தமிழ் சினிமாவின் பொற்காலம் முதல் நவீன காலம் வரை வெற்றியின் முத்திரையை பதித்து வரும் பெருமைமிக்க தயாரிப்பு நிறுவனமான சத்யஜோதி பிலிம்ஸ், தனது அடுத்த பிரம்மாண்ட தயாரிப்பான “சீயான் 63” படத்தின் படப்பிடிப்பை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது. அறிவிப்பு வெளியான தருணத்திலிருந்தே ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்த திரைப்படம், தற்போது படப்பிடிப்பு கட்டத்திற்குள் நுழைந்திருப்பது ரசிகர்களுக்கு உற்சாகமான செய்தியாக அமைந்துள்ளது. சீயான் விக்ரமின் 63வது திரைப்படமாக உருவாகும் இந்த படத்தை இயக்குநர் ஆனந்த் சங்கர் இயக்குகிறார். முன்னதாக “இருமுகன்” திரைப்படத்தின் மூலம் வெற்றிகரமான கூட்டணியை வழங்கிய விக்ரம் – ஆனந்த் சங்கர் இணைவு, சுமார் ஒரு தசாப்தத்திற்கு பிறகு மீண்டும் இணைந்திருப்பதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது. படப்பிடிப்பு தற்போது முழுவீச்சில் தொடங்கியுள்ள நிலையில், இதற்காக விரிவான முன்தயாரிப்பு பணிகள் ஏற்கனவே நிறைவு…
Read MoreCategory: சினி-நிகழ்வுகள்
கீது மோகன் தாஸ் பிறந்தநாள் கொண்டாட்டம் : பிரத்யேக BTS காணொலியை வெளியிட்ட ‘டாக்ஸிக்’ படக்குழு
நடிகையும், இயக்குநருமான கீது மோகன்தாஸின் பிறந்த நாளை முன்னிட்டு, ‘டாக்ஸிக்’ படக் குழுவினர் ஒரு பிரத்யேக படப்பிடிப்பு தள காணொலியை பகிர்ந்துள்ளனர். இது அந்த திரைப்பட இயக்குநரின் படைப்பு சார்ந்த செயலாக்கத்தையும்… ஆளுமை மிக்க அவரது இருப்பையும்… காண்பதற்கு பார்வையாளர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பாக அமைந்திருக்கிறது. இந்த பிறந்த நாளுக்கான சிறப்பு காணொலியில் கீது மோகன்தாஸ் – தனது இயல்பான பாணியில் செயலாற்றுவதை காட்சிப்படுத்துகிறது. காட்சிகளை தீர்மானிப்பது – பிரம்மாண்டமான சண்டைக் காட்சிகளை ஒருங்கிணைப்பது – நடிப்பை வழி நடத்துவது மற்றும் ஒரு மிகப்பெரிய படக்குழுவினை நம்பிக்கையுடனும் துல்லிய தன்மையுடனும் வழிநடத்துவது- என பல விசயங்களையும் காணலாம் . ”வித்தியாசமாகத் தாக்கிய ஒவ்வொரு காட்சியின் பின்னாலும்.. வசனங்களை விட.. உரையாடலை விட அதிகமாகப் பேசிய ஒவ்வொரு மௌனத்திலும், அவர் இருந்தார்! இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் கீது மோகன்தாஸ்”…
Read Moreமத்திய அமைச்சர் திரு. எல். முருகனுடன் கவிஞரும் இயக்குநருமான சீனு ராமசாமி சந்திப்பு, தான் எழுதிய – ‘சினிமாவின் ஆன்மா’ நூலை 25 இந்திய மொழிகளில் மொழிபெயர்க்க மத்திய அரசு ஆதரவு!
