அங்கீகாரம் விமர்சனம்.. 4.5/5… மத்திய மாநில அரசுகளை எதிர்த்து அங்கீகாரம் பெற்ற (அசால்ட்) வீரன்

கதை… நாயகன் கே ஜே ஆர் (ராஜேஷ்).. ஓட்டப்பந்தய வீரன்.. இவருக்கு ஒரு தங்கை.. அம்மா ரமா தூய்மை பணியாளர்.. தன் தலைமுறையோடு தூய்மை பணி முடிவு எட்டட்டும்.. நீ நம் தாயகத்திற்காக ஓடினால் மட்டுமே நம் குடும்பம் அடுத்த உயர்ந்த நிலைக்கு செல்ல முடியும் என தன் பிள்ளைகளுக்கு சொல்லி சொல்லி வளர்க்கிறார்.. இதனால் கடும் பயிற்சிகளுக்குப் பிறகு பெரும் அற்பணிப்புடன் ஓட்டப் பந்தயங்களில் கலந்து கொண்டு நேஷனல் லெவலில் செலக்ட் ஆகிறார் நாயகன் கே ஜே ஆர்.. ஒரு கட்டத்தில் காலில் அடிப்படவே இவரால் ஓட முடியாத சூழ்நிலை.. அப்பொழுது காமன்வெல்த் போட்டியில் கலந்து கொள்ள இவர் விண்ணப்பம் செய்கிறார்… ஆனால் விபத்து காரணமாக உன்னால் கலந்து கொள்ள முடியாது என்று உயர் அதிகாரிகள் இவரை அனுமதிக்கவில்லை.. ஆனால் வாய்ப்பு கொடுங்கள் நான் நிரூபித்து…

Read More

மக்கள் தலைவா விமர்சனம்.. அரசியல் நையாண்டி கலாட்டா

கதை… ரவி மரியா… ஊரைக் காக்க உருவான சங்கம் அது நாங்க இல்ல என்பது போல… ஊர் பிரச்சனைக்காக குரல் கொடுக்கும் ரவி மரியா அரசியல்வாதியிடம் பணம் வாங்கிக்கொண்டு அந்த பிரச்சினையை பற்றி பேச மாட்டார்.. இப்படியாக பணம் பார்த்து வசதியான வாழ்க்கை வாழ நினைக்கிறார்.. ஒரு கட்டத்தில் டாஸ்மாக்கில் பத்து ரூபாய் பாட்டிலுக்கு வாங்கியதால் ஒரு ஆட்டோக்காரர் பிரச்சினை செய்கிறார்.. இந்தப் தொடர்பான வீடியோ ரவிக்கு கிடைக்க அதை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு தமிழ்நாடு முழுக்க பிரபலம் அடைகிறார்.. இவரின் சாமர்த்தியத்தை பார்க்கும் கார்ப்பரேட் முதலாளி ராதாரவி நீ அரசியலுக்கு வா உனக்கு பின்புலமாக நான் இருக்கிறேன்.. என்று சொல்லி பெட்டி பெட்டியாக பணம் கொடுக்கிறார்.. அரசியல் ஆசை கண்ட ரவி மரியா உள்ளே வெளியே என்ற கட்சியை தொடங்கி அதன் மூலம் தேர்தலில் போட்டியிடுகிறார்.…

Read More

நூறு சாமி விமர்சனம்.. – அம்மாவுக்கு மறுமணம் செய்து வைத்த மகன்கள்[4.5/5]

