மொத்தமாக விலை கொடுத்து வாங்க முடியாத பொருட்களை தவணை முறையில் வாங்கும் பழக்கம் நடைமுறைக்கு வந்த போது மக்களால் விரும்பிய பொருட்களை வாங்க முடிந்தது. இதுவே காலப்போக்கில் மாதத் தவணையில் எதை வேண்டுமானாலும் வாங்கலாம் என்ற முடிவுக்கு மக்களை கொண்டும் வந்தது. இந்த மாத தவணை இன்று பல குடும்பங்களில் மாதாந்திர வேதனையாகவும் உருமாறி இருக்கிறது. இந்த கதை களத்தை கருவாக எடுத்துக் கொண்டு கொஞ்சம் ஜாலியாகவும் கொஞ்சம் சீரியஸாக வும் சொல்கிற திரைக்கதை படத்தின் முழு முதல் பலம். நாயகன் சதாசிவம் நாயகி சாய் தன்யா இருவரும் ஒரே அலுவலகத்தில் வேலை பார்க்கிறார்கள். காதலாகிறார்கள். காதலியை குஷிப்படுத்த மாத தவணையில் ஒரு பைக் வாங்குகிறார் நாயகன். இந்த காதல் திருமணத்தில் முடிந்த போது இப்போது காதல் மனைவியை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்த மாத தவணையில் ஒரு…
Read MoreCategory: விமர்சனம்
டெஸ்ட்- திரை விமர்சனம்
மூன்று கேரக்டர் களை வைத்து ஒரு முத்தான கதை. அதை விறுவிறுப்பு குறையாமல் தந்திருக்கிற அறிமுக இயக்குனர் சஷி காந்துக்கு ஒரு சபாஷ். நட்சத்திர கிரிக்கெட் வீரராக கொண்டாடப்பட்ட சித்தார்த் கடைசி இரண்டு போட்டிகளில் சரியாக சோபிக்காததை காரணம் காட்டி அணியில் இருந்து விலகச் சொல்லி நிர்ப்பந்திக்கிறது கிரிக்கெட் வாரியம். சித்தார்த்தோ தோல்வியுடன் தனது கிரிக்கெட் வாழ்க்கையை முடிவுக்கு கொண்டுவர விரும் பாமல், இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற இருக்கும் கடைசி டெஸ்ட் போட்டியில் விளையாடி தனது திறமையை நிரூபித்த பிறகே மற்ற காரியம் என்கிறார். தண்ணீரில் இருந்து எடுக்கப்படும் ஹைட்ரஜனை எரிபொருளாக கொண்டு வாகனங்களை இயக்கும் முறையை கண்டுபிடிக்கும் விஞ்ஞானி மாதவன், தனது கண்டுபிடிப்பிற்கு உரிய அங்கீகாரம் பெறுவதற்கு கடும் முயற்சி மேற்கொள்கிறார். ஆசிரியராக பணியாற்றும் அவரது மனைவி நயன்தாரா, கணவரின் லட்சியத்திற்கு உறுதுணையாக…
Read Moreஎம்புரான்- திரை விமர்சனம்
கேரள முதல்வர் மறைவுக்குப் பிறகு மாநிலத்தில் ஏற்படும் அரசியல் குழப்பங்களை தீர்த்து வைக்கும் மோகன்லால், முதல்வரின் மகன் டோவினோ தாமஸை புதிய முதல்வராக்கி விட்டு கேரளாவில் இருந்து வெளியேறுவது போல் ‘லூசிஃபர்’ படம் முடிவடையும். அதன் தொடர்ச்சியாக இதோ இரண்டாம் பாகம். முதல்வரான டோவினோ தாமஸ், மத அரசியல் செய்யும் தேசிய கட்சி ஒன்றுடன் கூட்டணி அமைத்துக் கொள்வதால் மீண்டும் கேரள அரசியலில் குழப்பம். இதனால், மறுபடியும் கேரளா வரும் மோகன்லால், தனது