மாசாணி பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஆர். ராஜசேகர் தயாரிப்பில், விமல் – நட்டி நட்ராஜ் நடிப்பில் இயக்குநர் கேந்திரன். வி இயக்கத்தில் டி. இமான் இசையில் உருவான ‘வடம்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. மார்ச் மாதம் 6 ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் ‘வடம்’ படத்தில் விமல், நட்டி நட்ராஜ், சனஸ்கா ஸ்ரீ, முனிஸ்காந்த், பால சரவணன், ‘ஆடுகளம்’நரேன், மதுசூதன் ராவ், தீபா, இந்துமதி மணிகண்டன், இயக்குநர், நடிகர்களுமான ஷரவணன் சக்தி, மூர்த்தி, ஜெகன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். பிரசன்னா எஸ் குமார் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்தை ஷபு ஜோசப் படத்தொகுப்பு செய்துள்ளார். வடமஞ்சு விரட்டு எனும் கிராமிய வீர விளையாட்டின் பின்னணியில் பொழுதுபோக்கு அம்சங்களுடன் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் படக்குழுவினர்…
Read MoreCategory: சினி-நிகழ்வுகள்
மகரம் திரைப்பட டீசர் வெளியீட்டு விழா !!
Rocks Nature Entertainment வழங்கும் A. அகஸ்டின் பிரபு இயக்கத்தில், தமிழ் சினிமாவில் புதிய முயற்சியாக மான்ஸ்டர் ஜானரில் ஒரு முழுமையான சயின்ஸ் பிக்சன் படமாக உருவாகியுள்ள படம் மகரம். ஹாலிவுட் படைப்புக்கு இணையாக முழுக்க கடலில் பல காட்சிகள் படமாக்கப்பட்டதுடன் இப்படத்தில் 700 VFX காட்சிகள் இடம்பெற்றுள்ளது. இப்படம் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி, ஆங்கிலம் என ஐந்து மொழிகளில் உலகமெங்கும் வெளியாகவுள்ளது. விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா படக்குழுவினர் கலந்துகொள்ள பத்திரிகை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது. இந்நிகழ்வினில்.., இசையமைப்பாளர் ஆதர்ஷ் சந்திரசேகரன் பேசியதாவது.., இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இதே ஆடிடோரியத்தில் சதூர் படத்துக்காக நடந்த நிகழ்ச்சியில் நாமெல்லாம் சந்தித்தோம். இன்று மீண்டும் இங்கே நிற்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. இந்த அணியுடன் வேலை செய்தது எனக்கு…
Read Moreசுவாமி ஐயப்பனின் மகிமை சொல்லும் இரண்டு பிரம்மாண்ட திரைப்படங்கள் – தலைப்புகளை இயக்குநர் வெங்கட் பிரபு வெளியிட்டார்!!
ஒரு திரைபடம், ஆன்மீகமும் வரலாறும் சங்கமிக்கும் பிரம்மாண்ட பயணம், மற்றொன்று ஒரு ஐயப்ப பக்தரின் வாழ்க்கைப் பயணம் – தந்த்ரா பிலிம்ஸ் அறிவித்த இரண்டு ஐயப்ப சுவாமியின் திரைப்படங்கள்!! தமிழ் திரைப்பட உலகில் ஆன்மீக உணர்வும் வரலாற்றுப் பெருமையும் ஒன்றிணையும் புதிய முயற்சியாக, தயாரிப்பாளர் JK சரவணா அவர்களின் தந்த்ரா பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனம் ஒரே நேரத்தில் இரண்டு முக்கிய திரைப்படங்களை அதிகாரப்பூர்வமாக அறிவித்து, திரையுலகில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. முன்னதாக சென்னை 600028, சென்னை 600028-2 படங்களை இணைத் தயாரிப்பு செய்த தயாரிப்பாளர் JK சரவணா முழுமையாக தமிழ் திரைப்பட தயாரிப்பில் கால்பதித்துள்ளார். சுவாமி ஐயப்பனை மையமாகக் கொண்டு உருவாகும் இந்த இரண்டு படங்களின் தலைப்புகளை, பிரபல இயக்குநர் வெங்கட் பிரபு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார். “தத் த்வம் அஸி” தந்த்ரா பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகும் முதல்…
