கதை…
சூதாட்டத்தில் அதிக விருப்பம் கொண்டவர் துல்கர் சல்மான்.. ஒரு கட்டத்தில் கோடிக்கணக்கில் இவருக்கு கடன் பிரச்சனை வருகிறது.. அதை சமாளிக்க அடுத்த கடன் வாங்கி அடுத்த கடன் வாங்கி சூதாட்டத்தில் ஈடுபட மேலும் மேலும் பிரச்சினைகளை சந்திக்கிறார்..
ஒரு நாள் காரில் அதிக வேகத்தில் செல்லும்போது விபத்து ஏற்பட்டு அவருக்கு சுயநினைவு இல்லாமல் போகிறது.. அப்போது அவர்களின் பெற்றோர் விருப்பத்திற்கு பேரில் அவருக்கு வேறு ஒரு நபரின் வலது கை பொருத்தப்படுகிறது..
சில மாதங்கள் ஆன பின்னர் இவர் சுயநினைவை சந்திக்கும் போது கையால் இவருக்கு பல பிரச்சினைகள் வருகிறது… இவரது கண்ட்ரோல் இல்லாமல் கையே என்ன செய்ய வேண்டும் என நினைத்து அதன்படி செயல்படுகிறது..
ஒரு கட்டத்தில் வில்லன் மிஷ்கினை கொள்ள கை திட்டமிடுகிறது.. ஆனால் மிஷ்கின் மீது பெரும் மரியாதை வைத்திருக்கிறார் துல்கர் சல்மான்..
அதன்பிறகு என்ன நடந்தது.? கை அவரை கொலை செய்ய திட்டமிடுவது ஏன்.? கையை இவர் எப்படி கண்ட்ரோல் செய்தார்.? அல்லது கையை வெட்டிக் கொண்டாரா என்பதெல்லாம் வித்தியாசமான கற்பனை..

நடிகர்கள்…
துல்கர் சல்மான் – டான் ஜான்
கயாடு லோஹர் – ஈஷா
மிஷ்கின் – டேவிட் ஆபிரகாம்
ஆண்டனி வர்கீஸ் – விக்னேஷ் “விக்கி” தாஸ்
சம்யுக்தா விஸ்வநாதன் – தாரிணி
வினய் ஃபோர்ட் – ஃப்ரெட்டி
கதிர் – ஜேசன் ஆண்டனி
உடலுக்குள் ஒரு ஆவி புகுந்து விட்டால் அவரின் மேனரிசத்தை ஈசியாக கொண்டு வந்து விடலாம்… ஆனால் கை மட்டும் வேறு ஒரு நபர் அதில் கிட்டத்தட்ட ஒரு ஆவி இருப்பதாக உணர்ந்தால் அதை எப்படி ஒரு நடிகர் செய்வார் என்ற கேள்விகளுக்கு 100% அதிரடியான ஆக்டிங் கொடுத்திருக்கிறார் துல்கர் சல்மான்..
ஜாலியாக இருந்த தனக்குள் மற்றொரு கேரக்டர் கையாக வந்தால் தன் நிலைமை என்ன என்பதை தன்னுடைய உடல் மொழியில் இல்லை இல்லை தன்னுடைய கை மொழியில் காட்டியிருக்கிறார்..
துல்கர் சல்மான் தான் இந்த படத்தை தயாரித்திருக்கிறார்.. தன் கை மீது வைத்த நம்பிக்’கையை அவருக்கு கோடிக்கணக்கில் லாபத்தை கொடுக்கும் என உறுதியாக சொல்லலாம்..
இடைவேளை வரை தான் துல்கர் சல்மான்… அதன் பிறகு ஒட்டுமொத்த படத்தையும் எடுத்துக் கொள்கிறார் கிரிக்கெட் வீரராக வரும் ஆண்டனி வர்கீஸ்.. ஒரு சேரி பகுதியில் இருந்து வந்து இந்திய அளவில் பிரபல நட்சத்திரமாக உயர்ந்து கேரக்டராவே வாழ்ந்திருக்கிறார்..
கிரிக்கெட் அணி கேப்டனாக கதிர்.. கடுகு அளவு கேரக்டர் என்றாலும் அதில் கைத்தட்டலை அள்ளுகிறார் கதிர்..
வில்லனாக மிஷ்கின்.. மேடையில் பேசுவதைப் போலவே திரையிலும் பேசி கைதட்டலை அள்ளுகிறார்.. சில இடங்களில் ஓவர் ஆக்டிங் என்றாலும் மற்ற மொழி ரசிகர்களுக்கு இவரது பாடி லாங்குவேஜ் வித்தியாசமான ஒன்றுதான்..
ஏற்கனவே இம்மாட்டல் படத்தில் நாயகியாக வந்திருந்தார் கையாடு லோகர்.. இந்த வாரமே அவருக்கு இரண்டாவது படம்தான் இந்த ஐ எம் கேம்.. இதிலும் நாயகி வேடத்தில் சிறந்த நடிப்பை கொடுத்திருக்கிறார்.. அழகிலும் ரசிகர்களை வழக்கம்போல கவர்ந்திருக்கிறார்..
ஆண்டனி வர்கீஸ் ஜோடியாக சம்யுக்தா.. சென்டிமென்ட் நடிப்பில் உருக வைக்கிறார்..
தொழில்நுட்ப குழு…
இயக்கம்: நஹாஸ் ஹிதாயத்
தயாரிப்பு: துல்கர் சல்மான் & ஜோம் வர்கீஸ்
கதை: நஹாஸ் ஹிதாயத்
திரைக்கதை: சஜீர் பாபா, பிலால் மொய்து, இஸ்மாயில் அபூபக்கர்
ஒளிப்பதிவு: ஜிம்ஷி காலித்
படத்தொகுப்பு: சாமன் சாக்கோ
இசை & பின்னணி இசை: ஜேக்ஸ் பிஜாய்
ஜேக்ஸ் பிஜாய் பின்னனி இசையில் தெறிக்க விட்டுள்ளார்.. துல்கர் சல்மான் பாடியுள்ள லூசர் பாடலும் அது படமாக்கப்பட்ட விதமும் வேற..
நடனங்களை சாண்டி மாஸ்டர் அமைத்திருக்கிறார்.. கிரிக்கெட் பெட்டிங் சூதாட்டம் ஹை கிளாஸ் ஆட்டம் அதற்கு ஏற்ப படத்தை பிரம்மாண்டமாக கேமராவில் படம் பிடித்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் ஜிம்ஷி காலித்…
பெரும்பாலும் இறந்த ஒருவரின் ஆன்மா வேறு ஒரு உடல் மீது சென்று தன்னுடைய பழியை தீர்த்துக் கொள்ளும்.. நிறைவேறாத ஆசை அல்லது பழிவாங்கல் என்றால் அப்படி செயல்படும்..
நான் ஈ படத்தில் ஈமீது.. மற்ற படங்களில் மற்றொரு உடல் மீது வரும்.. ஆனால் இதில் கையை மட்டும் வைத்து ஒரு வித்தியாசமான கற்பனை முயற்சியாக கொடுத்திருக்கிறார்.. அதற்கு சிறந்த நடிகரை தேர்ந்தெடுத்து அவர் மூலம் நல்லதொரு படைப்பை கொடுத்திருக்கிறார் இயக்குனர் நஹாஸ் ஹிதாயத்..
