தமிழ் திரைப்படமான MAX-இன் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ட்ரெய்லர் மற்றும் பாடல்களுடைய முன்னோட்டம் சென்னையில் பிரம்மாண்டமாக வெளியிடப்பட்டது. இந்த நிகழ்வில், திரைப்படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு, புகழ்பெற்ற நடிகர்- தயாரிப்பாளர் கிச்சா சுதீப் மற்றும் படத்தின் அறிமுக இயக்குனர் விஜய் கார்த்திகேயா பங்கேற்றனர். திரைப்படத் துறையின் பல பிரபலங்கள் இந்த நிகழ்வுக்கு வந்திருந்தனர். தமிழ் திரைப்பட இயக்குனர் சங்க தலைவர் ஆர்.வி. உடையகுமார், இயக்குனர்கள் மிஸ்கின், ராஜ்குமார் பெரியசாமி, தேசிங் பெரியசாமி உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். மேலும், தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை மற்றும் இந்திய திரைப்பட சம்மேளனத்தின் தலைவர் ரவி கோட்டாரக்காரா, முன்னாள் தலைவர் காட்ராகட்ட பிரசாத், நடிகர் இளவரசு, நடன அமைப்பாளர் ஷோபி உள்ளிட்டோர் கலந்துகொண்டு படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தனர். கலைப்புலி எஸ். தாணு நிகழ்ச்சியில் பேசும்போது, படக்குழுவின்…
Read MoreCategory: சினி-நிகழ்வுகள்
கவிக்கோ அப்துல் ரகுமான் குறித்த ஆவணப்படம் திரைப் பிரபலங்கள், முக்கிய பிரமுகர்கள் முன்னிலையில் சென்னையில் வெளியீடு
கவிக்கோ இலக்கியக் கழகம் மற்றும் கவிக்கோ மன்றம் இணைந்து சென்னையில் இன்று (டிசம்பர் 24) மாலை நடத்திய விழாவில் கவிக்கோ அப்துல் ரகுமான் குறித்த ஆவணப்படம் திரைப் பிரபலங்கள், முக்கிய பிரமுகர்கள் முன்னிலையில் வெளியிடப்பட்டது. மயிலாப்பூர் சி ஐ டி காலனி இரண்டாவது பிரதான சாலையில் அமைந்துள்ள கவிக்கோ மன்றத்தில் நடைபெற்ற கருத்தை கவரும் நிகழ்ச்சியில் ஆவணப்படத்தை பிரபல திரைப்பட இயக்குநர் லிங்குசாமி வெளியிட சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதியரசர் கே. பாட்சா பெற்றுக்கொண்டார். கவிக்கோ அப்துல் ரகுமானின் வாழ்க்கையையும் தமிழ்ப் பணியையும் சிறப்பாக பதிவு செய்யும் வகையில் ஆவணப்படத்தை இயக்குநர் பிருந்தா சாரதி உருவாக்கி இருந்தார். சிங்கப்பூர் முஸ்தபா தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த ஆவணப்படத்திற்கு தாஜ்நூர் இசையமைக்க, சி ஜே ராஜ்குமார் ஒளிப்பதிவை கவனிக்க சூர்யா படத்தொகுப்பை மேற்கொண்டிருந்தார். தமிழியக்க தலைவரும் விஐடி பல்கலைக்கழகத்தின் வேந்தருமான…
Read More‘நான் பேசமாட்டேன், என் படம் பேசும்’: மோகன்லால்!!