கவிஞரும் பிரபல திரைப்பட இயக்குநருமான சீனு ராமசாமி அவர்கள், இன்று மதியம் மாண்புமிகு மத்திய தகவல் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணை அமைச்சர் திரு. எல். முருகன் அவர்களை நேரில் சந்தித்துப் பேசினார். இச்சந்திப்பின் போது, தான் எழுதிய ‘சினிமாவின் ஆன்மா (சிறார்கள் சினிமா ரசனைக் கல்வி)’ நூலின் சமகால சமூகத் தேவை குறித்து அமைச்சருடன் அவர் விரிவாகவும் ஆழமாகவும் விவாதித்தார். உலகக் குழந்தைகளின் சிறந்த திரைப்படங்கள் மற்றும் இந்தியாவில் எடுக்கப்பட்ட நேர்த்தியான, உலக சினிமா தரத்திலான மிகச் சிறந்த சிறார் திரைப்படங்களைத் தொகுத்து, சிறார்களின் சினிமா ரசனையை ஒரு முறையான வாழ்வியல் கல்வியாக மாற்றுவதே இந்நூலின் முக்கிய நோக்கமாகும். இச்சந்திப்பின் போது இக்கல்வியின் கட்டாயத் தேவை குறித்து இயக்குநர் சீனு ராமசாமி விளக்கிக் கூறுகையில்: “ஒரு குழந்தை 8 வயது வருவதற்குள்…
Read Moreமூன்றாம் கண் இசை & டிரைலர் வெளியீடு!
Trending entertainment & White horse studios சார்பில் K.சசிகுமார், தயாரிப்பில், அறிமுக இயக்குநர் சகோ கணேசன் இயக்கத்தில், விதார்த், கலையரசன், த்ரிகுண், சந்தோஷ் பிரதாப் ஆகியோரின் நடிப்பில், ஹைபர்லிங்க் ஆந்தாலஜி வடிவில் க்ரைம் திரில்லராக உருவாகியிருக்கும் திரைப்படம் “மூன்றாம் கண்”. வரும் ஜூன் 12 ஆம் தேதி இப்படம் திரைக்குவரவுள்ள நிலையில், படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று படக்குழுவினர் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது. இந்நிகழ்வினில்…, தயாரிப்பாளர் K. சசிகுமார் பேசியதாவது… “அனைவருக்கும் வணக்கம். இந்த நிகழ்ச்சிக்கு வருகை தந்துள்ள பத்திரிக்கை மற்றும் ஊடக நண்பர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.எனது முந்தைய படைப்புக்கும் நீங்கள் அளித்த ஆதரவு மிகவும் உற்சாகத்தை அளித்தது. அந்த ஆதரவே மேலும் தைரியமாக புதிய முயற்சிகளை மேற்கொள்ள என்னை ஊக்கப்படுத்தியுள்ளது. அதற்காக அனைவருக்கும்…
Read Moreஸ்ரீ கிரிஷ் பிக்சர்ஸ் சார்பில் மு. கி. சாம்பசிவம் தயாரிப்பில் சந்தோஷ் ராவணன் இயக்கத்தில் நடிகர் பிரஜின் கதையின் நாயகனாக நடிக்கும் ‘அந்தரன்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.
‘அந்தரன்’ திரைப்படத்தில் பிரஜின், இவானா வருண், அனுபமா குமார், ஆதிரன் பத்மன், ‘அருவி’ பாலா, மு.கி. சாம்பசிவம், ரமேஷ் பாபு, அர்ஜுன் தேவ், பிரியங்கா செல்வி, ஐஸ்வர்யா கண்ணன், வி ஜே ராஜூ உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கிஷோர் ராமச்சந்திரன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஹரி எஸ் ஆர் இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை இக்னேசியஸ் அஸ்வின் மற்றும் சதீஷ் குரோசாவா மேற்கொள்ள கலை இயக்கத்தை சசிகுமார் கவனித்திருக்கிறார் பரபரப்பான கிரைம் திரில்லராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஸ்ரீ கிரிஷ் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் மு.கி. சாம்பசிவம் தயாரிக்க சந்தோஷ் ராவணன் இயக்கியிருக்கிறார். வரும் 25ம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ள இந்த திரைப்படத்தினை விளம்பரப்படுத்தும் நிகழ்வு சென்னையில் நடைபெற்றது. இதில் படக் குழுவினருடன் தயாரிப்பாளர் சி. வி. குமார், நடிகை…
Read MoreBrigida on her role in Lakshmikanthan Kolai Vazhakku: ‘I wish I was born in the 80s…!!
