4 இடியட்ஸ் – விமர்சனம்…

கதை…

கடற்கரையோரம் இருக்கும் ஒரு பெரிய பங்களாவில் கோடிக்கணக்கில் பணம் இருப்பதை தெரிந்து கொண்ட நான்கு திருடர்கள் அதனை கொள்ளையடிக்க திட்டமிடுகின்றனர்.. (புகழ் – திடியன் – கும்கி அஸ்வின் – இந்திரன் 4 திருட நண்பர்கள்)

அதன்படி அவர்கள் உள்ளேவும் செல்கின்றனர்.. அங்கே உள்ள செக்யூரிட்டி ரவி மரியாவிடம் இவர்கள் சிக்கிக் கொள்ள அவர் இவர்களை மிரட்டி வீட்டுக்குள் வைத்து பூட்டி விடுகிறார்..

ஒரு கட்டத்தில் இவர்களை திட்டம் தெரிந்து கொண்ட அவரும் இணைகிறார்… இதையெல்லாம் அறிந்து கொண்ட வின்சென்ட் அசோகன் என்ன செய்தார் என்பதெல்லாம் மீதிக்கதை..

நடிகர்கள்…

புகழ் – திடியன் – கும்கி அஸ்வின் – இந்திரன்.. மற்றவர்கள் காமெடிக்கு தான் ஹீரோ என புகழ் அவர்களைவிட தன்னை முன்னிலைப்படுத்தி இருக்கிறார்.. காமெடி செய்யாமல் கொஞ்சம் சீரியஸ் மூடில் வருகிறார்..

மற்றவர்கள் கொஞ்சம் காமெடி கொஞ்சம் டென்ஷன் என கொடுத்துள்ளனர்.. ரவி மரியா கதையின் நாயகன் போல அவரும் தன்னை முன்னிலைப்படுத்தி படம் முழுக்க வருகிறார்..

காமெடி படங்களுக்கு லாஜிக் தேவையில்லை… ஆனாலும் கொஞ்சம் லாஜிக் பார்த்து திரைக்கதையை செய்திருந்தால் காமெடி இல்லாத குறையை லாஜிக் நிறைவேற்றி இருக்கும்

வின்சென்ட் அசோகன் பெரும்பாலும் போனில் பேசிக் கொண்டிருக்கிறார்.. அவருக்கு பெரிய ஸ்கோப் இல்லை..

ஹீரோயின் இல்லையா என்று நீங்கள் கேட்பது புரிகிறது… நாயகி என்ற பெயரில் சில காட்சிகளில் வந்து செல்கிறார் பிரக்யா.


தொழில்நுட்ப கலைஞர்கள்…

யு.கே.செந்தில்குமாரின் ஒளிப்பதிவு கலர்புல்.. முழுக்க முழுக்க வீட்டில் வைத்து காட்சிகளை படமாக்கி இருக்கிறார்..

சுபாஷ் மணிரத்னம் இசை.. பாடல்களும் பின்னணி இசையும் பாராட்டும்படி இல்லை..

சஜோ சுந்தர் முருகேசன் என்பவர் இயக்கியிருக்கிறார்.. ஐந்து காமெடி நடிகர்களை வைத்து காமெடியில் படம் செய்ய நினைத்திருக்கிறார்.. அதில் ஓரளவு வெற்றி பெற்று இருக்கிறார்..

Related posts

Leave a Comment