கதை… 2019 ஆம் ஆண்டில் கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற ஒரு உண்மை சம்பவத்தின் அடிப்படையில் இந்த படத்தை எடுத்திருக்கிறார் இயக்குனர் சசி.. நாயகி ஸ்வாசிகா.. கணவரை இளம் வயதிலேயே இழந்த இவருக்கு இரு மகன்கள்.. மூத்தவன் அஜய் திஷான்.. இரண்டாவது மகன் சக்தி.. மறுமணம் செய்து கொள்ள ஆசைப்பட்டு ஆசிரியர் அருள்தாஸ் மூலமாக தன் மகனிடம் விருப்பத்தை கேட்கிறார் அம்மா ஸ்வாசிகா.. இளவயது மகன்கள் மறுக்கிறார்கள்… ஒரு கட்டத்தில் அவர்களுக்கு திருமண வயது எட்டிய போது அம்மாவின் மறுமணம் பற்றி யோசிக்கின்றனர்.. ஆனால் இப்போது அம்மா மறுக்கிறார்.. நீங்கள் மறுமணம் செய்ய வில்லை என்றால் நாங்களும் செய்து கொள்ள மாட்டோம் என்றும் மகன்கள் மறுக்கின்றனர்.. அதன் பிறகு நடந்தது என்ன.? அம்மாவுக்கு மறுமணம் செய்து வைத்தார்களா மகன்கள்.? எப்படி நடந்தது என்பதெல்லாம் சுவாரசியமான உணர்வுபூர்வமான திரைக்கதை..   நடிகர்கள்……

Read More

Balan The Boy – பாலன் விமர்சனம்…

கதை…. நாயகி ஃபர்சானா பலதிங்கல்… இவரது 5 வயது மகன் ஆதிசேஷன் கே.ஆர்.. இருவரும் ஜெயிலில் இருக்கின்றனர்.. ஒரு கட்டத்தில் ஒரு பெண் உதவி மூலம் சிறையிலிருந்து விடுதலை ஆகிறார் நாயகி.. எங்கு செல்வது.. எங்கு தங்குவது.. யாரிடம் உதவி கேட்பது என்ற எதுவும் தெரியாமல் அம்மாவும் மகனும் செல்கின்றனர்.. சிறையில் இருந்து வந்தோம் என்று சொன்னால் யாரும் வேலையும் தர மாட்டார்கள்… தங்க இடமும் கொடுக்க மாட்டார்கள் என்பதால் பெயரை மாற்றி பொய்கள் சொல்லி உதவி கேட்கிறார்கள்.. ஒரு கட்டத்தில் ஒரு வயதான பாட்டியை பார்த்துக் கொள்ள அம்மாவுக்கு வேலை கிடைக்கிறது.. அங்கிருந்து பாலன் படிக்கவும் பள்ளிக்கு செல்கிறார்.. அடையாள அட்டை எதுவும் இல்லாத சூழ்நிலையில் அதற்கும் சில திருட்டு வேலைகளை செய்ய வேண்டியதாகிறது.. ஒரு கட்டத்தில் அந்த வயதான பாட்டியும் இறந்து போக அந்த…

Read More

எங்கள் தங்கம் – விமர்சனம்

கதை… தெலுங்கில் உருவான ’மா இன்டி பங்காரம்’… இப்படத்தை தமிழில் ‘எங்கள் தங்கம்’ எனப் பெயரிட்டு வெளியிட்டுள்ளனர்.. நந்தினி என்பவர் இயக்க சமந்தா தயாரித்துள்ளார்.. ஒரு அனாதை ஆசிரமத்தில் தன் தோழியுடன் வளர்ந்த சமந்தா வளர்ந்து பெரியவர் ஆன பிறகு காதலித்து திருமணம் செய்து கொள்கிறார்.. ஒரு கட்டத்தில் கணவரின் தங்கை திருமணத்திற்காக அவரின் சொந்த கிராமத்திற்கு செல்கிறார். (சமந்தா கேரக்டர் பெயர் ஸ்வர்ணா.) அப்போது வில்லன் குல்சன் கும்பல் ஒன்று சமந்தாவை தேடி நீ ஜான்சி தானே என்று கேட்டு அவரைக் கொல்ல திட்டமிடுகின்றனர்.. தான் ஜான்சியா சொர்ணா என்பது ஒரு பக்கம் இருக்க தன் கணவருக்கும் குடும்பத்திற்கு இது தெரியக்கூடாது என்பதற்காக சமந்தா போராடுகிறார்.. அப்படி என்றால் இவர் நிஜத்தில் யார்.? இவர் ஜான்சி என்றால் ஸ்வர்ணா என்ற பெயரில் கணவர் குடும்பத்தில் வர…