State Government Award winning filmmaker Dayal Padmanabhan, known for his compelling and content driven storytelling across languages, is gearing up for the release of his much anticipated Tamil film ‘Lakshmikanthan Kolai Vazhakku’, slated to hit screens on June 25. Produced by KV Shabarreesh under the banners 2M Cinemas and D Pictures, the film features an ensemble cast including Vetri, Rangaraj Pandey, Brigida Saga, Maaran, Saravanan, Lizzie Antony, Logan Kannan, Narmadha, Aruvi Madhan, Kanya Bharathy, Kavitha Bharathy, and Subramaniam Siva in pivotal roles. A grand press meet of ‘Lakshmikanthan Kolai Vazhakku’…
Read Moreலட்சுமி காந்தன் கொலை வழக்கு படம் வெளியீட்டுக்கு பிறகு சொல்லப்படும் உண்மைகள் … இயக்குனர் தயால் பத்மநாபன்
மாநில அரசின் விருது பெற்ற இயக்குநரான தயாள் பத்மநாபன், பல மொழிகளில் கதைக்கான உள்ளடக்கத்தை மையப்படுத்தப்பட்ட தரமான திரைப்படங்களை வழங்கி வருபவர். அவரது மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தமிழ் திரைப்படமான ‘லட்சுமிகாந்தன் கொலை வழக்கு’ ஜூன் 25 அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது. 2M சினிமாஸ் மற்றும் D பிக்சர்ஸ் நிறுவனங்களின் சார்பில் கே.வி. ஷபரீஷ் தயாரித்துள்ள இப்படத்தில் வெற்றி, ரங்கராஜ் பாண்டே, பிரிகிடா சாகா, மாறன், சரவணன், லிஸ்ஸி ஆண்டனி, லோகன் கண்ணன், நர்மதா, அருவி மதன், கன்யா பாரதி, கவிதா பாரதி மற்றும் சுப்பிரமணியம் சிவா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் பிரம்மாண்டமான பத்திரிகையாளர் சந்திப்பு சென்னை நகரில் படக்குழுவினரின் முன்னிலையில் நடைபெற்றது. நிகழ்வின் சிறப்பாக, படத்தின் காட்சிசார் சுருக்கமும் (Visual Synopsis), கதாபாத்திர அறிமுகமும் ஊடகங்களுக்கு பிரத்யேகமாக திரையிடப்பட்டது. இது படத்தின் உலகத்தையும்…
Read More“ஈரம் காயாத கதைகள்” புத்தகத்தை அனைவரும் வாசிக்க வேண்டும்” – கவிதாபாரதி
பாடலாசிரியரும் நடிகருமான மு. ஜெகன் கவிராஜ் எழுதிய ‘ஈரம் காயாத கதைகள்’ சிறுகதைகள் தொகுப்பின் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இயக்குநரும் நடிகருமான அமீர், நூலினை வெளியிட, ஜெகன் கவிராஜின் பெற்றோரான திரு. முத்தையா – திருமதி லலிதா இணை பெற்றுக் கொண்டனர். இவ்விழாவில் பேசிய கிராம நிர்வாக அதிகாரி அன்னலட்சுமி, “ஜெகன் அண்ணாவும் நானும் ஒரே ஊர். அவரிடம் நிறைய நல்ல விஷயம் இருக்கு. அதில் குறிப்பிட்டுச் சொல்லணும் என்றால், அவரது வாசிப்புப் பழக்கம். ஒருநாளைக்கு இத்தனை பக்கங்கள் படிக்கணும் எனத் திட்டமிட்டுப் படிப்பவர். அவர் பள்ளிப்படிப்பு படிக்கலை என அவரளித்த பேட்டிகளில் ஆதங்கப்படுடிருப்பார். ஆனால் அவர் மனிதர்களின் வாழ்க்கையைப் படித்துள்ளார். இந்தத் தொகுப்பில் உள்ள கதைகளை, எங்க ஊர் தாத்தா, பாட்டிகள் வாய்மொழியாகச் சொன்ன விஷயங்களைக் கொண்டுதான் எழுதியுள்ளார். ஜெகன் அண்ணாவின் கதைகளைப் படித்த…
