‘செல்ல குட்டி’ திரைப்படத்தின் பாடல்கள் மற்றும் முன்னோட்டம் வெளியீட்டு விழா!

ஸ்ரீ சித்ரா பெளர்ணவி ஃபிலிம் சார்பில் வி.மணிபாய் தயாரிப்பில், சகாயநாதன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘செல்ல குட்டி’. புதுமுகங்கள் டாக்டர்.டிட்டோ மற்றும் மகேஷ் நாயகர்களாக நடித்திருக்கும் இப்படத்தில் புதுமுக நடிகைகள் தீபிக்‌ஷா, சிம்ரன் ஆகியோர் நாயகிகளாக நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் சாம்ஸ், ஜாங்கிரி மதுமிதா, திடியன், சாப்ளின் பாலு, மணி, லக்‌ஷ்மி, புஷ்பதா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள்.   இப்படத்தின் பாடல்களுக்கு டி.எஸ்.முரளிதரன் இசையமைத்துள்ளார். பிரபல இசையமைப்பாளர் சிற்பி பின்னணி இசையமைத்துள்ளார். பால் லிவிங்ஸ்டன் மற்றும் பாலா பழனியப்பன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்கள். ஓம்பிரகாஷ் சண்டைக்காட்சிகளை வடிவமைக்க, பாபி ஆண்டனி நடனக் காட்சிகளை வடிவமைத்துள்ளார். வரும் அக்டோபர் 4 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள ‘செல்ல குட்டி’ திரைப்படத்தின் பாடல்கள் மற்றும் முன்னோட்டம் வெளியீட்டு விழா செப்டம்பர் 30 ஆம் தேதி சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது.…

Read More

திரைப்பட இயக்குநர்கள் சங்க உறுப்பினர்களுக்கு இலவச இதய பரிசோதனை முகாம்

உலக இதய திளத்தை முன்னிட்டு Cardiology soceity of india -chennai chapter மூலம் நமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்க உறுப்பினர்களுக்கு இலவச இதய பரிசோதனை முகாம் நடத்தப்பட்டது.. ஸ்டான்லி மருத்துவமனை இதய சிகிச்சைப்பிரிவு தலைவர் டாக்டர் கண்ணன் அவர்களின் தலைமையில் cardiology soceity தலைவர் டாக்டர் T R முரளீதரன் செயலாளர் டாக்டர். பிரதீப்குமார் பொருளாளர் டாக்டர் . நாகேஸ்வரன் மற்றும் டாக்டர்கள் இளமாறன் ,கார்த்திகேயன்,தாமோதரன் , பாலாஜி பாண்டியன் உள்ளிட்ட பத்திற்கும் மேற்பட்ட மருத்துவர்குழு இயக்குநர்கள் சங்க உறுப்பினர்கள் மற்றும் குடும்பத்தினர் சுமார் 160க்கும் மேற்பட்டோர்க்கு ரத்தமாதிரி, ECG, BP, எடுத்து இதய பரிசோதனை செய்து ஆலோசனைகளை வழங்கினர்.. பெப்சி தலைவர்RK செல்வமணி இயக்குனர் சங்கத்தலைவர் ஆர். வி. உதயகுமார் செயலாளர் பேரரசு, பொருளாளர் சரண் மற்றும் நிர்வாகிகள் அரவிந்தராஜ், ஆரல்மனோகர் ,செயற்குழு உறுப்பினர்கள்…

Read More

பிரபல இயக்குனர் ராஜேஷ் எம் உதவியாளர் இயக்கும் சீரன் திரைப்படம்..

