இந்த பொங்கல் பண்டிகையில் பல படங்கள் வெளியானாலும் 12 வருடங்கள் கழித்து வெளியான மதகஜராஜா படத்தின் வெற்றியும், ஏழு வருடங்கள் கழித்து பாலா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘வணங்கான்’ படத்தின் வெற்றியும் மிகவும் கவனிக்கத்தக்கதாக மாறி இருக்கிறது. குறிப்பாக இன்றைய காலகட்டத்தில் பெண்கள் அதிகம் எதிர்கொளும் பாலியல் வன்முறைகளுக்கு கடுமையான தீர்வு காணப்பட வேண்டும் என ‘வணங்கான்’ படம் மூலம் இயக்குநர் பாலா அழுத்தமாக வலியுறுத்தியுள்ளது ரசிகர்களிடம், குறிப்பாக பெண்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. படத்தின் வெற்றிக்கும் அதுவே மிகப்பெரிய காரணமாக அமைந்து விட்டது. அருண்விஜய்யின் மாறுபட்ட கதாபாத்திரமும், உணர்வுப்பூர்வமான நடிப்பும், அதற்கு அவர் கொடுத்திருக்கும் கடின உழைப்பும், கதாநாயகி ரோஷிணி, தங்கை ரிதா உள்ளிட்ட படத்தில் இடம்பெற்ற அனைத்து நடிகர்களின் இயல்பான பங்களிப்பும் என எல்லாம சேர்ந்து வணங்கான் படத்தின் வெற்றிக்கு உறுதுணையாக அமைந்துள்ளன.. நல்ல படங்களை…
Read MoreCategory: சினி-நிகழ்வுகள்
‘வணங்கான்’ ஒரு மைல் கல் – நடிகர் அருண்விஜய் நெகிழ்ச்சி
இந்த பொங்கல் பண்டிகையில் பல படங்கள் வெளியானாலும் 12 வருடங்கள் கழித்து வெளியான மதகஜராஜா படத்தின் வெற்றியும், ஏழு வருடங்கள் கழித்து பாலா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘வணங்கான்’ படத்தின் வெற்றியும் மிகவும் கவனிக்கத்தக்கதாக மாறி இருக்கிறது. குறிப்பாக இன்றைய காலகட்டத்தில் பெண்கள் அதிகம் எதிர்கொளும் பாலியல் வன்முறைகளுக்கு கடுமையான தீர்வு காணப்பட வேண்டும் என ‘வணங்கான்’ படம் மூலம் இயக்குநர் பாலா அழுத்தமாக வலியுறுத்தியுள்ளது ரசிகர்களிடம், குறிப்பாக பெண்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. படத்தின் வெற்றிக்கும் அதுவே மிகப்பெரிய காரணமாக அமைந்து விட்டது. அருண்விஜய்யின் மாறுபட்ட கதாபாத்திரமும், உணர்வுப்பூர்வமான நடிப்பும், அதற்கு அவர் கொடுத்திருக்கும் கடின உழைப்பும், கதாநாயகி ரோஷிணி, தங்கை ரிதா உள்ளிட்ட படத்தில் இடம்பெற்ற அனைத்து நடிகர்களின் இயல்பான பங்களிப்பும் என எல்லாம சேர்ந்து வணங்கான் படத்தின் வெற்றிக்கு உறுதுணையாக அமைந்துள்ளன.. நல்ல படங்களை…
Read Moreமறைந்த இயக்குநர் ஷங்கர் தயாள் . N இயக்கத்தில், “குழந்தைகள் முன்னேற்றக் கழகம்” வரும் ஜனவரி 24 ஆம் தேதி, திரைக்கு வருகிறது!!