Read Moreசமத்துவ இப்தார் விருந்து நிகழ்ச்சியில் இந்த ஆண்டிற்கான ரெயின்ட்ராப்ஸ் ‘சாதனைப் பெண்கள்’ விருதுகள் அறிமுகம்
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரெஹானா, தொழிலதிபர் வி.ஜி.சந்தோஷம், தூய்மைப் பணியாளர் பத்மா வெளியிட்டனர். ரெயின்ட்ராப்ஸ் சமூக அமைப்பு நடத்திய சமத்துவ இப்தார் நிகழ்ச்சியில் 13-ஆம் ஆண்டு சாதனைப் பெண்கள் விருது வழங்கும் நிகழ்ச்சிக்கான முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டது. இசையமைப்பாளரும் ரெயின்ட்ராப்ஸ் சமூக அமைப்பின் தூதருமான ஏ.ஆர்.ரெஹானா, பிரபல தூய்மைப் பணியாளர் பத்மா மற்றும் சிறப்பு விருந்தினர்கள் இணைந்து இந்த ஆண்டிற்கான சாதனைப் பெண்கள் விருதினை அறிமுகம் செய்தனர். ரெயின்ட்ராப்ஸ் நிறுவனர் அரவிந்த் ஜெயபால் விருதுகளைப் பெறும் சாதனைப் பெண்களின் பெயர் பட்டியலை வெளியிட்டார். ரெயின்ட்ராப்ஸ் சமூக அமைப்பு மத நல்லிணக்கத்தைப் போற்றும் வகையில் ஆண்டுதோறும் சமத்துவ இப்தார் விருந்து நிகழ்வை நடத்தி வருகிறது. இந்த ஆண்டு இப்தார் விருந்து நிகழ்வு தி.நகரில் உள்ள கன்வென்ஷன் சென்டரில் நடைபெற்றது. இதில் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் சகோதரி இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரெஹானா, வி.ஜி.பி. குழுமத் தலைவர் வி.ஜி.சந்தோஷம், மாநில திட்டக்குழு உறுப்பினர் சுல்தான் அஹ்மத் இஸ்மாயில், ரெயின்ட்ராப்ஸ் நிறுவன…
Read Moreஇசைஞானி இளையராஜா ஆசீர்வதித்துள்ள படம் ‘அந்தோனி’ : இயக்குநர் சீனு ராமசாமி பேச்சு!
இலங்கையின் வாழ்வியல் பின்னணியில் உருவாகி இருக்கும் இப்படத்தில் கயல் வின்சென்ட், டிஜே பானு, நிழல்கள் ரவி, அருள்தாஸ், சுதர்சன், ஷாமி நடித்துள்ளனர்.சுகிர்தன் கிறிஸ்துராஜா மற்றும் ஜெனோசன் ராஜேஷ்வர் இயக்கி உள்ளனர்.ஒளிப்பதிவு ரிஷி செல்வம்,எடிட்டிங் சுரேஷ் ஏ பிரசாத் , கலை இயக்கம் கலா மோகன். தயாரிப்பு : கலைவளரி சகா. ரமணதாஸ், சுகந்தினி. இணைத் தயாரிப்பாளர்கள் : விஜய் பாலசிங்கம், ஸ்ரீஸ்கந்தராஜா, விக்கி. மார்ச் மாதம் வெளியாக இருக்கும் இத்திரைப்படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா இன்று பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது. விழாவில் திருமதி அகிலா பாலுமகேந்திரா, இயக்குநர் சீனுராமசாமி, லெனின் பாரதி, ‘உலக சினிமா’ பாஸ்கரன் ஆகியோர் கலந்து கொண்டனர். விழாவில் இணைத்தயாரிப்பாளர் விக்கி பேசும்போது, ” இந்திய -இலங்கை கூட்டுத் தயாரிப்பில்1980 வரை பல படங்கள் வந்துள்ளன. போர் தொடங்குவதற்கு முன்பு கூட…
Read More“4த் ஃப்ளோர்” திரைப்பட இசை வெளியீட்டு விழா !!