ஜேம்ஸ் கார்த்திக், M.நியாஸ் தயாரிப்பில், இயக்குநர் திரு. ராஜேஷ் எம் உதவியாளர் துரை K முருகன் இயக்கத்தில், ஜேம்ஸ் கார்த்திக் நாயகனாக அறிமுகமாகும் திரைப்படம் “சீரன்”. சமூகத்தின் ஏற்றத்தாழ்வுகளையும், மனிதனுக்கான சம உரிமைகளை உரக்கப்பேசும் ஒரு அழகான கமர்ஷியல் திரைப்படமாக உருவாகியுள்ள இப்படத்தின் அனைத்து பணிகளும் முடிந்த நிலையில் வரும் அக்டோபர் 4 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.   இந்நிலையில் இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா, படக்குழுவினருடன் திரைப்பிரபலங்கள் கலந்துகொள்ள, பத்திரிக்கை, ஊடக, நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது. சிவா மனசுல சக்தி, ஒரு கல் ஒரு கண்ணாடி படப்புகழ் இயக்குநர் ராஜேஷ் எம், இவ்விழாவில் கலந்துகொண்டு, படக்குழுவினரை வாழ்த்தியதோடு, படத்தின் இசை மற்றும் டிரெய்லரை வெளியிட்டனர். இந்நிகழ்வினில்… தயாரிப்பாளர், நடிகர் ஜேம்ஸ் கார்த்திக் பேசியதாவது… இந்த சீரன் திரைப்படம், உண்மைச்…

Read More

சென்னையில் செம்பொழில் கிராமத்துத் திருவிழாவில் கலந்துகொண்ட, நடிகர் கார்த்தி !!

கிராமத்து மண் வாசனையை, நகரத்து மக்களுக்கு அறிமுகப்படுத்தும் வகையில், நம் பாரம்பரியத்தை, நம் விளையாட்டுக்கள், கலைகள், உணவுகள் என அனைத்தையும் கொண்டாடும் விதத்தில், செம்பொழில் குழு சென்னை YMCA மைதானத்தில் பிரம்மாண்டமாக, கிராமத்துத் திருவிழாவை நடத்தி வருகிறது. இவ்விழாவினில் சிறப்பு விருந்தினராக நடிகர் கார்த்தி இன்று கலந்துகொண்டார். தமிழகத்தின் பல கிராமங்களிலிருந்து தாங்கள் விளைவித்த பொருட்களை விவசாயிகள் இங்குக் கடை விரித்துள்ளனர். இந்த திருவிழாவில் கிராமத்து உணவுகள், சிறு தானிய உணவுகள், மாட்டு வண்டி, ஒயிலாட்டம், மயிலாட்டம் என ஒரு திருவிழாவில் காணக்கிடைக்கும் அனைத்தும் உள்ளது. இத்திருவிழா சனி, ஞாயிறு என அடுத்த இரண்டு நாட்களும் நடைபெறவுள்ளது. இன்றைய விழாவில் கலந்துகொண்ட நடிகர் கார்த்தி பேசியதாவது… கோடை விடுமுறைக்கு ஊருக்கு போவது அவ்வளவு பிடிக்கும், ஊரை விட்டு வர மனசே வராது. அந்த மாதிரி கதை என்பதால்…

Read More

சசிகுமார் – சிம்ரன் முதன்முறையாக இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு அக்டோபரில் தொடக்கம்

நடிகர் சசிகுமார் கதையின் நாயகனாக நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு ‘புரொடக்ஷன் நம்பர் 5’ என பெயரிடப்பட்டிருக்கிறது. அண்மையில் இப்படத்தின் தொடக்க விழா சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் சிறப்பாக நடைபெற்றது. இன்று நடிகர் சசிகுமாரின் பிறந்த நாளை முன்னிட்டு படத்தை பற்றிய அதிகாரப்பூர்வமான அறிவிப்பை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். அறிமுக இயக்குநர் அபிஷான் ஜீவின்ந் இயக்கத்தில் உருவாகும் ‘புரொடக்ஷன் நம்பர் 5’ என தற்காலிகமாக பெயரிடப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தில் சசிகுமார், சிம்ரன், மிதுன் ஜெய்சங்கர், கமலேஷ், யோகி பாபு, ரமேஷ் திலக், எம்.எஸ். பாஸ்கர், பக்ஸ் என்ற பகவதி பெருமாள் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். அரவிந்த் விஸ்வநாதன் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைக்கிறார். கலை இயக்கத்தை ராஜ் கமல் கவனிக்க, படத்தொகுப்பு பணிகளை பரத் விக்ரமன் மேற்கொள்கிறார். பாடலாசிரியர் மோகன் ராஜன் பாடல்களை எழுத,…

Read More

நடுக்கடலில் சொகுசுக் கப்பலில் வெளியான “பன் பட்டர் ஜாம்” படத்தின் செகண்ட் லுக் !!

