அகில இந்திய லெஜன்ட் சரவணன் தலைமை ரசிகர் நற்பணி மன்றத்தில் ‘இரண்டு கோடி ரசிகர்களை இணைப்பது எங்கள் இலக்கு’ என்றார் அகில இந்திய தலைவர் முத்துத்துரை! அகில இந்திய லெஜன்ட் சரவணன் தலைமை ரசிகர் நற்பணி மன்றம் சார்பில், அகில இந்திய தலைவர் முத்துத்துரை, 1000 மகளிருக்கு உறுப்பினர் அடையாள அட்டை வழங்கினார். இதுவரை, ஆன்லைனில் 10 லட்சம் உறுப்பினர்கள் சேர்த்துள்ளோம். அதில் 7 லட்சம் ஆண்கள். 3 லட்சம் பெண்கள் என்ற தகவலையும் தெரிவித்தார். தையல் மிஷின், உடைகள், மூன்று சக்கர வாகனங்கள், ஆட்டோக்கள் என லெஜன்ட் ரசிகர் நற்பணி மன்றத்தின் மூலம் நிறைய நலிந்த மக்களுக்கு வழங்கியுள்ளோம். எங்களின் இலக்கு 2 கோடி உறுப்பினர்களை சேர்ப்பது. தொடர்ந்து நலிந்தோருக்கு உதவுவது என்று அகில இந்திய லெஜன்ட் தலைமை ரசிகர் நற்பணி மன்ற தலைவர் முத்துத்துரை கூறினார். இன்று நடைப்பெற்ற மகளிர் உறுப்பினர் அடையாள அட்டை வழங்கும் நிகழ்வில் சிறப்பு விருந்தினர்கள் கலந்துக் கொண்டனர். விழாவில், லெஜன்ட் சரவணன் அவர்களுக்கென்று, ரசிகர்களால் உருவாக்கப்பட்ட தனி பாடல் ஒன்று, ரசிகர்களின் மிகுந்த ஆரவாரத்திற்கு மத்தியில் வெளியிடப்பட்டது. இறுதியில் ஆயிரக்கணக்கான ரசிகர்களுக்கு பிரியாணி வழங்கப்பட்டது!

அகில இந்திய லெஜன்ட் சரவணன் தலைமை ரசிகர் நற்பணி மன்றத்தில் ‘இரண்டு கோடி ரசிகர்களை இணைப்பது எங்கள் இலக்கு’ என்றார் அகில இந்திய தலைவர் முத்துத்துரை! அகில இந்திய லெஜன்ட் சரவணன் தலைமை ரசிகர் நற்பணி மன்றம் சார்பில், அகில இந்திய தலைவர் முத்துத்துரை, 1000 மகளிருக்கு உறுப்பினர் அடையாள அட்டை வழங்கினார். இதுவரை, ஆன்லைனில் 10 லட்சம் உறுப்பினர்கள் சேர்த்துள்ளோம். அதில் 7 லட்சம் ஆண்கள். 3 லட்சம் பெண்கள் என்ற தகவலையும் தெரிவித்தார். தையல் மிஷின், உடைகள், மூன்று சக்கர வாகனங்கள், ஆட்டோக்கள் என லெஜன்ட் ரசிகர் நற்பணி மன்றத்தின் மூலம் நிறைய நலிந்த மக்களுக்கு வழங்கியுள்ளோம். எங்களின் இலக்கு 2 கோடி உறுப்பினர்களை சேர்ப்பது. தொடர்ந்து நலிந்தோருக்கு உதவுவது என்று அகில இந்திய லெஜன்ட் தலைமை ரசிகர் நற்பணி மன்ற தலைவர் முத்துத்துரை…

Read More

“ஒரு நல்ல இயக்குநருக்கு படம் அமையாமல் இருப்பது மிகப்பெரும் வன்முறை” – அருண் மாதேஸ்வரன்