MANO CREATION சார்பில் தயாரிப்பாளர் A.ராஜா தயாரிப்பில், இயக்குநர் L R சுந்தரபாண்டி இயக்கத்தில், நடிகர் ஆரி அர்ஜுனன் கதாநாயகனாக நடிக்க, வித்தியாசமான களத்தில் மர்மங்கள் நிறைந்த பரபரப்பான திரில்லராக உருவாகியுள்ள திரைப்படம் “4த் ஃப்ளோர்”. இப்படம் வரும் பிப்ரவரி மாதம் 27 ஆம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா படக்குழுவினருடன், திரை பிரபலங்கள் கலந்துகொள்ள பத்திரிக்கை, ஊடக, நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது. இந்நிகழ்வினில்.., தயாரிப்பாளர் A ராஜா பேசியதாவது.., எல்லாருக்கும் வணக்கம். எங்களின் 4த் ஃப்ளோர் படம் நல்லபடியாக வந்துள்ளது. நிறைய பேர் கஷ்டப்பட்டடு இப்படத்தை முடித்துள்ளோம். இப்போதைய சினிமாவில் பணம் போடுவது பெரிய பிரச்சனை இல்லை. ஆனால் இந்த காலத்தில் ஒரு சரியான படத்தை கொண்டு வருதான் ரொம்ப பெரிய விஷயம். அந்த விஷயத்தில் இந்த படம்…
Read Moreதிரைத்துறை பிரபலங்கள் சரத்குமார், சீமான், ராதிகா சரத்குமார், நாசர் உள்ளிட்ட பலர் கொண்ட ‘நம்பிக்கை குளாபல் லான்ச்’ நிகழ்வு!
மலேசியாவில் கடந்த 27 ஆண்டுகளாகத் தனி முத்திரை பதித்து வரும் ‘நம்பிக்கை’ ஊடகம், இந்தியாவில் தனது புதிய கிளையைச் சென்னையில் கோலாகலமாகத் தொடங்கியது. இதன் தொடக்க விழாவில், அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்கள், திரைத்துறை பிரபலங்கள், ஊடகப் பிரதிநிதிகள் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். நிகழ்வில் கலந்து கொண்ட நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதாவது, “கட்சி சார்புடைய அல்லது தலைவர்கள் கையில் இருக்கும் இன்றைய ஊடகங்களுக்கு மத்தியில் பெரும் நம்பிக்கையாக என் போன்றவர்கள் இந்த ‘நம்பிக்கை’யை தான் பார்க்கிறோம். நம்பிக்கை என்பது வெறும் வார்த்தை மட்டுமல்ல! சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளில் ’நம்பிக்கை’ கிளை பரப்புகிறது என்றார்கள். அது ஆழமான வேர் பரப்ப வேண்டும் என்பதுதான் என் விருப்பம். தேர்தல் வருகிற காலக்கட்டத்தில் நேர்மையும் உண்மையுமாக செய்திகளை ‘நம்பிக்கை’…
Read Moreநடிகர்கள் கார்த்தி, ஆர்யா மற்றும் இயக்குநர் வெங்கட் பிரபு ஆகியோர் முன்னிலையில் படப்பிடிப்பு துவக்கம்!
கடந்த 2017ஆம் ஆண்டு வெளியாகி அதன் நகைச்சுவை கலந்த கதைக்களத்திற்காக பெரும் வெற்றி பெற்ற ‘மரகத நாணயம்’ திரைப்படத்தின் தொடர்ச்சியாக உருவாகும் ‘மரகத நாணயம்2’ திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது. சிவராத்திரியை முன்னிட்டு நேற்று (பிப்ரவரி 16, 2026) சென்னையில் பிரம்மாண்ட பூஜையுடன் படப்பிடிப்பு தொடங்கியது. நடிகர் கார்த்தி கிளாப்போர்டை அடித்து துவக்கி வைத்தார். நடிகர் ஆர்யா கேமராவை ஆன் செய்தார். இயக்குநர் வெங்கட்பிரபு ‘கேரமா ரோலிங், ஆக்ஷன்’ என சொல்லி படப்பிடிப்பை துவக்கி வைத்தார். ஆக்சஸ் ஃபிலிம் ஃபேக்டரியுடன் நட்பில் உள்ள பல முக்கிய திரைபிரபலங்களும் இந்த பூஜையில் கலந்து கொண்டு தங்கள் வாழ்த்துகளை தெரிவித்தனர். பேஷன் ஸ்டுடியோஸ், தங்கல் டிவி, ஆர்டிசி மீடியா, ஆக்சஸ் ஃபிலிம் ஃபேக்டரி மற்றும் குட் ஷோ ஆகிய பேனர்களின் கீழ் சுதன் சுந்தரம், மணீஷ் சிங்கால், துர்காராம்…
Read More‘கிகி & கொகொ’ படத்தயாரிப்பாளர்களின் ‘கலர் பென்சில்’ ஸ்டோரை நடிகை வாணி போஜன் மற்றும் மைக்செட் ஸ்ரீராம் சென்னையில் திறந்து வைத்தனர்!
