ஆரம்பகால கோவிட் தொற்றுக் காலத்தின் பின்னணியில் இப்படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது. மருத்துவ மாணவர்களின் குழுவொன்று, ஒரு மாணவர் விடுதிக்கு குடிபெயர்கிறது. பதினைந்து ஆண்டுகளாக மூடப்பட்டிருந்த அந்தக் கட்டடம், அதற்கு முன் ஒரு மனநலக் காப்பகமாக இருந்தது. விவேக் சங்கர் எனும் மாணவன், அவ்விடுதியில், சீல் வைக்கப்பட்டதும் சபிக்கப்பட்டதுமான அறை எண் 418-க்கு அருகில் உள்ள 417 -க்குக் குடிபெயர்கிறான். அந்த ஆண்கள் விடுதிக்குள் பெண்கள் எவரும் நுழையக் கூடாது. அப்படி பெண்கள் யாரேனும் நுழைந்தால், 418 இலுள்ள அமானுஷ்ய சக்தி விழித்துக் கொள்ளும். ஏதோ அமானுஷ்யமாக உள்ளதே என உணரும் விவேக், அதைத் தெரிந்து கொள்ள 418 அறைக்குள் நுழையும் அதே சமயம், லண்டனில் இருந்து திரும்பிய கோவிட்டால் பாதிக்கப்பட்ட சாய்ஷா எனும் பெண் அந்த ஆண்கள் விடுதிக்குள் நுழைகிறார். அதனால் அசாதாரணமான பில்லி-சூனிய மர்ம சம்பவங்கள்…
Read MoreCategory: விமர்சனம்
ஹைக்கூ – விமர்சனம்
பெண்கள் கழிவறைக்குள் தெரியாமல் நுழைந்துவிடும் இரண்டாம் ஆண்டு படிக்கும் மனோவைக் கல்லூரியை விட்டு நீக்குகின்றனர். அதனால் இறுதியாண்டு படிக்க வேற கல்லூரிக்குச் செல்ல வேண்டிய நெருக்கடி ஏற்படுகிறது. இருபாலர் படிக்கும் கல்லூரியாக மாற்றம் பெறும் பெண்கள் கல்லூரியில், ஒரே ஒரு ஆண் மாணவனாகச் சேருகிறான் மனோ. கோவையிலுள்ள அக்கல்லூரியில், கொடி எனும் பெண்ணுடன் நட்பு ஏற்பட்டு, அது காதலாக மாறுகிறது. ஆனால், ஓவர் பொசஸிவாக இருக்கும் மனோவின் குணத்தால், அந்தக் காதல் முறிகிறது. கல்லூரி முடிந்து, மனோ சென்னையில் ஒரு நிறுவனத்தில் பணிபுரிகிறான். அந்நிறுவனத்தில் சேரும் நிவி எனும் நிவேதாவுடன் மெல்ல காதல் மலருகிறது. நிவேதாவின் முன்னாள் காதலில், காதலனின் டாக்ஸிக்கான குணத்தால் பாதிக்கப்பட்டிருப்பார். மனோவோ, முந்தைய காதலில் தான் செய்த தவற்றை மீண்டும் செய்யக் கூடாது என மெச்சூர்டாக மாறத் தொடங்கியிருப்பார். எனினும் அவர்களது காதலில்…
Read Moreசட்டமும் நீதியும் 2 – விமர்சனம்
இன்ஸ்பெக்டர் கனகவேல் தற்கொலை செய்து கொண்டார் எனக் காவல்துறை ரிப்போர்ட் அளிக்க, அது தற்கொலை அல்ல கொலை என்று வழக்கு தொடுக்கிறார் கனகவேலின் மனைவி சந்திரா. கனகவேலுடன் ஸ்டேஷனில் பணி புரியும் நான்கு காவலர்கள் மேல் புகார் அளிக்கிறார் சந்திரா. குற்றம் சாட்டப்பட்ட நால்வருக்கு ஆதரவாக வக்கீல்கள் யாரும் வாதாடக் கூடாதென பார் கவுன்சிலில் தீர்மானம் எட்டப்படுகிறது. ஏனென்றால் சந்திரா தான் பார் கவுன்சிலரின் தலைவர். குற்றவாளிக்குக் கூட