கருப்பு பல்சர் – விமர்சனம்…

கதை…

மேட்ரிமோனியில் பெண் பார்த்து ரேஷ்மாவை காதலிக்கிறார் தினேஷ்.. ஒரு கட்டத்தில் தன்னிடம் கருப்பு பல்சர் பைக் இருப்பதாக பொய் சொல்லி விடுகிறார்.

எனவே நான் உன்னிடம் கருப்பு பல்சரில் ஊர் சுற்ற வேண்டும் என காதலி வேண்டுகோள் வைக்கிறாள்.. இதனை எடுத்து உடனடியாக மன்சூரிடம் இருக்கும் கருப்பு பல்சரை செகண்ட் ஹேண்டில் விலைக்கு வாங்குகிறார் தினேஷ்..

ஆனால் அதன் பிறகு ரேஷ்மாவுடன் பைக்கில் சுற்றும்போதெல்லாம் இவருக்கு சில பிரச்சனைகள் வருகிறது.. கண் மங்கலாக தெரிகிறது விபத்து ஏற்படுகிறது.. தனியாக சுற்றினால் பிரச்சனை இல்லை..

ஒரு பெண்ணுடன் சுற்றினால் அந்த கருப்பு பல்சர் பிரச்சனை செய்கிறது.. அப்படி என்றால் என்ன காரணம் என்பதுதான் படத்தின் மீதிக்கதை..


நடிகர்கள்…

இப்படத்தில் தினேஷ் இரு வேடங்களில் நடித்துள்ளார்.. ரேஷ்மா வெங்கடேஷ், மதுனிகா, சரவணன் சுப்பையா, மன்சூர் அலிகான், உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

ஜல்லிக்கட்டு காளையை அடக்கும் வீரனாகவும் எதார்த்த நாயகனாகவும் இரண்டு வேடங்களில் மாறுபட்ட நடிப்பை கொடுத்திருக்கிறார்..

அழகிலும் முகபாவனைகளிலும் கவர்கிறார் ரேஷ்மா வெங்கட்..

சரவண சுப்பையாவுக்கு பெரிய வேலை இல்லை.. ஆனாலும் அவர் தான் இரண்டு கதைகளையும் இணைக்கும் பாலமாக நடித்திருக்கிறார்.. மன்சூர் அலிகான், மதுனிக்கா ஆகியோரம் உண்டு..


தொழில்நுட்ப கலைஞர்கள்…

டாக்டர் சத்ய முரளி கிருஷ்ணன் தயாரித்துள்ளார்.. இந்தப் படத்திற்கு இன்பராஜ் ராஜேந்திரன் இசையமைத்து பாடல் வரிகளை எழுதியுள்ளார்.

இப்படத்தை முரளி கிரிஷ் இயக்கியுள்ளார். இவர் ‘சிவா மனசுல சக்தி’ மற்றும் ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் எம். ராஜேஷிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர்..

எனவே காமெடியும் இவருக்கு வொர்க் அவுட் ஆகியுள்ளது.. பிரான்க் ஸ்டர் ராகுல் காமெடியில் கலக்கி இருக்கிறார்..

பெரும்பாலும் பேய் படம் ஆவி கதை என்றால் மனிதர்கள் சார்ந்து இருக்கும்.. ஆனால் இதில் கருப்பு பல்சரில் ஆவி புகுந்து கொண்டு செய்யும் அமானுஷ்யங்கள் ரசிக்க வைக்கிறது..

Related posts

Leave a Comment