கிங்டம் – திரை விமர்சனம்

 ஒடுக்கப்பட்ட மக்கள் அதிகார வர்க்கத்திடம் சிக்கி படும் பாட்டை நெஞ்சம் நெக்குருக சொல்லி இருக்கிறார்கள். அதை உயிருக்கு உயிரான அண்ணன்-தம்பி பாசப் பின்னணியில் சொல்லி இருப்பது சிறப்பு . காவலர் பணிக்கு புதிதாக வந்திருக்கும் சூரிக்கு சிறுவயதில் காணாமல் போன தன் அண்ணன் சிவாவை எப்படியாவது கண்டுபிடித்து விட வேண்டும் என்பது லட்சியம். பணியில் அவனது வேகத்தையும் துறு துறுப்பையும் பார்த்து ஒரு பெருங்குற்றத்தைக் கண்டுபிடிக்கும் இடத்துக்கு அனுப்பி வைக்கிறார். கொடுக்கப்பட்ட இந்த பணியை வெற்றிகரமாக முடித்து விட்டால் காணாமல் போன உன் அண்ணனை கண்டுபிடித்து தருவது என் பொறுப்பு என்று மேலதிகாரி சொன்னதை நம்பி இந்த பணிக்குள் இறங்குகிறான். அந்தத் தேடலில் அவன் அண்ணனே கிடைக்கிறான். அண்ணனை தன்னுடன் வர எவ்வளவோ கெஞ்சியும் மறுக்கிறான் அண்ணன். அதற்கும் காரணம் இருக்கிறது.அவன் சந்தித்த அண்ணன் அங்கே சாதாரண…

Read More

தலைவன் தலைவி -திரை விமர்சனம்

காதலில் கட்டுண்டு அன்பில் சிக்குண்ட இளம் தம்பதிகள் குடும்ப சூழல் காரணமாக விவாகரத்து வரை போனால்… மதுரையில் பரோட்டா கடை வைத்திருக்கும் ஆகாசவீரன், பக்கத்து ஊர் பேரரசியை விரும்பி திருமணம் செய்து கொள்கிறான். பெண் வீட்டுக்கு இந்த திருமணத்தில் முழு சம்மதம் இல்லை. மாமியார் வீட்டில் நாத்தனார் மாமியாரும் மணப்பெண்ணுக்கு எதிரான மன நிலையில் இருக்கிறார்கள். ஆனால் தம்பதிகள் இதையெல்லாம் தாண்டி தங்களுக்குள் பிரியத்தை கொட்டவே செய்கிறார்கள். வாரிசாக ஒரு பெண் மகவும் பிறக்கிறாள். ஆனாலும் ஒரு கட்டத்தில் இரு குடும்பத்தில் இருந்தும் வீசப்பட்ட கோபக்கணைகள் தம்பதிகளை பதம் பார்க்க… தாய் வீட்டுக்கு கோபத்தில் வரும் மனைவியை பார்க்க பாசமிகு கணவன் வராமல் போக… இந்தப் பிரிவை நிரந்தரமாக்க சிற்சில உள்ளடி வேலைகள் நடந்ததில் விவாகரத்து என்ற பெயரில் பிரிவு நிரந்தரம் ஆகிறது. பிரிவுக்குப் பின்னான மூன்றாம்…

