மெட்ராஸ் மோஷன் பிக்சர்ஸ் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிப்பில், இயக்குநர் கார்த்திகேயன் மணி இயக்கத்தில், சத்யராஜ், காளி வெங்கட் நடிப்பில், மிடில் கிளாஸ் வாழக்கையை பிரதிபலிக்கும், அழகான டிராமாவாக உருவாகியுள்ள திரைப்படம் ‘மெட்ராஸ் மேட்னி’

வரும் ஜூன் 6 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு படக்குழுவினர் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது. இந்நிகழ்வினில்… பாடலாசிரியர் சினேகன் பேசியதாவது.. இந்தப்படம் எடுத்து முடித்த பிறகு தான் என்னைப் பாடல் எழுதக் கூப்பிட்டார்கள், காளி வெங்கட் நாயகன் என்றார்கள் அவர் எந்தப்படத்திலிருந்தாலும் அதில் ஒரு ஈர்ப்பு இருக்கும். அவர் மிகச்சிறந்த நடிகர். இந்தப்படம் பார்க்கப் போகும் போது வியாபாரத்திற்கு ஏதாவது இருக்க வேண்டுமே என நினைத்தேன் ஆனால் அதையெல்லாம் படம் மறக்கடித்துவிட்டது. அதன் பிறகு தான் இந்தப்பாடல் எழுதினேன். வடிவேலு பாடிய அந்தப்பாடலை நீங்கள் கண்டிப்பாக ரசிப்பீர்கள். இயக்குநர் கார்த்திகேயன் மற்றும் இசையமைப்பாளர் பாலசாரங்கன் இருவருக்கும் நன்றிகள். இந்தப்படத்தில் நானும் இருப்பது எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சி. காளி வெங்கட் பசிக்கும் இன்னும் நிறையத் தீனி…

Read More

விமல் நடிக்கும் ‘பரமசிவன் பாத்திமா’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா!!

இயக்குநர்-நடிகர் சேரன் முதன்மை வேடத்தில் நடித்து பாராட்டுகளை குவித்த ‘தமிழ்க்குடிமகன்’ திரைப்படத்தை படைத்த இசக்கி கார்வண்ணன், லட்சுமி கிரியேஷன்ஸ் சார்பில் தயாரித்து இயக்கி இருக்கும் ‘பரமசிவன் பாத்திமா’ படத்தில் விமல் கதையின் நாயகனாக நடித்துள்ளார். வரும் ஜூன் 6 அன்று உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் ‘பரமசிவன் பாத்திமா’ வெளியாகிறது. இப்படத்தில் விமல் நாயகனாக நடிக்க சாயாதேவி, எம். எஸ். பாஸ்கர், மனோஜ் குமார், ஸ்ரீ ரஞ்சனி, ஆதிரா, அருள்தாஸ், சேஷ்விதா ராஜு, கூல் சுரேஷ், காதல் சுகுமார், வீரசமர் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ‘பரமசிவன் பாத்திமா’ திரைப்படத்திற்கு மைனா சுகுமார் ஒளிப்பதிவு செய்ய, தீபன் சக்கரவர்த்தி இசை அமைக்க, இசக்கி கார்வண்ணன் எழுதி இயக்கியுள்ளார். ‘பரமசிவன் பாத்திமா’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா திரையுலகினர் மற்றும் படக்குழுவினர் முன்னிலையில் சென்னையில் நடைபெற்றது. நிகழ்ச்சியின் முக்கிய அம்சங்கள்…

Read More

மிஸஸ் & மிஸ்டர் படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!!

நடிகை வனிதா விஜயகுமார் எழுதி, இயக்கி, கதையின் நாயகியாக நடித்திருக்கும் மிஸஸ் & மிஸ்டர் ( Mrs & Mr) திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. வனிதா ஃபிலிம் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் மிஸஸ் & மிஸ்டர் (Mrs & Mr) திரைப்படத்தில் ராபர்ட், வனிதா விஜயகுமார், ஸ்ரீமன், ஷகீலா, கணேஷ், ஆர்த்தி கணேஷ், பவர் ஸ்டார் சீனிவாசன், செஃப் தாமு, கும்தாஜ் மற்றும் பலர் நடித்துள்ளனர். டி. ராஜபாண்டி – விஷ்ணு ராமகிருஷ்ணன் – டி.ஜி. கபில் இணைந்து ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்திருக்கிறார். பாலகுரு படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்ள ஃபேமிலி என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை வனிதா ஃபிலிம் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் ஜோவிகா விஜயகுமார் தயாரித்திருக்கிறார். ஜூனில் வெளியாகும் இந்த…

Read More

முகேன் ராவ் நடிக்கும் ‘ஜின் – தி பெட்’ படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா

‘பிக் பாஸ் சீசன் 3’ வெற்றியாளரும், ‘வேலன்’ படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடம் பிரபலமான நடிகரும், இசைக் கலைஞருமான முகேன் ராவ் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘ஜின் – தி பெட்’ திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. டி ஆர் பாலா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜின் -தி பெட் திரைப்படத்தில் முகேன் ராவ், பவ்யா தரிகா, டத்தோ ராதா ரவி, பால சரவணன், இமான் அண்ணாச்சி, நந்து ஆனந்த், வடிவுக்கரசி, ‘நிழல்கள்’ ரவி, வினோதினி வைத்தியநாதன், ஜார்ஜ் விஜய் , ரித்விக் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். அர்ஜுன் ராஜா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு விவேக்- மெர்வின் இசையமைத்திருக்கிறார்கள். படத்தொகுப்பு பணிகளை தீபக் கவனிக்க கலை இயக்கத்தை வி. எஸ். தினேஷ்குமார் மேற்கொண்டிருக்கிறார். காமெடி ஹாரர் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும்…

Read More

2025 – ஆம் ஆண்டுக்கான எடிசன் விருதுகள் வழங்கும் விழாவில் சிறந்த அறிமுக நடிகருக்கான விருதை நடிகர் விஜய் கனிஷ்கா வென்றார்!

மலேசியாவில் நடைபெற்ற 2025 – ஆம் ஆண்டுக்கான எடிசன் விருதுகள் வழங்கும் விழாவில் சிறந்த அறிமுக நடிகருக்கான விருதை நடிகர் விஜய் கனிஷ்கா வென்றார்! ‘Rising Star’ விஜய் கனிஷ்காவுக்கு சிறந்த அறிமுக நடிகருக்கான மதிப்புமிக்க விருதானது – சமீபத்தில் மலேசியாவில் நடைபெற்ற எடிசன் விருதுகள்-2025-இல், அவரது நடிப்பில் 2024-ஆம் ஆண்டு வெளியான அதிரடி த்ரில்லர் திரைப்படமான ‘ஹிட் லிஸ்டில்’ தலைசிறந்த நடிப்பிற்காக வழங்கி கௌரவிக்கப்பட்டது. இத்திரைப்படத்தை சூர்யகதிர் காக்கல்லர் மற்றும் கே. கார்த்திகேயன் இயக்கத்தில், ஆர். கே. செல்லுலாய்ட்ஸ் நிறுவனம் சார்பில் புகழ்பெற்ற திரைப்பட இயக்குனர் கே. எஸ். ரவிகுமார் தயாரிப்பில் வெளியானது. ‘ஹிட் லிஸ்ட்’ திரைப்படத்தில் விஜய் கனிஷ்காவின் திருப்புமுனை ஏற்படுத்தும் விதமான கதாபாத்திரம் நல்ல விமர்சனங்களையும் ரசிகர்களின் பாராட்டையும் பெற்றது, இதனால் தமிழ் சினிமாவின் மிகவும் நம்பிக்கைக்குரிய, திறமையான புதுமுகங்களில் ஒருவராக நிலைநிறுத்தியுள்ளது.…

Read More

கிரிக்கெட் மேட்ச் போன்று 6 கேமராக்கள் வைத்து ஷூட்டிங் செய்தோம்: ஏ. எம். ஜோதி கிருஷ்ணா

ஸ்ரீ சூர்யா மூவிஸ் தயாரிப்பில், ஏ. எம். ரத்தினம் வழங்க, பவர் ஸ்டார் பவன் கல்யாண் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள படம் “ஹரி ஹர வீர மல்லு”. இப்படத்தை இயக்குநர் ஏ.எம். ஜோதி கிருஷ்ணா இயக்கி உள்ளார். இதில் நிதி அகர்வால், பாபி டியோல், சத்யராஜ், நாசர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்ய, ஆஸ்கார் விருது பெற்ற எம் .எம். கீரவாணி இசையமைத்துள்ளார். தமிழ், தெலுங்கு உட்பட 5 மொழிகளில் பான் இந்தியா படமாக தயாராகியுள்ள இப்படம் வரும் ஜூன் 12ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. ஏற்கனவே இப்படத்தில் இடம் பெற்றுள்ள இரண்டு பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற நிலையில் படத்தின் 3-வது பாடல் வெளியீட்டு விழா ஹைதராபாத் நகரில் நட்சத்திர ஹோட்டலில் நேற்றைய தினம் இந்தியா…

Read More

சாய் தன்ஷிகா நடிக்கும் ‘யோகிடா’ திரைப்படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா!

பேராண்மை, பரதேசி, கபாலி, சோலோ போன்ற வெற்றிப் படங்களில் நடித்த, சமீபத்தில் வெளியான ‘ஐந்தாம் வேதம்’ வெப் தொடரிலும் தனித்துவமான நடிப்பை வெளிப்படுத்திய ‘சாய் தன்ஷிகா’ முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் திரைப்படம் ‘யோகிடா’. இத்திரைப்படத்தில் சயாஜி ஷிண்டே, மனோபாலா, கபீர் துஹான் சிங், எஸ்தர் மற்றும் பலர் நடித்துள்ளனர். இத்திரைப்படத்திற்கு கதை,திரைக்கதை,வசனம் எழுதி இயக்குகிறார் கௌதம் கிருஷ்ணா. மலையாளத்தில் ‘லூசிஃபர்’ உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட  படங்கள் மற்றும் தமிழில் ‘சாது மிரண்டா’ போன்ற படங்களுக்கு இசையமைத்து புகழ் பெற்ற தீபக் தேவ் படத்திற்கு இசையமைத்துள்ளார். தவசி,நரசிம்மா போன்ற திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த S.KA.பூபதி ஒளிப்பதிவை மேற்கொள்ள, G சசிக்குமார் படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார். விவேகம், சிறுத்தை போன்ற படங்களில் அதிரடி காட்சிகளை உருவாக்கிய சண்டை பயிற்சியாளர் K. கணேஷ்குமார் குமார் படத்தில் முக்கிய பங்காற்றி இருக்கிறார். இத்திரைப்படத்தில்…

