லீடர்’ படத்தின் டீசர் வெளியீட்டு கொண்டாட்டம்: லெஜெண்ட் சரவணனின் அதிரடி நடிப்புக்கு ஆரவார வரவேற்பு !!

லெஜெண்ட் சரவணன் முதன்மை வேடத்தில் நடிக்கும் ‘லீடர்’ படத்தின் டீசர் வெளியீட்டு கொண்டாட்டம் சென்னை கமலா திரையங்கில் வியாழக்கிழமை படக்குழுவினர் மற்றும் ரசிகர்கள் பங்கேற்க விமரிசையாக நடைபெற்றது. சமூக ஊடக தளங்களில் டீசர் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. பிரபல இயக்குநர் ஆர்.எஸ். துரை செந்தில்குமார் எழுதி இயக்கியுள்ள இந்தப் படத்தை லெஜெண்ட் சரவணா ஸ்டோர்ஸ் புரொடக்ஷன்ஸ் பிரமாண்டமாக தயாரித்துள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வரும் ஏப்ரல் மாதம் உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் ‘லீடர்’ வெளியாகிறது. ஒரு நிமிடம் 21 நொடிகள் ஓடும் டீசரில் இடம் பெற்றுள்ள லெஜெண்ட் சரவணனின் அதிரடி சண்டைக்காட்சிகள் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளதோடு, சமூக ஊடக தளங்களில் பலத்த பாராட்டுகளை குவித்துள்ளன. படத்தின் மீதான எதிர்பார்ப்பை டீசர் பெரிய அளவில் அதிகரித்துள்ளது. படத்தைப் பற்றிப் பேசிய இயக்குநர் ஆர்.எஸ்.…

Read More

தொடர்ச்சியாக அன்பு, ஊக்கத்தை பொழிந்து வரும் ரசிகர்களுக்கு நன்றி – சாய் அபயங்கர்

திங்க் மியூசிக் தயாரிப்பில், இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைத்து, அதிகம் எதிர்பார்க்கப்பட்ட இண்டீ பாடல் ‘பவழ மல்லி’ சென்னையில் நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சியில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. சாய் அப்யங்கர் மற்றும் ஸ்ருதி ஹாசன் இணைந்து பாடிய இந்தப் பாடல், வளர்ந்து வரும் இன்டிபென்டென்ட் இசை உலகத்திற்கு மற்றொரு உயிரோட்டமான சேர்க்கையாக அமைந்துள்ளது. அதன் தனித்துவமான இசை ரசனை மற்றும் காட்சி அமைப்புகளால் ஏற்கனவே கவனத்தை ஈர்த்து வருகிறது. வெளியீட்டு நிகழ்ச்சியில் பேசிய சாய் அபயங்கர், “எனக்கு இந்த தளத்தை வழங்கிய சந்தோஷ் அண்ணா மற்றும் மகேஷ் அண்ணாவுக்கு நன்றி கூற விரும்புகிறேன். அவர்கள் எனது தொழில் வாழ்க்கையை வடிவமைப்பதில் வலுவான தூண்களாக இருந்துள்ளனர். அவர்களின் ஆதரவு எனக்கு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது. எல்லாவற்றுக்கும் மேலாக, என்மீது தொடர்ச்சியாக அன்பு மற்றும் ஊக்கத்தை பொழிந்து வரும் ரசிகர்களுக்கு…

Read More

”முழுமையான பொழுதுபோக்கு அம்சங்களுடன் இளைஞர்களை கவரும் திரைப்படமாக ‘முஸ்தபா முஸ்தபா’ உருவாகியுள்ளது”- சக்தி பிலிம் பேக்டரி சக்திவேலன் பி!

