பிடிவாத குணம் கொண்டவள் கிராமத்து அங்கம்மாள். அவளுக்கு இரண்டு மகன்கள். மூத்த மகனுக்குத் திருமணமாகி ஏழு வயதில் மகள் இருக்கிறாள். மனைவி வீட்டோடு இருக்கிறாள். டிவிஎஸ் சேம்ப்பில் வீடு வீடாகச் சென்று பால் வியாபாரம் செய்யும் அங்கம்மாள் இரண்டாவது மகனை டாக்டர் ஆக்கி விடுகிறாள். அவள் ஜாக்கெட் அணிவதில்லை. எதற்கும் அஞ்சாத குணம் அவளது தனித்துவம். அதனால் அவளுக்கு எதிர் பேச்சு பேச ஊர்க்காரர்கள் பயப்படுவார்கள். மனதில் பட்டதை பட்டென்று போட்டு உடைக்கிற மாதிரி எதையும் முகத்துக்கு நேரே கேட்டு விடுவதால் அவளைக் கண்டால் அனைவருக்கும் பயம். டாக்டருக்கு படித்த இளைய மகன் ஒரு பெண்ணைக் காதலிக்கிறான். பெண் வீட்டார் வேற்று மதம். இருப்பினும் சம்மதிக்கிறார்கள். இப்போது இளைய மகனின் ஒரே பிரச்சினை, இதுவரை ஜாக்கெட் அணியாத அம்மாவை எப்படியாவது தனது திருமணத்துக்குள் ஜாக்கெட் அணிய சம்மதிக்க…
Read MoreCategory: விமர்சனம்
தேரே இஷ்க் மே – திரை விமர்சனம்
எப்பேர்ப்பட்ட கோபக்கார மனிதனையும் பொறுமை மிக்கவனாக மாற்ற முடியும் என்பதை தனது முனைவர் பட்ட ஆய்வுக்காக தேர்வு செய்கிறார் நாயகி. இதற்காக அவர் தேர்ந்தெடுப்பது அடிதடிக்கு அஞ்சாத கல்லூரி மாணவர் தனுஷை. அவரோ சின்ன கோபத்துக்கும் பெரிய சம்பவம் செய்கிறவர். நாயகியின் எந்த ஒரு அணுகுமுறைக்கும் அவர் இறங்கி வருவதாக தெரியவில்லை. ஆனாலும் தனுஷை சாந்தமிகு இளைஞனாக மாற்றும் தன் முயற்சியை தொடர்ந்து கொண்டே இருக்கிறார் நாயகி. தனுஷை மாற்ற முடிந்தால் மட்டுமே நாயகியின் ஆய்வறிக்கை நிறைவு பெறும் என்கிற இக்கட்டான நிலை ஏற்படுகிறது. இதனால் தனுஷுடன் பழக ஆரம்பிக்கிறார் நாயகி. ஒரு கட்டத்தில் அது காதலாக மாறுகிறது. அந்த காதல் கைகூடியதா? தனுஷ் வன்முறையை விட்டொழித்தாரா? என்கிற கேள்விகளுக்கான விடையே படம் கோபக்கார மாணவர், அன்பான காதலர், பொறுப்புள்ள அதிகாரி என வந்தாலும் ஒவ்வொன்றிலும் தனித்துவம்…
Read Moreஐ பி எல் – திரை விமர்சனம்
மதுரையில் போலீஸ் இன்ஸ்பெக்டராக இருக்கும் போஸ் வெங்கட் லஞ்சம் வாங்குவதை இளைஞன் ஒருவன் வீடியோ எடுத்து விட்டதாக தவறாக சந்தேகப்பட்டு அவனை காவல் நிலையம் கொண்டு சென்று தாக்குகிறார். இந்த தாக்குதலில் அந்த இளைஞன் இறந்து போக… கொல்லப்பட்டவனின் செல்போனை ஆராயும் போது அரசியல் பிரபலம் சம்பந்தப்பட்ட பரபரப்பான வீடியோ இருப்பதைப் பார்க்கிறார். இது விஷயம் சம்பந்தப்பட்ட அரசியல் புள்ளிக்குப் போக…இப்போது காட்சி மாறுகிறது. அந்த