைக்களத்தில் தந்திருக்கிறார்கள். நாயகனாக நடித்திருக்கும் தர்ஷன் பிரியன், நடனம், நடிப்பு, ஆக்‌ஷன் என எல்லா ஏரியாவிலும் அடித்து ஆடுகிறார். காதலுக்காகவும், காதலிக்காவும் எதையும் செய்ய துணிந்தவர், தனது சரீரத்தையே மாற்றிக் கொள்ள சம்மதித்து, அதன்…

Read More

ரைட் – திரை விமர்சனம்

காவல் நிலையத்தை மையமாக வைத்து ஒரு திரில்லர் படம் தந்திருக்கிறார்கள். கோவளம் காவல் நிலையத்தில் காவல்துறை ஆய்வாளராக இருப்பவர் நட்டி. பிரதமர் பாதுகாப்பிற்காக அவர் சென்ற நிலையில் அவர் பொறுப்பில் உள்ள காவல் நிலையத்தை மர்ம நபர் ஒருவர் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருகிறார்.காவல் நிலையம் மற்றும் அதனைச் சுற்றி வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாகவும், காவல் நிலையத்தில் இருப்பவர்கள் வெளியே சென்றால் அந்த வெடிகுண்டுகள் தானாகவே வெடிக்கும் என்றும் மிரட்டுகிறார். அவை உண்மை என்று நிரூபிப்பது போல் லாக்கப்பில் இருந்து நைசாக வெளியேற முயன்ற கைதி ஒருவர் குண்டு வெடித்து சிதறிப் போகிறார் அந்த நேரத்தில், தன் மகனை காணவில்லை என்று புகார் அளிக்க வந்த அருண்பாண்டியன், திருமண அழைப்பிதழ் கொடுக்க வந்த பெண் உதவி ஆய்வாளர் உள்ளிட்ட சில காவலர்கள், இரண்டு கைதிகள் ஆகியோர் காவல் நிலையத்திற்குள்…

Read More