Romeo Pictures சார்பில் ராகுல் மற்றும் Aviate Pictures சார்பில் கோகுல் ஸ்ரீனிவாசன் இணைந்து தயாரிக்க, ‘ரைட்டர்’ பட இயக்குநரும் ‘DC’ படத்தின் எழுத்தாளருமான ஃபிராங்க்ளின் ஜேக்கப் இயக்கத்தில், இளைய திலகம் பிரபு மற்றும் புது வரவான பிக்பாஸ் 7 நிகழ்ச்சியில் பங்கேற்று புகழ்பெற்ற விஜய் வர்மா முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கும் புதிய திரைப்படத்தின் பூஜை கோலாகலமாக நடைபெற்றது. இவ்விழாவில் படக்குழுவினருடன் இயக்குநர்கள் பா. ரஞ்சித், அருண் மாதேஸ்வரன் உள்ளிட்ட திரையுலகப் பிரபலங்கள் பலர் கலந்துகொண்டு படக்குழுவினரை வாழ்த்தினர். டார்க் ஹியூமர் ஜானரில், வித்தியாசமான கதைக்களத்தில் திரில்லர் – காமெடி திரைப்படமாக உருவாகவுள்ள இப்படத்தில் நடிகர் விஜய் வர்மாவுடன் பிரபல நடிகை நாயகியாக நடிக்கவுள்ளார். Romeo Pictures ராகுல் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றார். இவர்களுடன் முத்து குமார், ரமேஷ் திலக், திலீப் சுப்பராயன், தீனா, அருண் மாதேஸ்வரன்,…

Read More

அமரம் ” கதை மறுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையைப் பேசும் கதை இப்படியொரு கதையை உருவாக்குவதற்கு நிறைய தைரியம் வேண்டும் இயக்குனர் திருஅருள் கிருஷ்ணா

திவ்ய சேத்ரா பிலிம்ஸ் பட நிறுவனம் சார்பில் நிர்மலா ராஜன் வழங்க C.R.ராஜன் தயாரிப்பில், இயக்குனர் திரு அருள் கிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ” அமரன் “. மூன்று காலகட்டங்களில் மூன்று நிலப்பகுதிகளில் நடக்கும் ஒரு அமர காதல் கதையாக உருவாகியுள்ள இப்படத்தில், தேஜஸ் ராஜன் கதாநாயகனாக நடித்துள்ளார்.கதாநாயகியாக ஐரா அகர்வால் நடித்துள்ளார். மற்றும் ஜார்ஜ், சாய் தீனா, நாகிநீடு, கல்கி ராஜன், ஹரிஷ் பெராடி, வாசுதேவன் முரளி ஆகியோர் நடித்துள்ளனர். கதை, திரைக்கதை, வசனம், எழுதி இயக்கியுள்ளார் திருஅருள் கிருஷ்ணன். இவர் இயக்குனர் கோகுல், ராஜன் மாதவ் ஆகியோரிடம் உதவியாளராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. வரும் ஆகஸ்ட் 28-ல் வெளியாகவுள்ள நிலையில் இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா கோலாகலமாக நடைபெற்றது. இந்நிகழ்வினில் தயாரிப்பாளர் C.R. ராஜன் பேசியதாவது.., ‘அமரம்’ திரைப்படத்தை வாழ்த்த…

Read More

’இருமுடி கட்டு’ திரைப்படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு!

மாஸ் மகாராஜா ரவி தேஜா, இயக்குநர் சிவா நிர்வாணாவுடன் இணைந்து குடும்பம், நம்பிக்கை மற்றும் மனமாற்றத்தை மையமாகக் கொண்ட உணர்வுப்பூர்வமான கதையான ‘இருமுடி’ திரைப்படத்தில் நடித்துள்ளார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் சார்பில் நவீன் யெர்னேனி மற்றும் ஒய். ரவி சங்கர் தயாரிக்க, டி-சீரிஸ் பிலிம்ஸ் வழங்கும் ‘இருமுடி கட்டு’ திரைப்படம் உலகம் முழுவதும் ஆகஸ்ட் 21 அன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இதன் பத்திரிகையாளர்கள் சந்திப்பு இன்று நடைபெற்றது. தயாரிப்பாளர் ரவி சங்கர், “திரில்லர், குடும்ப கதை மற்றும் ஆன்மீகம் என மூன்று விதமான லேயர்களோடு இயக்குநர் சிவா இந்த கதையை எங்களிடம் சொன்னார். எப்படி இது சாத்தியமாகும் என்று எங்களுக்கு ஆச்சரியமாக இருந்தது. ஆனால், அதை சிவா நேர்த்தியாக இந்த படத்தில் செய்து காட்டினார். மாஸ் மகாராஜா ரவி தேஜா, நடிகை பிரியா பவானி சங்கர் என…

Read More

மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் இயக்குநர் விக்னேஷ் ஸ்ரீகாந்த் இயக்கத்தில், நடிகர் அர்ஜுன் தாஸ் – அதிதி ஷங்கர் இணைந்து நடித்திருக்கும் திரைப்படம் ‘ஒன்ஸ்மோர்’.

