‘மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ்’ (Million Dollar Studios) மற்றும் ‘நியோ கேசில் கிரியேஷன்ஸ்’ (Neo Castle Creations) இணைந்து தயாரித்துள்ள ‘அன்பே டயானா’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் படக்குழுவினர் மற்றும் படத்தில் நடித்த நடிகர்கள் கலந்து கொண்டு, திரைப்படம் குறித்த பல்வேறு சுவாரஸ்யமான தகவல்களை பத்திரிகையாளர்களுடன் பகிர்ந்து கொண்டனர். பரிதாபங்கள் கோபி பேசியதாவது.., “இந்தப் படத்தில் பணியாற்ற வாய்ப்பு கொடுத்த Million Dollar Studios, Neo Castle Creations மற்றும் இந்தப் படத்தின் தயாரிப்பாளர்கள் அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இயக்குநர் பாரி இளவழகன் சகோதரருக்கு சிறப்பு நன்றி. என்னை நம்பி இந்தக் கதாபாத்திரத்தை கொடுத்திருக்கிறார். அவருடைய ‘ஜமா’ பார்த்ததிலிருந்தே அவருடைய படைப்பு மீது எனக்கு ஒரு தனி மரியாதை இருந்தது. அவர் கதை சொல்லி போகும்…
Read MoreCategory: சினி-நிகழ்வுகள்
கமல் சாருடன் நடிக்க வேண்டும் :யோகி பாபு ஆசை!
நடிகர் யோகி பாபு நடித்து 300 ஆவது திரைப்படமாக வருகிற ஜூலை 17-ஆம் தேதி வெளி வர இருக்கும் திரைப்படைப்பு ‘அர்ஜுனன் பேர் பத்து’. இப்படத்தை ரா. ராஜ்மோகன் எழுதி இயக்கியுள்ளார். இப்படத்தில் யோகி பாபுவுடன் ,அனாமிகா மஹி,காளி வெங்கட், அருள் தாஸ், லெனின் பாரதி, சுப்பிரமணியம் சிவா, மைனா நந்தினி, மதன் தட்சிணாமூர்த்தி, சென்ட்ராயன், ஹலோ கந்தசாமி ,எம் சௌந்தர்யா சரவணன் ,ரஞ்சன் குமார் மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படத்துக்கு டி .இமான் இசையமைத்துள்ளார் .பிரதீப் காளிராஜா ஒளிப்பதிவு செய்துள்ளார்.மு. காசி விஸ்வநாதன் படத்தொகுப்பு செய்துள்ளார்.பாடல்களை கார்த்திக் நேத்தாவும் வசனத்தை எம் .ஆர் .அருண் சந்தரும் எழுதியுள்ளனர்.கலை இயக்கத்தை B. சேகரும் சண்டைக் காட்சிகளை ஓம் பிரகாஷும் கவனித்துள்ளனர். ஆடியோ லஹரி மியூசிக். தேவ் சினிமாஸ் சார்பில் கிருத்திகா தங்கப் பாண்டி எஸ் மற்றும் தங்கப்பாண்டி. D…
Read Moreமுதல்வர் விஜய் ஆண் தாயாக நம்மை காக்கிறார் – ‘வஞ்சி’ இசை வெளியீட்டு விழாவில் இசையமைப்பாளர் தினா பேச்சு
வி.ஆர் கம்பைன்ஸ் நிறுவனம் சார்பில் விமலா ராஜநாயகம் தயாரிப்பில், சி.ஆர்.ராஜேஷ் எழுதி இயக்கி நாயகனாக நடித்திருக்கும் படம் ‘வஞ்சி’. இதில், நாயகியாக நைரா நிகார் நடித்திருக்கிறார். மாஸ்டர் ராஜநாயகம் மிக முக்கியமான அதிரடி கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். வில்லனாக டேன் நடித்திருக்கிறார். இவர்களுடன் ஜிபில்ராஜன் பிதேவ், தினேஷ், பண்னை பாலு, காரை நட்ராஜ், பிரியங்கா அழகன், ஷிவானி, மாடசாமி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள். சஜித் சங்கர் இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு ஜெயகிருஷ்ணன் படத்தொகுப்பு செய்திருக்கிறார். கலைகுமார் கலை இயக்குநராக பணியாற்றியிருக்கிறார். கணேஷ் பாபு, ஸ்டன்லி, நந்தினி பாடல்கள் எழுதியுள்ளனர். தம்பி சிவா நடனக் காட்சிகளை வடிவமைத்துள்ளார். பி.ஆர்.ஓ-வாக விஜய் கார்த்திக் பணியாற்றுகிறார். விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ள ‘வஞ்சி’ திரைப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா ஜூலை 6 ஆம் தேதி, மாலை பிரசாத் லேபில் நடைபெற்றது.…
Read Moreஆகாஷ் எனக்கு தம்பி மாதிரி… ‘இதயம் முரளி’ அவரது திரைப்பயணத்தின் முக்கிய மைல்கல்!” – அட்லீ பாராட்டு !!