அதிரடி நடவடிக்கை மூலம் பிரச்சனைகளை எப்படி தீர்த்து வைக்கிறார்? என்பது கதைக்களம். இதற்குள் அவரது சர்வதேச மாஃபியா வாழ்க்கையையும் அனல் தெறிக்க தந்திருக்கிறார்கள். முதல் பாகத்தில் மாநில அரசியல் பேசிய இயக்குநர் பிரித்விராஜ் சுகுமாரன், இரண்டாம் பாகத்தில், மாநிலங்களை ஆக்கிரமிக்க திட்டமிடும் தேசிய கட்சிகளின் நடவடிக்கையை வெளிச்சம் போட்டு காட்டி இருக்கிறார்.குரேஸி ஆப்ராம்…
Read Moreவீர தீர சூரன் – திரை விமர்சனம்
மதுரையைச் சேர்ந்த செல்வாக்கு மிக்க பெரியவர் குடும்பத்தில் ஏற்படும் பிரச்சனையில் இருந்து கதை தொடங்குகிறது.அந்த பெரியவர் வீட்டில் வேலை பார்த்த கொண்டிருந்த தன் கணவரை காணோம் என்று ஒரு இளம் பெண் தன் குட்டி மகளுடன் பெரியவர் வீடு தேடி வந்து தகராறு செய்கிறாள். பெரியவரின் மூத்த மகன் அந்தப் பெண்ணை அடித்து துரத்துகிறான்.இதற்கிடையே பெரியவர் வீட்டுக்கு தன்னை தேடிப்போன மனைவியையும் குழந்தையையும் காணவில்லை என்று அவள் கணவன் போலீசில் புகார் தர…ஏற்கனவே பெரியவர் குடும்பத்தின் மீது தீரா பகையிலிருந்த அந்த ஏரியா எஸ்.பி. அருணகிரி, இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொள்ள திட்டமிடுகிறார். பெரியவர் வீட்டுத் தோட்டத்தில் ஒரு பெண்ணின் பிணம் கிடைத்தது போல் போலியாக ஏற்பாடு செய்து பெரியவரையும் அவர் மகனையும் என்கவுண்டரில் போட்டுத்தள்ள ஸ்கெட்ச் போடுகிறார். இந்த தகவல் பெரிய வருக்கு தெரிய வர….மகன் ஒரு…
Read Moreஅறம் செய் – திரை விமர்சனம்
தான் படிக்கும் அரசு மருத்துவக் கல்லூரி தனியாரிடம் ஒப்படைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சக மாணவர்களுடன் சேர்ந்து போராடுகிறார், மருத்துவக் கல்லூரி மாணவரான பாலு s.வைத்தியநாதன். இதனால் அவருக்கு அந்த கல்லூரி தரப்பில் இருந்தும் அரசு தரப்பிலிருந்தும் நேரடியாகவும் மறைமுகமாகவும் மிரட்டல்கள் வருகின்றன. இன்னொரு பக்கம், நாயகி அஞ்சனா கீர்த்தி ‘அறம் செய்’ என்ற அரசியல் அமைப்பின் மூலம், நாட்டில் அரசியல் மாற்றங்களை ஏற்படுத்த முயல்கிறார். இதனால், அவருக்கும் பல்வேறு எதிர்ப்புகள் வருகிறது. இதனால், தங்கள் தரப்பில் பல இழப்புகளை சந்திக்கிறார். ஆனாலும் கொள்கையில் உறுதியாக நிற்கும் இவர்களின் போராட்டம் வென்றதா? என்பது கிளைமாக்ஸ். கதை, திரைக்கதை வசனம் எழுதி இயக்கி ஒளிப்பதிவு செய்திருப்பதோடு, கதையின் நாயகனாகவும் நடித்திருக்கும் பாலு எஸ்.வைத்தியநாதன், சமூகப்பிரச்சனைப் பற்றி பேசுகிறார். தங்கள் மருத்துவக் கல்லூரி தனியார் வசம் போய்விடக்கூடாது என்பதற்காக சிறு மாணவர்…