Read More

யோகி பாபு – ரூக்ஸ் மீடியா கூட்டணியில் தயாராகும் படத்தின் படப்பிடிப்பு நிறைவு

ரூக்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம் சார்பில் அர்ஜுன் தாஸ் – காளிதாஸ் ஜெயராம் ஆகியோர் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற ‘போர் ‘ எனும் திரைப்படத்தைத் தொடர்ந்து, இந்நிறுவனத்தின் இரண்டாவது தயாரிப்பாக தமிழ் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நட்சத்திர நடிகரான யோகி பாபு கதையின் நாயகனாக நடித்திருக்கும் பெயரிடப்படாத திரைப்படத்தினை தயாரித்து வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக படத் தயாரிப்பு நிறுவனம் பிரத்யேக புகைப்படத்தை வெளியிட்டு உற்சாகத்துடன் அறிவித்துள்ளது. இந்த திரைப்படத்தில் யோகி பாபுவுடன் மேகா தாமஸ், ஜாஸிக், அஞ்சு உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். இயக்குநர் ஜெய் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்திற்கு ‘புரொடக்ஷன் நம்பர் 2’ என தற்காலிகமாக பெயரிடப்பட்டிருக்கிறது. குற்றாலம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள அடர்ந்த வனப்பகுதியில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து இருக்கிறது. இன்றைய இளம் தலைமுறையினருக்கான ஃபேமிலி…

Read More

அனல் மழை பட இசை வெளியீட்டு விழா !!

சாய் பொன்னியம்மன் மூவிஸ் தயாரிப்பில், இயக்குநர் அ அய்யனாரப்பன் இயக்கத்தில், ஒரு அழகான டிராமாவாக உருவாகியுள்ள திரைப்படம் “அனல் மழை”. விரைவில் திரைக்குவரவுள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா, படக்குழுவினருடன், திரைபிரபலங்கள் கலந்துகொள்ள பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இந்நிகழ்வினில்.. இயக்குனர் அய்யனாரப்பன் பேசியதாவது, இந்த நிகழ்ச்சியில் உங்களை சந்திப்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது, இந்த மேடை ஏற எனக்கு 40 வருடங்கள் ஆகியது, பல படங்களில் பணி புரிந்திருக்கிறேன் , இப்போது முதன் முறையாக ஒரு படத்தை இயக்கியுள்ளேன் அதற்கு வாய்ப்பளித்த தயாரிப்பாளர் மோகனுக்கு மிகவும் நன்றி, எனக்கு உறுதுணையாக இருந்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றி, படத்தின் டிரெய்லர் பார்த்து படத்தின் கதையை புரிந்து கொள்ள முடியாது, படம் பார்த்து படத்தை பற்றி சொல்லுங்கள், கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும், சாதிக்க முயற்சிக்கும் அனைவருக்கும் வாய்ப்பளியுங்கள்,…

Read More

படைத்தலைவன் படத்தின் கதாநாயகன் சண்முக பாண்டியன் பேசியதாவது..

”இந்த படம் என் மனதிற்கு மிகவும் நெருக்கமான படம், காரணம் அப்பா இருக்கும்போது இந்த படத்தின் கதையைக் கேட்டிருந்தார். இந்த படத்தில் இருக்கும் இரண்டு சண்டைக் காட்சிகளையும் அப்பா பார்த்திருக்கிறார். எனவே இந்த படம் எனக்கு மிக மிக நெருக்கமான படம். படைத்தலைவன் படத்தைக் கும்கி அல்லது வேறு எந்த படத்துடனும் ஒப்பிட்டுப் பார்க்க முடியாது. இந்த படம் முற்றிலும் வேறு மாதிரியான கதைக்களத்தைக் கொண்டுள்ளது” ”என்னுடைய முதல் ஷாட்டே ஐந்து யானைகளுடன் தான்..” எல்லாரும் நான் அப்பா மாதிரி இருப்பதாகக் கூறினார்கள். ஆனால் எனக்கு அப்படியே தெரியவில்லை, அவரை ஈடு செய்ய முடியாது. இந்த படத்திற்காக என்னால் முடிந்தவரை உழைத்துள்ளேன். நிச்சயம் இந்தப் படம் உங்கள் அனைவரையும் கவரும். அனைவருக்கும் நன்றி. இயக்குநர் ஏ ஆர் முருகதாஸ் பேசியதாவது…, ”ஏராளமான படங்களில் நடிகருக்கு நிகராக வில்லன்கள்…

Read More