Read More

சாருகேசி – விமர்சனம்…

கதை… கர்நாடக இசை கலைஞர் மாமேதை ஒய் ஜி மகேந்திரன்.. இவர்தான் சாருகேசி.. இவரது மனைவி சுவாசினி இல்லத்தரசி. இவரது மகன் ராஜ ஐயப்பா.. தந்தை பிரபலமானவராக இருந்தாலும் அவரின் நிழலில் தான் வளரக்கூடாது என்பதில் மகன் தீவிரமாக இருக்கிறார்.. ஒரு கட்டத்தில் தன் இசைக் குழுவில் பாட வரும் ரம்யா பாண்டியனை காதலித்து வீட்டில் அப்பா அம்மாவுக்கு இவரே அறிமுகம் செய்து வைக்கிறார்.. தன் ஸ்டுடியோ சம்பந்தமாக பெங்களூர் செல்கிறார் ராஜ ஐயப்பா.. அப்போது வீட்டில் இருக்கும் ஒய் ஜி மகேந்திரன் மற்றும் சுகாசினியை 25 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு விஷயத்தை ரகசியத்தை சொல்லி மிரட்டுகிறார் ரம்யா.. இதனால் தான் சேர்த்து வைத்த கௌரவம் என்ன ஆகுமோ என்று பயப்படுகிறார் ஒய் ஜி மகேந்திரன்.. அப்படி என்றால் ரம்யா எந்த நோக்கத்துடன் மருமகளாக வந்தார்..…

Read More

வள்ளுவன் – விமர்சனம்…

கதை… சென்னையில் வசிக்கிறார் நாயகன் சீனு.. ஒரு நாள் நாயகி ஆஸ்னாவே சந்திக்க காதல் கொள்கிறார்.. அதன் பிறகு அவருடன் இணைந்து சமூக சேவைகளில் ஈடுபடுகிறார்.. இந்த சூழ்நிலையில் இவர்கள் வசிக்கும் பகுதியில் அடுத்தடுத்து கொலைகள் நடக்கிறது… அந்த கொலை செய்யப்பட்டவர்கள் உடலில் எல்லாம் திருக்குறள் வாசகம் எழுதி வைக்கப்படுகிறது.. இதனை விசாரிக்கிறார் போலீஸ் அதிகாரி பிரேம்.. திருக்குறளை எழுதி அதன் மூலம் இந்த சமூகத்திற்கு ஒரு மாற்றத்தை உருவாக்க விரும்புகிறான் கொலையாளி.. அப்படி என்றால் அவன் கூலிக்கு வேலை செய்பவன் அல்ல.. அவன் யார் அவனின் நோக்கம் என்ன.? நாயகன் நாயகியின் பங்கு இந்த சமூகத்தில் என்ன.? என்பதெல்லாம் மீதிக்கதை.. நடிகர்கள்… சேத்தன் சீனு – ஆஸ்னா சாவேரி.. சிறு வயது முதல் பெரியவர்கள் வரை இவர்களின் நட்பை வளர்த்து காதலர்களாக மாறியிருக்கின்றனர்.. நல்ல தோற்றம்…

Read More

ஆட்டி – விமர்சனம்…

கதை… 1975 காலகட்டங்களின் கதை.. தமிழகத்தில் ஒரு அடர்ந்த காடு.. அபி நட்சத்திரா அவரது காதலர் உள்ளிட்ட மலைவாழ் பகுதி மக்கள் அங்கு வசித்து வருகின்றனர்.. அங்கு காவல் நிலையம் செயல்படாத நிலையில் அங்கு இன்ஸ்பெக்டராக வருகிறார் இசக்கி கார்வண்ணன்.. எந்த ஒரு வழக்கும் பதிவாகாத நிலையில் தினம் ஒரு வழக்கு வேண்டும் என சக போலீஸ்காரர்களுக்கு கட்டளையிடுகிறார்.. அப்போது அங்கு ஆசிரியர் கொல்லப்பட்டு கிடக்கிறார்.. அந்த ஆசிரியரை கொன்றவர் யார்.? இந்த அடர்ந்து காட்டுக்குள் அவருக்கு எதிரிகள் யார்.? அதன் பிறகு நடந்தது என்ன என்பதே மீதிக்கதை.. நடிகர்கள்… தயாரிப்பாளர் இசக்கி கார்வண்ணனே போலீஸ் அதிகாரி ஆக நாயகனாக நடித்துள்ளார்.. போலீஸ் என்றால் சீரியஸாக இருக்க வேண்டும் என இயக்குனர் சொன்னாரோ என்னவோ படம் முழுவதும் கொஞ்சம் கூட சிரிக்காமல் வருகிறார்.. ‘அயலி’ புகழ் அபி…