Read Moreதி டோர் – திரை விமர்சனம்
கட்டிடக்கலை நிபுணரான பாவனா வடிவமைக்கும் கட்டிட பணிக்காக சிறு கோவில் ஒன்று இடிக்கப்படுகிறது . கோவில் இடிக்கப்பட்ட அதே நாளில் பாவனாவின் தந்தை சாலை விபத்தில் உயிரிழக்கிறார். இதன் பிறகு பாவனாவை சுற்றி சில அமானுஷ்ய சம்பவங்கள் நடக்கிறது. ஓரிரு முறை அவர் கண் முன் ஒரு அம்மாவும் பெண்ணும் ஆவி தோற்ற த்தில் அடிக்கடி வந்து போகிறார்கள். இதனால் பயந்து போகும் பாவனா, அந்த அமானுஷ்ய சக்தி பற்றி விசாரிக்க முயல்கிறார். அது தொடர்பாக அவர் யாரையெல்லாம் பார்த்துவிட்டு வருகிறாரோ அந்த நபர்கள் மறுநாளே இறந்து போன தகவல் தெரிய வருகிறது. அவர்களின் இறப்புக்கும், பாவனாவுக்கும் என்ன சம்பந்தம்?, அவரை பின் தொடரும் ஆவிகளின் பின்னணி என்ன? என்பதை திகிலும் திரில்லருமாய் சொல்லி இருக்கிறார்கள். தமிழில் கொஞ்சம் இடைவெளி விட்டு ரீ எண்ட்ரி கொடுத்திருக்கும் பாவனா,…
Read Moreட்ராமா – திரை விமர்சனம்
மூன்று சம்பவங்களை ஒரே நேர் கோட்டில் இணைக்கிற கதை.திருமணம் ஆகி சில வருடங்களுக்கு பிறகு மருத்துவ சிகிச்சை மூலம் கர்ப்பமடையும் சாந்தினிக்கு அந்த மகிழ்ச்சி நீடிக்கவில்லை. தன் வயிற்றில் வளரும் குழந்தைக்கு தனது கணவர் விவேக் பிரசன்னா தந்தை இல்லை என்று ஒருவன் போனில் தொடர்பு கொண்டு சொன்னதோடு, அது தொடர்பாக அவர் செல்போனுக்கு ஒரு வீடியோவையும் அனுப்பி வைக்கிறான். வீடியோ ரகசியம் வெளியே வராமல் இருக்க ரூ.50 லட்சம் பணத்துடன் குறிப்பிட்ட இடத்துக்கு வரச் சொல்கிறான். இது ஒரு கதை. அடுத்த கதை: ஆட்டோ ஓட்டுநரின் மகளான பூர்ணிமா ரவி, காதலனால் கர்ப்பமடைந்த நேரத்தில் காதலனின் சுயரூபம் தெரியவர, அவனை அடியோடு கை கழுவுகிறாள். மூன்றாவது கதை: புதிதாக கார் திருடும் நண்பர்கள் இருவர் ஹோட்டல் வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த காரை நைசாக திருடிச் செல்கிறார்கள். போகிற…
Read Moreஅஸ்திரம் – திரை விமர்சனம்
மூன்று இளைஞர்கள் அடுத்தடுத்து பொது இடத்தில் வயிற்றை கிழித்துக்கொண்டு தற்கொலை செய்து கொள்கிறார்கள். மூன்று பேருமே ஒருவருக்கொருவர் சம்பந்தமில்லாதவர்கள். ஒருவரை ஒருவர் உயிரோடு இருக்கும் வரை பார்த்துக் கொண்டதே இல்லை. இந்த தற்கொலை விவகாரம் காவல்துறைக்கு தலைவலியாய் அமைய… இந்த தற்கொலைகளுக்கு பின்னணியில் யார் இருக்கிறார்கள்? அவர்களை காவல்துறை கண்டுபிடித்ததா? என்பது திருப்பு முனைகளுடன் கூடிய கிளைமாக்ஸ். இந்த வழக்கில் புலன் விசாரணை செய்யும் பொறுப்பு கொடைக்கானலில் இன்ஸ்பெக்டராக