உலகங்கெங்கும் சினிமா ரசிகர்களாலும் அனைத்து வயதினராலும் கொண்டாடப்படுபவரும்; நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர், பாடலாசிரியர் என பன்முகத் திறமையாளரான தனுஷ் அவர்கள் எழுத்து மற்றும் இயக்கத்தில் மூன்றாவது திரைப்படமாக வெளியீட்டுக்கு தயாராகியுள்ளது ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’. இத்திரைப்படத்தில் பவிஷ், அனிகா சுரேந்திரன், பிரியா பிரகாஷ் வாரியர், மேத்யூ தாமஸ், வெங்கடேஷ் மேனன், ராபியா கதூன், ரம்யா ரங்கநாதன், சித்தார்த் ஷங்கர்,R சரத்குமார், சரண்யாபொன்வண்ணன், ‘ஆடுகளம்’ நரேன், உதய் மகேஷ், ஶ்ரீதேவி உள்ளிட்ட மாபெரும் நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளது. தனுஷின் ஆஸ்தான தொழில்நுட்ப குழுவான G V பிரகாஷ் இசையமைக்க, லியான் பிரிட்டோ ஒளிப்பதிவில், பிரசன்னா G K படத்தொகுப்பில், ஜாக்கி கலை இயக்கத்தில், ‘பாபா’ பாஸ்கர் நடன இயக்கத்தில் பிப்ரவரி-21 அன்று வெளியாக உள்ளது. இந்நிலையில் படக்குழு படத்தை விளம்பரபடுத்தும் நோக்கில் சமீபத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்தது. படத்தின்…
Read MoreCategory: சினி-நிகழ்வுகள்
காதல் என்பது பொதுவுடமை படத்தின் இசைவெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
காதல் என்பது பொதுவுடமை படத்தின் இசைவெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. வினீத் , ரோகிணி , லிஜாமோல் ஜோஸ், கலெஸ், அனுஷா,, பாடலாசிரியர் உமாதேவி, ஒளிப்பதிவாளர் சரவணன், எடிட்டர் டேனி, இசையமைப்பாளர் கண்ணன் நாராயணன், இந்த படத்தை வெளியிடும் தயாரிப்பாளர் தானஞ்செயன் மற்றும் சிறப்பு விருந்தினர்களாக நடிகர் மணிகண்டன், இயக்குநர் சசி, இயக்குநர் பாலாஜி தரணிதரன், நெல்சன் வெங்கடேசன் ஆகியோர்கள் கலந்து கொண்டனர். நடிகை லிஜோமோல் ஜோஸ் பேசுகையில், “ஜெய் பீம் படத்திற்கு விகடன் அவார்ட் கிடைச்சது. சசி சார் அந்த நிகழ்வில் இருந்தார். நான் மேடையில் ஏறும்போது, சசி சாரைப் பத்திப் பேசணும்னு நினைச்சேன். அங்க போனதும் நான் டோட்டலா பிளாங்க் ஆயிட்டேன். என்னால் ஒரு வார்த்தை கூடப் பேச முடில. அன்னிக்கு நான் ரொம்ப வருத்தப்பட்டேன். ஏன்னா, என் ஃபர்ஸ்ட் தமிழ்ப்படத்தைப் பத்திப் பேசாம…
Read More“கண்ட கனவு பலித்தது” – ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ படத்தின் அறிமுக நாயகன் பரவசம்
நடிகர் தனுஷ் தயாரித்து இயக்கும் ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ படம் பிப்ரவரி 21 அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதையொட்டி ஊடகம் மற்றும் அச்சு செய்தியாளர் சந்திப்பில் படக் குழுவினர் தங்கள் அனுபவங்களை பகிர்ந்து உள்ளனர். வுண்டர்பார் ஃபிலிம்ஸ் என்ற தனது தயாரிப்பு நிறுவனம் சார்பில் தனுஷ் தயாரித்து இயக்கியுள்ள இந்தப் படத்தின் மூலம் பவிஷ் நாராயண் கதாநாயகனாக அறிமுகமாகிறார்.நாயகியாக அனிகா சுரேந்திரன் நடிக்கிறார். ரம்யா ரங்கநாதன், ராபியா கதூன், வெங்கடேஷ் மேனன், இவர்களுடன் பிரபலமான மேத்யூ தாமஸ், பிரியா பிரகாஷ் வாரியர், சித்தார்த்தா ஆகியோரும் இருக்கிறார்கள். அதோடு மூத்த நடிகர்களான ஆர். சரத்குமார், சரண்யா பொன்வண்ணன், ‘ஆடுகளம்’ நரேன், உதய் மகேஷ், ஸ்ரீதேவி ஆகியோரும் நடிக்கிறார்கள். படத்திற்கு ஜி. வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார், பிரியங்கா மோகன் ‘கோல்டன் ஸ்பாரோ’ என்ற பாடலில் சிறப்பு…
Read Moreசெவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ எஸ்.எஸ்.லலித் குமார் வழங்கும் விக்ரம் பிரபு, எல்.கே. அக்ஷய் குமார் நடிக்கும் புதிய படம்!