Read More

Double Occupancy விமர்சனம்…

கதை… டபுள் ஆக்குபன்சி.. ஒரே உருவம் ஒரே நாளில் 12 மணி நேரம் ஆண் 12 மணி நேரம் பெண் என்று இருந்தால் எப்படி இருக்கும்.? இந்த லாஜிக் இல்லாத கதையை நம்ப வைக்கும் வகையில் படமாக்கி இருக்கிறார் இயக்குனர் அஸ்வின் கந்தசாமி.. போஸ் வெங்கட் & வினோதினி தம்பதிகளுக்கு கடவுள் அர்த்தநாரீஸ்வரர் அருளுடன் 15 ஆண்டுகளுக்குப் பிறகு பிறக்கிறார் சந்தோஷ் என்ற ரேஷ்மா. ரஜினியின் பிறந்தநாளில் இவர் பிறந்ததால் இவருக்கு ரஜினி என்று பெயர் வைக்கின்றனர்.. பகலில் பெண்ணாகவும் இரவில் ஆணாகவும் இவர்கள் வாழ்கின்றனர்.. பகலில் ஒருவர் வாழும் வாழ்க்கை இரவில் உள்ளவருக்கு தெரியாது… இரவில் வாழும் வாழ்க்கை பகலில் உள்ளவர்க்கு தெரியாது.. இப்படியான சூழ்நிலையில் இவர்கள் வாழ்ந்தது எப்படி.? ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டது எப்படி.? இவர்களின் லைப் ஜெயித்தது எப்படி என்பதெல்லாம் ஜாலியான…

Read More

Habeebi ஹபீபி – விமர்சனம்..

கதை… பெரும்பாலும் தமிழ் சினிமாவில் ஹிந்து மத கதைகளை பார்த்திருப்போம்.. புராண படங்களை பார்த்திருப்போம்… அதுபோல கிறிஸ்தவ மத சார்ந்த கதைகளையும் நாம் கண்டு ரசித்திருக்கிறோம்.. இதில் முழுக்க முழுக்க இஸ்லாமியர்கள் வாழ்வியலை யதார்த்தமாக உணர்வுப்பூர்வமாக சொல்லி இருக்கிறார் இயக்குனர் மீரா கதிரவன்.. தென்காசி பகுதியில் இஸ்லாமியர்கள் வாழும் பகுதியில் நாயகன் ஈஷா நாயகி மாளவிகா வசிக்கின்றனர்.. கஸ்தூரிராஜாவின் மகன் ஈஷா.. கண்ணாடி வாப்பா என்ற கட்டுக்கோப்பான குடும்பத்தில் வளர்ந்து வருகிறார்.. படிப்பு பெரிதாக ஏறவில்லை காரணம் நாயகி.. ஈஷாவுக்கு மாளவிகா மீது காதல்.. இவர்கள் ஒரே மதம் இஸ்லாமிய மதமாக இருந்தாலும் இவர்கள் வேறு சாதி என்பதால் இவர்களுக்கு காதலுக்கு பிரச்சினை வருகிறது… ஒரு கட்டத்தில் காதலியை பார்க்க சென்றபோது கையும் களவுமாக பிடிபடுகிறார்.. அதன் பிறகு இவரது வாழ்க்கை வேறு கட்டத்திற்கு மாறுகிறது… அதன்…

Read More