Dawn Pictures நிறுவனத்தின் தயாரிப்பில், ஆகாஷ் பாஸ்கரன் எழுத்து இயக்கத்தில், அதர்வா முரளி நடித்துள்ள, “இதயம் முரளி” திரைப்படம் வரும் ஜூலை 10 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. *இன்பன் உதயநிதி* வழங்க, *ரெட் ஜெயன்ட் மூவிஸ்* இப்படத்தை உலகமெங்கும் வெளியிடவுள்ளது. பட வெளியீட்டை ஒட்டி படக்குழு படத்தின் விளம்பர பணிகளில் பரபரப்பாக ஈடுபட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக நேற்று தனியார் மாலில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் முன்னிலையில் படத்தின் முன் வெளியீட்டு விழா நிகழ்வு நடைபெற்றது. இதில் படக்குழுவினர் கலந்துகொண்டு கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்றதோடு, படம் குறித்து பல சுவாரஸ்யமான தகவல்களைப் பகிர்ந்து கொண்டனர். இந்நிகழ்வினில் சிறப்பு விருந்தினராக முன்னணி இயக்குநர் அட்லீ கலந்துகொண்டு சிறப்பித்தோடு படக்குழுவிற்கு வாழ்த்துக்களை தெரிவித்தார். இந்நிகழ்வினில் ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா பேசியதாவது.., இந்தப் படம் எனக்கு மிகவும் சிறப்பானது.…
Read Moreசுதன் சுந்தரத்தின் பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் ஹெச். வினோத்தின் ஆஸ்பயர் உபுண்டு ஃபிலிம்ஸ் தயாரிப்பில், ராஜூ ஜெயமோகன் எழுதி, இயக்கி, நடிக்கும் திரைப்படம் ’அல்மோஸ்ட் நல்லவன்’!
நல்ல கதைகளுக்கு முக்கியத்துவம் அளித்து தரமான திரைப்படங்களை தமிழ் சினிமாவில் தொடர்ந்து வழங்கி வரும் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்று பேஷன் ஸ்டுடியோஸ். வித்தியாசமான கதைக்களங்களையும் புதுமையான திரைக்கதைகளையும் கொண்ட வெற்றிப் படங்களை தொடர்ந்து வழங்கி வரும் இந்த நிறுவனம், தற்போது ஹெச். வினோத்தின் ஆஸ்பயர் உபுண்டு ஃபிலிம்ஸ் நிறுவனத்துடன் இணைந்து ’அல்மோஸ்ட் நல்லவன்’ திரைப்படத்தை தயாரிக்கிறது. இந்தப் படத்தை நடிகர், எழுத்தாளர் மற்றும் பிக்பாஸ் தமிழ் சீசன் 5 வெற்றியாளர் ராஜு ஜெயமோகன் இயக்குகிறார். அவர் இப்படத்தில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார். முக்கியமான கதாபாத்திரத்தில் நடிகர் சத்யராஜ் நடிக்கிறார். டார்க் காமெடி, ஆழமான உணர்வுகள், குடும்பத்துடன் பார்த்து ரசிக்கும்படியான பொழுதுபோக்கு அம்சங்கள் மற்றும் இயல்பான கிராமத்து மண்வாசனை என வித்தியாசமான பொழுதுபோக்கு திரைப்படமாக ’அல்மோஸ்ட் நல்லவன்’ உருவாகிறது. ’அல்மோஸ்ட்’ என்ற வார்த்தைக்கு சந்தேகம், தெளிவின்மை என பல அர்த்தங்கள்…
Read Moreதுருவ் விக்ரம் நடிக்கும் ‘#DV 4’ பட தொடக்க விழா!