நடிகர் விஜய்யின் ‘மாஸ்டர்’, ‘லியோ’, விக்ரமின் ’மகான்’, விஜய் சேதுபதி-நயன்தாரா-சமந்தா நடித்த ’காத்துவாக்குல ரெண்டு காதல்’ போன்ற வணிக ரீதியாக வெற்றி பெற்ற படங்களைத் தயாரித்தார் செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ எஸ்.எஸ்.லலித் குமார். இவரது தயாரிப்பில், இந்த வருடம் நடிகர் பிரதீப் ரங்கநாதனின் ’லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ உட்பட சில படங்களும் இந்த ஆண்டு வெளியாக இருக்கிறது. தற்போது, அறிமுக இயக்குநர் சுரேஷ் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடிக்கும் புதிய படத்தை அறிவிப்பதில் தயாரிப்பாளர் எஸ்.எஸ்.லலித் குமார் மகிழ்ச்சியடைகிறார். இந்தப் படத்தில் எஸ்.எஸ்.லலித் குமாரின் மகன் எல்.கே. அக்ஷய் குமாரும் அறிமுகமாகிறார். திறமை மற்றும் கடின உழைப்பு இருப்பவர்களை நிச்சயம் கோலிவுட் சிவப்பு கம்பளம் இட்டு வரவேற்கும். அதன்படி எல்.கே. அக்ஷய்குமாரின் இந்த அர்ப்பணிப்பு இயக்குநர் சுரேஷைக் கவர்ந்தது. இயக்குநர் வெற்றிமாறனின் இணை இயக்குநரான சுரேஷ் இந்த…
Read Moreதிரைத்துறையில் பணிபுரியும் மகளிருக்கு பி.டி.ஜி அறக்கட்டளையினால் ரெயின்கோட் வழங்கும் விழா!
பிரபல திரைப்பட தயாரிப்பு நிறுவனமான பி.டி.ஜி யூனிவர்சல் ‘டிமாண்டி காலனி 2’, ‘சென்னை சிட்டி கேங்கஸ்டர்ஸ்’, ‘ரெட்ட தல’ ஆகிய திரைப்படங்களை தயாரித்துள்ளது. பி.டி.ஜி யூனிவர்சலின் நிறுவனத் தலைவராக திரு. பாபி பாலசந்திரன் மற்றும் டாக்டர். மனோஜ் பெனோ இந்நிறுவனத்தின் ஹெட் ஆஃப் ஸ்ட்ரடஜியாகவும் பொறுப்பு வகிக்கிறார்கள். திரு. பாபி அவர்கள் படம் தயாரிப்பது மட்டுமல்லாமல், கோவையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் பி.டி.ஜி அறக்கட்டளை என்ற தொண்டு நிறுவனத்தை கடந்த 8 ஆண்டுகளாக திறன்பட நடத்தி வருகிறார். இந்நிறுவனம் பெண்கள் முன்னேற்றம், கல்வி மற்றும் கிராமப்புற வளர்ச்சியைக் குறிக்கோளாக கொண்டு கடந்த 8 வருடங்களாக செயல்பட்டு வருகிறது. தற்போது இதன் மூலம் திரைத்துறையில் பணிபுரியும் விளிம்புநிலை ஊழியர்களுக்கு பி.டி.ஜி அறக்கட்டளை மூலம் மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் இன்று 09.02.2025 பி.டி.ஜி அறக்கட்டளை…