‘முஸ்தபா முஸ்தபா’ திரைப்படம் இன்று தமிழ்நாடு முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாகிறது. பத்திரிகையாளர்களுக்கான திரையிடல் மற்றும் சிறப்பு திரையிடலில் படத்திற்கு கிடைத்துள்ள வரவேற்பு குறித்து இப்படத்தின் தயாரிப்பாளர் பிரதீப் மகாதேவன் மற்றும் இப்படத்தை தமிழ்நாடு முழுவதும் வெளியிடும் சக்தி பிலிம் பேக்டரி சக்திவேலன் பி ஆகியோர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். இந்த சிறப்பான வரவேற்பு காரணமாக, பார்வையாளர்கள் மத்தியிலும் படம் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது. தமிழ்நாடு முழுவதும் கிட்டத்தட்ட 150-க்கும் அதிகமான திரைகளில் படம் வெளியாகிறது. தயாரிப்பாளர் பிரதீப் மகாதேவன் பகிர்ந்து கொண்டதாவது, “ஆர்வத்துடனும் அர்ப்பணிப்புடனும் உருவாகியுள்ள ‘முஸ்தபா முஸ்தபா’ திரைப்படம் அதிகளவில் பார்வையாளர்களை சென்றடைவது மிகவும் முக்கியம். அதற்கு அனுபவம்மிக்க விநியோகஸ்தர்களின் ஆதரவு அவசியம். சக்திவேலன் சார் போன்ற முன்னணி விநியோகஸ்தர்களின் ஆதரவு கிடைப்பது எந்த திரைப்பட இயக்குநரும் விரும்பும் விஷயம். சக்தி பிலிம் பேக்டரி…

Read More

‘முஸ்தபா முஸ்தபா’ படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்வு!

தி மாபோகோஸ் நிறுவனம் சார்பில் பிரதீப் மகாதேவன் தயாரிப்பில், இயக்குநர் பிரவீன் சரவணன் இயக்கத்தில் நடிகர் சதீஷ் கதைநாயகனாக நடித்திருக்கும் புதிய படம் ’முஸ்தபா முஸ்தபா’. எம்.எஸ். ஜோன்ஸ் ரூபர்ட் இசையமைத்துள்ள இந்தப் படம் வரும் மார்ச் 6 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது. படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்வு நடைபெற்றது. நிகழ்வில் நடிகர் சதீஷ் பேசியதாவது, “’முஸ்தபா முஸ்தபா’ ஜாலியான ஒரு படமாக இருக்கும். முஸ்தபா முஸ்தபா என்றாலே நமக்கு எல்லாம் நட்பு பாடல்தான் நியாபகம் வரும். அதனை மனதில் கொண்டு நட்புக்கு முக்கியத்துவம் கொடுத்து இந்தப் படத்தில் கதை அமைத்திருக்கிறோம். அதனால், நீங்கள் உங்கள் நண்பர்களுடன் ஜாலியாக மார்ச் 6 ஆம் தேதி வெளியாகும் இந்தப் படத்தை திரையரங்குகளில் சென்று பார்க்கலாம். பல பெரிய படங்களை வெளியிட்ட சக்தி ஃபிலிம் ஃபேக்டரி இந்தப் படத்தை வெளியிடுகிறது.…

Read More

‘Vowels’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா!

‘VOWELS – An Atlas of Love’ திரைப்படம் காதலின் பல பரிமாணங்களை பேசும் தனித்துவமான திரைப்படமாக உருவாகியுள்ளது. ராஜு ஷெரேகர் தயாரிப்பில், இந்த ஐந்து கதைகளையும் திலிப் குமார், சங்கீத், ஹேமந்த் குமார், சந்தோஷ் ரவி மற்றும் ஜெகன் ராஜேந்திரன் ஆகிய ஐந்து இயக்குநர்கள் இயக்கியுள்ளனர். யூகி சேது, சின்னி ஜெயந்த், சம்யுக்தா விஷ்வநாதன், ராஜ் அய்யப்பா, தீபக் பரமேஷ் உள்ளிட்டப் பலர் நடித்துள்ளனர். மார்ச் 13 அன்று இந்தத் திரைப்படம் உலகம் முழுவதும் உள்ள திரையரங்களுகளில் வெளியாகிறது. இதன் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. நிகழ்வில் படத்தொகுப்பாளர் ஹரிஷ் கொம்மே பேசியதாவது, “இந்தப் படத்தில் பணிபுரிந்தது எனக்கு வித்தியாசமான அனுபவம். பார்வையாளர்களும் படம் பார்க்கும்போது அதை உணர்வார்கள்” என்றார். கலை இயக்குநர் மதி, “படத்தின் தயாரிப்பாளர் ராஜூ சாருக்கு நன்றி. ஐந்து இயக்குநர்கள்…