Read More

மகா அவதார் – நரசிம்மர் திரை விமர்சனம்

புராணத்தில் விஷ்ணு பக்தனான பக்த பிரகலாதன் கதை அனைவரும் அறிந்ததே.இது பல்வேறு கலை வடிவங்களில் மக்களிடம் புகழ்பெற்றது. கிராமங்களில் கூட பக்த பிரகலாதன் நாடகம் கோவில் திருவிழாக்களில் இடம் பிடிக்கும். .விஷ்ணு, நரசிம்ம அவதாரம் எடுக்கும் பின்னணியில் உருவாக்கப்பட்டுள்ள பிரம்மாண்டமான அனிமேஷன் படமே இந்த ‘மகா அவதார் நரசிம்மர்’ அசுரர் குலத்தை சேர்ந்த காசிபர் மற்றும் திதியின் மகன் இரணியன். அவன் இரணியாட்சனின் சகோதரன். இரணியன், பிரம்மாவை நோக்கிக் கடுந்தவம் புரிந்தபோது அவனுக்கு பிரம்மா காட்சி தந்தார். அப்போது அவன் பிரம்மாவிடம், எந்த ஆயுதத்தாலோ, பகலில் அல்லது இரவில், நிலத்திலோ அல்லது வானத்திலோ, மனிதனாலோ அல்லது மிருகத்தாலோ மரணம் ஏற்படக்கூடாது என்று வரம் கேட்டான். இரணியனுக்குப் பிரகலாதன் என்ற மகன் இருந்தான். பிரகலாதன், விஷ்ணுவின் தீவிர பக்தனாக இருந்தான். இதைக் கண்டு இரணியன் மிகவும் கோபமடைந்தான். இரணியன்,…

Read More

ஹரிஹர வீரமல்லு – திரை விமர்சனம்

 பவன் கல்யாண் நடிப்பில் அதிரடி ஆக்சன் படமாக வந்திருப்பது இந்த வீரமல்லு. இதில் முதல் பாகம் மட்டுமே தற்போது வெளியாகி இருக்கிறது. முதல் பாகத்திற்கு, Sword Vs Spirit என உபதலைப்பு வைத்துள்ளனர். வாளின் (Sword) முனையில் மதத்தைப் பரப்பும் ஒளரங்கசீப்பிற்கு எதிராக, கோயில்களையும் இந்து தர்மத்தையும் காக்கும் பொருட்டு மனவலிமை மிக்க (Spirit) ஹரிஹர வீரமல்லு புரட்சி செய்கிறார். இந்த ஹரிஹர வீரமல்லு ஒரு கற்பனையான கதாபாத்திரம். ஒளரங்கசீப்பை எதிர்த்து, அவர் வசமுள்ள கோகினூர் வைரத்தை, மீண்டும் கோல்கொண்டாவிற்கு ஹரிஹர வீரமல்லு கொண்டு வர நினைத்தால் எப்படியிருக்கும் என்ற கற்பனையை, கற்பனைக்கும் எட்டாத விதத்தில் பிரம்மாண்டமாய் காட்சிப்படுத்தி இருக்கிறார்கள். ஃபேன்டஸிக்கான அற்புதமான அடித்தளம் இந்த படத்தின் பலம். ஆனால் படத்தை ஒற்றை ஆளாக ஹரிஹர வீரமல்லுவை சுமக்க வைத்து நம்மை டயர்ட் ஆக்கி விட்டார்கள். வைரங்களைத்…

Read More

மாரீசன் – திரை விமர்சனம்

மாரீசன்’ என்பது ராமாயணத்தில் இடம் பெறும் ஒரு கதாபாத்திரம். மாரீசன், தனது. உறவினர் ராவணனின் உத்திரவின் பேரில் சீதையை கவர்வதற்காக மாயமான் வேடத்தில் வருகிறான். அதன் பின்னணியில் சீதையை ராவணன் கடத்துகிறான். சூழ்ச்சிக்கும் மாயத்திற்கும் தந்திரத்திற்கும் மாரீசன் கதாபாத்திரம் குறியீடாக்கப்படுகிறது. இதன் அடிப்படையில் தான் இப்படத்திற்குப் பெயர் வைத்துள்ளார்கள். படத்தில் வரும் பல பாத்திரங்களில் மாரீ சன் எங்கே ஒளிந்து இருக்கிறான் என்பது கதைக்களம். சின்னச் சின்ன திருட்டுகளில் கில்லாடியான பகத் பாசில் தண்டனை முடிந்து பாளையங்கோட்டை சிறையில் இருந்து வெளியில் வருகிறார். வந்ததுமே ஒரு செல்போன் ஒரு பைக் என்று மீண்டும் திருட்டு வேலையை ஆரம்பித்து விடுகிறார். அடுத்து எந்த வீட்டில் திருடலாம் என்று நோட்டம் பிடிப்பவர் வடிவேலு வீட்டில் நுழைகிறார். வடிவேலுவோ கையில் சங்கிலியால் பிணைக்கப்பட்ட நிலையில் இருக்க, தனக்கு ஞாபக மறதி நோய்…