Read Moreஹாப்பி ஹை பிக்சர்ஸின் ( Happy High Pictures) இரண்டாவது படமான ‘#AS23’ – பூஜையுடன் தொடக்கம்
தமிழ் திரையுலகின் முன்னணி இளம் நட்சத்திர நடிகரான அஷோக் செல்வன் நடிப்பில் தயாராகும் ‘#AS23 ‘ எனும் புதிய திரைப்படத்தின் தொடக்க விழா பூஜையுடன் சிறப்பாக நடைபெற்றது. அறிமுக இயக்குநர் கார்த்திகேயன் ராமகிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகும் பெயரிடப்படாத திரைப்படத்தில் அஷோக் செல்வன் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை ப்ரீத்தி முகுந்தன் நடிக்கிறார். இந்த திரைப்படத்தின் கதையை ‘போர் தொழில்’ எனும் வணிக ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பிரம்மாண்ட வெற்றியை பெற்ற திரைப்படத்தின் இயக்குநரான விக்னேஷ் ராஜா எழுதியிருக்கிறார். இந்த படத்தில் பணியாற்றும் ஏனைய நடிகர்கள், நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. முழு நீள பொழுதுபோக்கு சித்திரமாக உருவாகும் இந்த திரைப்படத்தை ஹாப்பி ஹை பிக்சர்ஸ் ( Happy High Pictures) சார்பில் தயாரிப்பாளர்கள் அஷோக்…
Read Moreபாலகிருஷ்ணாவுக்கு வில்லனாக நடிகர் ஆதி ஒப்பந்தம்!
மாஸ் கடவுளாக கொண்டாடப்படும் நந்தமுரி பாலகிருஷ்ணா, பிளாக்பஸ்டர் இயக்குநர் போயபதி ஸ்ரீனுவுடன் நான்காவது முறையாக இணைந்துள்ளார், இவர்கள் கூட்டணியில் அகாண்டா 2: தாண்டவம் பிரம்மாண்டமாக உருவாகிறது. பிளாக்பஸ்டர் ஹிட் படமான அகண்டாவின் தொடர்ச்சியாக உருவாகும் இப்படம், ஆக்ஷன் அதிரடியில் முதல் பாகத்தைக் காட்டிலும் இன்னும் தீவிரமாக, ஆன்மீகமும் கலந்த பிரம்மாண்டமாக திரைப்படமாக உருவாகிறது. முன்னணி தயாரிப்பு நிறுவனமான 14 ரீல்ஸ் பிளஸ் பேனரின் சார்பில், ராம் அச்சந்தா மற்றும் கோபிசந்த் அச்சந்தா ஆகியோர் தயாரித்துள்ள இப்படத்தை, எம் தேஜஸ்வினி நந்தமுரி வழங்குகிறார். திறமைமிகு முன்னணி இளம் நடிகரான ஆதி பினிசெட்டி இப்படத்தில் ஒரு சக்திவாய்ந்த மற்றும் அழுத்தமான கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார், இது அவரது திரை வாழ்க்கையில் ஒரு அற்புதமான அத்தியாயமாக இருக்கும். இதற்கு முன் சர்ரைனோடு படத்தில் ஆதியை ஒரு அழுத்தமான வேடத்தில் காட்டிய இயக்குநர்…
Read Moreரோட்டர்டாம் பட விழாவில் ‘பறந்து போ’ திரையீடு!
டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தயாரிப்பில் இயக்குநர் ராமின் அடுத்த படைப்பான ‘பறந்து போ’ திரைப்படத்தின் முதல் உலக ப்ரத்யேக காட்சி 54-வது ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் நேற்று திரையிடப்பட்டது. ‘பறந்து போ’ திரைப்படத்திற்கு இருக்கும் எதிர்ப்பார்ப்பை உறுதிப்படுத்தும் விதமாய் முதல் காட்சி இருந்தது. ரோட்டர்டாமின் உறையும் குளிரிலும் அரங்கம் நிரம்பியது, மேலும் திரைப்படத்தின் இறுதியில் எழுந்த அரங்கம் அதிர்ந்த கைதட்டல்கள் பார்வையாளர்களின் எதிர்ப்பார்ப்பை இப்படம் பூர்த்தி செய்ததை உறுதிபடுத்தியது. இத்திரையிடலை இயக்குநர் ராமுடன், நடிகர் சிவா, டிஸ்னி+ ஹாட்ஸ்டாரின் தமிழ் தலைமை பொறுப்பாளர் ப்ரதீப் மில்ராய், குழந்தை நட்சத்திரம் மிதுல் ரியான் மற்றும் இசையமைப்பாளர் சந்தோஷ் தயாநிதி ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர். நகைச்சுவையை மையமாக கொண்ட எளிமையான கதையமைப்புடன் உருவாகி இருக்கும் ‘பறந்து போ’ திரைப்படம், சர்வதேசப் பார்வையாளர்களால் பெரிதும் கொண்டாடப்பட்டது. படம் நெடுக கைதட்டியும்…
Read More“ஒத்த ஓட்டு முத்தையாவை வெற்றி ஓட்டு முத்தையாவாக மாற்றுங்கள்” -படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் கவுண்டமணி வேண்டுகோள்
தமிழ் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நட்சத்திர நடிகரான ‘காமெடி கிங்’ கவுண்டமணி கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘ஒத்த ஓட்டு முத்தையா’ படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியிடப்பட்டது. இதற்காக சென்னை கமலா திரையரங்க வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வில் படத்தின் இசை மற்றும் முன்னோட்டத்தை தமிழ்த் திரையுலகின் முன்னணி பிரபலங்களான இயக்குநர் கே. பாக்யராஜ், இயக்குநர் பி. வாசு, தயாரிப்பாளர் கே. ராஜன், ஆகியோர் இணைந்து வெளியிட, படக்குழுவினர் பெற்றுக் கொண்டனர். இயக்குநர் சாய் ராஜகோபால் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘ஒத்த ஓட்டு முத்தையா’ திரைப்படத்தில் ‘காமெடி கிங்’ கவுண்டமணி, யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன், சிங்கமுத்து, சித்ரா லட்சுமணன், ரவி மரியா, வையாபுரி, ஓ ஏ கே சுந்தர், கூல் சுரேஷ், டாக்டர் காயத்ரி, அனுமோகன், சிசர் மனோகர், முத்துக்காளை, வாசன் கார்த்திக், அன்பு…
Read More2025ஆம் ஆண்டு பொங்கல் திருவிழா திருநாளில் “மதகஜராஜா” திரைப்படம் வெளிவந்து வெற்றிகரமாக இன்று 25வது நாள் மக்களால் கொண்டாடப்பட்டு மாபெரும் வெற்றி பெற்ற இந்த படத்திற்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் நன்றி கூறும் நேரம் இது.
“மதகஜராஜா” திரைப்படம் பெரும் உழைப்பாலும் சிறப்பான முறையில் தயாரிக்கப்பட்டு கடந்த 2013ஆம் ஆண்டு இதே பொங்கல் திருநாளில் வெளிவர தயாராக இருந்த சூழ்நிலையில் தவிர்க்கமுடியாத சில காரணங்களாலும் பட நிறுவனத்தின் செயல்பாடுகள் குறித்து பட குழுவினர்களுக்கு உண்மையான காரணங்கள் என்னவென்று தெரியாமலே அன்று படம் வெளிவர முடியாமல் போனது. அதனை தொடந்து நானும், அன்பிற்கினிய சகோதரர் இயக்குநர் திரு.சுந்தர்.C அவர்களும் சோர்வடையாமல் ஒவ்வொரு வருடமும் வெளியிடுவதற்கான முயற்சிகள் எடுத்து வந்தோம். இந்த 2025ஆம் வருடம் “மதகஜராஜா” திரைப்படத்தை வெளியிடுவதற்கான முயற்சியில் எங்களுக்கு வலிமையான முதல் தூணாக இருந்தவர் அன்பிற்கினிய அண்ணன் திருப்பூர் திரு.சுப்பிரமணியம் அவர்கள் இத்திரைப்படத்தை முதலில் அவர் பார்த்த உடன் அதன் மீது உள்ள முழு நம்பிக்கையில் பொங்கல் திருவிழா திருநாளில் வெளியிடுவதற்கு முன்னெடுத்து முழு ஆதரவையும் வழங்கி வழி நடத்தி எங்களுக்கு உறுதுணையாக இருந்தார்.…
Read More