Aashirvad Cinemas சார்பில், ஆண்டனி பெரும்பாவூர் தயாரிப்பில், மலையாள திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகர் மோகன்லால் முதன்முறையாக இயக்கி நடித்திருக்கும், 3டி பிரம்மாண்ட ஃபேண்டஸி திரைப்படமான ” பரோஸ்”, திரைப்படம் வரும் டிசம்பர் 25 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது. ரவிஸ் டாக்டர்.பி.ரவி பிள்ளை வழங்கும் இப்படத்தை வழங்குகிறார். இப்படத்தின் முன் வெளியீட்டு நிகழ்வு படக்குழுவினர் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது., இந்நிகழ்வினில்… வசனகர்த்தா ஆர் பி பாலா பேசியதாவது… மோகன்லால் சாருடன் புலிமுருகன் பணியாற்றினேன் பின்னர் இப்படத்தில் பணியாற்றியுள்ளேன். 3 வருடங்களுக்கு முன்பு பிரம்மாண்டமாக இப்படம் ஆரம்பித்தது. நான் இதுவரை 2டியில் தான் பார்த்திருக்கிறேன். இன்று தான் இங்கு டிரெய்லர் 3 டியில் பார்த்தேன். இந்தளவு நேர்த்தியாக ஒரு திரைப்படம் இந்திய சினிமாவில் வந்ததில்லை. டெக்னீசியன்ஸ் எல்லோருமே மிகப்பெரிய உழைப்பைத் தந்துள்ளனர்.…
Read Moreஅமெரிக்கா டல்லாஸில் நடைபெற்ற “கேம் சேஞ்சர்” முன் வெளியீட்டு நிகழ்வு !!
குளோபல் ஸ்டார் ராம் சரணின் கேம் சேஞ்சர் படத்தின் பிரமாண்டமான முன் வெளியீட்டு நிகழ்வு சனிக்கிழமை அமெரிக்காவின் டல்லாஸ் நகரின் கர்டிஸ் கல்வெல் மையத்தில் நடைபெற்றது. இந்திய திரை வரலாற்றில் அமெரிக்காவில் நடத்தப்பட்ட இந்தியத் திரைப்படத்தின் முதல் முன் வெளியீட்டு நிகழ்வு இதுவாகும். பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொள்ள, மாபெரும் கொண்டாட்டமாக இந்நிகழ்வு நிகழ்ந்தேறியது. குளோபல் ஸ்டார் ராம் சரண், இயக்குநர் ஷங்கர், தயாரிப்பாளர்கள் தில் ராஜு, சிரிஷ், இசையமைப்பாளர் தமன், நடிகை அஞ்சலி உள்ளிட்ட படத்தின் முக்கிய குழுவினர் இவ்விழாவில் கலந்து கொண்டனர். குளோபல் ஸ்டார் ராம் சரணுடன் அடுத்த திரைப்படத்தில் இணைந்து பணியாற்றவுள்ள இயக்குநர் சுகுமார் மற்றும் புச்சி பாபு சானா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக இவ்விழாவில் கலந்து கொண்டனர். இந்த அற்புதமான நிகழ்வை ராஜேஷ் கல்லேபள்ளி ஏற்பாடு செய்திருந்தார். டல்லாஸ்…
Read Moreதி ஓல்ட் மிர்ச்சி பிரியாணி கடையின் 6 வது கிளையை திறந்து வைத்த நடிகர் ஆர்யா
சென்னையின் பாரம்பரியமிக்க பிரியாணி கடையான தி ஓல்ட் மிர்ச்சி பிரியாணி கடையின் 6 வது கிளை, சென்னை அண்ணாநகரில், கோலாகலமாக துவக்கப்பட்டது. பிரபல நடிகர் ஆர்யா இக்கடையை துவக்கி வைத்து வாழ்த்துத் தெரிவித்தார். 2009 ல் ராம்குமார், சுந்தர், காந்தினி ஆகியோரால் ஆரம்பிக்கப்பட்ட சென்னை துரைப்பாக்கத்தில், துவங்கப்பட்ட தி ஓல்ட் மிர்ச்சி பிரியாணி கடை, காரம் தூக்கலாக வித்தியாசமான சுவையில், தனித்துவமான பிரியாணியை வழங்கி, மக்களின் மனதில் இடம்பிடித்தது. இந்த 15 வருடங்களில் இக்கடை, துரைப்பாக்கம், தரமணி, ஆழ்வார்பேட்டை , வேளச்சேரி மற்றும் காட்டுப்பாக்கம் என 6 இடங்களில் கடை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இக்கடையின் 6 வது கிளை அண்ணாநகரில் நடிகர் ஆர்யா துவக்கி வைத்தார். நடிகர் ஆர்யா தெரிவித்ததாவது… எனக்கு தி ஓல்ட் பிரியாணி ரொம்ப பிடிக்கும். அண்ணாநகர் பிரியாணிக்கு பெயர் பெற்ற இடம்,…
Read More“இரட்டை இயக்குனர்கள் இந்த படத்தை வித்தியாசமாக எடுத்துள்ளனர்” — ‘தி ஸ்மைல் மேன்’ பட விழாவில் நடிகர் சரத்குமார் புகழாரம்