Rain Of Arrows Entertainment சார்பில் தயாரிப்பாளர் சுரேஷ் சுப்ரமணியன் தயாரிப்பில், இயக்குநர் ராகவ் மிர்தாத் இயக்கத்தில், பிக்பாஸ் புகழ் ராஜூ, ஆத்யா பிரசாத் & பவ்யா திரிகா நடிப்பில், இன்றைய Gen Z தலைமுறை ரிலேஷன்ஷிப்பை நகைச்சுவை ததும்பச் சொல்லும், அழகான டிராமாவாக உருவாகியுள்ள திரைப்படம் “பன் பட்டர் ஜாம்’. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மிகப்பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது இரண்டாவது லுக், நடுக்கடலில் கோர்டிலியா குரூஸ் சொகுசுக்கப்பலில், வெளியிடப்பட்டது. தமிழ் திரை வரலாற்றில் முதல் முறை, ஒரு சொகுசுகப்பலில் ஒரு திரைப்படத்தின் போஸ்டர் வெளியாவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடதக்கது. இந்நிகழ்வில் படக்குழுவினர் அங்குள்ள பயணிகளுடன் உரையாடி, படத்தினைப்பற்றிய தகவல்களை பகிர்ந்து கொண்டனர். படக்குழுவினர் இந்நிகழ்வின் கிளிம்ப்ஸே வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர். இவ்வீடியோ தற்போது இணையமெங்கும் வைரலாக பரவி…

Read More

ரசிகர்களுடன் பிறந்த நாளை கொண்டாடிய துருவ் விக்ரம்!!

தமிழ் திரையுலகின் நம்பிக்கை அளிக்கும் இளம் நட்சத்திரமாக வளர்ந்து வரும் நடிகர் துருவ் விக்ரமின் பிறந்தநாளை ரசிகர்கள் கோலாகலமாக கொண்டாடினர். இந்நிகழ்விற்காக துருவ் விக்ரமின் ரசிகர்கள் சென்னையில் உள்ள கிருஷ்ணவேணி திரையரங்க வளாகத்தில் திரண்டனர். இதனை தொடர்ந்து ரசிகர்கள், துருவ் விக்ரமுடன் இணைந்து, அவரது பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடினர். அத்துடன் செல்ஃபியும் எடுத்து மகிழ்ந்தனர். இந்த கொண்டாட்டத்தின் அடுத்த கட்டமாக சீயான் விக்ரம் மற்றும் துருவ் விக்ரம் முதன்முதலாக இணைந்து நடித்த ‘மகான்’ திரைப்படம் தனிப்பட்ட காட்சியாக ( Private Show) திரையிடப்பட்டது. இதனை ரசிகர்களுடன் இணைந்து துருவ் விக்ரம் உற்சாகமாக பார்வையிட்டார். பிறந்த நாளன்று துருவ் விக்ரம் ரசிகர்களை சந்தித்து கொண்டாடியது… ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை அளித்தது.‌ இந்நிகழ்வை அகில இந்திய சீயான் விக்ரம் நற்பணி மன்ற தலைவரும், மேலாளருமான திரு. சூரிய…

Read More

தில் ராஜா பத்திரிக்கையாளர் சந்திப்பு !

GOLDEN EAGLE STUDIOS சார்பில், கோவை பாலாசுப்பிரமணியம் தயாரிப்பில், இயக்குநர் ஏ வெங்கடேஷ் இயக்கத்தில், விஜய் சத்யா, ஷெரீன் நடிப்பில், அசத்தலான கமர்ஷியல் கலாட்டாவாக உருவாகியுள்ள திரைப்படம், “தில் ராஜா”. வருகிற 27 ம் தேதி திரைக்கு வரவுள்ள இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு, படக்குழுவினர் கலந்துகொள்ளப் பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இந்நிகழ்வினில்.. இசையமைப்பாளர் அம்ரீஷ் பேசியதாவது… அனைவரையும் இங்கு ஒன்றாகப் பார்ப்பது மிகப்பெரிய சந்தோசம் தருகிறது. தில் ராஜா படத்தில் நான் நடித்த பாடல் நன்றாக இருப்பதாகச் சொன்னார்கள், ஆனால் இனி நடிப்பேனா எனத் தெரியவில்லை. படம் முடித்த பின்னர் புரமோசனுக்கு மாஸாகா பாடல் கேட்டார்கள். ஹுயூமரா காமெடியாக இருக்க ஆள் வேண்டும் என்று சொன்னார்கள், ஆள் தேடித் தேடி கடைசியில் என்னையே நடிக்க வைத்து விட்டார்கள். ஏ வெங்கடேஷ் சார் படத்தில் இசையமைக்க…