Read More

யாதும் அறியான் – திரை விமர்சனம்

இரண்டு நண்பர்கள் தங்கள் காதலிகளுடன் வனப்பகுதியில் உள்ள காட்டேஜூக்கு வருகிறார்கள். நண்பர்களில் ஒருவரான நாயகன் தினேஷுக்கு தன் காதலி சுத்த கட்டுப்பெட்டியாக இருப்பது பிடிக்கவில்லை. இதை தங்கள் சக நண்பனிடம் புலம்ப, அந்த நண்பன் தான் இந்த டூரை ஏற்பாடு செய்கிறான். நண்பனின் காதலி ‘வாழ்க்கை வாழ்வதற்கே’ எந்த மனநிலை கொண்டவர். தினேஷின் காதலியோ எல்லாமே கல்யாணத்துக்கு அப்புறம் தான் என்பதில் உறுதியாக இருப்பவர். ஆனால் தினேஷோ இந்த டூரில் தனிமை இரவில் காதலியை எப்படியாவது அந்த விஷயத்தில் சரிக் கட்டி விட வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கிறார். விடுதி அறையில் பிரானாவை தினேஷ் அந்த நோக்கத்துடன் நெருங்கும்போது காதலி அதற்கு சம்மதிக்க மறுக்க… கெஞ்சி கூத்தாடி கடைசியில் காதலியின் சம்மதம் கிடைத்து எல்லாம் முடிகிறது. ஆனால் தினேஷின் சந்தோஷம் நீடிக்க வில்லை. நடந்து முடிந்த நிகழ்வில்…

Read More

ஜென்ம நட்சத்திரம் – திரை விமர்சனம்

  சினிமாவில் இயக்குனராகும் கனவில் இருக்கும் தமன், அதற்காக தயாரிப்பாளர்களிடம் கதை சொல்லி வருகிறார். காதல் மனைவி மால்வி மல்ஹோத்ரா தற்போது கர்ப்பமாக இருப்பதால் பாதுகாப்பு கருதி தனது நண்பன் இல்லத்தில் தங்க வைத்து கதை சொல்லப் போகிறார். கர்ப்பமாக இருக்கும் மால்விக்கு அடிக்கடி கெட்ட கனவு வருகிறது. கனவில் சில ஆவிகள் வந்து பயமுறுத்திப் போகிறது. அரசியல்வாதி வேல. ராமமூர்த்தியின் கார் டிரைவராக, பணியாற்றி வருகிறார் காளி வெங்கட். இவரது மகளின் இருதய அறுவை சிகிச்சைக்கு 40 லட்சம் பணம் தேவைப்பட, தான் வேலை பார்க்கும் அரசியல்வாதியிடம் கேட்கிறார். பணம் தர மறுத்து விடும் அந்த அரசியல்வாதி அவரை வார்த்தைகளால் காயப்படுத்தி அனுப்பி வைக்கிறார். இதனால் தேர்தலுக்காக வைத்திருக்கும் கோடிக்கணக்கான பணத்தை எடுத்து பாழடைந்த தொழிற்சாலை ஒன்றில் பதுக்கி வைக்கிறார் காளி வெங்கட் . இது…

