மண்டாடி – விமர்சனம் 4.5/5..

கதை…

சென்னையில் வசித்து வருகிறார் சூரி.. ராமநாதபுரத்தில் இருக்கும் இவரது நண்பர் ஒருவரின் மகன் உயிருக்கு பிரச்சினை என்பதால் சூரியிடம் உதவி கேட்டு சென்னைக்கு அனுப்பி வைக்கிறார்..

ஆனால் ஒரு கட்டத்தில் சூரியை வில்லன்கள் சுற்றி வளைக்க மீண்டும் தன் சொந்த ஊருக்கே சென்று சவாலை எதிர்கொள்ள செல்கிறார் சூரி..

20 வருடங்களுக்குப் பிறகு தன் சொந்த ஊருக்கு செல்லும் சூரிக்கு அங்கு மீண்டும் பாய்மர படகு போட்டியில் பங்கேற்கும் நிர்பந்தம் ஏற்படுகிறது.. அப்படி என்றால் தான் தன் நண்பன் மகனின் உயிரை காப்பாற்ற முடியும் சூழ்நிலையில் சூரி என்ன செய்தார் என்பதுதான் படத்தின் மீதி திரைக்கதை..


நடிகர்கள்…

முகவை மைந்தன்ஸ் அணி – சூரி

சுனாமி ரைடர்ஸ் அணி.. – சுஹாஸ்

இந்த இரண்டு அணியின் கேப்டன்களும் பட்டையைக் கிளப்பு இருக்கின்றனர்..

கதாநாயகனாக மாறிய பிறகு சூரி ஒவ்வொரு கதையும் தேர்வு செய்யும் முறையில் மெச்சூரிட்டியாக காணப்படுகிறார் என்பது ஒவ்வொரு படத்திலும் தெரிகிறது… சமீபத்தில் வந்த மாமன் கருடன் விடுதலை உள்ளிட்ட பல படங்களில் அவருக்கான கேரக்டரை தேர்ந்தெடுத்து சூரி வெற்றிகளை பெற்று வருகிறார்..

கடல் தமிழ் சினிமாவில் அதிகம் பேசப்படாத கதை மீனவர்கள் கதை கடற்கரை என்று சொல்லலாம்.. அதை கதைக்களமாக தேர்ந்தெடுத்து மீனவ நண்பனாகவே சூரி வாழ்ந்திருக்கிறார்.. ஒரு பெரிய ஹீரோவாக இருந்தால் நாயகி காலில் விழ மாட்டார்கள்.. ஆனால் மகிமா காலில் சூரி விழுந்து மன்னிப்பு கேட்டு நம்மையும் அழ வைக்கிறார்..

சூரிக்கு நிகராக வில்லத்தனத்தில் மிரட்டி இருக்கிறார் சுகாஸ்.. சூரியன் நண்பனாக இருந்து ஒரு கட்டத்தில் அவருக்கு துரோகியாக மாறி வில்லத்தனத்தில் வித்தியாசம் காட்டியிருக்கிறார்..

இதுவரை செய்யாத கேரக்டரில் மஹிமா நம்பியார்.. மீனவ பெண்ணாகவே தன் கேரக்டரை பிரதிபலிக்கிறார்.. இளமையாக ஒரு தோற்றம் கொஞ்சம் வயது முதிர்ந்த தோற்றம் என என சிறந்த நடிப்பை கொடுத்திருக்கிறார்..


இடைவேளைக்குப் பிறகு வந்தாலும் சத்யராஜ் கேரக்டர் தனித்துவம் பெறுகிறது..

மஹிமாவின் மகனாக மிதுன் ஜெய்சங்கர்.. எவர் பேச்சையும் கேட்காத தொடுப்பான இளைஞன் ஒரு கட்டத்தில் அன்புக்கும் பாசத்திற்கும் கட்டுப்பட்டு கலக்கி இருக்கிறார்..

இவர்களுடன் பால சரவணன், கிருத்திகா மற்றும் ரவீந்திர விஜய் உள்ளிட்டோரும் உண்டு.. பால சரவணன் கேரக்டருக்கு மட்டும் வயது ஆகாதா என்பது போலவே அவரது தோற்றம் இருக்கிறது..

தொழில்நுட்ப கலைஞர்கள்…

ஒரு பக்கம் நாயகனாக படங்களில் அடித்தால் இசையமைப்பாளராக தன் பணியை ஒவ்வொரு படத்திலும் சிறப்பாக செய்து வருகிறார். இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ்… இந்த படத்தில் அவரது பாடல்களும் பின்னணி செய்யும் மிகப் பெரிய பலமாக அமைந்துள்ளது..

மண்டாடி & உசுரே நீ தான் புள்ள… ஆகிய பாடல்களை சிறப்பு..

எஸ் ஆர் கதிர் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.. படத்திற்கு மிகப்பெரிய ஆணிவேராக சாரி சாரி படகு துடுப்பாக செயல்பட்டு இருக்கிறார்.. நம்மையும் கடலுக்குள் அழைத்துச் சென்றது போன்ற உணர்வை தன்னுடைய காட்சிகளில் பதிவாகி இருக்கிறார்..

பீட்டர் ஹெயின் மற்றும் திலீப் சுப்பராயன் சண்டை காட்சிகளை வடிவமைத்துள்ளனர்..

பிரதீப் ராகவ் எடிட்டிங் செய்திருக்கிறார்

பாய் மர படகு போட்டியை இப்படி பிரம்மாண்டமாக கொடுக்க முடியுமா என ஒவ்வொரு பிரேமிலும் வியக்க வைக்கிறார் இயக்குனர் மதிமாறன் புகழேந்தி..

பல தமிழ் திரைப்படங்களில் கிரிக்கெட் போட்டி கால்பந்து போட்டி கபடி போட்டி என பார்த்து சலித்து போன தமிழ் ரசிகர்களுக்கு இந்த பாய்மர படகு போட்டி வித்தியாசமாக காணப்படும்..

கிராபிக்ஸ் காட்சிகளில் இன்னும் கவனம் செலுத்தி இருக்கலாம்..

ஒரு பஞ்சாயத்து தலைவர்… இரண்டு அணிகள்… பாய்மர படகு போட்டி.. மீனவ நண்பர்கள்.. அதில் காதல் பாசம் என அனைத்தையும் கலந்து கொடுத்து இந்த மண்டாடி படத்தை மீனவர் மண் கலந்த சுவையாக கொடுத்திருக்கிறார் இயக்குனர் மதிமாறன் புகழேந்தி..

Related posts

Leave a Comment