இருக்கும் ஷாமை தேடி வருகிறது. முதல் கட்ட தகவலாக இவர்கள் மூவருக்கும் பொதுவாக இருப்பது நன்றாக செஸ் விளையாடும் திறமை என்பதை அறிந்து கொள்ளும் ஷாம், தனது உதவியாளர் சுமனுடன் இணைந்து இந்த வழக்கை தீவிரமாய் துப்பு துலக்குகிறார். விசாரணையில் முன்னேற்றம் இல்லாத நிலையில் திடீரென்று இவரை பார்க்க வருகிறார், பள்ளிக்கால நண்பன் விஜய். ஷாமுக்கு மட்டுமே…
Read MoreArmour of god – திரை விமர்சனம்
அமெரிக்காவை ஒட்டியுள்ள பகுதிகளில் அகதிகளாக வாழும் கூட்டத்தில் ஒருவன் சிறுவன் ஆரி லோபஸ், கால் பந்தாட்ட கனவுகளோடு அமெரிக்க நகரத்திற்கு வரும் இந்த சிறுவன் ஆடை தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்றில் கொத்தடிமையாக்கப்படுகிறார். அவரைப் போல் அந்த இடத்தில் பல சிறுவர்கள் கொத்தடிமைகளாக இருக்கிறார்கள். அங்கிருந்து எப்படியாவது தப்பிக்க வேண்டும் என்று நினைக்கும் ஆரி லோபஸின் வலி மிகுந்த வாழ்க்கையையும், அதில் இருந்து மீள்வவதற்கான அவரது முயற்சிகளையும் யதார்த்தமாகவும் அதே சமயம் சினிமா மொழியின் மூலம் விறுவிறுப்பாகவும் சொல்லியிருக்கிறார்கள். படத்தின் மையப் புள்ளியான சிறுவன் ஆரி லோபஸ், வசனமே பேசாமல் தன் கண்கள் மூலமாக பல உணர்வுகளை நம்மிடம் கடத்தி விடுகிறார். அடிமைச் சிறையில் இருந்து தப்பிக்க அவர் மேற்கொள்ளும் முயற்சிகளில் அரங்கில் அப்படி ஒரு அமைதி. அமெரிக்கா என்றால் கோடிகளில் குளிக்கும் பணக்காரர்கள், ஆடம்பர வாழ்க்கை, அதீத…
Read Moreகொஞ்சம் காதல் கொஞ்சம் மோதல் – திரை விமர்சனம்
பிரபல எஸ்டேட் தொழிலதிபரின் மேலாளராக இருப்பவர் ஸ்ரீகாந்த். அதோடு அந்த தொழிலதிபரின் குதிரை பண்ணையில் குதிரைகளுக்கு பயிற்சி அளிக்கும் பயிற்சியாளராகவும் இருந்து வருகிறார். இவருக்கு பணக்கார பெண்ணை மணமுடித்து செட்டில் ஆவது லட்சியம். கோடீஸ்வரர் சச்சு வீட்டில் அவரை பராமரிக்கும் பணிப்பெண்ணாக இருப்பவர் நாயகி பூஜிதா. இவருக்கும் நாயகன் போலவே கோடீஸ்வரன் ஒருவனை கரம் பிடித்து செட்டில் ஆகிவிட வேண்டும் என்பது லட்சியம். இவர்கள் இருவரும் ஒரு கட்டத்தில் சந்தித்துக் கொள்ளும் போது வசதி படைத்தவர்களாக தங்களை காட்டிக் கொள்கிறார்கள். தொழிலதிபரிடம் உதவியாளராக இருக்கும் ஸ்ரீகாந்த், தன்னை அந்த தொழிலதிபராகவே காட்டிக் கொள்கிறார். வீட்டு வேலை பார்க்கும் பூஜிதா தன்னை அந்த பங்களாவின் உரிமையாளர் என்கிறார். இருவருமே கோடீஸ்வரர்கள் என்று தங்களை அறிமுகப்படுத்திக் கொண்ட உடனே அவர்கள் காதலாகிறார்கள். இந்த காதல், திருமணம் வரை வருவதற்குள் அவர்கள்…
Read More