லாக்கப் மரணத்திற்கு வாடகை கார் ஓட்டும் அப்பாவி கிஷோர் மீது பழி போட்டு அவரைக் கைது செய்கிறார்கள். மேலிடத்து அழுத்தத்தால் அவரை அடித்து நொறுக்கி பொய் வாக்கு மூலம் வாங்கி நீதிமன்றம் கொண்டு செல்கிறார்கள். கிஷோரின் தங்கையை நாயகன் டிடிஎஃப் வாசன் காதலிக்கிறார். அந்த உரிமையில் கிஷோர் மீதான பொய் வழக்கை உடைத்து நீதியை நிலை நாட்ட அதற்கான ஆதா…
Read MoreB. P. 180 – திரை விமர்சனம்
வடசென்னை காசிமேடு அரசு மருத்துவமனையில் பணிபுரியும் நேர்மையான மருத்துவர் நாயகி தன்யா ரவிச்சந்திரன். விபத்தில் இறந்த ஒரு பெண்ணின் உடற்கூறாய்வில் வயிற்றில் மூன்று மாத கரு இருப்பதை கண்டுபிடிக்கிறார். அந்தப் பெண் திருமணமாகாதவள் என்பதால் கரு பற்றி ரகசியம் காக்கும் படி போன் வடிவில் ஏகப்பட்ட பிரஷர். அதில் ஏகப்பட்ட மிரட்டல்களும் அடங்கும். எந்த மிரட்டலுக்கும் பணியாததால் ஒரு கட்டத்தில் அவரை தீர்த்து கட்டவும் துணிகிறார்கள். விபத்தில் இறந்து போனது அந்தப் பகுதியில் பிரபல ரவுடி டேனியல் பாலாஜியின் உறவுக்கார பெண் என்பதால் அவரும் தன் பங்குக்கு நாயகியை மிரட்டுகிறார். நாயகியோ கொஞ்சமும் பயப்படாமல் ‘நீ சரியான ஆம்பளையா இருந்தா நேருக்கு நேர் வாடா’ என்கிறார். இந்த சவாலை ஏற்று கொலை பாதகத்துக்கு கொஞ்சமும் அஞ்சாத டேனியல் பாலாஜி வந்தாரா? அதன் பின் என்னென்ன நடந்தது என்பது…
Read Moreரஜினி கேங் – திரை விமர்சனம்
ரேடியோ சவுண்ட் சர்வீஸ் நடத்தும் ரஜினி கிஷனும் உள்ளூர் பஞ்சாயத்து தலைவர் மகள் த்விவிகாவும் காதலிக்கிறா ர்கள். காதலுக்கு எதிர்ப்பு வரும் என்று தெரிந்ததும் ஊரைவிட்டு ஓடிப்போய் கல்யாணம் செய்து கொள்கிறார்கள். அந்தக் கல்யாணம் நடந்த பின் பல திடுக்கிடும் திருப்பங்கள் நடக்கின்றன. அந்த அதிர்ச்சிகரமான சம்பவங்களுக்கு பின்னணியில் மணப் பெண்ணின் தாலி இருக்கிறது. அந்த தாலி கணவனை நெருங்க விடாமல் துரத்துகிறது. கூ ச்சலிடுகிறது. ‘எவண்டா எனக்கு இந்த தாலியை கட்டியது?’ என்று ஆர்ப்பாட்டம் செய்கிறது. அப்படியானால் இது ஆவியின் சேட்டையா என்ற கேள்வி எழும் அல்லவா. உண்மையில் அந்த தாலி எங்கிருந்து கொண்டு வரப்பட்டது? அதை கட்டிய பிறகு மணமகளிடம் அந்த எதிர்பாராத மாற்றம் ஏன்? கேள்விகளுக்கு விடை எதிர்பாராத கிளைமாக்ஸ். நாயகனாக நடித்திருக்கும் ரஜினி கிஷன், நடனம்,சண்டை என எல்லா ஏரியாவிலும் புகுந்து…
Read Moreவெள்ளக் குதிர — திரை விமர்சனம்