மீனாக்ஷி அம்மன் மூவிஸ் தயாரிப்பில், இயக்குநர் ஷங்கர் தயாள்.N இயக்கத்தில், குழந்தை நட்சத்திரங்களுடன்,யோகிபாபு மற்றும் செந்தில் இணைந்து நடிக்க, கலக்கலான பொலிடிகல் காமெடியாக உருவாகியுள்ள திரைப்படம் “குழந்தைகள் முன்னேற்றக் கழகம்”. இப்படம் வரும் 2025 ஜனவரி 24 ஆம் தேதி, உலகமெங்கும் திரைக்கு வருகிறது. சமீபத்தில் மறைந்த, சகுனி படப்புகழ் இயக்குநர் ஷங்கர் தயாள் . N குழந்தைகள் உலகத்தை மையமாக வைத்து, செந்தில் மற்றும் யோகிபாபு நடிப்பில், இப்படத்தை இயக்கியிருந்தார். தற்போது இப்படம் திரைக்கு கொண்டுவரப்படுகிறது. திரையுலகில் குழந்தைகள் உலகத்தை மையமாக வைத்து இதுவரை உருவான படங்கள் யாவும், பெற்றோர்களுக்கு அறிவுரை சொல்லும் படமாகவும், ஃபேன்டஸி, காமெடி, ஹாரர் என பொதுவான ஜானரில் மட்டுமே வந்துள்ளது. முதல் முறையாகக் குழந்தைகளின் உலகத்தில், அரசியல் பார்வையைச் சொல்லும் பொலிடிகல் காமெடி ஜானரில், அனைவரும் ரசிக்கும் வகையில் இப்படம்…
Read More‘திருக்குறள்’ திரைப்படத்தின் முதல் பாடலை வெளியிட்டார் முதல்வர்.
காமராஜ்’, ‘WELCOME BACK GANDHI’ திரைப்படங்களைத் தயாரித்த ரமணா கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் தமிழரின் பெருமைமிகு அடையாளம் திருக்குறள்–ஐத் திரைப்படமாகத் தயாரித்துள்ளது. இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார். திரைப்படம் விரைவில் வெளியாகிறது. இளையராஜா எழுதி இசையமைத்துள்ள ‘முல்லை வாசம்’ பாடலை முதல்வர் வெளியிட்டார்கள். இந்தப் பாடலின் ராகத்தில் இதுவரை இசைஞானி எந்தப்பாடலும் இயற்றவில்லை எனத் தெரிவித்தார். வெளியீட்டுவிழா நிகழ்வில் இயக்குனர் A.J.பாலகிருஷ்ணன், முதன்மைக் கொடையாளர் T.P.இராஜேந்திரன், VIT வேந்தர், தலைவர் தமிழியக்கம், டாக்டர் கோ.விசுவநாதன், வள்ளுவராக நடித்துள்ள கலைச்சோழன், வாசுகியாக நடித்துள்ள தனலட்சுமி, ஒளிப்பதிவாளர் A.M.எட்வின் சகாய் முதலியோர் பங்கு பெற்றனர். பாடலை முதல்வர் கண்டு பாராட்டினார்
Read Moreதயாரிப்பாளர், இயக்குனர் TM.ஜெயமுருகன் மாரடைப்பால் காலமானார்.
நடிகர் முரளி நடித்த ரோஜா மலரே, அடடா என்ன அழகு மற்றும் நவரச நாயகன் கார்த்திக், சுகன்யா நடித்த தீ இவன் போன்ற படங்களை தயாரித்து இயக்கிய T.M. ஜெயமுருகன் சற்று முன்பு மாரடைப்பு காரணமாக காலமானார். அவரது இறுதி ஊர்வலம் திருப்பூர், தென்னம்பாளையத்தில் உள்ள அவரது இல்லத்தில் நாளை (18.01.2025) நடைபெற இருக்கிறது.