வக்கீல் வைத்துக் கொள்ளும் உரிமையைச் சட்டம் அளித்து இருக்கும் பொழுது, ஒரு நிரபராதிக்காக வாதாட யாரையும் அனுமதிக்காதது எந்த வகையில் நியாயமாகும் என இப்ராஹிமின் மனைவி பானு, வக்கீல் சுந்தரபாண்டியனைக் கேட்கிறார். அக்கேள்வியின் கனம் உலுக்க, சுந்தரபாண்டியன் பார் கவுன்சிலை எதிர்த்து அவ்வழக்கை எடுத்துக் கொள்கிறார். சந்திரா, சி.பி.ஐ. விசாரணை கோர, சிறப்புப் புலனாய்வுக் குழு (SIT)…
Read MoreHOPE (ஹோப்) – விமர்சனம்
ஹோப் என்ற கொரியன் படம், தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியாகியுள்ளது. பதினைந்து அடி உயரமுள்ள வினோதமான மிருகம் ஒன்று, ஹோப் ஹார்பர் எனும் கிராமத்தைக் கன்னாபின்னாவெனச் சிதிலமடையச் செய்கிறது. அந்தக் கிராமத்து மனிதர்களை மிதித்தும், அறைந்தும், வீசி எறிந்து கொன்றும், அவர்கள் மீது கையில் கிடைக்கும் டூ-வீலர், கார் முதலிய கனமான பொருட்களைத் தூக்கிப் போட்டும் வெறித்தனமாகக் கொல்கிறது. துப்பாக்கிக் குண்டுகளால் சராமரியாகச் சுட்டாலும், அதன் வலு குன்றாமல் மேலும் வீரியமாகத் தாக்கத் தொடங்குகிறது அம்மிருகம். அந்தக் கிராமத்தின் தலைமை போலீஸ் அதிகாரியும், அவரது பெண் அசிஸ்டென்ட்டும் மிகவும் போராடி அம்மிருகத்தைத் துரத்திக் கொல்கின்றனர். காட்டுக்குள் செல்லும் வேட்டையர்கள், காட்டுக்கு நடுவில் வேற்றுக்கிரகவாசிகளின் விண்கலத்தைக் காண்கின்றனர். அப்பொழுது, ஐடோவர் எனும் வேற்றுக்கிரகவாசியையும், அவர்களது மகாராணியான ஜாவூரையும் காண்கின்றனர். பதற்றத்தில் வேட்டையர்கள் வேற்றுக்கிரகவாசியைச் சுட, மாவேயோ எனும் வேற்றுக்கிரகத்துப்…
Read Moreஜெயிலர் 2 விமர்சனம் 5/5 – ரஜினி ராஜாங்கம் சூப்பர் ஸ்டார் சூப்பர்…
கதை… சிலை கடத்தல் விநாயகனை கொன்றுவிட்ட ‘ஜெய்லர்’ ரஜினியை தேடி அலைகின்றனர் வில்லன் கும்பல்.. மிதுன் சக்கரவர்த்தி – வித்யா பாலன் – எஸ் ஜே சூர்யா – சூரஜ் வஞ்சரமோடு என அனைவரும் ரஜினியை தேடிக் கொண்டிருக்கும் போது அவர்களுக்கு ரஜினியின் தகவல் கிடைக்கிறது.. அதன் பிறகு அவர்கள் ரஜினியை என்ன செய்தனர்..? ரஜினி வில்லன்களை எப்படி தீர்த்து கட்டினார்.? அவர் போட்ட திட்டம் என்ன.? என்பதெல்லாம் மிரட்டலான ஸ்கிரீன் ப்ளே… CAST Super Star Rajinikanth SJ Suryah Mithun Chakraborty Suraj Venjaramoodu Vidya Balan Ramya Krishnan Yogi Babu Mirnaa Master Rithvik Jatin Sarna Namo Narayana Bjorn Surrao Anna Rajan P. L. Thenappan Jaffer Sadiq Padam Kumar Apeksha Porwal Tamizh Saravana…