Read More

காதலும் உயிரும் ஒன்று. அதற்காகத் தான் Vowels என்ற டைட்டில்

‘VOWELS – An Atlas of Love’ திரைப்படம் காதலின் பல பரிமாணங்களை பேசும் தனித்துவமான திரைப்படமாக உருவாகியுள்ளது. ராஜு ஷெரேகர் தயாரிப்பில், இந்த ஐந்து கதைகளையும் திலிப் குமார், சங்கீத், ஹேமந்த் குமார், சந்தோஷ் ரவி மற்றும் ஜெகன் ராஜேந்திரன் ஆகிய ஐந்து இயக்குநர்கள் இயக்கியுள்ளனர். யூகி சேது, சின்னி ஜெயந்த், சம்யுக்தா விஷ்வநாதன், ராஜ் அய்யப்பா, தீபக் பரமேஷ் உள்ளிட்டப் பலர் நடித்துள்ளனர். மார்ச் 13 அன்று இந்தத் திரைப்படம் உலகம் முழுவதும் உள்ள திரையரங்களுகளில் வெளியாகிறது. இதன் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. நிகழ்வில் படத்தொகுப்பாளர் ஹரிஷ் கொம்மே பேசியதாவது, “இந்தப் படத்தில் பணிபுரிந்தது எனக்கு வித்தியாசமான அனுபவம். பார்வையாளர்களும் படம் பார்க்கும்போது அதை உணர்வார்கள்” என்றார். கலை இயக்குநர் மதி, “படத்தின் தயாரிப்பாளர் ராஜூ சாருக்கு நன்றி. ஐந்து இயக்குநர்கள்…

Read More

இயக்குநர் சுரேஷ் சங்கையா இந்தப் படத்தை கொடுத்தது பாக்கியமாக பார்க்கிறேன் – யோகி பாபு

ஜியோ ஹாட் ஸ்டார் வழங்க ஆர். ரமேஷ் பாபு மற்றும் ஜெகன் பாஸ்கரன் இணைந்து தயாரித்து இயக்குநர் சுரேஷ் சங்கையா இயக்கியுள்ள திரைப்படம் “கெணத்த காணோம்.” நடிகர் யோகி பாபு முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்தப் படத்தில் லவ்லின் சந்திரசேகர், ராமகிருஷ்ணன், ரேச்சல் ரபேக்கா, ஜார்ஜ் மரியம், மொட்டை ராஜேந்திரன், கவிதா பாரதி, கலைபாண்டியன், ஹலோ கந்தசாமி மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு நிவாஸ் கே பிரசன்னா இசையமைக்கிறார், வி. தியாகராஜன் ஒளிப்பதிவு செய்கிறார். ஆர். ராமர் படத்தொகுப்பை மேற்பார்வையிடுகிறார், பி.எல். சுபேந்தர் கலை இயக்கத்தை கவனிக்கிறார். சுதேஷ் சண்டை இயக்குநராகப் பணியாற்றி இருக்கிறார். பி. காத்தவராயன் மற்றும் டி.பி. சசி குமார் தயாரிப்பு நிர்வாகிகளாகவும், ஏ.ஆர். அமல்ராஜ் நிர்வாக தயாரிப்பாளராகவும் பணியாற்றி உள்ளனர். சமீபத்தில் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி பெரும் வரவேற்பை…

Read More

உத்ரா புரொடக்ஷன்ஸ் & டிஜே இன்டர்நேஷனல் தயாரிப்பில், செ. ஹரி உத்ரா இயக்கும் ‘மாஸ்டர் பிளான்’ பட பூஜை இன்று கோலகலமாக நடைபெற்றது!!