அறிமுக இயக்குநர் விக்னேஷ் ஸ்ரீகாந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படம், காதல், உணர்வுகள் மற்றும் பொழுதுபோக்கை மையமாகக் கொண்ட படைப்பாக உருவாகியுள்ளது. இதில் அர்ஜுன் தாஸ், அதிதி ஷங்கர் ஆகியோருடன், பிரபல மாடல் சோனா ஒலிக்கல் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். வரும் ஆகஸ்ட் 28 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா படக்குழுவினருடன் திரை பிரபலங்கள் கலந்து கொள்ள பத்திரிகை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது. இந்நிகழ்வினில் இயக்குநர் தயாரிப்பாளர் இரா சரவணன் பேசியதாவது.., “ஆகஸ்ட் 28ஆம் தேதி ‘அன்பே டயானா’ ஓடிடியிலும், ‘ஒன்ஸ்மோர்’ திரையரங்குகளிலும் வெளியாகிறது. இந்த நாள் என் நண்பர் தயாரிப்பாளர் யுவராஜுக்கு மிக முக்கியமான நாள்.‘அன்பே டயானா’ படத்தில் என்னுடைய பணி எதுவும் இல்லாவிட்டாலும் என்னையும் தயாரிப்பாளராக இணைத்துக்கொண்ட அவரது அன்பை நான்…

Read More

‘Yourbackers play’ என்ற உலகின் முதல் இலாப நோக்கற்ற OTT தளத்தை அறிமுகப்படுத்துகிறது Yourbackers ஃபவுண்டேஷன்!

யுவர்பேக்கர்ஸ் ஃபவுண்டேஷன் (Yourbackers Foundation) தனது ‘யுவர்பேக்கர்ஸ் பிளே’ (Yourbackers Play) என்னும் உலகின் முதல் இலாப நோக்கற்ற OTT (Over-The-Top) டிஜிட்டல் தளத்தை பெருமையுடன் அறிமுகப்படுத்துகிறது. பொழுதுபோக்கையும் சமூக சேவையையும் இணைக்கும் இந்த முன்னோடி முயற்சியின் மூலம், பயனர்கள் பார்க்கும் ஒவ்வொரு திரையிடலும் நேரடியாக சமூகத்தில் ஒரு நல்ல தாக்கத்தை ஏற்படுத்தும் முயற்சி. இந்த ஓடிடி தளத்தின் நிறுவனர் கிஷோர் ஆதித்யா ஏற்கனவே மனிதம் படத்தை தயாரித்திருக்கிறார். தற்போது மைம் கோபி கதாநாயகனாக நடிக்கும் ஒரு படத்தையும் தயாரித்து வருகிறார். இந்த ஓடிடி கலைஞர்கள், பார்வையாளர்கள் மற்றும் திரையுலகினரை ஒன்றிணைத்து, பொழுதுபோக்கை சமூக மாற்றத்திற்கான கருவியாக மாற்றியமைக்கும் ஒரு வரலாற்று முயற்சி. இந்த தளத்தில் இலவசமாக திரைப்படத்தை கண்டுகளிக்கலாம். அதே சமயம் நாம் ஏதாவது பங்களிப்பு செய்ய விரும்பினால் அதையும் நன்கொடையாக தாராளமாக அளிக்கலாம். அந்த…

Read More

ஊடகங்களுக்கும், ரசிகர்களுக்கும் நன்றி தெரிவித்த தி ஒன் சூர்யாவின் ‘விஸ்வநாத் & சன்ஸ்’ படக்குழு !

      சிதாரா என்டர்டெயின்மென்ட் & ஃபார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் ஆகிய நிறுவனங்களின் தயாரிப்பில் வெங்கி அட்லூரி இயக்கத்தில் தி ஒன் ‘சூர்யா’ நடிப்பில் தயாராகி ஆகஸ்ட் 14ஆம் தேதி வெளியான விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படம் – பிரம்மாண்டமான வெற்றியை பெற்று ரசிகர்களின் பேராதரவுடன் வசூலில் சாதனை படைத்து வருகிறது. இதனால் மகிழ்ச்சியடைந்த படக்குழுவினர், படத்தை வெற்றி பெறச் செய்த ரசிகர்களுக்கும், ஊடகங்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளனர். இதனை முன்னிட்டு, சென்னையில் படக்குழுவினர் பங்கேற்ற பிரத்யேக நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் விநியோகஸ்தர் ஹரிதா லிங்கசாமி, நடிகர் சுனில் ரெட்டி, பாடலாசிரியர் பாலாஜி வேணுகோபால், நடிகைகள் ராதிகா சரத்குமார், பவானி ஸ்ரீ, மமீதா பைஜூ, இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார், இயக்குநர் வெங்கி அட்லூரி ஆகியோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் பாடலாசிரியர் பாலாஜி வேணுகோபால் பேசுகையில், ” கடந்த 23…

Read More

வெங்காயம்’, ‘பயாஸ்கோப்’ ஆகிய படங்களை இயக்கி, தயாரித்து, நடித்து, பிரபலமான பன்முகத் திறன் கொண்ட படைப்பாளியாகத் திகழும் சங்ககிரி ராஜ்குமார், கதையின் நாயகனாகவும் பல்வேறு கதாபாத்திரங்களிலும் நடித்திருக்கும் ‘ONE MAN’ திரைப்படத்தை விளம்பரப்படுத்தும் வகையிலான பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.

இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார் கதையின் நாயகனாக மட்டுமல்லாமல், ஒரு திரைப்படத்தின் உருவாக்கத்திற்குத் தேவையான பல்வேறு பணிகளைத் தனி ஒருவராக மேற்கொண்டு, உலக சினிமாவில் இதுவரை யாரும் மேற்கொள்ளாத வகையிலான ஒரு முயற்சியாக இப்படத்தை உருவாக்கியுள்ளார். இதன் மூலம் தனித்துவமான சாதனையை நிகழ்த்திய தமிழர் என்ற அடையாளத்தையும் அவர் பெற்றுள்ளார். எதிர்வரும் 21-ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ள ‘ONE MAN’ திரைப்படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்வு சென்னையில் நடைபெற்றது. இதில் நடிகர் சத்யராஜ் மற்றும் இயக்குநர்கள் சேரன், லெனின் பாரதி, ஏ.ஆர்.கே. ராஜராஜா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார் பேசுகையில்: “இந்தப் படத்தின் அனைத்து பணிகளையும் நிறைவு செய்த பிறகு, திரையரங்குகளில் படத்தை வெளியிட வேண்டும் என்பதற்காக தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணுவைச் சந்தித்தேன். இதுபோன்ற உலக சாதனை…

Read More

குரு சோமசுந்தரம் – அனுமோல் நடிக்கும் ‘பாரிஸ் கஃபே’ இசை வெளியீட்டு விழா

தண்டர் மீடியா கண்மணி ரங்கநாதன் மற்றும் LV என்டர்டேன்மெனட் வெங்கல் எம். லிங்கேஸ்வரன் இணைந்து தயாரிக்கும் பாரிஸ் கஃபே (Paris cafe) படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. இதன் இசை வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இதில் முதன்மை கதாபாத்திரத்தில் குரு சோமசுந்தரம் மற்றும் அனுமோல் நடித்துள்ளனர். மேலும் அர்ச்சனா குமார், விஜய் விஸ்வா, சாய் விக்கி, நயனா, பிபின் மற்றும் பலர் நடித்துள்ளனர். சராஜ் சீலன் இந்தப் படத்தை எழுதி இயக்கி உள்ளார். இசையமைப்பாளர் கே அவர்கள் இசையமைத்துள்ள இந்த படத்திற்கு சதீஷ் ஜி அவர்கள் ஒளிப்பதிவு செய்துள்ளார். தேசிய விருதை வென்ற விஜே சாபு ஜோசப் படத்தொகுப்பு செய்துள்ளார். படத்தின் தயாரிப்பாளர் கண்மணி ரங்கநாதன் அவர்கள் பேசும் போது, பாரிஸ் கஃபே ஒரு ஸ்மால் பட்ஜெட் படம் ஆனா ஒரு ஸ்ட்ராங்…

Read More

’மொத ராத்திரி’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா!

சில திரைப்படங்கள் மட்டுமே அறிவிக்கப்பட்ட தருணத்திலிருந்தே ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தும். அதிலும் பான் இந்திய அளவில் தரமான வெற்றிப்படங்களை தொடர்ந்து தயாரித்து வரும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் புதிய பட அறிவிப்பு எனும்போது, அந்த எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது. இந்நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் ‘மொத ராத்திரி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. ராஜா கருப்பசாமி இயக்கியுள்ள இப்படத்தில் ரிஷிகாந்த் மற்றும் அனிஷ்மா அனில்குமார் ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஆகஸ்ட் 21 ஆம் தேதி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாகிறது. இதன் டிரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது. தயாரிப்பாளர் ரவி சங்கர், “நிகழ்வுக்கு வந்திருக்கும் அனைத்து இயக்குநர்களுக்கும் நன்றி. ராஜா கதை சொன்னபோதே உடனே எங்களுக்கு பிடித்து விட்டது. ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ போல சின்ன பட்ஜெட்டில் வந்த நல்ல படங்கள் வெற்றியடைந்துள்ளது.…

Read More