குழந்தைகளின் கற்றலுக்கான இந்தியாவின் முதல் ஸ்டோர் ‘கலர் பென்சில்’. குழந்தைகளின் கற்றலை மகிழ்ச்சியாகவும் எளிமையாகவும் மாற்றும் முயற்சியாக இந்தியாவில் முதன் முறையாக ’கலர் பென்சில்’- கிட்ஸ் எக்ஸ்பிரிமெண்டல் லேர்னிங் ஸ்டோர் சென்னை, கிளாம்பாக்கத்தில் தொடங்கப்பட்டது. கலர் பென்சில் நிறுவனர், நாராயணன் இந்த நிகழ்வில் பேசியதாவது, ”குழந்தைகளுக்கு கல்வி கற்றுக்கொடுப்பது ஒரு கலை. ஆனால், இந்த காலத்தில் அதை திணித்து வருகிறார்கள். இப்போதெல்லாம், குழந்தைகள் ‘ஏன்?’ என்று கேள்வி கேட்பதே பலருக்கும் பிடிக்காத விஷயமாக இருக்கிறது. அதை மாற்றும் விதமாகதான் ‘Joy of Y’ என்பதை கலர் பென்சிலில் உருவாக்கியுள்ளோம். இதனால், குழந்தைகளின் அடிப்படை அறிவு வலுவாக இருக்கும். அதைத்தான் நாங்கள் உத்திரவாதம் தருகிறோமே தவிர இங்கு படிப்பதால் குழந்தைகள் ஐஐடி போய்விடுவார்கள், நூற்றுக்கு நூறு எடுப்பார்கள் என்பது கிடையாது” என்றார். கலர் பென்சில் தலைமை செயல் அதிகாரி,…
Read Moreசிறப்பாக நடைபெற்ற தலை நிமிர் திரை விருதுகள் 2026!!
தமிழ் திரைப்படத் துறையின் சிறப்பையும், புதிய தலைமுறை திறமைகளையும் பாராட்டும் வகையில் தலை நிமிர் திரை விருதுகள் 2026 விழா, சென்னை பிரசாத் லேப் அரங்கில் சிறப்பாக நடைபெற்றது. திரையுலகின் பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களும், எதிர்கால நம்பிக்கையான இளம் கலைஞர்களும் இந்த விழாவில் கௌரவிக்கப்பட்டனர். இந்த விழாவில், பிரபல திரைப்பட இயக்குநர் பேரரசு அவர்கள், நடிகர் கதிரவன், நடிகை ஸ்ருதி நாராயணன், நடிகை தியா, நடிகர் காதல் சுகுமார் உள்ளிட்ட பல நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு விருதுகளை வழங்கி கௌரவித்தார். பல்வேறு திரைப்படப் பிரிவுகளைச் சேர்ந்த கலைஞர்கள் இவ்விழாவில் விருது பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த விருது விழா சிவானி ஸ்டூடியோ சார்பில், செந்தில் மற்றும் டைகர் சக்கரவர்த்தி,டைகர் முத்து ஆகியோரின் ஏற்பாட்டில் வெற்றிகரமாக நடத்தப்பட்டது. மேலும், இவ்விழாவில் முதன்மை விருந்தினர்களாக மூத்த இந்திய…
Read More