Read More

 ஏ ஆர் ஆர் (ARR) ஃப்லிம் சிட்டியில் யூஸ்ட்ரீம் (uStream) என்ற பெயரில் அதிநவீன வசதிகளை கொண்ட மெய்நிகர் தயாரிப்புக் கூடம் !!

சென்னையில் உள்ள ஏ ஆர் ஆர் (ARR) ஃப்லிம் சிட்டியில் யூஸ்ட்ரீம் (uStream) என்ற பெயரில் அதிநவீன வசதிகளை கொண்ட மெய்நிகர் தயாரிப்புக் கூடம் (Virtual Production Studio) இந்தியா மற்றும் உலகெங்கும் இருந்து வந்திருந்த 500க்கும் மேற்பட்ட திரையுலகப் பிரமுகர்கள் முன்னிலையில் செப்டம்பர் 22 அன்று தொடங்கப்பட்டது. முழுமையான தொழில்நுட்பப் பணிகளை வழங்கும் uStream, ஆஸ்கர் விருது வென்ற இசையமைப்பாளர் A.R. ரஹ்மான் மற்றும் தொழில்துறை முன்னோடி ஸ்ரீதர் சந்தானம் கூட்டணியில் உருவாகியுள்ளது. இந்திய சினிமாவின் புதிய யுகத்தை வரவேற்க வழிவகுப்பதாய் இது வடிவம் எடுத்திருக்கிறது. தொடக்க விழாவில் தொழில்துறை தலைவர்களின் கருத்தாழம் மிக்க உரைகள் இடம்பெற்றன. சிஜி ப்ரோவைச் சேர்ந்த எட்வர்ட் டாசன் டெய்லர், மெய்நிகர் தயாரிப்பில் தனது நிபுணத்துவத்தையும், எதிர்காலத் திரைப்படத் தயாரிப்பை மாற்றி அமைக்கும் தொழில்நுட்ப திறனையும் பகிர்ந்து கொண்டார். Dimension5…

Read More

அமரர் தயாரிப்பாளர் தில்லி பாபு அவர்களின் நினைவேந்தல் கூட்டம்!

தமிழில் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்று ஆக்ஸஸ் ஃபிலிம் ஃபேக்டரி. ’உறுமீன்’, ‘மரகதநாணயம்’, ‘ராட்சசன்’, ‘பேச்சிலர்’ உள்ளிட்ட பல வெற்றிப் படங்களைத் தயாரித்துள்ளது. இதன் நிறுவனர் ஜி. தில்லி பாபு கடந்த செப்டம்பர் 9 அன்று காலமானார். இவரது மறைவு திரையுலகில் சோகத்தை ஏற்படுத்தியது. இன்று காலை சென்னையில் மறைந்த தில்லி பாபு அவர்களின் குடும்பம், நண்பர்கள் மற்றும் திரையுலகினர் கலந்து கொள்ளும் நினைவஞ்சலி கூட்டம் நடைபெற்றது. நிகழ்வை தயாரிப்பாளர் தனஞ்செயன் தொகுத்து வழங்கினார். நிகழ்வில் கலந்து கொண்ட இயக்குநர் ஆர்கே செல்வமணி, “தில்லி பாபுவை எனக்கு கடந்த ஏழு எட்டு வருடங்களாக தெரியும். என் வீட்டில் தான் அவரது அலுவலகம் உள்ளது. என் வாழ்க்கையில் நான் சந்தித்த மிகச்சிறந்த மனிதர்களில் அவரும் ஒருவர். எப்போதும் சிரித்த முகத்தோடும் குழந்தைத் தனமாகவும் இருப்பார். என்னுடைய வீட்டில் ஏழெட்டு…

Read More