Read Moreடிராமா கம்பெனி தயாரிப்பாளர் பாலமுருகன்.அ தயாரிக்கும் படத்தில் நடிக்கும் சிவராஜ்குமார் – அபிஷன் ஜீவிந்த்
எப்போதுமே தரமான மற்றும் அர்த்தமுள்ள பொழுதுபோக்குத் திரைப்படங்களை வழங்கும் தயாரிப்பு நிறுவனங்களை தமிழ் சினிமா இருகரம் கூப்பி வரவேற்றிருக்கிறது. அந்த வகையில், பெரும் கனவுகள், லட்சியங்கள் மற்றும் ஒரு சிறந்த பொழுதுபோக்கு கதையோடு தமிழ் திரையுலகில் கால்பதிக்கிறது பாலமுருகன்.அ தலைமையிலான புதிய தயாரிப்பு நிறுவனம் ‘டிராமா கம்பனி’ (Drama Company). இன்னும் பெயரிடப்படாத இப்புதிய திரைப்படத்தில், கன்னட சூப்பர் ஸ்டார் டாக்டர் சிவராஜ்குமார் மற்றும் இயக்குநராக ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ (Tourist Family) என்ற பிளாக்பஸ்டர் வெற்றியையும், நடிகராக ‘வித் லவ்’ (With Love) திரைப்படம் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த திறமையான இளம் நடிகர் அபிஷன் ஜீவிந்த் ஆகிய இருவரும் முதன்மை பாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்தப் படத்தில் ஷிவானி நாகாரம் கதாநாயகியாக நடிக்கிறார். இத்திரைப்படத்தின் மூலம் கௌதம் சிவராமன் இயக்குநராக தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார். இப்படத்தின் துவக்க…
Read Moreஇந்திய கிராமங்களின் ஆன்மாவை கொண்டாடும் படம் “பெத்தி” – ராம் சரண் !!
இந்திய கிராமங்களின் திறமைகளையும், உண்மையான இந்திய ஆன்மாவையும் மிகப்பெரிய திரையில் கொண்டாடும் படம் தான் ‘பெத்தி’ – டெல்லி பத்திரிகையாளர் சந்திப்பில் ராம் சரண் பேச்சு மெகா பவர் ஸ்டார் ராம் சரண் நடித்துள்ள கிராமத்து விளையாட்டு பின்னணியிலான பிரம்மாண்ட திரைப்படம் ‘பெத்தி’ நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. புச்சி பாபு சனா இயக்கத்தில், வெங்கட சதீஷ் கிலாரு மிகப்பெரிய பொருட்செலவில் தயாரித்துள்ள இப்படம் வரும் ஜூன் 4ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. ஆஸ்கர் விருது பெற்ற இசையமைப்பாளர் ஏ. ஆர். ரஹ்மான் இசையமைத்த பாடல்கள் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளன. மேலும், சமீபத்தில் வெளியான டிரெய்லர், ஒரு கிராஸ் ஓவர் தடகள வீரரின் ஊக்கமூட்டும் மற்றும் உணர்ச்சிப்பூர்வமான பயணத்தை வலுவாக வெளிப்படுத்தி, படத்தின் மீதான எதிர்பார்ப்பை உச்சத்துக்கு கொண்டு சென்றுள்ளது. இப்படத்தில்…
Read More