Read Moreடிரோன்ஸ் விமர்சனம் 4/5.. – சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும் திரைப்படம்
கதை… கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் டிராவிட் – அஞ்சலி நாயர் – ஆர் ஜே தீபக் இவர்கள் மூவரும் ஒரு பிரச்சனையில் கல்லூரியில் இருந்து நீக்கப்படுகிறார்கள்.. இது வீட்டிற்கு தெரிந்தால் பிரச்சினையாகும் என்பதால் சிலர் நாட்கள் வெளியே தங்க திட்டம் போடுகின்றனர்.. அதன்படி பிளாக் ஹோல் என்ற ஆராய்ச்சி கூடத்தில் தங்குகின்றனர்.. ஒரு கட்டத்தில் அங்கிருந்து வெளியே வர முடியாத சூழ்நிலை ஏற்படுகிறது.. அப்போது அவர்களுக்கு ட்ரோன் மூலம் வெளி உலகத்தை பார்க்க வாய்ப்பு கிடைக்கிறது.. அப்போது சித்தி இதாணி அழகிய பெண்ணை காண்கிறார் டிராவிட்.. அவர் மீதும் காதல் கொள்கிறார்.. அதன் பிறகு என்ன நடந்தது..? அவர்கள் வெளியே வந்தார்களா டிராவிட் காதல் ஆசை நிறைவேறியதா.? என்பதெல்லாம் வித்தியாசமான யூகிக்க முடியாத பேண்டஸி கலந்த திரில்லர்.. நடிகர்கள்… காமெடி செய்யும் கதாநாயகன் வேடத்தில் டிராவிட் செல்வம்..…
Read MoreFrame பாருங்க ஜி… ஜெய்லர் 2 கிளைமாக்ஸ் காட்சியில் இந்தியாவின் சூப்பர் ஸ்டார்ஸ்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் இந்திய சினிமாவின் பிரபல நட்சத்திரங்கள் நடித்திருக்கும் திரைப்படம் ஜெய்லர் 2 நேற்று உலகமெங்கும் வெளியானது.. சன் பிக்சர்ஸ் தயாரித்த இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க நெல்சன் பிரம்மாண்டமாக இயக்கியிருந்தார்.. ரஜினியுடன் முக்கிய வேடங்களில் மலையாள நடிகர் சூரஜ், ரம்யா கிருஷ்ணன் எஸ் ஜே சூர்யா, வித்யா பாலன், மிர்னா, யோகி பாபு, நமோ நாராயணன், பகவதி பெருமாள், தேனப்பன், ஷீலா ராஜ்குமார் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர்.. இதில் சிறப்பு தோற்றத்தில் மோகன்லால் – சிவராஜ்குமார் – ஹிருத்திக் ரோஷன் – ஜாக்கி சராஃப் – விஜய் சேதுபதி உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர்.. இந்தப் படத்தில் ஒவ்வொரு காட்சியும் பிரேம் பாருங்க ஜி என்று சொல்லும் அளவுக்கு ரஜினிகாந்த் வைத்து செதுக்கியிருந்தார் இயக்குனர் நெல்சன்.. மேலும் அனைத்து தரப்பு ரசிகர்களும் ரசிக்கும் வகையில்…
Read Moreதாய் நிலம் – விமர்சனம்