Read More

கெவி – திரை விமர்சனம்

மலைவாழ் மக்களின் அன்றாட அவஸ்தை தான் கதைக்களம். கொடைக்கானல் மலை உச்சியில் உள்ள ஒரு சிறு கிராமம் தான் கெவி. இன்று வரை இங்கு வாழும் மக்களுக்கு சாலை போக்குவரத்து வசதிகளோ மருத்துவ வசதிகளோ கிடையாது. ஐந்து வருடங்களுக்கு ஒரு முறை இவர்களின் 350 ஓட்டுக்காக மட்டுமே வந்து போகும் அரசியல்வாதிகளிடம் ஒரே ஒரு மருத்துவமனையாவது கட்டித் தாருங்கள் என்று இவர்கள் கெஞ்சியும் பயனில்லை.n ஓட்டுக்காக சரி சரி என்று தலையாட்டும் தலைவர்கள் தேர்தல் முடிந்த பிறகு அந்தப் பக்கம் எட்டிக் கூட பார்ப்பதில்லை. இந்த அவல நிலை போதாதென்று, திடீர் திடீரென்று ஏற்படும் நிலச்சரிவில் சிக்கியவர்களின் உயிரைக் கூடக் காப்பாற்ற முடியாத பெரும் சோகம் அவர்களுக்குள் நிரந்தர உறுத்தலாக இருந்து வருகிறது. இப்படி ஐந்து பேர் அடி யோடு புதைந்து உயிரிழந்த மறுநாள் தேர்தலுக்காக போலீஸ்…

Read More

ட்ரெண்டிங் – திரை விமர்சனம்

கலையரசன் – பிரியாலயா தம்பதி தங்கள் பெயரில் யூடியுப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார்கள். 2 லட்சத்திற்கும் அதிகமானோர் பின் தொடரும் தங்களது யூடியுப் சேனல் மூலம் கிடைக்கும் வருவாயை நம்பி கடனில் பெரிய பங்களா வீடு, கார் என வாழ்ந்து வருகிறார்கள். திடீரென்று ஒரு நாள் அவர்களது யூடியுப் சேனல் டெலிட் ஆகிவிட, வருமானம் நின்று போகிறது. கடன் கொடுத்தவர்கள் வந்து மிரட்டுகிறார்கள். இந்த வேளையில் தொலைபேசி மூலம் அவர்களை தொடர்பு கொள்ளும் மர்ம நபர், தாங்கள் ஒரு ரியாலிட்டி ஷோ நடத்துவதாகவும், அதில் பங்கேற்று வெற்றி பெற்றால் கோடிக்கணக்கில் பணம் கிடைக்கும் என்று கூறுகிறார். அதே சமயம், இந்த ரியாலிட்டி ஷோ பற்றி யாரிடமும் தெரிவிக்கக் கூடாது உள்ளிட்ட பல கண்டிஷன்களை போடுகிறார். ஒரு கட்டத்தில் தம்பதியரிடையே நடைபெறும் இந்த விபரீத விளையாட்டு அவர்கள்…

Read More

சட்டமும் நீதியும் -வெப் சீரிஸ் விமர்சனம்

  நீதிமன்ற வளாகத்தில் குப்புசாமி என்ற பெரியவர் தீக்குளித்து இறக்க, அவர் இறந்த பின்னணியில் காணாமல் போன அவரது மகள் வெண்ணிலா இருக்கிறாள். மகளை கடத்திப் போய் விட்டார்கள் என்று போலீசாரிடம் குப்புசாமி முறையிட, அவர்களோ புகாரை விசாரிக்காமல் துரத்தி விடுகின்றனர். இதனால் மனம் நொந்து போகும் குப்புசாமி, கோர்ட் வளாகத்தில் அந்த விபரீத முடிவை எடுக்கிறார். தீக்குளித்து இறந்து போன முத்துசாமிக்கு நீதியை தேடித் தரவேண்டும் என முடிவு செய்யும் வழக்கறிஞர் சுந்தரமூர்த்தி, காணாமல் போன குப்புசாமி மகள் வெண்ணிலாவை மீட்டுத் தரக்கோரி கோர்ட்டில் பொதுநல வழக்கு தொடுக்கிறார். வெண்ணிலா கடத்தப்பட்ட பின்னணியில் அந்த ஏரியா கவுன்சிலரின் மகனும் அவனது நண்பர்களும் இருப்பதால், வழக்கறிஞர் சுந்தரமூர்த்தியும் அவரது பெண் உதவியாளரும் தொலைபேசி வழியே மிரட்டப்படுகிறார்கள். இந்த வழக்கில் இப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை. இறந்து போன…

Read More