நடுத்தர குடும்பத்தின் அனுதின போராட்ட வாழ்க்கையில் நொந்து போகும் நாயகன், ராங் ரூட்டில் போயாவது சீக்கிரமே செட்டில் ஆக வேண்டும் என்றஎண்ணத்தில் இருக்கிறார். அதற்காக தவறான பாதையை தேர்ந்தெடுத்து மாட்டிக் கொண்டதில் தலைமறைவு வாழ்க்கை வாழ வேண்டியதாகிறது. இந்த நிலையில் தனது மனைவி மகனுடன் தலைமறைவு வாழ்க்கை வாழ்வதற்காக, தனது மலை கிராமத்திற்கு செல்கிறார். அங்கிருக்கும் அவரது உறவினர் வீட்டில் தங்கிக் கொண்டு சுமை தூக்கும் வேலையை செய்து வருகிறார். அவர் நேரம் மீண்டும் சட்ட விரோதமான தொழிலை செய்யத் தொடங்குகிறார். விசேஷங்களுக்காக மட்டுமே அங்கே தயாரிக்கப்படும் போதை தரும் மூலிகை ரசத்தை வியாபாரமாக்கி பணம் சம்பாதிக்கிறார். இதற்கிடையே, அந்த மலைக் கிராம மக்களை ஏமாற்றி, அவர்களது நிலத்தை அபகரிக்கும் வேலையை ரகசியமாக செய்து வருகிறார் முன்னாள் பஞ்சாயத்து தலைவர். அந்த மக்களை அங்கிருந்து வெளியேற்றி, அப்பகுதியை…
Read Moreரிவால்வர் ரீட்டா — திரை விமர்சனம்
நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த கீர்த்தி சுரேஷ் பேக்கரி ஒன்றில் வேலை பார்த்துக் கொண்டே குடும்பத்தை தாங்குகிறார். அப்பா இல்லாத நிலையில் அம்மா, திருமணமான அக்கா, தங்கை என எல்லோரையும் பராமரிக்கும் பொறுப்பு அவருடையது. .புதுச்சேரியைக் கதிகலங்க வைக்கும் தாதா சூப்பர் சுப்பராயன். அவருக்குப் பெண் மோகம் உண்டு. அதை பயன்படுத்தி அவரை கொல்ல திட்டமிடுகிறது ஒரு கூட்டம். ஒரு நாள் வழக்கமான புரோக்கர் ஒருவரின் அழைப்பில் விலைமாதுவை சந்திக்க வரும் இடத்தில் அவரைப் போட்டுத் தள்ள திட்டம் தயாராகிறது. ஆனால் நடந்தது வேறு. தவறுதலாக அவர் கீர்த்தி சுரேஷ் வீட்டுக்குள் நுழைந்து விடுகிறார். அப்போது கீர்த்தி சுரேஷும் அவரது குடும்பமும் சேர்ந்து அவரை தாக்க, தலையில் அடிபட்டு அந்த இடத்திலேயே உயிரை விடுகிறார் சூப்பர் சுப்பராயன். கொலைப்பழியிலிருந்து தப்பிக்க, சட்ட விரோதமாக சடலத்தை அப்புறப்படுத்த மொத்த குடும்பமும்…
Read Moreஃப்ரைடே — திரை விமர்சனம்
வழக்கமான கூலிப்படை கதை. அதை வழக்கத்துக்கு மாறாக திரில்லருடன் சுவாரஸ்யம் இணைத்து தந்திருக்கிறார்கள். மைம் கோபி கூலிப்படை வைத்துக்கொண்டு தாராளமாக அதிரடி தடாலடி என வலம் வருபவர். தனக்குப் பணியாதவர்கள் எதிரிகள் என யாராயிருந்தாலும் தனது ஆட்களை அனுப்பி காலி பண்ணி விடுவார். அதே நேரம் அரசியலிலும் முக்கிய புள்ளியாக இருக்கிறார். வரும் தேர்தலில் தனது கட்சி சார்பில் போட்டியிட்டு எம்எல்ஏ ஆக வேண்டும் என்பது அவரது லட்சியமாக