மேக்னம் மூவிஸ் சார்பில் தயாரிப்பாளர் சலீல் தாஸ் தயாரிப்பில், இயக்குநர்கள் ஷ்யாம் – பிரவீன் இயக்கத்தில், சரத்குமார் நடிப்பில் 150 வது சிறப்பு திரைப்படமாக உருவாகியுள்ளது “தி ஸ்மைல் மேன்” (The Smile Man). இப்படம் டிசம்பர் 27 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ள நிலையில், படக்குழுவினர் செய்தியாளர்களை சந்தித்தனர். இந்த நிகழ்வில் தயாரிப்பாளர் சலீல் தாஸ் பேசியதாவது…. இது தயாரிப்பில் என் முதல் தமிழ்ப்படம், முழுமையான ஒத்துழைப்பு தந்த என் குழுவினருக்கு நன்றி. கண்டிப்பாக உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் ஆதரவு தாருங்கள் நன்றி. திரைக்கதை எழுத்தாளர் கமலா ஆல்கெமிஸ் பேசியதாவது… எங்க செட்லயே உற்சாகமான நபர் சரத்குமார் சார் தான். பவுண்ட் ஸ்க்ரிப்ட் வாங்கி வைத்துக்கொண்டு, எல்லாவற்றையும் குறித்து வைத்துக்கொண்டு, எப்பொழுதும் தயாராக இருப்பார். அவரின் 150 பட திரை அனுபவம், அறிவு எங்களை திகைக்க…
Read More‘மெண்டல் மனதில்’ படத்தின் படக்குழுவினர் அதிகாரபூர்வ அறிவிப்பு!
தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக சதம் அடித்த ‘இசை அசுரன் ‘ ஜீ.வி. பிரகாஷ் குமார் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடிக்கும் ‘மெண்டல் மனதில் ‘எனும் திரைப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் சென்னையில் தொடங்கியது. காதல் படைப்புகளை உருவாக்குவதில் தனித்துவமான முத்திரை பதித்த படைப்பாளியான செல்வராகவன் இயக்கத்தில் உருவாகும்’ மெண்டல் மனதில் ‘எனும் திரைப்படத்தில் ஜீ. வி. பிரகாஷ் குமார், மாதுரி ஜெயின் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். அருண் ராதாகிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்து வரும் இந்த திரைப்படத்திற்கு ஜீ. வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். கலை இயக்கத்தை ஆர். கே. விஜய் முருகன் கவனிக்க, பட தொகுப்பு பணிகளை பாலாஜி மேற்கொள்கிறார். தினேஷ் குணா எக்ஸிக்யூட்டிவ் புரொடியூசராக பொறுப்பேற்றிருக்கும் இந்த திரைப்படத்தை பேரலல் யுனிவர்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜீ. வி. பிரகாஷ் குமார் தயாரிக்கிறார். …
Read Moreபாலா-25 & வணங்கான் இசை வெளியீடு ; கோலாகலமாக நடந்த இருபெரும் விழா
1999ல் வெளியான ‘சேது’ படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அடியெடுத்து வைத்து இந்த 25 வருடங்களில் தமிழ் சினிமாவின் அடையாளமாகவே மாறிப்போனவர் இயக்குநர் பாலா. தற்போது அவர் இயக்கி அருண் விஜய் கதாநாயகனாக நடித்துள்ள வணங்கான் இசை வெளியீடும், சினிமாவில் பாலாவின் 25 ஆண்டுகளைக் கொண்டாடும் விழாவும் சென்னை வர்த்தக மையத்தில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் முன்னிலையில் மிகப் பிரம்மாண்டமாக நடைபெற்றது. விழாவில் இயக்குநர்கள் சீமான், மிஷ்கின், சமுத்திரக்கனி, ஏ.எல். விஜய், லிங்குசாமி, ராம், மணிரத்னம், கே. பாக்கியராஜ், மாரி செல்வராஜ், விக்ரமன், ஆர். வி. உதயகுமார், கே. எஸ். அதியமான், வினோத் (கொட்டுக்காளி), பிருந்தா சாரதி, வசந்த பாலன், சீனுராமசாமி, கஸ்தூரி ராஜா, பேரரசு, பொன்ராம், V.Z. துரை, சிங்கம் புலி, சரண், அரவிந்த் ராஜ், எழில், கோபிநாத் (ஜீவி),…
Read Moreமனிதர்களை விலங்குகள் அறியும்;விலங்குகளை மனிதர்கள் அறிய மாட்டார்கள்: ‘கூரன் ‘திரைப்பட விழாவில் மேனகா காந்தி பேச்சு!