இந்தியா முழுவதும் திரைப்படங்களைத் தயாரிக்கும் முன்னணி நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் தெலுங்கு திரையுலகத்துடன் மட்டும் நின்று விடாமல் பிற மொழிகளிலும் திரைப்படங்களை தயாரித்து வருகிறது. அந்த வகையில் தங்களது நான்காவது தமிழ் திரைப்படத்தை இன்று பூஜையுடன் ஆரம்பித்துள்ளனர் . மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் சென்னை அலுவலகத்தில் #MythriTamil04 #DV4 படத்தின் பாரம்பரிய படப்பிடிப்பு மற்றும் தொடக்க விழா சிறப்பாக நடைபெற்றது. இதில் இயக்குநர்கள் சசி- ‘ஹாய் நானா’ சௌர்யுவ்- ஆதிக் ரவிச்சந்திரன்- ஆண்டனி பாக்யராஜ் – ராஜா – ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு, படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தனர். மேலும் இப்படத்தின் பாரம்பரியமான முகூர்த்த தருண படப்பிடிப்பை இயக்குநர் கீர்த்தீஸ்வரன் கிளாப் அடித்து தொடங்கி வைத்தார். அறிமுக இயக்குநர் கரண் அரவிந்த் குமார் இயக்கத்தில் உருவாகும் #DV 4 படத்தில் துருவ் விக்ரம் கதையின்…
Read More“அங்கீகாரம்” திரைப்பட நன்றி அறிவிப்பு விழா !!
முதல் வார வெளியீட்டிலேயே ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள “அங்கீகாரம்” திரைப்படத்தின் வெற்றி விழா உற்சாகமாக நடைபெற்றது. இதில் படக்குழுவினர் பத்திரிகையாளர்களை சந்தித்து, திரைப்படத்திற்கு அளிக்கப்பட்ட ஆதரவுக்கும் பாராட்டுகளுக்கும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தனர். மேலும், படத்தின் உருவாக்க அனுபவங்கள், ரசிகர்களின் வரவேற்பு மற்றும் வெற்றிக்கான காரணங்கள் குறித்து பல சுவாரஸ்யமான தகவல்களையும் பகிர்ந்து கொண்டனர். இந்நிகழ்வினில் நடிகர் ஆண்டனி பேசியதாவது.., “அங்கீகாரம்” படத்தின் வசனங்கள் மிகவும் அற்புதமாக இருந்தது. அந்த வசனங்களைக் கேட்கும்போது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. ஹீரோ நல்ல கதைகளைத் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அவர் இந்த ஸ்போர்ட்ஸ் படத்தில் நடித்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்தப் படம் கிராமப்புறங்களில் விளையாட்டு வீரர்கள் எதிர்கொள்ளும் சிரமங்களையும், அவர்களின் போராட்டங்களையும் அழுத்தமாக பதிவு செய்துள்ளது. குறிப்பாக விளையாட்டில் இருக்கும் அனைவரும் கண்டிப்பாக இந்தப் படத்தைப் பார்க்க…
Read Moreமக்கள் நாயகன் என்.டி.ஆர் – இயக்குநர் திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் மீண்டும் இணையும் பிரம்மாண்ட தெய்வீக திரைப்படம்!