இருக்கிறது. இதனால் கட்சி எம் எல் ஏ வேட்பாளராக தேர்ந்தெடுத்த ஒருவரை இவரே ஆள் வைத்து போட்டுத் தள்ளுகிறார். அவரது நம்பிக்கைக்குரிய அடியாள் தான் கதையின் நாயகன். நேர்மையான போலீசாக இருந்த தன் தந்தையை கொன்றவனை சிறுவயதிலேயே போட்டு தள்ளியவன், அதற்குப் பிறகு எடுத்த கத்தியை கீழே போட முடியாமல் மைம் கோபியிடம் அடியாளாக சேர்கிறார். தனது…
Read Moreமாஸ்க் – திரை விமர்சனம்
நகரின் மையப் பகுதியில் உள்ள பெரிய டிபார்ட்மெண்டல் ஸ்டோரில் துப்பாக்கி முனையில் ஒரு கொள்ளை நடக்கிறது.அங்கே பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் கோடிக்கணக்கான ரூபாய் பணத்தை அள்ளுகிறார்கள். அரசியல்வாதி பவனால் ஓட்டு போடுவதற்கு மக்களுக்குக் கொடுப்பதற்கும் தேர்தல் செலவுக்குமாகப் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் பணம் அது. சிலர் நடிகர் எம் ஆர் ராதாவின் முகமூடி அணிந்து கொண்டு இந்த கொள்ளையை நடத்துகிறார்கள். கொள்ளை போன பணம் யாரிடம் இருக்கிறது என்பதை கண்டறிய தனியார் டிடெக்ட்டிவ் நபரான கவின் வருகிறார். சமூக சேவைகள் என்ற பெயரில் சமூக விரோத செயல்களைய செய்யும் ஆண்ட்ரியாவும் வருகிறார். இவர்கள் இருவரும் தீவிரமான தேடுதலில் ஈடுபடுகிறார்கள். அதே நேரம் அவர்களும் ஒருவரை ஒருவர் உளவு பார்க்கிறார்கள். இவர்களில் பணம் யார் வசம் கிடைத்தது? என்று சொல்வதே ’ மாஸ்க்’ படத்தின் மீதிக்கதை. படத்தின் முதல் காட்சியில் தொடங்கும்…
Read Moreமிடில் கிளாஸ் – திரை விமர்சனம்
நடுத்தரக் குடும்பங்களின் ஒட்டுமொத்த கனவே பணத் தேவையாகத்தான் இருக்கும். மற்றவர் முன் தங்களை உயர்வாக காட்ட விரும்பும் இவர்களில் சிலர் தங்கள் ஆடம்பர கனவுகளுக்கு வடிவம் கொடுத்து கடனில் சிக்கிக் கொள்வதும் உண்டு. அதிலும் குறிப்பாக உறவினர்கள் பணம் படைத்தவர்களாக இருக்க, அவர்களுக்கு இணையாக தங்களை காட்டிக் கொள்ளும் முனை ப்பில் இதே நடுத்தர குடும்பம் பந்தாவுக்கு செலவழித்து நொந்து போனதும் உண்டு. இதற்கெல்லாம் மேலாக பெருமைக்கு வாழவேண்டும் என்று ஆசைப்படுகிற மனைவி மட்டும் இதே நடுத்தர குடும்பத்தில் அமைந்துவிட்டால் கணவன் கடன் வாங்கியே காலாவதியாகி விடுவான். இங்கே நம் கதையின் நாயகனுக்கோ கிராமத்தில் இரண்டு ஏக்கர் நிலம் வாங்கி அதில் வீடு கட்டிக்கொண்டு நிம்மதியாக வாழ ஆசை. ஆனால் மனைவி விஜயலட்சுமிக்கோ நகரத்திலேயே வசதியாக வாழவேண்டும் என் பது லட்சியம். இதனாலேயே இவர்கள் இருவருக்கும் அடிக்கடி…
Read More