கதை… இலங்கையில் வசிக்கிறார் அமர் ராமச்சந்திரன்.. அங்கு நடைபெறும் யுத்தத்தில் தன் மனைவியை இழக்கிறார்.. தன் மகளையாவது இந்த உலகத்தில் வாழவைக்க வேண்டும் என எண்ணும் அமர் ராமச்சந்திரன் அகதியாக இந்தியாவிற்கு வருகிறார்.. கையில் எதுவும் இல்லாத சூழ்நிலையில் வேறு வழியின்றி சாலையோர பிளாட்பாரத்தில் மகளுடன் இணைந்து தன் வாழ்வை தொடங்குகிறார்.. சில நல்ல உள்ளங்கள் மூலம் அவருக்கு உதவி கிடைக்க சந்தோஷமாக வாழ்க்கை தொடங்கும் நேரத்தில் திடீரென ஒரு பிரச்சனை வெடிக்கிறது.. அதன் பிறகு என்ன ஆனது என்பதுதான் திரைக்கதை.. நடிகர்கள்… மனைவியை இழந்த ஒருவனின் மனநிலை… மகளின் எதிர்காலத்தை யோசிக்கும் ஒரு பொறுப்பான தந்தையின் மனநிலையை உணர்ச்சிப்பூர்வமாக நடிப்பின் மூலம் பதிவு செய்திருக்கிறார் அமர் ராமச்சந்திரன்.. அமரின் மகளாக நேஹா அமர்.. தாயை இழந்த சோகத்தில் அப்பாவின் துன்பத்தை தினம் தினம் பார்க்கும் மகளின்…
Read Moreஆல் பாஸ் விமர்சனம்…
கதை… மூன்று தம்பதிகள்.. இந்த தம்பதிகளுக்கு தலா ஒவ்வொரு மகன்கள்.. உடன் பிறந்தவர்களை போல இந்த மூன்று குடும்பங்களும் ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்றனர்.. ஏழ்மை நிலையில் இருந்தாலும் ஒற்றுமையாக நண்பர்களாக வாழ்ந்து வரும் வேளையில் இவர்களுக்கு 5 கோடி ரூபாய் பணம் புதையலாக கிடைக்கிறது… ஜெயப்பிரகாஷ் மட்டும் நேர்மையாக நடந்து கொள்ள வேண்டும் இது நம்முடைய பணம் இல்லை.. போலீசில் ஒப்படைக்கலாம் என்கிறார்.. ஆனால் மற்றவர்களோ இது நமக்கு கிடைத்திருக்கிறது.. நம் வறுமையை போக்க இது ஒன்றே நமக்கு உதவும் என சொல்கின்றனர். இந்த பணம் ஒரு எம்எல்ஏவின் பணம் என்றும் தெரிய வருகிறது.. அதன் பிறகு அவர்கள் என்ன செய்தனர்.? பணத்தை பங்கு போட்டு வாழ்ந்தார்களா.? திருப்பி கொடுத்தார்களா? குடும்பம் ஒற்றுமையாக இருந்ததா? என்பதெல்லாம் மீதிக்கதை.. நடிகர்கள்… ஜெயப்பிரகாஷ், செந்திகுமாரி, சுப்பிரமணிய சிவா, வினோதினி, பிரசன்ன…
Read MoreDon’t Trouble The Trouble விமர்சனம்.. – வில்லனிடமிருந்து தப்பிக்க பேயிடம் மாட்டிக் கொண்ட ஹீரோ
கதை… நாயகன் பகத் பாசில் ஒரு கடன் பிரச்சனையில் சிக்கிக் கொள்கிறார்… அவரை மிரட்டும் வில்லன் 2 நாளில் 25 லட்சம் வேண்டும் என்கிறார்.. உயிருக்கு பயந்து பகத்தும் உடனே ஓகே சொல்கிறார். எப்படி பணத்தை ரெடி செய்வது என அவர் குழம்பிக் கொண்டிருக்கும் வேளையில் பகத்தை ஒரு மேஜிக் மேன் என நினைக்கும் சிறுமி சாரா.. நான் தவறுதலாக மேஜிக் செய்த போது என் பெற்றோர்களை மறைய வைத்து விட்டேன்.. அவர்களை மீட்டு தர வேண்டும் என்கிறார்.. உடனே இதை வைத்து அந்த குழந்தையை கடத்தினால் அவரின் பெற்றோர்களிடமிருந்து பணத்தை எடுத்துக் கொள்ளலாம் என திட்டம் போடுகிறார்… சில மணி நேரங்கள் செல்ல செல்ல தான் கடத்தியது ஒரு குழந்தை அல்ல.. அது ஒரு குட்டி பேய் என்பதை தெரிந்து கொள்கிறார். அதன் பிறகு என்ன…
Read More