கதை…
இன்றைய நவீன மருத்துவ உலகில் ஆன்டிபயாட்டிக் என்ற பெயரில் டாக்டர் ஆலோசனை இல்லாமல் பல மருந்துகளை நாம் நம் இஷ்டத்திற்கு எடுத்து வருகிறோம்.. இதனால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை இழந்து பலவிதமான பிரச்சனைகளை பக்க விளைவுகளை நாம் சந்தித்து வருகிறோம்..
இத்துடன் ஒவ்வொரு தினமும் கோடிக்கணக்கில் இன்ஜெக்ஷன் செய்யப்பட்ட பிராய்லர் கோழிகளை சுவை என நினைத்து விஷத்தை உண்டு வருகிறோம்.. இதன் மூலம் நாம் சந்திக்கும் பிரச்சினைகளுக்கு ஒரு தீர்வு சொல்ல ஒரு புதுவிதமான முயற்சியை மேற்கொள்கிறார் வில்லன் எஸ் ஜே சூர்யா..
லண்டனில் இருந்து இந்தியாவுக்கு கொண்டுவரப்பட்ட ஒரு கெமிக்கல் மூலம் மனித இனத்தை அழித்து அதற்கு தீர்வு சொல்ல நினைக்கிறார்… இதனால் வில்லன் எஸ் ஜே சூர்யாவை அப்பா மற்றும் மகன் கார்த்திக் என இரண்டு கேரக்டர்கள் எதிர்கொள்கின்றனர்.
அதன் பிறகு என்ன நடந்தது என்பதுதான் மீதி திரைக்கதை..

நடிகர்கள்…
அப்பா கேரக்டர் சர்தார் மற்றும் மகன் கேரக்டர் ரா ஏஜென்ட் விஜய பிரகாஷ்.. என இரண்டு கேரக்டரிலும் பாடி லாங்குவேஜ் மாற்றி கேரக்டரை வேறுபடுத்தி காட்டி இருக்கிறார் கார்த்தி.. எதையும் வெற்றிவேல் முருகனுக்கு என்று சொல்லி ஆரம்பிக்கும் கார்த்தி கேரக்டர் பக்த கோடிகளுக்கு பிடிக்கும்..
ஆனால் சர்தார் மேக்கப்பில் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம்.. ஒட்டு வைத்த தாடியாகவே காணப்படுகிறது..
இந்த பிரம்மாண்டப் படத்தில் சூப்பர் என்ட்ரி கொடுக்கிறார் எஸ்.ஜே சூர்யா… ஆனால் அவரது கேரக்டர் பேசி பேசி எரிச்சல் அடைய வைக்கிறது..
மாளவிகா மோகன் மற்றும் ஆஷிகா ரங்கநாதன் இருவரும் நடிப்பிலும் ஆக்ஷன் காட்சிகளிலும் மிரட்டி உள்ளனர்..
ஆனால் சிறந்த நடிகையான ரஜிஷா விஜயனுக்கு பெரிய ஸ்பேஸ் கூட கொடுக்கப்படவில்லை..
யோகி பாபு மற்றும் நிழல்கள் ரவி… காமெடியா சீரியஸ் கேரக்டரா என்பது கூட தெரியாமல் இரண்டையும் கலந்து கொடுத்திருக்கின்றனர்.. பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட சின்ன ஜெயந்த் கேரக்டருக்கு ஒரு டயலாக் கூட இல்லை..
தொழில்நுட்ப குழு…
பின்னணி இசையில் மிரட்டி எடுக்கும் சாம் சிஎஸ்சி 100 வது படம் இது.. ஒருவேளை செஞ்சுரி அடித்த குஷியில் சாம் என்ன நினைத்தாரோ அதிரடியாக பின்னி எடுத்து இருக்கிறார்.. காட்சிகளுக்கு விறுவிறுப்பை தன் இசை மூலம் கூட்டி கொடுத்திருக்கிறார்..
ஜார்ஜ் சி வில்லியம் ஒளிப்பதிவு செய்து இருக்கிறார்.. மெட்ரோ ட்ரெயின்.. மைசூர் தசரா விழா… கேபிள் ரோப் கார் உள்ளிட்ட காட்சிகளை தன் ஒளிப்பதிவு மூலம் பிரம்மாண்டமாக காட்டியிருக்கிறார்..
எடிட்டர் விஜய் வேலுக்குட்டி.. ஆண்டிபயாட்டிக் மனித குலத்திற்கு எப்படி ஆபத்தானது என்ற சோசியல் மெசேஜை இந்த படத்தின் மூலம் பிஎஸ் மித்ரன் சொல்லி இருக்கிறார்.. ஆனால் எதையுமே அளவாக சொல்ல வேண்டும்… அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்பது போல எஸ் ஜே சூர்யா ஓவர் ஆக்டிங் மூலம் காட்சிகளை இழுத்து நீண்ட நேரம் இழுத்து விட்டார்… அதை எடிட்டர் கட்டிங் செய்திருந்தால் இந்த படத்திற்க்கு ரசிகர்கள் மத்தியில் கூடுதல் கவனம் கிடைத்திருக்கும்..
ஒரு கமர்சியல் படத்தில் பாடம் நடத்துவது தேவையா என்ற கேள்வியும் எழுகிறது.. ஒருவேளை ஷங்கர் படங்களைப் போல அனைத்தையும் கலந்து கொஞ்சம் மட்டும் பாடம் நடத்தி இருந்தால் இந்த சர்தார் 2 படம் மிகவும் கவனிக்கப்பட்ட படமாக அமைந்திருக்கும்.
ஆனால் ஹாலிவுட் தரத்தில் ஒரு ஸ்பை திரில்லர் படத்தை நடிகர் கார்த்தி டைரக்டர் பிஎஸ் மித்ரன் மற்றும் பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் இணைந்து கொடுக்க முயற்சித்துள்ளனர்..
