காந்தி கண்ணாடி – திரை விமர்சனம்

பணம் மட்டுமே வாழ்க்கையை மேம்படுத்தும் என நம்புபவன் கதிர். அதனாலேயே சம்பாதிப்பதற்கான வாய்ப்புகளைத் தவற விடக் கூடாது என்பதில் கவனமாக, அதாவது கறாராக இருக்கிறான். காதல் திருமணம் புரிந்து ஊரை விட்டு வந்த காந்தி- கண்ணம்மா தம்பதிகளுக்கு இப்போது வயது அறுபதை தாண்டுகிறது. இந்த தம்பதிகளுக்கு குழந்தைகள் கிடையாது. அதனால் தான் என்னவோ தம்பதிகள் இருவரும் ஒருவருக்கொருவர் அன்பில் பொங்கி வழிகிறார்கள். மனைவி தான் தனக்கு எல்லாமே என காந்தியும், கணவரே தன் உலகம் என வாழும் கண்ணம்மாவும் ஆதர்ச தம்பதிகளாக ஊராரின் கண்களுக்கு ஆச்சரியம் தருகிறார்கள். இவர்களில் கண்ணம்மாவுக்கு தங்கள் அறுபதாம் கல்யாணத்தை சிறப்புற நடத்தி பார்க்க வேண்டும் என்பது ஆசை. அதற்கு காந்தியும் உடன்படுகிறார். தன்னுடைய அறுபதாம் கல்யாணத்தைப் பிரம்மாண்டமாக நடத்தித் தரும்படி இவென்ட் மேனேஜ்மென்ட் செய்யும் கதிரிடம் கேட்கிறார். கதிரும் ரூ 52…

Read More

மதராஸி – திரை விமர்சனம்

அமைதியே வடிவான தமிழ்நாட்டில் துப்பாக்கி கலாசாரத்தை ஏற்படுத்தி அமைதியை குலை க்க திட்டமிடுகிறது, ஒரு தீவிரவாத கும்பல். அதற்காக துப்பாக்கிகளைப் புழக்கத்தில் விட்டு, அதை வணிகமாக்க அந்த சட்ட விரோதக் கும்பல் முயற்சி செய்கிறது. அதன் முதல் கட்டமாக துப்பாக்கிகளை கன்டெய்னர்களில் கடத்திக் கொண்டு ஆந்திர எல்லை கடந்து தமிழகத்தில் நுழைய முயல்கிறது. இதே நேரத்தில் சிறிய அளவில் தமிழகப் பகுதிகளில் துப்பாக்கிகளை ரகசியமாக புழக்கத்தில் விடுபவர்கள் மூலம் வன்முறைச் சம்பவங்கள் நிகழ்கின்றன. இந்த கும்பலை பிடிப்பதற்கு காவல்துறை வியூகம் அமைக்கிறது.ஆனால் குற்றவாளிகளின் நெட்வொர்க் அந்த வியூகத்தை தவிடு பொடியாக்குகிறது. நாசக்கார கும்பலை கூண்டோடு பிடிக்க சிறப்பு காவல் படை தயாராகிறது. இப்போது நாயகன் அறிமுகம். நாயகன் சிவகார்த்திகேயன் உயரமான இடத்திலிருந்து குதித்து தற்கொலைக்கு முயற்சி செய்கிறார். தன் காதலி தன்னைக் கைவிட்டு விட்டதாகக் கூறிக்கொண்டு மேலிருந்து…