உத்ரா புரொடக்ஷன்ஸ் & டிஜே இன்டர்நேஷனல் தயாரிப்பில், செ. ஹரி உத்ரா எழுதி இயக்கும் புதிய திரைப்படமான ‘மாஸ்டர் பிளான்’ படத்தின் பூஜை இன்று எளிமையாகவும் சிறப்பாகவும் நடைபெற்றது. இப்படம் கோலமாவு கோகிலா, டாக்டர், டூரிஸ்ட் ஃபேமிலி போன்ற திரைப்படங்களைப் போல அனைவரும் ரசிக்கும் வகையில் கலகலப்பான பிளாக் ஹூயுமர் கலந்த நகைச்சுவை திரைப்படமாக அரசியல் பின்னணியில் இப்படம் உருவாகவுள்ளது. இன்று நடைபெற்ற பூஜை விழாவில் தயாரிப்பாளர்கள் ஃபைவ் ஸ்டார் கதிரேசன், P.L. தேனப்பன், உள்ளிட்டோர் கலந்துகொண்டு படக்குழுவினரை வாழ்த்தினர். புதிய முயற்சியாக உருவாகும் இந்த திரைப்படம், அரசியலைச் சேர்ந்த ஆட்களால் ஏற்படும் பிரச்சனையில் நாயகன் நாயகியின் குடும்பம் சிக்கிக் கொள்வதும், அந்த குடும்பம் வில்லன்களிடம் இருந்து, எவ்வாறு மீண்டு வருகின்றது என்பதையும் நகைச்சுவை மற்றும் டார்க் ஹூமர் கலந்த அணுகுமுறையில் சொல்லவுள்ளது. இந்தப் படத்தில் தருண்…

Read More

நடிகர் சிவகுமார் கலந்து கொண்ட தமிழ்நாடு திரைப்பட விருது வழங்கும் விழா

JD புரமோட்டர்ஸ் நடத்தும் மூன்றாம்ஆண்டு தமிழ்நாடு திரைப்பட விருது வழங்கும் விழாவில், குறைந்த செலவில் தயாரிக்கப்பட்ட சுயாதீன திரைப்படங்களுக்கு நீலகிரி தார் விருதுகள் வழங்கப்பட்டன. மொத்தம் 116 திரைப்படங்கள் போட்டிக்காக வந்ததில், பல்வேறு பிரிவுகளில் 13 திரைப்படங்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. இந்த தமிழ்நாடு திரைப்பட தமிழ்நாடு திரைப்பட விருது வழங்கும் விழாவை எம்டி பிரமோட்டர்ஸ் சார்பில் ஜாஸ்மின் டேவிட் மூன்றாம் ஆண்டாக வெற்றிகரமாக நடத்தி உள்ளார் இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக நடிகர் திரு. சிவகுமார், தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் திரு. சி.வி.குமார், இயக்குனர், இசையமைப்பாளர் மற்றும் தயாரிப்பாளர் திரு. எஸ்.எஸ்.குமரன், நடிகர் திரு. ஆத்மா பாட்ரிக், நடிகர் திரு. அசோக் பாலகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர். சிறப்பு விருந்தினர்களை ஜாஸ்மின் டேவிட் வரவேற்று பேசினார் “One and Only SS School of Creativity” பள்ளி…

Read More

இயக்குனர் விஜய் – இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் கூட்டணியின் ‘காதல் ரீசெட் ரிப்பீட்’ படத்தின் முன் வெளியீட்டு விழா

‘காதல் ரீசெட் ரிப்பீட்’ – நல்ல மனம் கொண்ட சாதாரண மனிதனின் கதை – இயக்குநர் விஜய் மாலி& மான்வி மூவி மேக்கர்ஸ் ( Mali & Manvi Movie Makers) – டி ஸ்டுடியோஸ் ( D Studios) -டென்வி புரொடக்ஷன் ( Denvi Production) – ஆகிய நிறுவனங்களின் தயாரிப்பில், தயாரிப்பாளர் பிரபா பிரேம்குமார் இணை தயாரிப்பில் முன்னணி இயக்குநர் விஜய் இயக்கத்தில் உருவாகி, மார்ச் 6 ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் ‘காதல் ரீசெட் ரிப்பீட்’ படத்தின் முன் வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இயக்குநர் விஜய் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘காதல் ரீசெட் ரிப்பீட்’ படத்தில் மதும்கேஷ், ஜியா சங்கர் , அர்ஜுன் அசோகன், எம். எஸ். பாஸ்கர், ஜெயப்பிரகாஷ், விஜி சந்திரசேகர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.…

Read More