பல ஆண்டுகளாக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த கூட்டணி மீண்டும் இணையவுள்ளனர். மக்கள் நாயகன் என்.டி.ஆர் மற்றும் மாஸ் இயக்குநர் திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் இணையும் புதிய திரைப்படம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்களின் முந்தைய வெற்றிப்படமான Aravinda Sametha Veera Raghava (அரவிந்த சமேத வீரராகவா)-க்கு பிறகு இந்த கூட்டணி மீண்டும் உருவாகுவது இந்திய சினிமாவின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட நிகழ்வுகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. இந்த படத்தைப் பற்றி என்.டி.ஆர் தனது X சமூக வலைதளப் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். படத்தின் அறிவிப்பு போஸ்டரில் திரிசூலம் மற்றும் வேல் ஒன்றிணைவதுடன் DNA வடிவமைப்பும் இடம்பெற்றுள்ளது. மேலும், “ஒரே வேல்… ஒரே நோக்கம்… ஒரே தெய்வீக தீர்ப்பு” (One Spear, One Purpose… One Divine Reckoning) என்ற டேக்லைன் ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. புராணக் கதைகளின் தாக்கத்துடன், தெய்வீக கருவை மையமாகக்…
Read Moreஹொம்பாலே பிலிம்ஸ் ( Hombale Films) – ‘The one’ சூர்யா – இயக்குநர் த.செ.ஞானவேல் வலிமையான கூட்டணியில் S-48 திரைப்படம் உருவாகிறது
மக்களின் பேராதரவும், ’அன்பான ஃபேன்ஸ்’ படையின் அன்பும் பெற்ற நடிகர் சூர்யா நடிப்பில், எல்லா தரப்பு சினிமா ரசிகர்களும் ரசிக்கும் விதமாக அழுத்தமான கதைகளை திரையில் படைக்கும் இயக்குநர் த .செ. ஞானவேல் இயக்கத்தில், இந்திய சினிமா ரசிகர்களுக்கு பிரம்மாண்டமான திரை அனுபவத்தை வழங்கிவரும் ஹொம்பாலே பிலிம்ஸ் நிறுவத்தின் தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர் தயாரிப்பில், S-48 திரைப்படம் உருவாகிறது. ஸ்டாராவும், சிறந்த நடிகராகவும் விளங்கும் சூர்யாவுடன் இணைந்து இந்திய அளவில் தாக்கத்தை உருவாக்கிய ‘ஜெய்பீம்’ படத்தைக் கொடுத்தவர் இயக்குநர் த.செ. ஞானவேல். எல்லா தரப்பு சினிமா ரசிகர்களின் கவனத்தையும் பெற்று ஆச்சர்யப்பட வைத்த இவர்கள் மீண்டும் இணையும் திரைப்படத்தை, கே.ஜி.எஃப், காந்தாரா, சலார் போன்ற பிளாக் பஸ்டர் ஹிட் வெற்றி படங்களைத் தருவதில் புதிய சாதனைகளைப் படைத்து வரும், இந்தியாவின் முன்னணி திரைப்பட தயாரிப்பு நிறுவனமான ஹொம்பாலே பிலிம்ஸ்…
Read Moreலவ் ஓ லவ்’ படக்குழுவினரின் சென்னை ஸ்கைஒன் ஆம்பா மால் ப்ரமோஷனல் ஈவென்ட்டிற்கு பிரம்மாண்ட வரவேற்பு!
ஜினிமா மீடியா & எண்டர்டெயின்மென்ட் லிமிடெட் (Zinema Media & Entertainment Ltd.) பேனரின் கீழ் கிரியேட்டிவ் எண்டர்டெய்னர்ஸ் & டிஸ்ட்ரிபியூஷன் (Creative Entertainers & Distribution) நிறுவனத்துடன் இணைந்து தினேஷ் ராஜ் மற்றும் தனஞ்ஜெயன் தயாரிப்பில், பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இளமை துள்ளும் பொழுதுபோக்குத் திரைப்படமான **’லவ் ஓ லவ்’ (LOVE OH LOVE)** படக்குழுவினர் தங்களது திரைப்பட ப்ரமோஷனை சென்னை ஸ்கைஒன் ஆம்பா மாலில் (SkyOne Ampa Mall) மிகுந்த உற்சாகத்துடன் தொடங்கினர். அங்கு நடைபெற்ற சுறுசுறுப்பான மற்றும் பொழுதுபோக்கு நிறைந்த மாலையில் படத்தின் நடிகர், நடிகையர் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் நூற்றுக்கணக்கான சினிமா ரசிகர்களுடன் கலந்துரையாடினர். இந்த நிகழ்வில் படத்தின் சூப்பர்ஹிட் பாடல்களால் ஈர்க்கப்பட்ட துள்ளலான நடன நிகழ்ச்சிகள் இடம்பெற்று, மாலில் திரண்டிருந்த பெரும் கூட்டத்தை உற்சாகப்படுத்தின. நடிகர், நடிகையர் ரசிகர்களுடன் விரிவாகக்…
Read More