Read More

லோகா அத்தியாயம் 1 சந்திரா – திரை விமர்சனம்

சூப்பர்மேன் டைப் திரைப்படங்கள் எப்போதாவது வந்து திரையை பரபரப்பாக்கும்.அப்படி ஒரு சூப்பர் மேன் கதை இது. சின்ன திருத்தம் சூப்பர் உமன் கதை. நாயகி சந்திராவின் சிறுவயது பாதிப்பு, அதன் மூலம் அவர் அதீத சக்தி படைத்த பெண்ணாக உருவெடுப்பது என தொடக்கம் முதலே வேகமெடுத்து விடுகிறது கதைக்களம். பெங்களூர் பேக்கரி ஒன்றில் வேலை பார்த்து வருகிறார் கல்யாணி பிரியதர்ஷன். இவர் தங்கி இருக்கும் வீட்டுக்கு எதிர் வீட்டில் இருப்பவர் தான் நாயகன் நஸ்லென். அடுத்தடுத்த தொடர் சந்திப்புகள் கல்யாணி மீது நஸ்லெனுக்குள் காதலை கொண்டு வருகிறது. கல்யாணியோ நஸ்லெனின் காதலை ஏற்கவும் இல்லை. மறுக் க்கவுமில்லை. கண்டும் காணாதது போல் இருக்கிறார். இப்படி அவர் பின் தொடரும் ஒரு நாளில் ஒரு சட்ட விரோத கும்பலால் கல்யாணி கடத்தப்படுகிறார். நஸ்லென் அவரை காப்பாற்ற விரைகிறார். ஆனால்…

Read More

குற்றம் புதிது – திரை விமர்சனம்

உயர் போலீஸ் அதிகாரியின் மகள் அலுவலகம் முடிந்து நள்ளிரவில் வீட்டுக்கு கிளம்புகிறாள் ஆனால் அவள் வீடு வந்து சேரவில்லை. கடத்தப்பட்டாளா அல்லது கடத்திக் கொல்லப்பட்டாளா என்பதை கண்டுபிடிக்க காவல்துறை சீறிப் பாய்கிறது. அதேநேரம் ஒரு இளம்பெண் உள்பட மூன்று பேரை கொலை செய்ததாகச் சொல்லி உணவு டெலிவரி இளைஞன் ஒருவன் போலீசில் சரணடைகிறான். அதைப் பற்றி விசாரித்தால் அவன் கொலை செய்ததாகச் சொன்ன மூவரில் இருவர் உயிருடன் இருக்கிறார்கள்.அப்படியானால் அந்த இளைஞன் ஏன் பொய் சொல்ல வேண்டும்? அந்தப் பெண் உயிருடன் இருக்கிறாளா, இல்லையா? கேள்விக்கான விடையே குற்றம் புதிது. கதாநாயகனாக நடித்திருக்கும் தருண் விஜய், நடிப்புக்காக தன்னை முழுதாக தயார்படுத்தி இருக்கிறார். நீதிபதியையும் போலீஸ் அதிகாரியையும் அங்கிள் என்று சொல்லி கலகலப்பு ஏற்றுகிறார். போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் முன்பாக நின்று கொண்டு அந்த வழியாக வரும்…

Read More

சொட்ட சொட்ட நனையுது – திரை விமர்சனம்

காரைக்குடியைச் சேர்ந்த வசதி படைத்த ராஜாவிற்கு ஒரே பிரச்சனை, வழுக்கை. பணக்கார குடும்பம் என்று விரும்பும் பெண் வீட்டார் கூட மாப்பிள்ளையின் சொட்டைத்தலை பார்த்ததும் ரிவர்ஸ் அடித்து விடுகிறார்கள். இதனால் நாயகனின் திருமணம் கிட்டத்தட்ட கேள்விக்குறி நிலையில் இருக்க… ஒரு கட்டத்தில் பெண் பார்க்கப் போகும் படலத்துக்கே முற்றுப்புள்ளி வைக்கிறான். இந்நிலையில் திடீர் திருப்பமாக வெளியூரிலிருந்து பாட்டி வீட்டுக்கு வரும் பிரியா, நாயகனின் வழுக்கை பற்றி கவலைப்படாமல் ராஜாவை மணக்க சம்மதிக்கிறாள். இது போதாதா? ராஜாவின் பெற்றோர் தடபுடலாக திருமண தேதி குறிக்க, விடிந்தால் திருமணம். ஆனால் ராஜா முந்தின இரவு திருமணத்தை நிறுத்தி விடுகிறான். கல்யாணத்தை ராஜா ஏன் நிறுத்தினான்? அதன் பின் வேறு எந்த பெண்ணாவது அவனை மணமகனாக ஏற்றுக் கொண்டாளா என்பது கிளைமாக்ஸ். கோடீஸ்வர ராஜாவாக நிஷாந்த் ரூசோ அந்த மொட்டை கேரக்டரில்…