Read More“மதகஜராஜா எந்த ஸ்டேஷனிலும் நிற்காமல் போகும் டிரெயின்” ; விஷால் உற்சாகம்
12 வருடங்களுக்கு முன் தயாரான ஒரு படம் சில காரணங்களால் வெளிவராமல் தடைபட்டு, இப்போது காலம் எவ்வளவோ மாறியிருக்கும் சூழலில் வெளியாகி, அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்து பிளாக் பஸ்டர் ஹிட் ஆகிறது என்றால் இது சினிமா வரலாற்றிலேயே இதுவரை நிகழாத அதிசயம்.. அதை நிகழ்த்தி காட்டி இருக்கிறது இந்த பொங்கல் பண்டிகைக்கு வெளியான ‘மதகஜராஜா, திரைப்படம். சுந்தர்.சி இயக்கத்தில் விஷால், சந்தானம், அஞ்சலி, வரலட்சுமி, விஜய் ஆண்டனி (இசை) உள்ளிட்டோரின் கூட்டணியில் பாரம்பரியம் மிக்க ஜெமினி பிலிம்ஸ் சர்க்யூட் தயாரிப்பில் உருவான ‘மதகஜராஜா’ (MGR) திரைப்படம் தடைகள் பல கடந்து லேட்டாக வந்தாலும் லேட்டஸ்ட் என்பது போல வெளியாகி இந்த பொங்கல் ரேஸில் நம்பர் 1 குதிரையாக ஓடிகொண்டு இருக்கிறது.. அந்தவகையில் பொதுமக்களுக்கு உண்மையான பொங்கல் கொண்டாட்டமாக ‘மதகஜராஜா’ படம் அமைந்துவிட்டது என்றே சொல்லலாம். 13…
Read More‘கள்ள நோட்டு’ திரைப்படத்தின் டீசரை சேலம் மாநகராட்சி மேயர் மாண்புமிகு ஆ.இராமச்சந்திரன் அவர்கள் ஏ.ஆர். அறக்கட்டளை திரு எஸ்.சுரேஷ்மோகன் அவர்களுடன் இணைந்து வெளியிட்டார்.
‘பணம் ஆறாம் அறிவு போன்றது, அது இல்லாமல் மற்ற ஐந்து அறிவுகளையும் நீங்கள் பயன்படுத்த முடியாது’ என்றார் பெர்னாட்ஷா. ‘பணம் நமக்கு எல்லாவற்றையும் கொடுக்கலாம், ஆனால் வறுமை நம்மிடம் இருந்து பறித்த சிலவற்றைப் பணத்தால் திருப்பித் தர முடியாது ‘என்றார் சார்லி சாப்ளின். இப்படிப் பணத்தைப் பற்றிய ஏராளமான பொன்மொழிகள், பழமொழிகள் உண்டு. ஆனால் பணம் பற்றிப் பேசும் அனைவர் மனதிலும் ரூபாய் நோட்டைப் போலவே கள்ள நோட்டைப் பற்றிய ஒரு கறுப்பு நிழலும் வந்து போகும். அப்படிக் கள்ள நோட்டு பற்றிய ஒரு கதையை மையமாக வைத்து ‘கள்ள நோட்டு ‘என்கிற பெயரிலேயே ஒரு திரைப்படம் உருவாகி இருக்கிறது. இப் படத்தினை எம்.ஜி. ராயன் எழுதி இயக்கியுள்ளார். சம்பத்குமார் .ஆ ஒளிப்பதிவு செய்துள்ளார். முத்து கொடப்பா படத்தொகுப்பு செய்துள்ளார் .பாடல்களை செல்வராஜா எழுதியுள்ளார். எம் ஜி…
Read Moreபிரபுதேவாவின் பிரம்மாண்ட நடன நிகழ்ச்சி ‘பிரபுதேவாஸ் வைப்’ என்ற பெயரில் பிரமாண்டமாக நடைபெறுகிறது.
இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன், நடனப் புயல் பிரபுதேவாவின், பிரம்மாண்டமான நடன நிகழ்ச்சி, இந்தியாவில் முதல் முறையாக நடக்கவுள்ளது. பிரபல நிறுவனமான அருண் ஈவண்ட்ஸ் அருண் நடத்த, V.M.R.ரமேஷ், G Star. உமாபதி மற்றும் ஜெய்சங்கர் முக்கிய பங்கு வகிக்கின்றனர். இந்த நடன நிகழ்ச்சி வரும் 2025 பிப்ரவரி 23 ஆம் தேதி சென்னையில் நந்தனம் YMCA மைதானத்தில் நடைபெறுகிறது. நடிகரும், நடனக் கலைஞரும் இயக்குனருமான ஹரிகுமார் இந்த பிரம்மாண்டமான ஷோவை இயக்குகிறார். ஆர்ட் டைரக்டர் கிரண் கைவண்ணத்தில் பல்வேறு விதமான செட்டுகள் அமைக்கப்பட உள்ளது. இந்நிகழ்ச்சிக்கான பத்திரிகையாளர் சந்திப்பு மற்றும் டிக்கெட்களை அறிமுகப்படுத்தும் விழா, பத்திரிகை ஊடக நண்பர்கள் முன்னிலையில் சென்னையில் நடைபெற்றது. முன்னதாக iBa ( ஐபா) நிறுவனத்தின் ticket iBa என்ற இணையதளத்தை பிரபுதேவா துவக்கி வைத்து முதல் 25000 டிக்கெட்டுகளை iBa நிறுவனத்தின்…
Read Moreஅகத்தியா கேம் மற்றும் இரண்டாவது சிங்கிள் வெளியீட்டு நிகழ்வு, கொண்டாட்டம் !!