ஒரு நாயை மையமாக வைத்து உருவாகி இருக்கும் திரைப்படம் ‘கூரன்’. இத்திரைப்படத்தில் எஸ்.ஏ. சந்திரசேகரன் ஒய். ஜி. மகேந்திரன்,சத்யன் ,பாலாஜி சக்திவேல், ஜார்ஜ் மரியான், இந்திரஜா ரோபோ சங்கர் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தை அறிமுக இயக்குநர் நிதின் வேமுபதி இயக்கியுள்ளார்.மார்டின் தன்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். சித்தார்த் விபின் இசை அமைத்துள்ளார். பீ. லெனின் மேற்பார்வையில் மாருதி எடிட்டிங் செய்துள்ளார். கனா புரொடக்சன்ஸ் சார்பில் விபி கம்பைன்ஸ் உடன் இணைந்து இயக்குநர் விக்கி தயாரித்துள்ளார். டிசம்பர் 27ஆம் தேதி வெளியாகிற இப்படத்தை ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம் வெளியிடுகிறது. ‘கூரன்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் ஒரு நட்சத்திர ஓட்டலில் நடந்தது. ஒரு நாய்க்கான சட்ட உரிமைப் போராட்டமே படத்தின் கதை என்பதால் இத்திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில்,சிறப்பு விருந்தினராக முன்னாள் மத்திய அமைச்சரும், விலங்குகள்…
Read Moreநந்தா பெரியசாமி இயக்கத்தில் சமுத்திரக்கனி நடிக்கும் திரு.மாணிக்கம்!
“எளிய மனிதர்களின் வாழ்வே அறம்” என்ற அடிப்படையில் பல திருப்பங்களுடன் பரபரப்பாக உருவாகியுள்ள “திரு.மாணிக்கம்” திரைப்படம் வெள்ளித்திரையில் மிகுந்த எதிர்பார்ப்புடன் வரும் டிசம்பர் 27 அன்று வெளியாகவிருக்கிறது. இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்று வருகிறது. குறிப்பாக “தேவைக்கு கிடைக்காததும்… தேவைக்கு அதிகமாக கிடைக்கிறதும்…எப்பவுமே ஒரு வலிதான்…” என பாரதிராஜா குறிப்பிடும் வசனம் மக்கள் மனதில் தாக்கம் ஏற்படுத்தி வைரலாகி கொண்டு வருகிறது. திரு.மாணிக்கம் படம் மாஸ்டர் பீஸ் நிறுவனம் மூலம் தமிழ், மலையாளம், கன்னடம், மற்றும் இந்தி மொழிகளில் பெருவாரியான திரையரங்குகளில் வெளியிடப்படுகிறது. மேலும் ZEE தொலைக்காட்சி நிறுவனம் திரைக்கு வரும் முன்னரே திரு.மாணிக்கம் திரைப்படத்தை பார்த்து இதயம் கரைந்து இந்தப் படம் எல்லா தரப்பினருக்கும் ஏற்ற படமாகவும் மனதை நெகிழவைக்கும் படமாகவும் இருக்கும் என்பதை உணர்ந்து, திரு.மாணிக்கம் திரைப்படத்தின் OTT…
Read More