Read More

கடுக்கா – திரை விமர்சனம்

கிராமங்களில் ‘கடுக்கா’ கொடுத்து விட்டான் என்ற சொலவடை பிரபலம். சிலர் நம்ப வைத்து ஏமாற்றுவார்கள். அப்போது ஏமாந்தவர் விரக்தியாக, :அட கடுக்கா குடுத்துட்டு போய்ட்டான்பா’ என்பார்கள். நாட்டு மருந்து கடைகளில் கடுக்காய் என்ற பெயரில் உடலுக்கு நல்லது செய்கிற ஒரு மருந்தும் உண்டு. இந்த படம் ஏமாற்றுகிற கடுக்காயா? அல்லது உடலுக்கு நலம் சேர்க்கும் நாட்டு மருந்துகளில் ஒன்றா? வாருங்கள் பார்க்கலாம். படத்தின் நாயகன் வேலை வெட்டி எதற்கும் போகாமல் ஊர் சுற்றி திரிபவன். ஊரின் பிரதான பஸ் ஸ்டாப்பில் நின்றபடி பஸ்ஸில் பயணிக்கிற இளம் பெண்களை சைட் அடிக்கும் வேலையை செவ்வனே செய்வான். மீதமிருக்கும் நேரங்களில் கிராமச் சாவடிகளில் ஊர் பெரிசுகளோடு தாயக்கட்டை ஆடுவது உண்டு. இதனால் சொந்த ஊரிலேயே உதவாக்கரை என்று பெயர் எடுத்த நமது நாயகன் அது பற்றியெல்லாம் கொஞ்சமும் கவலைப்படாமல் ‘தானுண்டு…

Read More

வீர வணக்கம் – திரை விமர்சனம்

கேரளாவில் கம்யூனிஸ்ட் கட்சியை நிறுவிய முதல் செயலாளரும், புரட்சி யாளருமான பி.கிருஷ்ண பிள்ளையின் வீர வாழ்க்கை வரலாற்றை நெஞ்சம் நெக்குருக தந்திருக்கிறார்கள். தமிழக கிராமம் ஒன்றின் பெரிய மனிதர் பரத், கம்யூனிசவாதியாக இருக்கிறார். ஊர் மக்களுக்கு சாதி மத பேதம் பார்க்காமல் பல்வேறு உதவிகளை செய்து வருகிறார். பக்கத்து ஊரில் சாதி வன்கொடுமை பிரச்சனைகளில் பாதிக்கப்படும் மக்களுக்கு துணையாக நிற்பதோடு, அம்மக்களை பிரச்சனைகளை எதிர்த்து போராட வைப்பதற்காக அவர்களை கேரளாவுக்கு அழைத்துச் சென்று கம்யூனிச போராளிகளை சந்திக்க வைக்கிறார். அப்போது 97 வயதுள்ள பெண் கம்யூனிச போராளி பி.கே.மேதினி, புரட்சி வீரர் பி.கிருஷ்ண பிள்ளையின் வாழ்க்கை வரலாற்றை விவரிக்கிறார். அவர் மூலம் கேரளாவில் கம்யூனிச புரட்சி உருவாகி, எப்படி விஸ்வரூபம் எடுத்தது என்பதை கவனம் ஈர்க்கும் விதத்தில் தந்திருப்பது சிறப்பு. 1940- ல் தொடங்கும் கதை 1946…