தமிழ்த் திரையுலகில் புதிய வரலாற்றைப் படைக்கும் வகையில், “அகத்தியா” படக்குழு, இரண்டு புதிய அற்புதமான முயற்சிகளைத் தொடங்கியுள்ளது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அகத்தியா கேம் மற்றும் இரண்டாவது சிங்கிள் “என் இனிய பொன் நிலாவே.” பாடல் என இரண்டும் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பிரம்மாண்டத் திரைப்படம் ஜனவரி 31, 2025 அன்று பான்-இந்திய வெளியீடாக வெளியாகவுள்ளது. தமிழ் சினிமா வரலாற்றில் முதன்முறையாக, திரைப்படத்தின் கதாபாத்திரங்கள் மற்றும் கதைக்களத்தின் அடிப்படையில் ஒரு விளையாட்டு ஆப் (game) உருவாக்கப்பட்டுள்ளது. அகத்தியாவின் ஏஞ்சல்ஸ் அண்ட் டெவில்ஸ் இடம்பெறும் இந்த கற்பனை-சாகச விளையாட்டு, எல்லா வயதினரும் விளையாடும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த விளையாட்டு படத்தின் கதை மீதும், கதைக்களத்தின் மீதும் ஒரு முழுமையான பார்வையை வழங்கி, படத்தின் மீதான ஆவலைத் தூண்டுவதாக அமைந்துள்ளது. இந்த கேம் ஆப் வடிவமைப்பின் இணை தயாரிப்பாளரும் தொலைநோக்கு பார்வையாளருமான…
Read More“காதலிக்க நேரமில்லை” படத்தின் முன் வெளியீட்டு விழா!!
ரெட் ஜெயன்ட் மூவீஸ் தயாரிப்பில், இயக்குநர் கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், ஜெயம் ரவி, நித்யா மேனன் நடிப்பில் ரொமான்ஸ் திரில்லராக உருவாகியுள்ள திரைப்படம் “காதலிக்க நேரமில்லை”. பொங்கல் கொண்டாட்டமாக ஜனவரி 14 அன்று இப்படம் திரைக்கு வருகிறது. இப்படத்தின் வெளியீட்டை ஒட்டி, படக்குழுவினர் பத்திரிக்கை ஊடக நண்பர்களைச் சந்தித்து, படம் குறித்த அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர். இந்நிகழ்வினில்… ரெட் ஜெயன்ட் மூவீஸ் சார்பில் அர்ஜூன் துரை பேசியதாவது…. காதலிக்க நேரமில்லை ஜனவரி 14 ரிலீஸாகிறது. ஜெயம் ரவி சார் நீண்ட காலம் கழித்து திரையில் ரொமான்ஸ் செய்துள்ளார். பார்க்க மிக நன்றாக உள்ளது. நித்யா மேனன் ரொம்ப செலக்டிவாக தான் கதாப்பாத்திரங்கள் செய்கிறார். திருச்சிற்றம்பலம் படத்திற்குப் பிறகு, இந்தப்படம் மிக முக்கியமானதாக இருக்கும். ஜெயம் ரவி, நித்யா மேனன் ஜோடி உங்களைக் கவர்வார்கள். வினய் மிக வித்தியாசமான…
Read More