Read More

நறுவீ – திரை விமர்சனம்

கல்வியின் அவசியம் குறித்த படம். இங்கே நறுமணமே கல்வி தான். மலைப்பிரதேசத்தில் மாணவர்களுக்கு கல்வி கொடுக்கும் ஆசிரியர் அந்த அறியாமை மக்களால் தவறாக புரிந்து கொள்ளப்பட்டு என்னவாகிறார் என்பது படத்தின் ஒருவரிக் கதை. அதை ஹாரர் த்ரில்லர் படமாகத் வந்திருக்கிறார்கள் . குன்னூர் மலையிலுள்ள தேயிலைத் தோட்டத்திற்கு வின்சு ரேச்சல், Vj பப்பு, பாடினி குமார் முதலியோர் வருகிறார்கள். இவர்களுக்கு உதவ கேத்தரின் வருகிறார். இந்த குழு குன்னூர் மலையை தொட்டதும் அவர்களுக்கு நிறைய அமானுஷ்ய அனுபவங்கள் கிட்டுகின்றன. அதற்கான காரணம் என்ன என்பதற்குப் பதிலாக ஒரு சோக கதையையும், ஒருவரது சேவை மனப்பான்மையும், அது தவறாகப் புரிந்து கொள்ளப்படும் கல்வியின்மையும் தொட்டுப் பயணிக்கிறது திரைக்கதை. பன் பட்டர் ஜாம் படத்தில் நகைச்சுவையில் கலக்கியிருந்த VJ பப்பு, இதிலும் படத்தை கல கலப்பாக வைக்க உதவுகிறார். மருத்துவம்…

Read More

இந்திரா – திரை விமர்சனம்

  குடித்து விட்டு கார் ஓட்டி விபத்து ஏற்படுத்தியதற்காக போலீஸ் அதிகாரி இந்திரகுமார் பணியிடை நீக்கம் செய்யப்படு கிறார்.அதனால் மன அழுத்தம் அதிகமாகி மேலும் குடிக்கிறார். இதனால் காதல் மனைவி கயலின் வெறுப்புக்கும் ஆளாகிறார். ஒரு கட்டத்தில் குடியே அவரது கண் பார்வை போகவும் காரணம் ஆகிறது. இதன் பிறகு மனைவியிடம் மன மாற்றம். கண்ணாக இருந்து கணவனை தாங்குகிறார். இந்த நிலையில் மனைவி கயல் ஒரு நாள் பூட்டிய வீட்டுக்குள்ளேயே கொலை செய்யப்படுகிறார். வேலை போய் கண் பார்வையும் போய் தனது காதல் மனைவியும் கொலை செய்யப்பட்ட நிலையில், தாங்க முடியாத மன அழுத்தத்தில் தவிக்கிறார் இந்திரகுமார். தன் மனைவியைக் கொன்றவனை கண்டுபிடித்து பழி வாங்கத் துடிக்கிறார். பூட்டிய வீட்டுக்குள் இந்திர குமாரின் மனைவி கொலை என்றதும் போலீசின் சந்தேகப் பார்வை இந்திரகுமார் மீது திரும்புகிறது.…

Read More

கூலி – திரைவிமர்சனம்

      சென்னையில் ஆண்களுக்கான விடுதி ஒன்றை நடத்தி வருகிறார் தேவா ( ரஜினி). ஒரு நாள் விசாகப்பட்டினத்தில் இருக்கும் அவரது உயிர் நண்பன் ராஜசேகர் ( சத்யராஜ் ) இறந்து விட்டதாக செய்தி வருகிறது. துக்கம் விசாரிக்க விசாகப்பட்டினம் விரைகிறார். அங்கே சென்றபோது தான் சத்யராஜ் இயற்கையில் மரணமடையவில்லை, கொலை செய்யப்பட்டிருக்கிறார் என்ற உண்மை தெரிய வருகிறது. அதற்குக் காரணமானவர்களை கண்டுபிடிக்க களத்தில் இறங்குகிறார். விசாகப்பட்டினம் துறைமுகத்தை தன் ஆளுமைக்குள் வைத்துக்கொண்டு கடத்தல் தொழிலில் கொடி கட்டிப் பறக்கும் சைமன் கொலை பாதகத்துக்கு அஞ்சாதவன். தன் நிர்வாகத்தில் யார் தப்பு செய்தாலும் மரணம் நிச்சயம். அதற்கேற்ப ஆரம்பத்திலேயே கூலித் தொழிலாளி காளி வெங்கட்டை தூக்கில் தொங்க விடுகிறார்கள். ( போலீஸ் உளவாளியாம். அதனால் இந்த கொடூர தண்டனை) இந்த மாதிரி கொல்லப்பட்டவர்களின் பாடியை அங்கே…

Read More